Home Blog Page 5857

என்கவுண்டர் எல்லாம் பாஜக பக்கம் திரும்பாதா? கொள்ளப்பட்ட குற்றவாளிகளுக்கு குரல் கொடுக்கும் விசிக

0

என்கவுண்டர் எல்லாம் பாஜக பக்கம் திரும்பாதா? கொள்ளப்பட்ட குற்றவாளிகளுக்கு குரல் கொடுக்கும் விசிக

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சாம்ஷாபாத் பகுதியை சேர்ந்த பெண் கால்நடை டாக்டர் கடந்த 27-ம் தேதி 4 நபர்களால் கொடூரமான முறையில் கற்பழித்து எரித்து கொலை செய்யப்பட்டார்.

நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்திற்கு, கொலை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை அளிக்க வேண்டும் என்று நாடு முழுவதிலிருந்தும் கோரிக்கை வந்தது, போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் ‌என 10 நாட்களாகவே தெலுங்கானா பற்றி எரித்தது,.
இந்த சூழ்நிலையில் 4 பேரும் என்கவுண்டர் மூலம் தெலுங்கானா காவல்துறையினரால் கொல்லப்பட்டனர், இதனால் நாடு முழுவதும் மக்கள் தெலுங்கானா போலீசாரை வாழ்த்தியும் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடியும் வருகின்றனர்.

என்கவுண்டர் எல்லாம் பாஜக பக்கம் திரும்பாதா? கொள்ளப்பட்ட குற்றவாளிகளுக்கு குரல் கொடுக்கும் விசிக

https://twitter.com/VanniArasu_VCK/status/1203180639006142465?s=19

விழுப்புரம் நவீனா என்ற மாணவியை தீயிட்டு கொளுத்தி கொடூரமான முறையில் கொன்றவனுக்கு ஆதரவாக பழியை பாமக மீது போட்டு நாடகமாடிய விடுதலை சிறுத்தைகள் கட்சி,. விருத்தாசலம் அருகே கருவேப்பலங்குறிச்சி கிராமத்தில் திலகவதி என்ற இளம்பெண்னை கத்தியால் குத்தி கொலை செய்தவன் தானே குற்றத்தை ஒப்புக் கொண்டாலும், கொலை நடக்கும் போது கொலை செய்தவன் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டு இருந்தான் என்று கூறிய திருமாவளவனும் அதன் கூடாரமும்,.

என்கவுண்டர் எல்லாம் பாஜக பக்கம் திரும்பாதா? கொள்ளப்பட்ட குற்றவாளிகளுக்கு குரல் கொடுக்கும் விசிக

தற்போது பாஜக பக்கம் என்கவுண்டர் திரும்பாதா என்று டிவிட்டர் மூலம் பாஜகவை வம்புக்கு இழுத்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னியரசு,.

ஹியரிங் எய்ட் அணிந்ததும் காது கேட்காத குழந்தையின் ரியாக்சன்

0

ஹியரிங் எய்ட் அணிந்ததும் காது கேட்காத குழந்தையின் ரியாக்சன்

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பால் அடிசன் என்பவர் தனது நான்கு மாத குழந்தைக்கு காது கேட்காததை அறிந்து மிகவும் துயரத்துடன் இருந்தார். மருத்துவர்கள் குழந்தைக்கு பல்வேறு சிகிச்சை அளித்த போதும் குழந்தையின் காது சரியாகவில்லை.

இந்த நிலையில் தனது அன்பு மகளுக்காக ஒரு ஹியரிங் எய்ட் வாங்கி வந்து குழந்தையின் காதில் அணிய வைத்தார். அதன் பின்னர் அக்குழந்தையின் அம்மா பேசிய குரலை கேட்டதும் அக்குழந்தையின் ரியாக்சன் அபாரமாக இருந்தது. நான்கு மாதங்களுக்கு பின் முதல்முறையாக குழந்தை தனது அம்மாவின் குரலை கேட்டதும் ஆச்சரியமடைந்து குழந்தைத்தனமாக கத்திய வீடியோ ஒன்று தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ ஒரு சில மணி நேரங்களில் ஒன்றரை லட்சம் பார்வையாளர்களை பெற்று வைரலாகியுள்ளது. கள்ளங்கபடமில்லாத அந்த குழந்தை தனது அம்மாவின் குரலை முதல் முதலாக கேட்ட மகிழ்ச்சி அந்த குழந்தையின் முகத்தில் தெரிவதாக இந்த வீடியோவை பார்த்து பலர் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

நடத்த வேண்டும் அதிமுக! வெற்றி வேண்டும் பாமக! நிறுத்த வேண்டும் திமுக

0

நடத்த வேண்டும் அதிமுக! வெற்றி வேண்டும் பாமக! நிறுத்த வேண்டும் திமுக

தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது,. வார்டு மறுவரை செய்யாமல் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒரேயடியாக தேர்தலை நிறுத்திவிட்டு, திமுக ஆட்சிக்கு வந்தால் தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்ற மாயத் தோற்றத்தை திமுக உருவாக்க நினைத்தது,. ஆனால் சுதாரித்துக்கொண்ட அதிமுக உள்ளாட்சித் தேர்தலை எப்படியாவது நடத்த வேண்டும் என்ற முனைப்பில் ஒருவழியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயாராகிவிட்டது,. இனியும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருந்தால் கட்சியின் தொண்டர்கள் அதிமுகவை விட்டு சென்று விடுவார்கள் என்ற பயம் தற்போது தான் ஆளும் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் இல்லாததால் ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு யாருக்கும் குறிப்பிட்ட சதவீதம் கூட கமிஷன் கொடுக்காமல் தங்கள் வருவாயை கோடிகணக்கில் பெருக்கிக் கொண்டனர்,. இதே நிலைமை நீடித்தால் அதிமுகவின் மூன்றாம் நான்காம் கட்ட தலைவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் பிரதிநிதிகளாக வர வாய்ப்பு இல்லாமல் போனால் வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்ற எண்ணம் அதிமுகவினரிடையே இருந்து வருகிறது.

ஆளுங்கட்சியின் எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் மட்டும் பணம் மற்றும் பதவி சுகத்தை அனுபவித்துக்கொண்டு கடைக்கோடி கட்சி பிரதிநிதிகளை கண்டுகொள்ளாமல் இருந்தால் அதிமுக வரும் சட்டமன்ற தேர்தலில் அகலபாதாளத்துக்கு சென்றுவிடும் என்பது அதிமுகவினரின் புலம்பல் ஆகும்,.

அதேபோல், தற்போது உள்ளாட்சி தேர்தல் நடந்தால் ஆளுங்கட்சியின் அதிகாரம் காரணமாக அதிமுகவினரை எப்படியாவது வெற்றி பெற வைத்து விடுவார்கள் என்ற பயம் திமுகவிற்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது,. இதன் காரணமாகத்தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறக் கூடாது என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது,. ஏதாவது ஒரு காரணத்தை வைத்து தேர்தலுக்கு தடை வாங்க திமுக முனைப்பு காட்டி வருகிறது. அமைச்சர்கள் தங்கள் அதிகாரம் மூலம் அதிமுகவினரை உள்ளாட்சி பிரதிநிதிகளாக அதிகளவில் வெற்றி பெற வைத்து திமுகவிற்கு கடும் நெருக்கடி கொடுப்பார்கள் என்பதை மு.க.ஸ்டாலின் நன்கு அறிந்திருப்பார்,.

திமுக, உள்ளாட்சி தேர்தலை நிறுத்த தடை கேட்டு வழக்கு தொடர்வதை, அதிமுக தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பை தலைவர் ஏற்படுத்திவிட்டார் என்பது திமுகவில் உள்ள தொண்டர்களின் மனக்குமுறல் ஆகும்,. அதுவும் தற்போது திமுக தடை பெற்றுள்ள 9 மாவட்டங்களில் அங்குள்ள திமுக பிரமுகர்கள், தலைமையின் மீது அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது தற்போதைய சூழ்நிலையில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள உள்ளாட்சி பதவி கூட கிடைக்கவிடாமல் செய்துவிட்டார் என்றும் புலம்பி கொண்டு வருகின்றனர்.

பாட்டாளி மக்கள் கட்சி இத்தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியிடம் அதிக தொகுதிகளை கேட்டு பெற முடியும் என்ற நிலையில் உள்ளது,. காரணம் நாடாளுமன்றத் தேர்தலில் தலித்களுக்கு எதிரான கட்சி என்ற விஷம தோற்றத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் திமுகவும் சேர்ந்து அவதூறு பரப்பியதால் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கூட இழந்தது.

வன்னியர்கள் பலமிக்க இடங்களை கேட்டு அதிக உள்ளாட்சி பிரதிநிதிகளை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் பாமக உள்ளது,. ஏற்கனவே இளைஞர்களை பெருமளவில் வைத்துக்கொண்டு செயல்படுவதால் அவர்களின் வளர்ச்சிக்கு வழிவகை ஏற்படுத்த பாமக தலைமை, இளைஞர்களுக்கு தேர்தலில் அதிகளவில் வாய்ப்பு கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது,.

எப்படி இருந்தாலும், உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் தான், மக்கள் மத்தியில் இன்றளவும் எழுந்துள்ளது.

இன்று சென்னையில் மழை பொழிவு எப்படி இருக்கும்?

0

வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்த போதிலும் சென்னைக்கு இன்னும் இயல்பான மழை கிடைக்கவில்லை.
சென்னைக்கு குடிநீர் வழங்ககூடிய ஏரிகளில் நீர் மட்டம் உயர்ந்து வரும் போதிலும் இன்னும் முழுமையான கொள்ளளவை எட்டவில்லை. ஆனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
வளிமண்டலத்தின் மேலடுக்கில் சுழற்சி காரணமாக தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், உள் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய உள் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையில் சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும். என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சீன விஞ்ஞானிகளின் முயற்சியால் குரங்கு-பன்றிக்கு பிறந்த வித்தியாசமான விலங்கு

0

சீன விஞ்ஞானிகளின் முயற்சியால் குரங்கு-பன்றிக்கு பிறந்த வித்தியாசமான விலங்கு

சீன விஞ்ஞானிகளின் முயற்சியால் பன்றி மற்றும் குரங்குகளுக்கு இரண்டு வித்தியாசமான விலங்குகள் பிறந்துள்ளன.

பன்றி மற்றும் குரங்கின் டி.என்.ஏவை ஆய்வு செய்து இதுபோன்ற வித்தியாசமான விலங்கு ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியபோதிலும் இந்த இரண்டு விலங்குகளும் பிறந்து ஒரே வாரத்தில் இறந்துவிட்டன.

இருப்பினும் இந்த விலங்குகளின் இதயம், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகள் மனிதனுக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்ய பயன்படும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதுபோன்ற விலங்குகளை செயற்கையாக உருவாக்குவதன் மூலம் மனிதனுக்கு தேவையான மாற்று அறுவை சிகிச்சைக்கான உறுப்புகளுக்கு தட்டுப்பாடு இருக்காது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்த ஆராய்ச்சி மேலும் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஈக்வடாரில் தான் உள்ளாரா நித்தியானந்தா?

0


திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா பெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாக கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வருகிறார்.

குழந்தைகள் கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற புகார்களின் அடிப்படையில் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார் நித்யானந்தா.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடார் அருகே நித்யானந்தா கைலாசா என்ற ஒரு நாட்டை உருவாக்க இருக்கிறார் என்ற பேச்சும் அடிபட்டது.

ஈக்வடாரில் தான் உள்ளாரா நித்தியானந்தா?

அதற்கு ஏற்றார் போல தனி பாஸ்போர்ட், தனி சின்னங்கள், அமைச்சரவை என தனி நாடு அமைக்கப்போவதாக செய்தி வெளியானது. இது குறித்து அவர் தனிப்பட்ட kailaasa.org என்ற இணையதளத்தை ஏற்படுத்தி அதில் தகவல்களை வெளியிட்டு உள்ளார்.


ஆனால் நித்யானந்தாவின் அடைக்கலம் கோரிக்கையை மறுத்துவிட்டதாக ஈக்வடார் நாடு அறிவித்துள்ளது, தற்போது அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்றும் “மறைமுகமாக ஹைதி தீவில் மறைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவின் ரூ.1400 கோடி முதலீடு செய்ய பிரபல எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் முடிவு

0

இந்தியாவின் ரூ.1400 கோடி முதலீடு செய்ய பிரபல எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் முடிவு

இந்தியாவின் வர்த்தக சந்தை என்பது உலக நாடுகளுக்கு ஒரு முக்கிய லாபம் தரும் நாடாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக என்டர்டைன்மென்ட் துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் அதிக முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன

இதனை அடுத்து கடந்த சில ஆண்டுகளாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து வருகின்றன

அந்த வகையில் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களுக்கு இணையாக தற்போது மக்களிடம் பெரும் ஆதரவை பெற்று வருவது நெட்பிளிக்ஸ், அமேசான், சன்நெக்ஸ்ட் போன்ற செயலிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த செயலிகளில் ஒளிபரப்பப்படும் திரைப்படங்கள் தொலைக்காட்சித் தொடர்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என்பது தெரிந்ததே

இந்தியாவின் ரூ.1400 கோடி முதலீடு செய்ய பிரபல எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் முடிவு

இந்த நிலையில் என்டர்டைன்மென்ட் செயலிகளில் முன்னணி செயலி நிறுவனங்களில் ஒன்றான நெட்பிளிக்ஸ் சிஇஓ நேற்று அளித்த ஒரு பேட்டியில் இந்தியாவில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூபாய் 1,400 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் இந்த முதலீட்டின் மூலம் இந்தியாவில் திரைப்படங்களின் உரிமையை பெறுவது மற்றும் சொந்தமாக திரைப்படங்கள் மற்றும் தொடர்களை தயாரிப்பது போன்றவற்றில் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

சினிமா துறைக்கு இணையாக வளர்ச்சி பெற்று வரும் இந்த செயலிகள் தயாரிக்கும் தொடர்கள் வருங்காலத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்பதும் இதன் மூலம் மிகப்பெரிய லாபத்தை நிறுவனங்கள் பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

மகனுக்கு மணப்பெண்ணை முடிவுசெய்த பிரேமலதா விஜயகாந்த்: மணப்பெண் யார் தெரியுமா

0

மகனுக்கு மணப்பெண்ணை முடிவுசெய்த பிரேமலதா விஜயகாந்த்: மணப்பெண் யார் தெரியுமா


கேப்டன் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் தம்பதியின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு மணப்பெண் பார்த்து முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் இளங்கோ என்பவரின் மகள் கீர்த்தனாவுக்கும் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனுக்கு திருமணம் முடிக்க இருவீட்டார்களும் முடிவு செய்தனர். இது குறித்த பூ வைக்கும் நிகழ்ச்சி நேற்று கோவை அருகே நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா மற்றும் எல்கே சுதீஷ், விஜய பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றதாகவும் விஜயபிரபாகரன்-கீர்த்தனா திருமணம் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இருவீட்டார்கள் தெரிவித்துள்ளனர்

இந்த திருமண பூ வைக்கும் நிகழ்ச்சியில் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை என்பதும் அவர் உடல் நிலை காரணமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது இருப்பினும் அவரது சார்பில் எல்.கே.சுதீஷ் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

விஜயகாந்த் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ளதை அடுத்து தேமுதிக தொண்டர்களும் விஜயகாந்த் ரசிகர்களும் அவருக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா செய்த இரண்டு சாதனைகள்

0

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா செய்த இரண்டு சாதனைகள்

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று ஐதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் 208 என்ற இலக்கை 18.4 ஓவர்களில் இந்திய அணி சிக்சர் அடித்து வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த போட்டியில் இரண்டு சாதனைகளை இந்திய அணி படைத்துள்ள செய்தி தற்போது வெளிவந்துள்ளது. முதலாவது சாதனையாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று 94 ரன்கள் எடுத்ததே அவரது அதிகபட்ச டி20 போட்டிகளில் ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா செய்த இரண்டு சாதனைகள்

அதேபோல் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோரை சேஸ் செய்து வெற்றி பெற்றதும் நேற்றைய போட்டியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று இந்திய அணி 208 என்ற இலக்கை நோக்கி விளையாடி 18.4 ஓவர்களில் 209 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதற்கு முன் கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக மொகாலியில் நடைபெற்ற டி20 போட்டியில் 207 என்ற இலக்கை நோக்கி விளையாடி வெற்றி பெற்றதே இந்திய அணியின் அதிகபட்ச சேஸ் வெற்றியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

நேற்றைய முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 2 சாதனைகளுடன் வெற்றி பெற்றதை அடுத்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் இந்திய அணிக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

இன்றைய நாள் எப்படி? தினசரி ராசி பலன்கள்

0

இன்றைய நாள் எப்படி? தினசரி ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் சனிக்கிழமை (07/12/2019)

மேஷம் :
உத்தியோகத் துறையில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகள் உருவாகும் .பணி நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். செய்யும் செயலில் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படவும். கவனக்குறைவால் சிறு அவப்பெயர்கள் ஏற்படலாம். கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம் நிறம்

அஸ்வினி : பயணங்களில் அலைச்சல் ஏற்படும்.
பரணி : பொறுமை தேவை.
கிருத்திகை : மரியாதைக் குறைவு ஏற்படும்.

ரிஷபம் :
நண்பர்கள் இடையே கருத்து மோதல் ஏற்பட வாய்ப்பு உண்டாகும். சாதுர்யமான பேச்சுக்களால் சில பணிகளை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் ஆதரவாக செயல்படுவார்கள். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலநிறம்

கிருத்திகை : காரியசித்தி அனுகூலமாகும்.
ரோகிணி : நட்புகள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : அரவணைத்து செல்லவும்.

மிதுனம் :
வியாபாரத் துறையில் உள்ளவர்களுக்கு புதிய தொழிலாளர் களின் மூலம் அனுகூலம் ஏற்படும்.புதிய நபர்களின் ஆதரவால் இலாபம் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொதுநலக் காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான நாள். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்

மிருகசீரிஷம் : சேமிப்பு உயரும்.
திருவாதிரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
புனர்பூசம் : கலகலப்பான நாள்.

கடகம் :
வெளிவட்டார நட்புகளிடம் செல்வாக்கு அதிகரிக்கும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். தூரத்து உறவினர்களின் வருகையால் கலகலப்பான சூழல் உண்டாகும். உத்தியோகம் சம்பந்தமான புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளியூர் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
பூசம் : அனுகூலம் உண்டாகும்.
ஆயில்யம் : பாராட்டுக்கள் கிடைக்கும்.

சிம்மம் :
இணையதளம் சார்ந்துள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களிடம் அமைதி காக்கவும். பிறரின் செயல்பாடுகளை விமர்சிப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் சம்பந்தமான செயல்பாடுகளில் காலதாமதம் நேரிடலாம்.உணவு விஷயங்களில் கவனமாக இருக்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மகம் : பொறுமை தேவை.
பூரம் : தடங்கல் ஏற்படும்.
உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

கன்னி :
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
எண்ணிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வேலையில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். பங்குதாரர்களிடம் அனுகூலமான சூழல் உண்டாகும். அரசு அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : ஜெயம் உண்டாகும்.
அஸ்தம் : செலவுகள் குறையும்.
சித்திரை : கவனம் வேண்டும்.

துலாம் :
உயர் அதிகாரிகளின் மூலமாக நல்ல நிலைக்கு வருவீர்கள். பணியில் இருந்துவந்த தடைகள் அகலும். பொருட்சேர்க்கை உண்டாகும். தந்தைவழி உறவுகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை செயல்படுத்துவதால் இலாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

சித்திரை : தடைகள் விலகும்.
சுவாதி : சுபச்செய்திகள் வந்தடையும்.
விசாகம் : மதிப்பு உயரும்.

விருச்சிகம் :
உத்தியோகத் துறையில் உள்ளவர்களுக்கு மதிப்பு மரியாதை உண்டாகும்.நீண்ட நாள் உறவினர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். தொழிலில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். காலதாமதமான பணிகளை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : சந்தோசமான நாள்.
அனுஷம் : அனுபவம் கிடைக்கும்.
கேட்டை : புகழ் அதிகரிக்கும்.

தனுசு :
தொழிலில் எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள்.குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத உதவிகளால் மேன்மையான சூழல் ஏற்படும். பணி நிமிர்த்தமான முடிவுகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மூலம் : ஒற்றுமையுடன் செயல் படுவீர்கள்.
பூராடம் : சாதகமான நாள்.
உத்திராடம் : சேமிப்பு உயரும்.

மகரம் :
செய்தொழிலில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறைந்து சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தொழிலில் வேலையாட்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். பணியில் முயற்சிக்கேற்ற அங்கீகாரமும், பாராட்டுகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : மேன்மை உண்டாகும்.
திருவோணம் : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
அவிட்டம் : இன்னல்கள் குறையும்.

கும்பம் :
மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சகோதர ஒற்றுமை மேம்படும். அலங்கார பொருட்களின் மீது நாட்டம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்

அவிட்டம் : தெளிவு பிறக்கும்.
சதயம் : வாய்ப்புகள் உண்டாகும்.
பூரட்டாதி : ஒற்றுமை மேம்படும்.

மீனம் :
பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். எதிர்பார்த்த தனவரவுகளால் பணப்புழக்கம் மேம்படும். வியாபாரத்தில் நண்பர்களால் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். சக ஊழியர்களிடம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

பூரட்டாதி : அனுகூலமான நாள்.
உத்திரட்டாதி : தனவரவு அதிகரிக்கும்.
ரேவதி : தன்நம்பிக்கை உண்டாகும்.
ஜோதிடர்: சிவஸ்ரீ த. ஸ்ரீமுருகன். குருக்கள்