Home Blog Page 5858

தீ வைத்து கொளுத்தப்பட்ட உன்னாவ் இளம்பெண் மரணம்: பெரும் பரபரப்பு

0

தீ வைத்து கொளுத்தப்பட்ட உன்னாவ் இளம்பெண் மரணம்: பெரும் பரபரப்பு

ஒரு இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்வது மட்டுமன்றி உயிரோடு கொளுத்துவது என்பது குற்றவாளிகளுக்கு சாதாரணமாகிவிட்டது. போலீசில் சிக்க மாட்டோம் என்றும் அப்படியே சிக்கினாலும் பல வருடங்கள் வழக்குகள் நடந்து இறுதியில் காரணம் கருணை மனுபோட்டு தப்பித்து விடலாம் என்ற தைரியம் தான் இவ்வாறு குற்றம் செய்வதற்கு காரணம் என்று சமூக வலைதள பயனாளர்கள் தெரிவித்து வருகின்றனர்

ஒரு குற்றவாளியின் குற்றம் உறுதி செய்யப்பட்டால் உடனடியாக அந்த குற்றவாளிக்கு தண்டனை கிடைக்கவேண்டும் என்றும் அவ்வாறு தண்டனை அளித்தால் மட்டுமே குற்றங்கள் குறைய வாய்ப்பிருக்கிறது என்றும் தாமதம் ஆகும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்றும் சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாலியல் பலாத்காரம் செய்த 2 கொடூரர்கள் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்து அதே பெண்ணை பெட்ரோல் ஊத்தி கொளுத்தி உள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த அந்த பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று, சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்

இந்த குற்றவாளிகளை ஜாமீனில் விடாமல் இருந்திருந்தால் அந்த பெண் தற்போது உயிருடன் இருந்திருப்பார். இவ்வாறான கொடூர குற்றவாளிகளை ஜாமீனில் எப்படி விட்டார்கள் என்ற கேள்வி தான் தற்போது எழுகிறது. இதுபோன்ற குற்றங்கள் தொடர்ச்சியாக நடக்கும் போது என்கவுண்டர் தேவைதான் என்ற எண்ணம் பொதுமக்களின் மனதில் எழுகிறது. இதனை நீதிமன்றமும் சட்ட வல்லுநர்களும் தான் தவிர்த்த வழிவகை செய்யவேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது

திருவண்ணாமலை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பரிசு!

0

திருவண்ணாமலை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பரிசு!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் நடைபெறும் கார்த்திகை மகா தீபத் திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.  திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை பயன்படுத்தி வந்தனர்.  இவர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள்,  கிரிவலப்பாதை முழுவதும் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் பெருமளவிலான மாசு கேடு ஏற்படுகிறது.  மேலும் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து செல்வது உள்ளாட்சித் துப்புரவு பணியாளர்களுக்கு பெரும் சவாலாக இருப்பதுடன், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிப்பதாக உள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு விழா காலத்தில் உருவாகும் பிளாஸ்டிக் குப்பைகளை தவிர்க்கவும், பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பை, சனல் பை, மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தூக்கு பைகளை உபயோகப்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில்,  திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கார்த்திகை திருவிழாவிற்கு துணிப்பை சணல் பை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பிற பைகளை எடுத்து வரும் பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் வழங்கும் திட்டத்தினை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

பக்தர்களுக்கு கணினி மூலம் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டு இரண்டு கிராம் தங்க நாணயங்களும் 10 கிராம் வெள்ளி நாணயங்களும் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.  தடை செய்யப்பட்டுள்ள ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்கும் வண்ணமும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணி மற்றும் சணல் பைகளை எடுத்து வரும் பக்தர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த வருட கார்த்திகை தீப திருவிழாவில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 நபருக்கு, தலா 2 கிராம் தங்கம் மற்றும் 72 நபருக்கு, தலா 10 கிராம் வெள்ளி நாணயங்கள் வழங்க மாசுகட்டுப்பாடு வாரியம் மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளது.  அதுமட்டுமல்லாமல் சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளைக் கொண்டுவந்து கூப்பன் பெறும் ஒவ்வொரு நபருக்கும் ஒரு துணிப்பை வழங்கப்பட இருக்கிறது.

முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி கோலி அபாரம்?

0

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இன்று(6.12.2019) நடந்தது. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி கோலி அபாரம்?


முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஹெட்மையர் 56 ரன்களும் கேப்டன் பொல்லார்ட் 37 ரன்களும் எடுத்தனர் இந்தியா தரப்பில் சகல் 2 விக்கட்டுக்களையும் வாஷிங்டன் சுந்தர், சகார், ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
208 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்கியது. காயம் காரணமாக தவான் இந்த தொடரில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் ரோகித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினார்.

அணியின் ஸ்கோர் 30 ஆக இருந்த பொழுது இந்தியா ரோகித் சர்மாவின் விக்கெட்டை பறிகொடுத்தார். அதற்கடுத்ததாக வந்த விராட் கோலி கேஎல் ராகுல் இணை நல்ல பதிலடி கொடுத்தது அணியின் ஸ்கோர் 130 ஆக இருந்த பொழுது கேஎல் ராகுல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் 62 ரன்கள் எடுத்திருந்த கே எல் ராகுல் அதில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் விளாசி இருந்தார் கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்த கேப்டன் விராட் கோலி 94 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் இதில் 6 பவுண்டரி 6 சிக்சர்கள் அடங்கும்.

இறுதியாக 18.4 ஓவர்களில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்து இலக்கை அடைந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா ஒன்றுக்கு பூஜ்யம் என்று முன்னிலையில் உள்ளது.

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

0

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம்  தீர்ப்பு!

சென்னை அயனாவரத்தில் சேர்ந்த 11 வயது சிறுமியை லிப்ட் ஆப்பரேட்டர் உட்பட 17 பேர் தொடர்ந்து ஆறு மாத காலத்துக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  

இதுதொடர்பான வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  அந்த 17 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

குற்றம் சாட்டப்பட்ட 17 பேரும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  கடந்த 11 மாதங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை இன்றுடன் முடிவடைந்தது.

இதனையடுத்து சென்னை மாவட்ட சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.  

முன்னதாக  குற்றம்சாட்டப்பட்ட 17 பேரில் பாபு என்பவர் சிறையில் உயிரிழந்தார் மீதமுள்ள 16 பேருக்கான தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

இன்றைய தங்கம் விலை எவ்வளவு?

0

தங்கத்தின் மீதான முதலீடு என்பது அளவில் நம்பிக்கையாகவும் பாதுகாப்பாகவும் கருதுகின்றனர்.
மேலும் சாமானிய மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை தங்கத்தில் தான் முதலீடு செய்கின்றனர். உலக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வதில் இந்தியா முக்கிய பங்கில் உள்ளது.
எனவே நாள் தோறும் தங்க ஏற்ற இரக்கம் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.


அந்த வகையில் இன்றைய தங்கத்தின் விலை வருமாறு
ஆபரண தங்கம் 22 carat கிராம் ஒன்றுக்கு நேற்றைய விலையை விட 4 ரூபாய் குறைந்து 3640 ரூபாய் ஆகவும்
ஒரு பவுன் தங்கம் நேற்றைய விலையை விட 32 ரூபாய் குறைந்து பவுன் ஒன்றுக்கு 29120 ரூபாயாகவும் உள்ளது அதே போல் 24 கேரட் தூய தங்கத்தின் விலை1கிராம் 3822 ரூபாய் ஆகவும் 10 கிராம் தூய தங்கத்தின் விலை ரூபாய் 38220 ஆகவும் உள்ளது.


வெள்ளியின் விலையைபொறுத்தவரை நேற்றைய விலையை விட கிராம்க்கு 10 பைசா அதிகரித்து ரூபாய் 47.60 க்கும் 1கிலோ 100 ரூபாய் அதிகரித்து ரூபாய் 47600 க்கும் வர்த்தகம் செய்யப்பட்டது.

டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு: இரு அணி வீரர்களின் முழு விபரங்கள்

0

டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு: இரு அணி வீரர்களின் முழு விபரங்கள்

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் நாடுகளுக்கு இடையே இன்று ஹைதராபாத்தில் நடைபெறும் முதல் டி20 போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்டது. இதில் இந்திய கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்

இதனை அடுத்து இன்னும் சற்று நேரத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் இரு அணிகளில் 11 பேர் கொண்ட ஆடும் அணி குறித்த விபரம் வெளியாகி உள்ளது. அவை பின் வருமாறு

இந்திய அணி:

ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராத் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஷிவம் டுபெ, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சஹார், புவனேஷ்வர் குமார், சாஹல்

மேற்கிந்திய தீவுகள் அணி:

லிவிஸ், சிம்மன்ஸ், பிராண்டன் கிங், ஹெட்மயர், பொல்லார்ட், டெனெஷ் ராம்தின், ஜேசன் ஹோல்டர், பியரி, வில்லியம்ஸ், ஷெல்டன், ஹெய்டன் வால்ஷ்,

இந்த போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

என்கவுண்டர் செய்த போலீசார் படங்களுக்கு பாலாபிஷேகம்: இது கொஞ்சம் ஓவர் தானோ?

0

என்கவுண்டர் செய்த போலீசார் படங்களுக்கு பாலாபிஷேகம்: இது கொஞ்சம் ஓவர் தானோ?

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கல்லூரி மாணவிகள் சிலர் தங்கள் கல்லூரி வளாகத்தில் என்கவுண்டர் செய்த போலீஸ் அதிகாரிகளின் புகைப்படத்திற்கு பாலாபிஷேகம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இதுவரை நடிகர் நடிகைகளுக்கு மட்டுமே கட் அவுட் பேனர் வைத்து பாலாபிஷேகம் செய்து வந்த இளைஞர்கள் தற்போது சமூக விழிப்புணர்ச்சி அடைந்து என்கவுண்டர் செய்த போலீசார்களுக்கும் பாலாபிஷேகம் செய்து வருவதாக நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்

தெலுங்கானாவை சேர்ந்த பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் இன்று அதிகாலை என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் என்கவுண்டர் செய்த போலீசார்களுக்கு பொதுமக்களும் சமூக வலைதள பயனாளிகளும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள் போலீசாருக்கு பெரும் பாராட்டுகளை தெரிவித்து தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் என்கவுண்டர் செய்த போலீஸ் அதிகாரியின் புகைப்படத்திற்கு ஒரு கல்லூரி மாணவிகள் பாலாபிஷேகம் செய்து வந்ததை கொஞ்சம் ஓவர்தான் என்றும் ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்

யார் இந்த ஐ. பி.எஸ் அதிகாரி வி.சி.சஜ்ஜனார்?

0

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த பலாத்காரத்துக்கு சம்பந்தமுடைய நால்வரை கைது செய்து ஐதராபாத் சிறையில் அடைத்தனர் போலீசார்.

இதனிடையே சம்பவம் சம்பவம் நடந்த இடத்தில் நால்வரும் கொண்டுசெல்லப்பட்டு எப்படி கொலை செய்தனர் என்பதை நடித்து காட்டுவதற்காக சம்பவ இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் அவர்கள் நால்வரும் காவலர்கள் மீது கல்லெறிந்து தப்பிக்க முயன்றதாக தெரிகிறது இதனால் காவலர்கள் அவர்களை என்கவுண்டர் செய்தனர்.

யார் இந்த ஐ. பி.எஸ் அதிகாரி வி.சி.சஜ்ஜனார்?

இந்தச் சம்பவம் நடந்த இடம், சைபராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி. சஜ்ஜனார் ஐ.பி.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும். இவரைத் தெலங்கானா மக்கள் நிஜ ஹீரோ என்று சொல்கின்றனர். தற்போது வி.சி.சஜ்ஜனார் குறித்த தகவல்கள் சமூகவலைதளங்களில் வைரலாகிவருகின்றன.


1996-ம் ஆண்டு கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான வி.சி.சஜ்ஜனார், ஒரு என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட். வாரங்கல் பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு இன்ஜினீயரிங் மாணவியை ஒரு தலையாகக் காதலித்த நபர் சக கூட்டாளிகளுடன் சேர்ந்து அவர் மீது ஆசிட் வீசினார். அப்போது வி.சி.சஜ்ஜனார் அந்த மாவட்டத்தின் எஸ்.பி-யாகப் பணியாற்றி வந்தார்.

இந்த வழக்கில் ஸ்ரீனிவாசராவ், ஹரிகிருஷ்ணா, சஞ்சய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அப்போது, சஜ்ஜனார் கட்டுப்பாட்டிலிருந்த போலீஸ் டீம், மூன்று பேரையும் சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தது. அந்தச் சமயத்தில் போலீஸாரின் பிடியிலிருந்து மூன்று பேரும் தப்பி ஓட முயன்றதால் அவர்கள் என்கவுன்டர் செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தில் வி.சி.சஜ்ஜனாரை ஒரு தரப்பினர் பாராட்டினர். ஆனால், இன்னொரு தரப்பினர் இது போலி என்கவுன்டர் எனக் குற்றம் சாட்டினர். ஆனால், அவர் எதையும் கண்டுகொள்ளவில்லை.

யார் இந்த ஐ. பி.எஸ் அதிகாரி வி.சி.சஜ்ஜனார்?

இன்று நால்வரின் என்கவுண்டரும் அவர் தலைமையின் கீழ் நடைபெற்றதால் அவரை சமூக தல வாசிகள் புகழ்ந்து வருகின்றனர் ஒரு தரப்பினர் அவரை குறையும் கூறி வருகின்றனர்.

நாங்கள் விற்கவும் இல்லை! அவர் வாங்கவும் இல்லை! மறுப்பு தெரிவித்த ஈகுவடார்

0

நாங்கள் விற்கவும் இல்லை! அவர் வாங்கவும் இல்லை! மறுப்பு தெரிவித்த ஈகுவடார்

பெங்களூருவில் பிடதி ஆசிரமம் அமைத்து மக்கள் மத்தியில் ஆன்மீக சொற்பொழிவாற்றி பிரபலமடைந்தவர் நித்தியானந்தா. இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு, சிறுமிகளை வசியப் படுத்துதல், பணம் நகைகளை அபகரிப்பது போன்ற பல்வேறு புகார்கள் இருக்கின்றன. இதுபோல பல்வேறு சர்ச்சைகளுக்கு பயந்து அவர் வெளிநாட்டுக்கு சென்று விட்டதாகவும் தகவல்கள் உண்டு.

ஆனால் அவ்வப்போது இணையதளத்தில் தோன்றி தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து வருகிறார் நித்யானந்தா.  சென்ற மாதத்தில் கூட தனது மகள்களை நித்தியானந்தா அடைத்து வைத்திருப்பதாகவும் அவர்களை விடுவிக்கக் கோரியும் குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் நித்யானந்தா மீது வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த சர்ச்சைகள் அடங்குவதற்குள் தற்போது நித்தியானந்தா ஒரு தீவையே விலைக்கு வாங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன . அதன்படி தென்னமெரிக்காவின் ஈக்வடார் நாட்டின் ஒரு தீவையே நித்தியானந்தா வாங்கி இருப்பதாகவும் அதற்கு அவர் கைலாசம் என பெயரிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த நாட்டின் தனிக்கொடி, இலட்சினை, பாஸ்போர்ட் போன்றவற்றை தயார் செய்து விட்டதாகவும் தகவல்கள் பரவுகின்றன. அதுமட்டுமில்லாமல் இந்த நாட்டை சட்டப்படி அங்கீகரிப்பதற்கு அங்குள்ள அரசு அதிகாரிகளால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் நித்யானந்தா தங்களது நாட்டில் தீவு எதையும் வாங்கவில்லை அப்படி எதனையும் நாங்கள் விற்கவும் இல்லை என்று ஈக்வடார் அரசு திட்டவட்டமாக விளக்கமளித்துள்ளது. நித்யானந்தர் ஈக்வடாரில் தனித் தீவு ஒன்றை வாங்கி விட்டதாகவும் அதற்கு “ரிபப்ளிக் ஆப் கைலாசம்” என்று பெயரிட்டு உள்ளதாகவும் அதற்கு தனி கொடி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும். அந்தக் கொடியில் ஒரு பக்கம் நித்யானந்தா அமர்ந்திருப்பது போலவும் மறுபுறம் நந்தியும் இருக்கிறது என செய்தி சேனல்களிலும் சமூக ஊடகங்களிலும் செய்தி பரவ தொடங்கியது.

ஆனால் டெல்லியில் உள்ள ஈக்வடார் தூதரகம் இதை முற்றிலுமாக மறுத்துள்ளது. நித்யானந்தா அதுபோன்ற எந்த ஒரு தீவையும் தங்களிடமிருந்து வாங்கவும் இல்லை, தாங்கள் விற்கவும் இல்லை என்று அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். நித்யானந்தா தன்னை ஒரு அகதியாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுகோள் வைத்ததாகவும் ஆனால் அதற்கு அரசு மறுப்பு தெரிவித்ததாகவும் அவர்கள் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது. மேலும் தற்போது நித்யானந்தா  தென் அமெரிக்காவின் “ஐதி” தீவிற்கு தப்பிச் சென்றிருக்க கூடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பா ரஞ்சித்தின் சாதிய பேச்சுக்கு சமயம் பார்த்து பழிவாங்கிய தென் மாவட்ட மக்கள்

0

பா ரஞ்சித்தின் சாதிய பேச்சுக்கு சமயம் பார்த்து பழிவாங்கிய தென் மாவட்ட மக்கள்

இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவான ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீப காலங்களில் சாதிய உரிமையை பேசுகிறேன் என்ற பெயரில் இவர் பேசியது மற்றும் இவரின் படத்தின் மூலமாக கூறப்பட்ட கருத்துக்கள் தற்போது அவருக்கு எதிராகவே அமைந்து விட்டது.

சமீபத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தையடுத்து பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள அடுத்த படம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், கயல் ஆனந்தி, பிக்பாஸ் புகழ் ரித்விகா, முனீஸ்காந்த் போன்ற பலர் நடித்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்திற்கான தமிழக உரிமை சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்திற்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்த இயக்குனர் பா.ரஞ்சித் தொடர்ந்து பொதுவெளியில் தலித் உரிமை சம்பந்தமாக அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்திருக்கிறார். மேலும் இவர் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் தமிழகத்தில் நிலவி வரும் ஜாதி தீண்டாமையை கூறுகிறேன் என்ற பெயரில் பல இடங்களில் சகோதரர்கள் போல பழகி வரும் மக்களிடையே மீண்டும் சாதிய பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் காட்சிகளை அமைத்திருந்தார்.

பரியேறும் பெருமாள் படம் வெளியான போதும் பெரும்பாலான திரையரங்குகளில் அதை வெளியிட மறுத்ததால் மிகக் குறைவான திரையரங்குகளில் மட்டுமே வெளியாகியது. பின்னர் திருமாவளவன் மற்றும் வேல்முருகன் போன்ற அரசியல் தலைவர்கள் ஆதரவுடன் கொஞ்சம் காட்சிகள் அதிகரிக்கப்பட்டன.

ஆரம்பத்தில் படத்துக்கு திரையரங்குகளை ஒதுக்கீடு செய்வதற்கு குறிப்பிட்ட சில விநியோக பகுதிகளில் உரிமையாளர்கள் மத்தியில் பெரும்பாலும் ஆர்வம் காட்டவில்லை. அதற்குக் காரணம் பா.ரஞ்சித் தொடர்ந்து தலித் உரிமை பற்றி அதிகமாக பேசி வருவது மற்றும் அதன் மூலம் மக்களிடையே சாதிய பிரிவினைகளை தூண்டுவது தான் எனக் கூறப்பட்டது.

அதைப்போலவே தற்போது வெளியாகவுள்ள இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படத்திற்கும் தென் மாவட்டங்கள் முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குறிப்பாக சில சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் ஊர்களில் இந்த படத்தை திரையிட வேண்டாம் என்று தியேட்டர் உரிமையாளர்களுக்கு சில அமைப்புகள் மூலமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதை மீறி இந்த படத்தை திரையிட்டாலும் யாரும் வந்து பார்க்கமாட்டார்கள் அதனால் உங்களுக்குத்தான் நஷ்டம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். பா.ரஞ்சித் தன்னுடைய அரசியல் விளம்பரத்திற்காக சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் சாதிய கருத்துக்களை பேசியது தற்போது அவருக்கே எதிராக அமைந்துள்ளது