ஜோலார்பேட்டை
ரயில் நிலையம் அருகே 8 மாத பெண் குழந்தை குப்பையில் கிடப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே நேற்று விடியற்காலை 4 மணி அளவில் குப்பைத்தொட்டியில் குழந்தையின் அழுகுரல் கேட்டு உள்ளது. இதை அங்கிருந்த துப்புரவு பணியாளர்கள் கவனித்து உள்ளனர். உடனே அங்கிருந்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று பார்த்தபோது பிறந்து எட்டு மாதங்களே ஆன பெண் கைக்குழந்தை குப்பையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் குழந்தையை மீட்ட ஜோலார்பேட்டை போலீசார் குழந்தையை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சைக்குப்பின் ஆசிரியர் நகரில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் நல காப்பகத்தில் குழந்தையை ஒப்படைத்தனர். அங்கு குழந்தைக்கு தேவையான அனைத்து வகையான சோதனைகளும் செய்யப்பட்டது.
குழந்தையை குறித்த விபரம் கண்டறிந்த பிறகு இரண்டு மூன்று மாதங்கள் கழித்து குழந்தையின் உறவினர் யாரும் வரவில்லை எனில் குழந்தையை தொடர்ந்து காப்பகத்திலேயே பராமரிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடப்பு நிதி ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 2019 ஏப்ரல் முதல் அக்டோபர் வரை கச்சா எண்ணெய் இறக்குமதி 7393 கோடி டாலராக குறைந்துள்ளது உலகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது நம் நாடு சவுதி அரேபியா ஈரான் ஈராக் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவிகிதத்தை இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்ய வேண்டி இருக்கிறது.
நடப்பு நிதி ஆண்டில் அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி 7393 கோடி டாலராக உள்ளது கடந்த ஆண்டின் இதே காலத்தில் அது 8 ஆயிரத்து 417 கோடி டாலராக இருந்தது ஆக இறக்குமதி 12 சதவீதம் குறைந்துள்ளது இதே காலத்தில் எண்ணெய் இல்லாத சரக்குகளை இறக்குமதி 6.9 சதவீதம் குறைந்துள்ளது.
நம் நாட்டில் ஓஎன்ஜிசி ஆயில் இந்தியா ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.
பாஜக முன்னாள் எம்பி நரசிம்மன் அவர்களை நயன்தாரா சந்தித்ததாகவும் இதனால் அவர் அரசியலில் நுழைந்து பாஜகவில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகை நயன்தாரா நேற்று தனது வருங்கால கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் கன்னியாகுமரி, திருச்செந்தூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள கோவில்களுக்கு சுற்றுப்பயணம் செய்தார். கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலிலும், திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவிலிலும் அவர் தரிசனம் செய்ததாக புகைப்படங்களுடன் கூடிய செய்திகள் நேற்று சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்த நிலையில் திருச்செந்தூர் முருகனை நயன்தாரா தரிசனம் செய்து கொண்டிருந்தபோது அங்கு தற்செயலாக குடும்பத்துடன் வந்த பாஜக முன்னாள் எம்பி நரசிம்மன் அவர்களை சந்தித்து பேசியதாகவும் இருவரும் ஒரு சில நிமிடங்கள் பேசியதை வைத்து நயன்தாரா பாஜகவில் சேர இருப்பதாகவும் அரசியலில் நுழைய இருப்பதாகவும் வதந்திகள் வெளியாகி வருவதாகவும் தெரிகிறது.
நயன்தாரா தான் நடிக்கும் படங்களின் புரமோஷனுக்கே வரமாட்டார் என்பதால் அவர் அரசியலில் ஈடுபட வாய்ப்பு இல்லை என்றும் திரையுலகில் இன்னும் ஒரு சில ஆண்டுகள் நடித்திவிட்டு விக்னேஷ் சிவனை திருமணம் செய்து அவர் செட்டிலாகிவிடுவார் என்றும் அவரது தரப்பினர் கூறுகின்றனர். இருப்பினும் நயன்தாரா பாஜகவில் சேரவிருப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் வதந்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டே பெட்டிகள் கொண்ட ரயில்: இலவச சேவை என்பதால் குவியும் பயணிகள்
ஒவ்வொரு ரயிலும் குறைந்தபட்சம் 10 முதல் 12 ரயில் பெட்டிகள் இருக்கும் என்ற நிலையில் சீனாவில் முற்றிலும் புதுமையாக இரண்டே இரண்டு ரயில் பெட்டிகள் கொண்ட சிறிய ரயில் சேவை ஒன்று சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவைக்கு பொதுமக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக சீன ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
சீனாவிலுள்ள தைபா என்ற பகுதியிலிருந்து மக்கா என்ற பகுதிக்கு இந்த ரயில்சேவை முதல்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9.3 கிலோமீட்டர் மட்டுமே தூரம் கொண்ட இந்த வழித்தடத்தில் 11 நிறுத்தங்கள் உள்ளதாகவும் இந்த வழித்தடத்தில் அதிக குடியிருப்புகள் மற்றும் சுற்றுலா தளங்கள் இருப்பதாகவும் அதனால் பயணிகளின் மாபெரும் வரவேற்பை இந்த சிறிய ரயில் சேவை பெற்றதாகவும் அங்கு உள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் அறிமுக சலுகையாக ஒரு மாதத்திற்கு இந்த ரயிலில் இலவச பயணம் செய்யலாம் என சீன ரயில்வே துறை அறிவித்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து மிகுந்த ஆர்வத்துடன் இந்த ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். தினமும் சுமார் 20 ஆயிரம் பேர் இந்த இரண்டு பெட்டிகளில் பயணம் செய்யும் வகையில் திட்டமிட்டு உள்ளதாகவும் இந்த ரயில்சேவை பொதுமக்களின் பாராட்டுகளைப் பெற்றால் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் சீன ரயில்வே துறை தெரிவித்துள்ளது.அதிக ரயில் பெட்டிகள் கொண்ட ரயிலில் ஒரு சில நேரங்களில் சில பெட்டிகள் காலியாக இருப்பதாகவும், எனவே தான் இரண்டு பெட்டிகள் கொண்ட ரயில்கள் அதிகமாக இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் சீன ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
₹200 கூலினாலும் ஒரு நியாயம் வேணாமாடா? திமுக உடன்பிறப்புகளை கதறவிடும் பாஜக நிர்வாகி
பாஜக தலைமையிலான மதிய அரசு மக்களவையில் கொண்டு வந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை அதன் கூட்டணி கட்சியான அதிமுக நீங்கலாகத் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட பிற கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எதிர்த்துள்ளனர். மேலும் எதிர்ப்பு தெரிவித்துடன் வெளிநடப்பு செய்து விட்டதாகவும் இந்த மசோதாவை எதிர்த்து திமுக எம்பிக்கள் வாக்களிக்கவில்லை என்றும் அதன் கூட்டணி கட்சிகளே விமர்சனம் செய்து வருகின்றன.
இந்நிலையில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய திமுகவை சேர்ந்த சென்னை மத்திய சென்னை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கூறியதாவது, இந்தியாவின் தெற்கும், வடக்கும் ஒரே மாதிரி சிந்திக்காது என்றார்.
இந்த சட்டத் திருத்த மசோதாவானது அரசமைப்பு சட்ட முகப்புரைக்கே எதிரானது என்றும் அவர் அப்போது குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர் உள்துறை அமைச்சர் தங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதாக, மக்கள் அதிகாரத்தை வழங்கி இருப்பதாகக் குறிப்பிட்டார். ஆனால், என் மாநிலத்தை சேர்ந்தவர்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை, வெல்ல வைக்கவில்லை என்று கூறிய அவர் நீங்கள் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையைப் பெற நீங்கள் தவறவிட்டுவீட்டீர்கள் என்றும் விமர்சனம் செய்திருந்தார்.
நீங்கள் வட மாநிலங்களுக்கு மட்டுமான உள்துறை அமைச்சர் இல்லை. ஒட்டு மொத்தமான இந்தியாவுக்குமான உள்துறை அமைச்சர். உங்கள் எண்ணங்களில் பாகிஸ்தான், வங்கதேசம் மட்டுமே வியாபித்திருக்கிறது. இலங்கை, மாலத்தீவும் நம் அண்டை நாடுகள்தான். பாகிஸ்தானிலிருந்து வருபவர்களுக்குக் குடியுரிமை வழங்குகிறீர்கள். இலங்கையிலிருந்து வருபவர்களுக்குத் தர மறுக்கிறீர்கள். முப்பது ஆண்டுகளாக இலங்கை மக்கள் இந்தியாவில் உள்ள அகதிகள் முகாமில் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மாலத்தீவிலும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் இந்தியா குடியுரிமை பெற விரும்பினால் அவர்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? அங்குள்ள இஸ்லாமியர்கள் குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன? இந்தியாவை மதரீதியாக நீங்கள் துண்டாடுகிறீர்கள். சிறுபான்மையினர் இடையே கூட நீங்கள் பிரிவினையை ஏற்படுத்த நினைக்கிறீர்கள். பாகிஸ்தான் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காஷ்மீர் இஸ்லாமியர்கள் இந்தியா வர விரும்பினால், கடவுள் நம்பிக்கையற்றவர்கள் வர விரும்பினால், அதற்கு உங்கள் பதில் என்ன? என்ற கேள்வியையும் அவர் முன் வைத்தார்.
பிரதமர் மோடி யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று ஐ.நா சபையில் பேசுகிறார். ஆனால், உள்துறை அமைச்சரே மோடியின் சொற்படி நடக்கவில்லை. இருபது கோடி இஸ்லாமியர்கள் இந்தியாவில் வசிக்கிறார்கள். ஆனால், அவர்கள் 2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஒரு அச்சத்திலேயே இருக்கிறார்கள். வலதுசாரி அரசு பொறுப்பேற்றதிலிருந்து பசுவின் பேரால் அவர்கள் கும்பல் கொலை செய்யப்படுகிறார்கள். நீங்கள் அவர்களை அச்சப்படுத்துகிறீர்கள். இந்த அரசு இஸ்லாமியர்களுக்கு எதிரானது என நம்பப்படுகிறது. இப்போது இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக இருக்கிறது இந்த மசோதா என்றும் அவர் பேசியுள்ளார்.
BJP Youth Wing Vice President S G Suryah-News4 Tamil Latest Online Political News in Tamil
இவ்வாறு திமுக எம்.பி. தயாநிதிமாறன் இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து பேசியதை திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்கள் பெருமையாக விளம்பரபடுத்தி வரும் நிலையில் பாஜக இளைஞர் அணி துணைத் தலைவர் எஸ்.ஜி.சூர்யா அவர்களின செயல்களை கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக கழக உடன்பிறப்புகளை விமர்சித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.
அட முட்டா உ.பிஸ். இது போல அடிப்படை அறிவு இல்லாம பொங்குனதயா தயாநிதி மாறன் பாராளமன்றத்துல அமித் ஷாவ கிழிச்சி தொங்கவிட்டார்னு பில்டப் குடுத்துட்டு இருக்கீங்க. டேய், ₹200 கூலினாலும் ஒரு நியாயம் வேணாமா டா?
உங்களுக்கெல்லாம் கடைசி வரைக்கும் மு.க.ஸ்டாலின் தான். என்றும் அவர் அதில் கடுமையாக விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார்.
அட முட்டா உ.பிஸ். இது போல அடிப்படை அறிவு இல்லாம பொங்குனதயா தயாநிதி மாறன் பாராளமன்றத்துல அமித் ஷாவ கிழிச்சி தொங்கவிட்டார்னு பில்டப் குடுத்துட்டு இருக்கீங்க. டேய், ₹200 கூலினாலும் ஒரு நியாயம் வேணாமா டா?🤭🤭🤭
வெங்காய விலை உயர்வால் திருமண வீட்டில் நடந்த கொள்ளை முயற்சி!
தொடர்மழை மற்றும் வரத்து குறைவு போன்ற காரணங்களால் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ. 200 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அவற்றை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்தி வருவதுடன், மதிப்புமிக்க பொருளாகவும் கருதி பாதுகாத்து வருகின்றனர்.
வெங்காயத்தை உரிக்காமலேயே குடும்ப பெண்களின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்துவிடும் வகையில் விலை உயர்வு உள்ளது. இந்நிலையில் திருமண வீட்டில் முதியவர் ஒருவர் வெங்காயத்தை திருடிய சம்பவம் நடந்துள்ளது.
உடன்குடியில் டிசம்பர் 8ம் தேதி திருமண நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அங்கு மதிய உணவுக்காக சமையல் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது அங்கு வந்த திருமண வீட்டின் உறவினரான முதியவர் ஒருவர் சமையல் பணிகளை கண்காணிப்பது போன்று பார்வையிட்டார்.
பின்னர் அவர் துணிப்பையில் வெங்காயத்தை திருடி விட்டு, அங்கிருந்து நழுவ முயன்றார். இதை பார்த்த சமையல்காரர் இது குறித்து திருமண வீட்டாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து அந்த முதியவரிடம் துணிப்பையில் இருந்த வெங்காயத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த முதியவர் அங்கிருந்து சென்று விட்டார்.
தங்கத்தின் மீதான முதலீடு என்பது அளவில் நம்பிக்கையாகவும் பாதுகாப்பாகவும் கருதுகின்றனர். மேலும் சாமானிய மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை தங்கத்தில் தான் முதலீடு செய்கின்றனர். உலக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வதில் இந்தியா முக்கிய பங்கில் உள்ளது. எனவே நாள் தோறும் தங்க ஏற்ற இரக்கம் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.
அந்த வகையில் இன்றைய தங்கத்தின் விலை வருமாறு ஆபரண தங்கம் 22 carat கிராம் ஒன்றுக்கு நேற்றைய விலையை விட 8 ரூபாய் குறைந்து 3597 ரூபாய் ஆகவும் ஒரு பவுன் தங்கம் நேற்றைய விலையை விட 64 ரூபாய் குறைந்து பவுன் ஒன்றுக்கு 28776 ரூபாயாகவும் உள்ளது அதே போல் 24 கேரட் தூய தங்கத்தின் விலை1கிராம் 3777 ரூபாய் ஆகவும் 10 கிராம் தூய தங்கத்தின் விலை ரூபாய் 37770 ஆகவும் உள்ளது.
வெள்ளியின் விலையைபொறுத்தவரை நேற்றைய விலையில் மாற்றம் இல்லாமல் கிராம்க்கு அதிகரித்து ரூபாய் 46.60 ஆகவும் 1கிலோ ரூபாய் 46600 க்கும் வர்த்தகம் செய்யப்பட்டது.
அம்மன், முருகன் கோவில்களுக்கு காதலனுடன் விசிட் அடித்த பிரபல நடிகை
தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் இடத்தில் கடந்த பல ஆண்டுகளாக இருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இன்று கன்னியாகுமரி மற்றும் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்
இன்று காலை அவர் விக்னேஷ் சிவனுடன் கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலுக்குச் சென்றதாகவும் அந்த கோவிலில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்த கோவில் நிர்வாகிகள் பிரசாதம் கொடுத்து பாதுகாப்புடன் வழி அனுப்பி வைத்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது கன்னியாகுமரி கோவிலுக்கு நயன்தாரா வந்திருக்கும் செய்தி தெரிந்ததும் அப்பகுதியில் உள்ள ரசிகர்கள் பெருமளவில் அவரைப் பார்க்கக் கூடிவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது
கன்னியாகுமரியில் சாமி தரிசனத்தை முடித்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் அங்கிருந்து நேராக திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டனர். அதன் பின்னர் சென்னை திரும்பினார்.
நயன்தாரா சமீபத்தில் தர்பார் என்ற படத்தை முடித்துவிட்டு தற்போது நெற்றிக்கண் மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார். இன்னும் ஓரிரு நாளில் ’மூக்குத்தி அம்மன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதை அடுத்து அவர் அம்மன் கோவிலுக்கு சென்று உள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நெற்றிக்கண் மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களை அடுத்து நயன்தாரா வேறு படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளாததால் இந்த இரு படங்களை முடித்துவிட்டு அவர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
லோக்சபாவில் திமுக நடத்திய நாடகம்! கூட்டணி கட்சிகளே கழுவி ஊற்றும் கேவலம்
பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதா மீதான எந்த வாக்கெடுப்பிலும் திமுக பங்கேற்காமல் லோக்சபாவிலிருந்து வெளிநடப்பு செய்தது கூட்டணி கட்சிகளிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை அறிமுகம் செய்தார். அதற்கு காங்கிரஸ் கட்சியானது மிக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.
அப்போது பேசிய காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மறுக்கும் இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்கிறோம் என ஆவேசமாக கூறினார். மேலும் இதனையடுத்து திமுக எம்.பிக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்வதாகவும் கூறினார். இது குறித்து திமுகவின் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பிலும் அவர்கள் வெளிநடப்பு செய்ததாக பதிவு செய்துள்ளனர்.
"பாஜக அரசின் குடியுரிமைச் சட்டம் அரை வேக்காட்டுத்தனமானது"
பிறகு இம்மசோதாவை அறிமுகம் செய்வது தொடர்பான நடைபெற்ற வாக்கெடுப்பில் திமுக சார்பாக எம்பிக்கள் யாரும் பங்கேற்கவில்லை. இதனால் குடியுரிமை திருத்த மசோதாவை அறிமுகம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த எம்.பி.க்கள் எண்ணிக்கை மொத்தமாக 82 ஆக மட்டுமே இருந்தது. திமுகவின் எம்.பிக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக வாக்களித்திருந்தால் இந்த மசோதாவை எதிர்க்கும் எம்.பிக்கள் எண்ணிக்கை 100 க்கு மேல் தாண்டியிருக்கும்.
இதன் பின்னர் இந்த மசோதா குறித்து நடைபெற்ற விவாதத்தின் போது திமுக எம்.பி. தயாநிதி மாறன், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மிகவும் கடுமையாக விமர்சித்து பேசினார்.
பின்னர் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க, மசோதாவை நிறைவேற்ற நள்ளிரவில் வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போதும் இந்த மசோதாவுக்கு எதிராக வெறும் 80 எம்.பி.க்கள் மட்டுமே வாக்களித்தனர். இவ்வாக்கெடுப்பிலும் திமுக சார்பாக எந்த எம்பிக்களும் பங்கேற்கவில்லை என்று தான் கூறப்படுகிறது.
இவ்வாறு மத்திய அரசு கொண்டு வரும் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை மிகவும் கடுமையாக எதிர்ப்பதாக வெளிப்படுத்திக் கொள்ளும் திமுக, லோக்சபாவில் இதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்புகளில் ஏன் பங்கேற்கவில்லை? என்கிற கேள்வி அதன் கூட்டணி கட்சிகளிடையே எழுந்துள்ளது.
மேலும் திமுகவை சேர்ந்த எம்பிக்கள் குழு அண்மையில் திடீரென பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை உள்ளிட்டோரை சந்தித்து பேசியது கூட்டணி கட்சிகளிடையே சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்தை தி மு க எதிர்ப்பதாக இருந்தால், எதிர்த்து வாக்களிக்காமல், வெளிநடப்பு செய்தது ஏன்?
திமுக எம்பிக்களின் இந்த சந்திப்புக்குப் பிறகு தான் இப்படி ஒரு நாடகத்தை திமுக நடாத்தியுள்ளதா? என்கிற கேள்வியை கூட்டணி கட்சி தலைவர்கள் முதல் அரசியல் பார்வையாளர்கள் என அனைவரும் எழுப்பியுள்ளனர். சமூக வலைதளங்களிலும் திமுகவின் இந்த இரட்டை நிலைப்பாடு நாடகம் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
சிலி நாட்டின் போர் விமானம் ஒன்று 38 வீரர்களுடன் சென்று கொண்டிருந்தபோது திடீரென மாயமானதாக சற்றுமுன்னர் வெளியாகியுள்ள செய்தி அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டின் தெற்கு பகுதியில் நேற்று மாலை அண்டார்டிகாவை நோக்கி விமானப் படை போர்விமானம் ஒன்று பறந்து கொண்டே சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 38 இராணுவ வீரர்கள் பயணம் செய்தனர். இந்த நிலையில் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் அந்த விமானம் விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை துண்டித்தது. இதனையடுத்து அந்த விமானத்தை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
சி-130 ஹேர்கல்ஸ் என்ற வகையைச் சேர்ந்த இந்த விமானத்தை கண்டுபிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஒரு சில நேரத்தில் இந்த விமானம் குறித்த தகவல்கள் கிடைக்கும் என்று நம்புவதாகவும் ராணுவ உயரதிகாரி ஒருவர் கூறினார். இதுகுறித்து சிலி நாட்டின் அதிபர் செபஸ்டின் பினேரா கூறும்போது ’ராணுவ விமானம் வீரர்களுடன் மாயமான செய்தி தனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டதாகவும் இருப்பினும் விமானத்தை கண்டுபிடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் ஆறுதலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்
சிலி நாட்டு விமானம் கடத்தப்பட்டு இருக்குமா? அல்லது விபத்துக்குள்ளாகி இருக்குமா? என்ற பயத்தால் அந்நாட்டு மக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது