Home Blog Page 5856

வில்லியம்சை பழிதீர்த்த கோலி?

0

வில்லியம்சை பழிதீர்த்த கோலி?

நேற்று இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக முதல் டி20 போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது இதில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 207 ரன்களை எடுத்தது அடுத்ததாக ஆடிய இந்திய அணி 18.4 ஓவரிலேயே இலக்கை அடைந்தது இந்தியாவின் கேப்டன் கோலி 94 ரன்கள் எடுத்தார்.

அதில் 6 பவுண்டரி 6 சிக்சர்கள் அடங்கும் இப்போட்டியில் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு நடைபெற்றது. வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீரர் வில்லியம்ஸ் 3.4 ஓவர் வீசி 60 ரன்களை விட்டுக் கொடுத்தார் விக்கெட் எதுவும் கைப்பற்றவில்லை அவரை அவரது பந்து வீச்சை விராட் கோலி வெளுத்து வாங்கி ரன்களை குவித்தார் இதன் மூலம் வில்லியம்சை கோலி பழிதீர்த்துக் கொண்டார்.


பொதுவாக வில்லியம்ஸ் விக்கெட்டை கைப்பற்றும் போது. அந்தப் பேட்ஸ்மேன் பெயரை நூல்களின் நோட்புக்கில் இருந்து எடுத்து விட்டதாக கைகளில் சைகை காட்டி கொண்டாடுவார் அதேபோல் 2017 ஆம் ஆண்டு ஜமைக்காவில் நடந்த ஆட்டத்தில் கோலியின் விக்கெட்டை கைப்பற்றிய வில்லியம்ஸ் நோட்புக் கொண்டாட்டத்தில் கோலியின் பெயரை அழித்து கோலியை வெறுப்பு ஏற்றினார்.

நேற்று வில்லியம்ஸ் ஓவரில் சிக்சர் மழை பொழிந்த கோழி வில்லியம்ஸின் பெயரை அழித்துவிட்டதாக வெறுப்பேற்றி னார்.

இதுகுறித்து கோலி கூறும்போது ஜமைக்காவில் நடந்த போட்டியின்போது என் விக்கெட்டை கைப்பற்றியதாக வில்லியம்ஸ் நோட் புக்கை எடுத்து என் பெயரை அளித்தார் அன்று முதல் எனக்கும் அவருக்கும் சிறு விளையாட்டு மோதல் இருந்து வருகிறது இன்று எனது நேரம் என குறிப்பிட்ட கோலி,கடினமாக விளையாட வேண்டும் அதே வேளையில் எதிரணியை மதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மீண்டும் 29 ஆயிரத்துக்கு கீழ் சென்றது தங்கம் விலை!

0

தங்கத்தின் மீதான முதலீடு என்பது நம்பிக்கையாகவும் பாதுகாப்பாகவும் கருதுகின்றனர்.
மேலும் சாமானிய மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை தங்கத்தில் தான் முதலீடு செய்கின்றனர். உலக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வதில் இந்தியா முக்கிய பங்கில் உள்ளது.

எனவே நாள் தோறும் தங்க ஏற்ற இரக்கம் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.
அந்த வகையில் இன்றைய தங்கத்தின் விலை வருமாறு
ஆபரண தங்கம் 22 carat கிராம் ஒன்றுக்கு நேற்றைய விலையை விட 28 ரூபாய் குறைந்து 3612 ரூபாய் ஆகவும்
ஒரு பவுன் தங்கம் நேற்றைய விலையை விட 224 ரூபாய் குறைந்து பவுன் ஒன்றுக்கு 28896 ரூபாயாகவும் உள்ளது அதே போல் 24 கேரட் தூய தங்கத்தின் விலை1கிராம் 3793 ரூபாய் ஆகவும் 10 கிராம் தூய தங்கத்தின் விலை ரூபாய் 37930 ஆகவும் உள்ளது.

வெள்ளியின் விலையைபொறுத்தவரை நேற்றைய விலையை விட கிராம்க்கு 1 ரூபாய் குறைந்து ரூபாய் 46.60 க்கும் 1கிலோ 1000 ரூபாய் குறைந்து ரூபாய் 46600 க்கும் வர்த்தகம் செய்யப்பட்டது.

தனுஷ் நடிக்கும் கர்ணன்!எப்போது படப்பிடிப்பு?

0

அசுரன் பட பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து துரை செந்தில் குமார் இயக்கத்தில் ’பட்டாஸ்’ என்ற படத்தில் நடித்து முடித்து விட்டார் படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது இதனையடுத்து ‘கர்ணன்’ படத்தைத் தொடங்க தனுஷ் முடிவு செய்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த படத்தின் முதற்கட்ட லண்டன் படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பினார் தனுஷ். அடுத்த ஓரிரு நாட்களிலேயே ’பட்டாஸ்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்கினார்.
துரை.செந்தில்குமார் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் சிநேகா, மெஹ்ரீன், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்துள்ளனர்.
தற்போது ‘பட்டாஸ்’ படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். விவேக் – மெர்வின் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது.


‘பட்டாஸ்’ படம் முடிவடைந்ததைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் தனுஷ். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலியில் தொடங்கவுள்ளது. தாணு தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு ‘கர்ணன்’ எனப் பெயரிட்டுள்ளனர். ரஜிஷா விஜயன் நாயகியாக நடிக்கவுள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார்.

விஜய்சேதுபதி படத்தில் இணைந்த அஜித் பட நடிகை!

0

விஜய்சேதுபதி படத்தில் இணைந்த அஜித் பட நடிகை!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படங்களில் ஒன்று ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஜனநாதனின் உதவியாளர் வெங்கட கிருஷ்ணா இயக்குகிறார்.

மேலும் இயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படத்தின் டைட்டில் ’லாபம்’ என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் ஜனநாதன் மற்றும் அவரது உதவியாளர் ஆகிய இருவரின் படங்களிலும் விஜய்சேதுபதி நாயகனாக நடித்து வருகிறார் என்பது ஒரு குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

’யாதும் ஊரே யாவரும் கேளிர்’படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் பிரபல இயக்குனர் மோகன் ராஜா மற்றும் விவேக் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

விஜய்சேதுபதி படத்தில் இணைந்த அஜித் பட நடிகை!

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க நடிகை கனிகா ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே அஜித் நடித்த ‘வரலாறு’ உள்பட ஒருசில தமிழ் திரைப் படங்களிலும் ஏராளமான தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இம்மாத இறுதிக்குள் இந்த படத்தின் மொத்த படிப்பு முடிந்து விடும் என்றும் வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் இந்த படம் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

திட்டம் போட்டு உள்ளாட்சித் தேர்தலில் பழி வாங்கியதா திமுக? ஒரே கல்லில் 2 ”மாங்காய்” பறிக்க திட்டம்?

0

திட்டம் போட்டு உள்ளாட்சித் தேர்தலில் பழி வாங்கியதா திமுக? ஒரே கல்லில் 2 ”மாங்காய்” பறிக்க திட்டம்?

உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என திமுக அவசர வழக்கு தொடர்ந்ததால், புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், வேலூர், நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது திமுகவுக்கு கிடைத்த வெற்றி என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். இட ஒதுக்கீடு பின்பற்றவில்லை என்று முதலில் தடை வாங்கிய திமுக, இப்போது வார்டு வரையறை செய்யவில்லை என்று அவசர வழக்கு போட்டு தடை வாங்கியது என்ற கேள்வி எழுகிறது.

இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று விசாரித்தபோது காதில் விழுந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை கண்ட திமுக, அடுத்து நடந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய 2 இடைத்தேர்தலில் படுதோல்வி அடைந்தது. திமுகவின் 2 தொகுதியையும் அதிமுக கைப்பற்றியதை தலைமையால் ஜீரணிக்க முடியவில்லை.

அதனால், எப்போதும் அந்த மாவட்டங்களுக்கே எந்த திட்டமும் செல்லக்கூடாது, அப்படி எதுவும் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் ஓட்டு போட்டு வெற்றி பெற்றவர்கள் உங்களை ஏமாற்றிவிட்டனர் என்றெல்லாம் கூறி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடிவு செய்ததாம்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளதால், அதை சாதகமாக பயன்படுத்தியது திமுக.

ஏற்கனவே இருந்த இட ஒதுக்கீடு காரணத்தை புறம் தள்ளிவிட்டு, புதிய மாவட்டங்களில் வார்டு மறுவரையறை செய்யவில்லை என்று அவசர வழக்கு தொடுத்து தடை பெற்றுள்ளது.

தேர்தலில் தோற்கடித்த விழுப்புரம், நெல்லை மாவட்டங்கள் உட்பட காஞ்சிபுரம், வேலூர், தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கும் தடை வாங்கி, ஓட்டு போடாத மக்களை பழி வாங்கியதாக பேசிக்கொள்கிறார்கள்.

அதிலும், பாமக ஓட்டு வங்கி உள்ள வட மாவட்டங்களே அதிகம் இதில் உள்ளதால், கல்லில் இரண்டு ” மாங்காய்” என்று குஷியில் இருக்காங்களாம். ஊடகங்கள் தங்களுக்கு சாதகமாக இருப்பதால் இதெல்லாம் மக்களுக்கு தெரிய போவதில்லை. அதனால், வரும் தேர்தலில் மிகப்பெரிய ஓட்டு அறுடை செய்ய காத்திருப்பதாக திமுக ஆதரவாளர்கள் பேசிக் கொள்கின்றனர்.

உள்ளாட்சித்தேர்தல் #திமுக #அதிமுக #பாமக

8 லட்சம் பேர் வீதியில் இறங்கி போராட்டம்: பிரான்ஸ் நாட்டில் பெரும் பரபரப்பு

0

8 லட்சம் பேர் வீதியில் இறங்கி போராட்டம்: பிரான்ஸ் நாட்டில் பெரும் பரபரப்பு

பிரான்ஸ் நாட்டின் புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி ஓய்வூதிய வயது வரம்பு 62 லிருந்து 64 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சேவை காலத்தை பொருத்து ஓய்வூதிய தொகை மாறுபடும் என்றும் அரசு அறிவித்துள்ளது. அதாவது ஓய்வூதிய வயது 64 வயதுக்கு முன்னரே ஓய்வு கோரினால் ஓய்வூதியத் தொகை வேறுபடும் என்றும் அரசு அறிவித்துள்ளது

பிரான்ஸ் அரசின் இந்த அறிவிப்புக்கு அந்நாட்டின் தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்து வருகின்றன. நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள், என பல்வேறு துறையினர் சுமார் 8 லட்சம் பேர் ஒரே நாளில் ஒரே இடத்தில் குவிந்து வீதியில் இறங்கி போராடியதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

8 லட்சம் பேர் வீதியில் இறங்கி போராட்டம்: பிரான்ஸ் நாட்டில் பெரும் பரபரப்பு

இந்த போராட்டம் காரணமாக முக்கிய நகரங்களில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக உலகின் முன்னணி சுற்றுலா தலங்களில் ஒன்றும் உலக அதிசயங்களில் ஒன்றுமான ஈஃபில் டவருக்கு சுற்றுலா பயணிகள் செல்ல முடியாத வகையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

இதனையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி முயற்சி செய்ததாகவும் ஆனாலும் போலீசாரின் இந்த முயற்சி பலிக்கவில்லை என்றும் தொடர்ந்து அந்நாட்டில் போராட்டம் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஹைதராபாத் என்கவுன்டர் சம்பவம்: நடிகை நயன்தாரா பரபரப்பு கருத்து

0

ஹைதராபாத் என்கவுன்டர் சம்பவம்: நடிகை நயன்தாரா பரபரப்பு கருத்து

ஹைதராபாத்தில் நேற்று நடந்த என்கவுண்டர் சம்பவம் குறித்து பல்வேறு துறையினர் தங்களது கருத்தை கூறி வரும் நிலையில் நடிகை நயன்தாரா சற்றுமுன்னர் இதுகுறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை. இந்த கூற்று உண்மையான நாயகர்களால் இன்று உண்மையாகியிருக்கிறது. தெலங்கானா காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டியிருக்கிறார்கள்.

காட்டுமிராண்டிகளின் ஈனத்தனமான சட்டத்திற்குப் புறம்பாக, பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு எதிராகத் தீர்க்கமான பதிலளித்துள்ளார்கள். பெண்களின் முன்னேற்றத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது நம் கடமை. இந்த நடவடிக்கை என்பது சரியாக வழங்கப்பட்ட நீதி. இதுவே நியாயமான மனிதமிக்க நடவடிக்கை என அழுத்திச் சொல்வேன்.

நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் இந்த நாளை, தேதியைப் பெண்களுக்கு சரியானா நியாயம் கிடைத்த நாளாகக் குறித்து வைத்துக் கொள்ளலாம். பெண்களுக்கு இது சற்றே ஆறுதல். அவர்களுக்கு எதிராக வன்புணர்வு செய்யும் காட்டுமிராண்டிகளுக்கு இந்த நடவடிக்கை சற்றேனும் பயம் தரும்.

மனிதம் என்பது அனைவரிடத்தும் சரிசமமாக மரியாதை தருவதும், அன்பு செலுத்துவது, இரக்கம் கொள்வதுமே ஆகும். நீதி கிடைத்திருக்கும் இத்தருணம் மகிழ்ச்சியே என்றாலும், நாம் நம் குழந்தைகளுக்குப் பெண் பாதுகாப்பு குறித்த கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம்.

குறிப்பாய் நம் ஆண் குழந்தைகளுக்குப் பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுத் தர வேண்டும். பெண்களை மதிப்பவனே, பாதுகாப்பவனே நாயகன் என்பதை அழுத்தமாக அவன் மனதில் பதிய வைக்க வேண்டும்.

எதிர்கால உலகைப் பெண்மீதான வன்முறைக்கு எதிரான, அன்பான உலகாக மாற்ற வேண்டியது நம் கடமை. அப்போது தான் நாம் நிம்மதியான பெருமூச்சுடன் அன்பை அனைவரிடத்தும் பகிர்ந்து கொள்ள முடியும்.

இவ்வாறு நயன்தாரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்படாமலேயே அதிக சுங்கக் கட்டணம்: தடுத்து நிறுத்த மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

0

நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்படாமலேயே அதிக சுங்கக் கட்டணம்: தடுத்து நிறுத்த மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

முதலீடு எடுக்கப்பட்ட சுங்கச் சாவடிகளில் சுங்கக்கட்டணத்தை
ரத்து செய்ய வேண்டும் என்றும், நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்படாமலேயே அதிக சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து பாமக தலைமை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாவது.

தமிழ்நாட்டில் சாலை அமைப்பதற்காக செய்யப்பட்ட முதலீடு எடுக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், தேசிய நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்படாமலேயே அதிக சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்களுக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். அதன் நகல்கள் மத்திய நெடுஞ்சாலைத்துறை செயலாளர் திரு. சஞ்சீவ் ரஞ்சன், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தலைவர் மருத்துவர். சுக்பீர்சிங் சாந்து ஆகியோருக்கு அனுப்பியுள்ளார்.அதன் விவரம் வருமாறு:

மாண்புமிகு மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்களுக்கு,

வணக்கம்!

பொருள்: தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்படாமலேயே அதிக சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவது, சாலை அமைப்பதற்காக செய்யப்பட்ட முதலீடு எடுக்கப்பட்ட பிறகும் தொடர்ந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவது ஆகியவற்றை சரி செய்யக் கோருதல் – தொடர்பாக

தமிழ்நாட்டில் வாகன ஓட்டிகள், வாகன உரிமையாளர்கள், பொதுமக்கள் தொடங்கி உயர்நீதிமன்ற நீதிபதிகள் வரை அனைவர் மத்தியிலும் பெரும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ள சுங்கச் சாலைகளின் பராமரிப்பு, அநீதியான கட்டண வசூல் ஆகியவை குறித்து உங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்காகவும் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

தமிழ்நாட்டில் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் (Old NH-4, Now NH-48) சென்னை மதுரவாயல் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சாலை மிக மோசமாக பராமரிக்கப்பட்டிருப்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான அதிருப்தியை தெரிவித்திருப்பது குறித்தும், இந்த சாலை முழுவதும் புதிதாக அமைக்கப்படும் வரை சுங்கக்கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றமே தாமாக முன்வந்து பொதுநல வழக்குப் பதிவு செய்திருப்பது குறித்தும் தங்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். இவ்வழக்கில் தங்கள் அமைச்சகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவிக்கை அனுப்பியிருப்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

சென்னை மதுரவாயல் – வாலாஜாபேட்டை இடையிலான சாலை முழுமையாக மீண்டும் அமைக்கப்படும் வரை சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு மிகவும் சரியானது தான். இந்த சாலையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு கூட நிம்மதியாக பயணிக்க முடியாது என்ற அளவுக்கு சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. இதனால் இந்த சாலையில் பயணிப்பதே பெரும் தண்டனையாக உள்ளது. இந்த சாலையில் அதிக அளவில் விபத்துகளும் ஏற்படுகின்றன. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஏராளமான போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. கடைசியாக கடந்த நவம்பர் 14-ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாலாஜா நகரில் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனாலும், மதுரவாயல்- வாலாஜா இடையிலான சாலையை நிர்வகித்து சுங்கக்கட்டணம் வசூலிக்கும் Essel Walajahpet Poonamallee Tolls Road Pvt Ltd (EWPTRPL) நிறுவனம் சாலையை முறையாக பராமரிக்கத் தவறியதன் காரணமாகவே இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

NH 48 தேசிய நெடுஞ்சாலை இந்தியாவின் மிகவும் நீளமான சாலை என்பது மட்டுமின்றி, மிகவும் முக்கியமான சாலையும் கூட. சென்னையில் தொடங்கும் இந்த சாலை கர்நாடகம், மராட்டியம், குஜராத், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களைக் கடந்து தில்லியை அடைகிறது. மொத்தம் 2807 கி.மீ நீளம் கொண்ட இந்த நெடுஞ்சாலையின் தென்பகுதி தொடக்கமே மிகவும் மோசமாக இருப்பது நல்லதல்ல. இச்சாலையில் பெங்களூரு முதல் வாலாஜா வரையிலான சாலை ஆறுவழிப் பாதையாக்கப்பட்டுள்ள நிலையில், வாலாஜா முதல் சென்னை வரையிலான பாதை நான்கு வழிப் பாதையாகவே உள்ளது. திருப்பெரும்புதூர் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ள நிலையில் அந்தப் பகுதியில் எட்டு வழிச்சாலை அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அனுமதிக்கப்பட்ட ஆறு வழிச் சாலைகூட இன்னும் அமைக்கப்படவில்லை. எனவே, இந்த விஷயத்தில் தாங்கள் தலையிட்டு, சென்னை முதல் வாலாஜாபேட்டை வரையிலான சாலையை தரமான 8 வழிச்சாலையாக மாற்ற ஆணையிட வேண்டும்.

அதேபோல், பல சுங்கச்சாலைகளுக்காக செய்யப்பட்ட முதலீடு எடுக்கப்பட்ட பிறகும் முழுமையான சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்கிறது. 45 எண் கொண்ட தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டை அடுத்த பரனூரிலும், திண்டிவனத்திற்கு முன்பாக ஆத்தூரிலும் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 2005-ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இச்சாலை சுங்கக்கட்டண சாலையாக அறிவிக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை அமைக்க ரூ.536 கோடி மட்டுமே செலவானதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சுங்கச்சாலை அமைக்கப்பட்டது முதல் 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான 13 ஆண்டுகள் ஆறு மாத காலத்தில் பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் ரூ.1098 கோடி சுங்கக்கட்டணமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. அதன்பின் இப்போது வரை கூடுதலாக ரூ.150 கோடி வசூலிக்கப்பட்டிருக்கும். சாலை அமைக்க செலவிடப்பட்டதை விட இரு மடங்கிற்கும் மேலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு விட்ட நிலையில், இன்னும் முழு கட்டணம் வசூலிப்பது ஏன்? என்ற வினாவுக்கு நெடுஞ்சாலைகள் ஆணையம் அளித்துள்ள பதில் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

நெடுஞ்சாலை அமைக்க ரூ.536 கோடி மட்டும் தான் செலவிடப்பட்டது என்றாலும், அதற்கான பணிகள் தொடங்கப்பட்ட நாள் முதல் முடிவடைந்த நாள் வரை பணவீக்கம் கணக்கிடப்பட்டு, அதுவும் திட்டச் செலவில் சேர்க்கப்பட்டது. அதனால் திட்டச் செலவு ரூ.770.18 கோடியாக அதிகரித்து விட்டதாம். அதுமட்டுமின்றி, சுங்கக்கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகையில் 4% பராமரிப்புக்காக ஒதுக்கப் பட்டதுடன், இயக்கச் செலவுகள் என்ற பெயரில் 12% கழிக்கப்பட்டது. இத்தகைய கழிவுகளுக்குப் பிறகு சுங்கக்கட்டணமாக ரூ.416.04 கோடி மட்டும் தான் வசூலிக்கப்பட்டிருப்பதாக கணக்கில் காட்டப் பட்டுள்ளது. ரூ.770 கோடி முதலீட்டை திரும்ப எடுக்க இன்னும் ரூ.354 கோடி தேவை என்றும், அதுவரை முழு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் நெடுஞ்சாலைகள் ஆணையம் கூறியுள்ளது.

கடந்த பதிமூன்றரை ஆண்டுகளில் சுங்கக்கட்டணமாக வசூலிக்கப்பட்ட ரூ.1098 கோடியில் ரூ.682 கோடியை, அதாவது மொத்த வசூலில் 63% தொகை பராமரிப்பு மற்றும் இயக்குதலுக்காக செலவாகிவிட்டது என்பதை எவரும் ஏற்க மாட்டார்கள். பராமரிப்பு மற்றும் இயக்கச் செலவுகள் மொத்த முதலீட்டை விட 15% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பரனூர், ஆத்தூர் ஆகிய இரு சுங்கச்சாவடிகளிலும் சேர்த்து பதிமூன்றரை ஆண்டுகளில் ரூ.1098 கோடி மட்டும் தான் வசூலிக்கப்பட்டுள்ளது என்பதையே நம்ப முடியவில்லை. இந்தக் கணக்கின்படி பார்த்தால் இரு சுங்கச்சாவடிகளிலும் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ. 11 லட்சம் மட்டுமே வசூலாகியிருக்கிறது. இந்த இரு சுங்கச்சாவடிகளிலும் சராசரியாக தினமும் ஒரு லட்சம் வாகனங்கள் செல்லும் நிலையில், இவ்வளவு குறைந்த தொகை தான் வசூலாகியிருக்கிறது என்ற கணக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை.

நான் குறிப்பிட்டிருப்பது உதாரணத்திற்காக ஒரு சுங்கச்சாவடியின் கணக்கு வழக்கு மட்டும் தான். தமிழகத்திலுள்ள பெரும்பான்மையான சுங்கச்சாவடிகளின் நிலை இது தான். எனவே, தமிழகத்திலுள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் அவற்றை அமைப்பதற்காக ஆன உண்மையான செலவு, இதுவரை உண்மையாக வசூலிக்கப்பட்ட சுங்கக்கட்டணம் எவ்வளவு? என்பது குறித்து பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி, இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி) அலுவலக உயரதிகாரிகள் உள்ளிட்டோரைக் கொண்ட ஆணையம் அமைத்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும்; விசாரணை முடிவடையும் வரை 10 ஆண்டுகளுக்கும் கூடுதலாக செயல்பட்டு வரும் சுங்கச் சாவடிகளில் பராமரிப்புக்காக 40% கட்டணம் மட்டுமே வசூலிக்க ஆணையிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.

வீடூர் அணை திறப்பு! ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் உட்பட இருவர் உயிரிழப்பு

0

வீடூர் அணை திறப்பு! ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் உட்பட இருவர் உயிரிழப்பு

புதுச்சேரியில் கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் கனமழையால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. மேலும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வீடூர் அணை திறக்கப்பட்டதால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் குளிக்க, மீன்பிடிக்க ஏராளமான இளைஞர்கள் வருகின்றனர். மேலும் நீரில் இறங்கி ஆர்வத்துடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (05.12.2019) மாலை புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் சங்கராபரணி ஆற்றில் புதுப்பேட்டை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் கார்த்திக்(21), அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் வினோத்(24) ஆகியோர் நீரில் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் இருவரும் ஆற்றில் மூழ்கி உள்ளனர். அவர்களை காப்பாற்ற முயற்சித்தும் அவர்கள் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

என்கவுண்டர் செய்த போலீசாருக்கு பரிசு?

0

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த பலாத்காரத்துக்கு சம்பந்தமுடைய நால்வரை கைது செய்து ஐதராபாத் சிறையில் அடைத்தனர் போலீசார்.

இதனிடையே சம்பவம் சம்பவம் நடந்த இடத்தில் நால்வரும் கொண்டுசெல்லப்பட்டு எப்படி கொலை செய்தனர் என்பதை நடித்து காட்டுவதற்காக சம்பவ இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

என்கவுண்டர் செய்த போலீசாருக்கு பரிசு?


ஆனால் அவர்கள் நால்வரும் காவலர்கள் மீது கல்லெறிந்து தப்பிக்க முயன்றதாக தெரிகிறது இதனால் காவலர்கள் அவர்களை என்கவுண்டர் செய்தனர்.


4 பேரை என்கவுண்டர் செய்த தெலுங்கானா போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன இதனிடையே
குஜராத் மாநில முதல்-மந்திரி விஜய் ரூபானி, எதிர்க்கட்சி தலைவர் பரேஷ் தானானி ஆகியோர் பாராட்டினர். மேலும், பாவ் நகர் மாவட்டம், மகுவா நகரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் ராஜ்பா கோஹில் ஐதராபாத்தில் என்கவுண்ட்டர் நடத்திய போலீசாருக்கு ரூ.1 லட்சம் ரொக்க பரிசு வழங்குவதாக அறிவித்தார்.


இதையொட்டி அவர் வெளியிட்ட வீடியோ செய்தியில், “நமது நாட்டின் போலீசாரை எண்ணி பெருமை அடைகிறேன். இந்த நாட்டின் பெண் பிள்ளைகளுக்கும், பெண்களுக்கும் ஐதராபாத் போலீசார் மதிப்பு கொடுத்து இருக்கிறார்கள். நான் ஐதராபாத்துக்கு நேரில் சென்று ரூ.1 லட்சம் ரொக்க பரிசை போலீசாருக்கு வழங்குவேன்” என கூறி உள்ளார்.