Home Blog Page 5851

உலகின் இளம் பிரதமருக்கு உலகின் மூத்த பிரதமர் கூறிய ஆலோசனை

0

உலகின் இளம் பிரதமருக்கு உலகின் மூத்த பிரதமர் கூறிய ஆலோசனை

பின்லாந்து நாட்டின் அடுத்த பிரதமராக பதவி ஏற்க இருக்கும் சன்னா மெரின், உலகின் இளம் பிரதமராக கருதப்படுகிறார். 34 வயதிலேயே இவர் பிரதமர் பதவியை ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

பின்லாந்து நாட்டின் பிரதமராக இருந்த ஆண்டி ரன்னி என்பவர் சமீபத்தில் நடந்த அஞ்சல் துறை ஊழியர்களின் போராட்டத்தை சமாளிக்க முடியாமல் பதவியை ராஜினாமா செய்தார். இதனை அடுத்து அதே கட்சியைச் சேர்ந்த 34 வயது சன்னா மெரின் பிரதமர் பதவியை ஏற்க உள்ளார். இவரை ஐந்து கூட்டணி கட்சிகள் பிரதமராக தேர்வு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் உலகின் இளம் பிரதமராக பதவியேற்க உள்ள சன்ன மெரினுக்கு உலகின் மூத்த பிரதமரான மலேசிய நாட்டின் பிரதமர் மஹாதீர் முகமது ஒரு ஆலோசனை கூறியுள்ளார். மூத்தவர்களாகிய நாங்கள் இளம் வயதினர்களின் யோசனையைக் கேட்டு அவர்களுடைய ஆலோசனையை கலந்து ஒரு முடிவை எடுப்போம். அதேபோல் இளையவர்கள் மூத்தவர்களிடம் ஆலோசனை செய்து அவர்களுடைய கருத்தை கேட்டு ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றும் இளம் வயதினர் மற்றும் மூத்த வயதினர்கள் இணையும் கூட்டணி தான் மிகச்சிறந்த கூட்டணியாக அமையும் என்றும் கூறியுள்ளார்

உலகின் இளம் பிரதமராக பதவி ஏற்க இருக்கும் சன்னாமெரின் தனது அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை செய்து ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்பதே உலகின் மூத்த பிரதமரான மலேசிய பிரதமரின் ஆலோசனை என்பது குறிப்பிடத்தக்கது

ஜீன்ஸ் போட்டா ’அதுக்கு’ ஆபத்தா?

0

ஜீன்ஸ் போட்டா ’அதுக்கு’ ஆபத்தா?

ஹைத்ராபாத்தில், பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் நவ நாகரீக இளம் பெண் ஸ்வாதி. தன் தோழியுடன் காரில் வெகு தூரம் பயணம் செய்துள்ளார். ஒரு நான்கைந்து மணி நேரம் கழித்து, இடுப்பிற்குக் கீழே உணர்வற்ற நிலை இருப்பதை உணர்கிறார். தன் தோழியிடம் விஷயத்தை சொல்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் மயங்கி விடுகிறார் ஸ்வாதி.

மருத்துவமனையில் சேர்த்த பிறகு தான் அவரின் கால்கள் மருத்து வீங்கியிருப்பதை கண்டுபிடித்தனர். அவரின் பேண்டுகளை கழட்ட முடியாமல், கிழித்து எடுத்துள்ளனர். என்ன தான் பிரச்சினை என்று மருத்துவர்களிடம் கேட்டால், டைட்டான ஜீன்ஸ் அணிந்திருந்ததால், அவரின் கால்களுக்கு சரியான ரத்த ஓட்டம் கிடைக்கவில்லை. இதனால், நரம்புகள் பாதிக்கப்பட்டு கால்கள் உணர்வற்ற நிலைக்கு வந்துள்ளது.

திடீரென, ரத்த ஓட்டத்தில் ஏற்பட்ட மாறுபாட்டால் ரத்த அழுத்தம் அதிகமாகி மயக்கம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது அவருக்கு, நரம்பு ஊசி போடப்பட்டு வருகிறது. ஒரு இறுக்கமான ஜீன்ஸ் இவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்துமா? ஆம், நாம் நாகரீகம் என்ற பெயரில் செய்யும் இது போன்ற தவறுகள் நம் உயிருக்கே உலை வைக்கின்றன.

இறுக்கமான ஜீன்ஸ்களால், ஆண்களுக்கு குழந்தையின்மை பிரச்சினையும் ஏற்படுகிறது என்ற விஷயம் தெரியுமா உங்களுக்கு. கோமணம் கட்டி, கொளுத்தும் வெயிலில் வேலை செய்யும் போது, எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை. ஆனால் பேஷன் என்ற பெயரில், நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நம் சந்ததிக்களுக்கே வேட்டு வைக்கிறது.

இறுக்கமான ஜீன்ஸ்களை தொடர்ந்து அணிவதால் ஆண்களின் விதைப்பைகளின் அமைப்பே மாறிவிடுகிறது. மேலும், இறுக்கமான உடைகள் அணியும்போது ஆணின் விதைப்பைகள் தொடர்ந்து உடலோடு அழுத்தி இறுக்கி வைக்கப்படுகின்றன. அது விதைப்பைகளின் வெப்பத்தை அதிகரிக்கச் செய்து விந்தணு உற்பத்தியை பாதிக்கும்.

எனவே குழந்தை பெற விரும்பும் ஆண்கள் ஆரோக்கியமான விந்தணு உற்பத்திக்கு உதவும் வகையில் இறுக்கமான ஜீன்ஸ் அணியாமல், காற்றோட்டமான ஆடைகளை அணிய வேண்டும். இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் பெண்களுக்கு கருப்பை கோளாறையும், குழந்தைப் பேற்றில் சிக்கலையும் ஏற்படுத்தி விடுகிறது.

இதுமட்டுமல்ல, ஜீன்ஸ் அணிவதால், சிறுநீர்ப்பாதையில் தொற்று, நெஞ்செரிச்சல் ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உடல் பாகங்கள் வெளியே தெரிய, உடம்பை இறுக்கி ஆடைகளை அணிவதால், பாதிப்பு நமக்குத் தான் என்பதை உணர வேண்டும். நம்ம ஊர் சீர்தோஷன நிலைக்கு ஏற்ற ஆடைகளை அணிவதில் என்ன பிரச்சினை. சிந்திப்போம், செயல்படுவோம்.

துரோகி திருமாவளவனை விரட்டி அடியுங்கள்! ஸ்டாலின் முன்னிலையில் சரவெடியாய் வெடித்த திமுக மாவட்ட செயலாளர்

0

துரோகி திருமாவளவனை விரட்டி அடியுங்கள்! ஸ்டாலின் முன்னிலையில் சரவெடியாய் வெடித்த திமுக மாவட்ட செயலாளர்

நேற்று முன்தினம்(டிச.8) நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பற்றிய திமுகவின் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது,. கூட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்,.

கூட்டத்தில் பல சுவாரசியமான சம்பவங்களும் அதிரடியான விவாதங்களும் தான் அதிகமாக நடைபெற்றன என்பது தான் உண்மை., இதனை தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் அனைத்தும் மூடி மறைத்தன என்பது வேறு,

நாடாளுமன்ற தேர்தல் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தான் தமிழக முதலமைச்சர் அரியணையில் அமரப் போகிறார் என்று தமிழகமே ஏன் இந்திய அளவில் முன்னிலையில் இருக்கின்ற கட்சிகளின் தலைவர்கள் கூட எண்ணி வந்தனர்,. அதனால்தான் தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கூட கொடுக்காத முக்கியத்துவத்தை மற்ற மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலினுக்கு கொடுத்து வருகின்றனர்,.

ஆனால் சமீபத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளும் அதிமுக, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவை வீழ்த்தியது,. இது திமுகவை கதிகலங்க செய்துள்ளது,. சூறாவளியாய் சுழன்று சுழன்று பிரச்சாரம் செய்தும், வீதிவீதியாக தன் கட்சி நிர்வாகிகளை களத்தில் இறக்கிவிட்டு பணத்தை செலவழித்தும் மக்கள் அதிமுகவிற்கு வாக்களித்தது மு.க.ஸ்டாலினை நிலைகுலையச் செய்தது,. இடைத்தேர்தல் தோல்வி பற்றியும் விவாதிக்கப்பட்டது,.

மேலும், திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் கடந்த மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து சென்னை மாநகராட்சியை தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்,. பஞ்சமி நில விவகாரத்தில் ஒரு காணொளியில் அண்ணா அறிவாலயமாக இருந்தாலும் போயஸ்கார்டனாக இருந்தாலும் பஞ்சமி நிலம் என்றால் தலித் மக்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்,. அதுமட்டுமில்லாமல் விக்ரவாண்டி இடைத்தேர்தலின் போது எங்களை முன்னிலைப்படுத்தாததால் தான் திமுக தோல்வி அடைய காரணம் என்று திருமாவளவன் பேசியது திமுக உடன் பிறப்புகளை அதிர்ச்சி அடைய செய்தது,. திமுகவின் அடுத்த அரசியல் வாரிசாக உதயநிதி ஸ்டாலினை தயார்படுத்தும் வேலையில் மு.க.ஸ்டாலினும் திமுகவினரும் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்,. இந்நிலையில் திருமாவளவன் செயல்கள் திமுக உடன்பிறப்புகளை கொந்தளிக்க வைத்துள்ளது.

இது திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் எதிரொலித்தது, மு.க.ஸ்டாலினின் வலதுகரமாக செயல்படும் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் அவர்கள், நம்முடைய ஓட்டுகளை பெற்று பதவி சுகத்தை அடைந்திருக்கும் ஒருவர் முதலமைச்சரை சந்தித்து பேசுகிறார், கோரிக்கை வைக்கின்றார்,. நம் கூட்டணியில் அவரை சேர்க்காவிட்டால் அவர் எல்லாம் ஜீரோ,. இது போன்ற துரோகிகளுக்கு எல்லாம் நம் தலைவர் உழைக்கக் கூடாது, அவர்களை விரட்டி அடிக்க வேண்டும் என்று திருமாவளவனை குறிப்பிடாமல் கூட்டத்தில் சரவெடியாக வெடித்தார்,

பின்பு பேசிய திருச்சி மாவட்ட செயலாளர் கே.என்.நேரு, அவர்களை எல்லாம் கழட்டி விட வேண்டாம் அவர்களாகவே கழற்றிக்கொண்டு ஓடும்படி தலைவர் செய்துவிடுவார், நாமே கழற்றி விட்டால் பின்பு தேர்தல் நேரத்தில் நமக்கு தேவைப்பட்டால் அவர்களை அனுக முடியாது என்று பேசினார்,. இந்த பேச்சை எல்லாம் கூர்ந்து கவனித்த திமுக தலைவர் மு. க.ஸ்டாலின், நம் கட்சியினரே ஆளும் கட்சியுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன,. இதே நிலை நீடித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்,.

ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது நாடாளுமன்றத் தேர்தலில் கடைசிவரை ஏங்கவிட்டு கூட்டணியில் சேர்த்துக்கொண்ட திருமாவளவனை,. உள்ளாட்சித் தேர்தலின்போது கூட்டணிக்காக அறிவாலயம் வாசலில் கூட மிதிக்காதே என்று திமுக சொல்லலாம் சொல்லிவிட்டதாகவே தெரிகிறது.

வேலூரில் பரபரப்பு ஓடும் பஸ்சில் இளம்பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்!

0

வேலூரில் ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு தாலிகட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கல்லூரியில் படிக்கும்போதே ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

அந்தப் பெண்ணுக்கு அவர் சமூகத்தில் திருமணம் நிச்சயமாகி உள்ளது இதனை அறிந்த ஜெகன் அந்த பெண்ணிடம் தனது காதலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது ஆனால் காதலை அந்த பெண் ஏற்க மறுத்து உள்ளதாக தெரிகிறது.

வேலூரில் பரபரப்பு ஓடும் பஸ்சில் இளம்பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்!

இந்நிலையில் இன்று காலை வாணியம்பாடி செல்லும் அரசு பேருந்தில் சென்றார் அந்த பெண். அப்பொழுது வாணியம்பாடி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது உடன் பயணம் செய்த ஜெகன் எதிர்பாராத விதமாக மறைத்து வைத்திருந்த தாலியை எடுத்து அந்த பெண் கழுத்தில் கட்டினார் இதனால் அதிர்ச்சிஅடைந்த அந்த பெண் கூச்சலிடவே இதனை அடுத்து ஜெகனை பிடித்த சக பயணிகள் அடித்து உதைத்தனர். பின்னர் போலீசிடம் ஒப்படைத்தனர்

ஓடும் பஸ்சில் பெண்ணுக்கு தாலிகட்டிய விவகாரம் வாணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மீனாவை அடுத்து 24 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை

0

மீனாவை அடுத்து 24 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ’தலைவர் 168’ என்ற படத்தில் 24 ஆண்டுகளுக்குப் பின் நடிகை மீனா இணைந்து நடிக்க உள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே இன்று காலை பார்த்தோம்.

இந்த நிலையில் மீனா போலவே ரஜினியுடன் 24 ஆண்டுகள் கழித்து நடிகை குஷ்புவும் இந்த படத்தில் நடிக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் சற்று முன்னர் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த படத்தில் ரஜினி மகளாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் முக்கிய வேடமொன்றில் பிரகாஷ்ராஜ் நடிக்க இருப்பதாகவும் காமெடி வேடத்தில் சூரி நடிக்க இருப்பதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிறுத்தை சிவா இயக்கத்தில் இமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கோலிக்கு “shutup”சொன்ன வில்லியம்ஸ்

0

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளரான கெஸ்ரிக் வில்லியம்ஸ் பந்தில் சிக்ஸ் விளாசியதும் செக் புக்கில் கையெழுத்திடுவது போல் நோட்புக் சைகை வெளிப்படுத்தினார்.

கோலிக்கு "shutup"சொன்ன வில்லியம்ஸ்

கெஸ்ரிக் வில்லியம்ஸ் கரிபீயன் பிரிமீயர் லீக் டி20-யில் விக்கெட் வீழ்த்தியதும் இப்படி செய்வார். போட்டி முடிந்த பின்னர், ஏன் அப்படி வெளிப்படுத்தினீர்கள் என்று விராட் கோலியிடம் கேட்கப்பட்டது. அதற்கு, நான் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடும்போது வில்லியம்ஸ் அவ்வாறு செய்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நான் செய்தேன் என்றார்.

நேற்று முன்தினம் 2-வது டி20 கிரிக்கெட் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலியை அவுட்டாக்கியதும் கெஸ்ரிக் வில்லியம்ஸ் வாயை மூடுங்கள் என்று சைகை காட்டினார். விராட் கோலி அடிக்கடி எதிரணி வீரர்கள் அவுட்டாகி செல்லும் போது அப்படி செய்வார். அதனால் வில்லியம்ஸ் விராட் கோலிக்கு எதிராக அப்படி செய்துள்ளார்.

நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி-சி 48

0


இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் பிஎஸ்எல்வி வகையில் ஐம்பதாவது பிஎஸ்எல்வி சி 48 என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்துகிறது நாட்டின் பாதுகாப்பு இயற்கை வளங்களைக் கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக பிஎஸ்எல்வி -ஜிஎஸ்எல்வி ராக்கெட் உதவியுடன் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்துகிறது.

இஸ்ரோ தற்போது எல்லை பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளுக்காக 628 கிலோ எடையில் ரிசாட்-2 பி. ஆர் என்ற அதிநவீன செயற்கைகோளை வடிவமைத்து உள்ளது.

நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி-சி 48


இந்த செயற்கைக்கோளை சுமந்தபடி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் நாளை மதியம் 3.25 மணிக்கு விண்ணில் பாய்கிறது.

ஜிசாட் 6 செயற்கைக்கோள் இஸ்ரேல் இத்தாலி ஜப்பான் ஆகிய நாடுகளில் ஒரு செயற்கைகோளும் அமெரிக்காவின் 6 செயற்கைக் கோள்களும் விண்ணில் நிலை நிறுத்தப்பட உள்ளன நாளை விண்ணில் பாய உள்ள பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 75 ஆவது ராக்கெட் என்ற சிறப்பைப் பெறுகிறது.

பவானிசாகர் அணை நீர் மட்டம் எவ்வளவு?

0

பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவில் நீடிக்கிறது ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை 105 அடி உயரம் 32.5 tmc கொள்ளளவு உடையது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் கொட்டிய கன மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக இரண்டாம் தேதி 105 அடியை எட்டியது அதன்பின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்வரத்து நேற்று மதியம் 2 மணிக்கு மணி நிலவரப்படி 3708 கன அடி நீர் வரத்து வந்துகொண்டிருக்கிறது.

நீர்மட்டம் 105 அடி நீர் இருப்பு 32.8 டிஎம்சி ஆக இருந்தது பவானி ஆற்றில் ஆயிரம் கனஅடி உபரி நீர் திறக்கப்படுகிறது கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாயிரத்து 100 கன அடி பாசனத்துக்கு வெளியேற்றப்படுகிறது ஒரு வாரமாக பவானி அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

டோக்கியோ ஒலிம்பிக் ரஷ்யாவுக்கு தடை!

0


ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய ரஷ்யாவுக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உலக ஊக்கமருந்து தடுப்பு மையம் தடை விதித்துள்ளது.


கடந்த 2014ல் ரஷ்யாவின் சோச்சி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடந்தது இதில் ரஷ்ய நட்சத்திர வீரர்கள் ஊக்க மருந்து உட்கொண்டது தெரியவந்தது. ரஷ்ய விளையாட்டு நட்சத்திரங்கள் ஊக்க மருந்து பயன்படுத்த அந்நாட்டு அரசு ஆதரவாக இருந்தது அம்பலமானது.

இதனையடுத்து ரஷ்யாவுக்கு போட்டிகளில் பங்கேற்க கடந்த 2015ம் ஆண்டு நவம்பரில் 15 மாதம் தடை விதிக்கப்பட்டது இதனால் 2016 இல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ரஷியா தடகள நட்சத்திரங்கள் பங்கேற்க முடியவில்லை இது குறித்த உலக ஊக்க மருந்து தடுப்பு மையம் சார்பில் மூன்று பேர் கொண்ட குழு விசாரணை செய்தது முடிவில் 223 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டது இதில் ரஷ்ய ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் நம்பகத்தன்மை இல்லை என்றும் இங்கு நடத்தப்பட்ட சோதனைகளின் மாதிரிகளை திட்டமிட்டு அழித்து விட்டார்கள் என தெரிவித்தது.

இந்நிலையில் நேற்று சேலம் சுவிட்சர்லாந்தில் லாசோன் நகரில் உலக ஊக்க மருந்து தடுப்பு மையம் சார்பில் செயற்குழு கூட்டம் நடந்தது கூட்டத்தில் விசாரணையின் குழுவின் பரிந்துரையை ஏற்று ரஷ்யாவுக்கு 4 ஆண்டு தடை விதிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

இதனால் டோக்கியோ ஒலிம்பிக்2020 உலக கோப்பை கால்பந்து கத்தார்2022 பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் 2022 உள்ளிட்ட முக்கிய போட்டிகளில் நட்சத்திர நட்சத்திரங்கள் பங்கேற்க முடியாது. ரஷ்யா சார்பில் 21 நாட்களுக்குள் முறையீடு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் பெண்களுக்கான மேலும் ஒரு கட்டுப்பாடு நீக்கம்!

0

சவுதி அரேபியாவில் பெண்களுக்கான மேலும் ஒரு கட்டுப்பாடு நீக்கம்!

சவுதி அரேபியாவில் கடந்த பல ஆண்டுகளாக பெண்களுக்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தது. பெண்கள் கார் ஓட்ட கூடாது என்றும், ஆண் துணை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பட்டத்து இளவரசராக பதவி ஏற்ற முகமது பின் சல்மான் பல கட்டுப்பாடுகளை தளர்த்தினார்

பெண்கள் கார் ஓட்டலாம் என்றும் ஆண் துணையின்றி பெண்கள் தனியாக செல்லலாம் என்றும் சில கட்டுப்பாடுகளை தளர்த்தி நிலையில் தற்போது பெண்களுக்கான மேலும் ஒரு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது

சவுதி அரேபியாவில் உள்ள ஹோட்டல்களில் ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக நுழைவாயில்கள் இதுவரை இருந்து வந்தன. அதே போல் ஹோட்டல் உள்ளேயும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே திரை போடப்பட்டிருக்கும்

இந்த நிலையில் தற்போது ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனி நுழைவு வாயில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தனித்தனி நுழைவாயில் வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை அந்தந்த ஹோட்டல் நிர்வாகங்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து படிப்படியாக மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என பெண்கள் தரப்பில் இருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது