Home Blog Page 5862

விண்ணில் 30 ஆண்டுகளுக்கு பின் நிகழும் அரிய நிகழ்வு: ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்ப்பு

0

விண்ணில் 30 ஆண்டுகளுக்கு பின் நிகழும் அரிய நிகழ்வு: ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்ப்பு

30 ஆண்டுகளுக்கு பிறகு விண்ணில் நிகழும் அபூர்வ நிகழ்வு ஒன்று டிசம்பர் 26-ம் தேதி நடைபெறவுள்ளதாகவும் இந்த அரிய நிகழ்வை காண தவற வேண்டாம் என்றும் வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளன.

வானில் நெருப்பு வளையத்துடன் கூடிய சூரிய கிரகணம் வரும் 26ஆம் தேதி தோன்றுகிறது என்றும் இந்த சூரிய கிரகணம் டிசம்பர் 26ஆம் தேதி காலை 8.36 மணிக்கு தொடங்கி, 10.30-க்கு முழுமை பெறும் என்றும், இருப்பினும் கிரகணம் 1.33 மணிக்கு விலகும் என்றும் கொடைக்கானல் வான் இயற்பியல் ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.

சூரிய கிரகணம் காரணமாக தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்நிழலும், வட தமிழகத்தில் வெளிநிழலும் படியும் என்றும், இந்த சூரிய கிரகணத்தை வெற்றுக் கண்களால் பார்க்க கூடாது என்றும், அதற்கென வடிவமைக்கப்பட்ட சூரியக்கண்ணாடி வழியாகவே பார்க்க வேண்டும் என்றும் வானியல் ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதற்கு முன்னர் இதேபோன்ற நெருப்பு வளையத்துடன் கூடிய சூரிய கிரகணம் கடந்த 1989ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் தேதி ஏற்பட்ட நிலையில் தற்போது 30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நிகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

வெங்காய திருடர்களுக்கு எச்சரிக்கை: அரிவாள், கம்புடன் பாதுகாப்பு ஏற்பாடு!

0

வெங்காய திருடர்களுக்கு எச்சரிக்கை: அரிவாள், கம்புடன் பாதுகாப்பு ஏற்பாடு!

வெங்காயத்தின் விலை தினமும் விஷம் போல் ஏறி வருவதால் வெங்காயத்தை பயிர் செய்வதை விட வெங்காயத்தை பாதுகாப்பது விவசாயிகளுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது.

வெங்காய அறுவடை செய்வதற்கு முன்னரே மர்மநபர்கள் வெங்காயத்தை அறுவடை செய்து கொண்டு செல்வதும், வெங்காயம் சேமித்து வைத்திருக்கும் இடங்களில் வெங்காய மூட்டைகளை திருடிச் செல்வதுமான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இதனை அடுத்து வெங்காயம் பயிரிடுவது மற்றும் கொள்முதல் செய்வது மட்டுமன்றி அதனை பாதுகாக்க வேண்டிய நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது.

வெங்காய திருடர்களுக்கு எச்சரிக்கை: அரிவாள், கம்புடன் பாதுகாப்பு ஏற்பாடு!

தங்கம் வைரம் மற்றும் ரொக்கம் வைக்கப்பட்டிருக்கும் இடங்களில் பாதுகாப்பு அதிகாரிகள் பணியமர்த்தப்படுவது போல் தற்போது வெங்காயம் பயரிடப்பட்டிருக்கும் நிலத்திற்கும் வெங்காயம் சேமித்து வைத்திருக்கும் குடோன்களுக்கும் பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அவர்கள் தங்கள் கைகளில் கம்பு, அரிவாள் உருட்டுக்கட்டை உள்ளிட்ட பொருள்களுடன் பாதுகாப்பாளர்களாக, திருடர்களிடமிருந்து வெங்காயத்தை பாதுகாக்க பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெங்காயம் குறித்து பல்வேறு மீம்ஸ்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகிக் கொண்டிருக்கும் போது இந்த செய்தி உண்மையிலேயே பொதுமக்களுக்கு ஒரு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியான செய்தியாக தான் உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கதக் என்ற மாவட்டத்தில் வெங்காயம் விளைச்சலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது பயிரை பாதுகாக்க கையில் உருட்டுக்கட்டை, அரிவாள் உள்ளிட்ட பொருட்களுடன் பாதுகாப்பு பணியாளர்களை அமர்த்தியுள்ள புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

சூடான் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: தமிழர்கள் பலர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல்

0

சூடான் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: தமிழர்கள் பலர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல்

சூடான் நாட்டில் செராமிக் பொருட்கள் தயாரிக்கும் ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 23 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளிவந்தூள்ளது. இதில் பலர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சூடான் தலைநகர் கார்டோம் என்ற நகரில் உள்ள செராமிக் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை மொத்தம் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இவர்களில் இந்தியர்கள் மட்டும் 18 பேர் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த 18 இந்தியர்களில் எத்தனை பேர் தமிழர்கள் என்ற தகவல் வெளிவரவில்லை என்றாலும் இந்த ஆலையில் பல தமிழர்கள் வேலை செய்து கொண்டு வந்ததால் தமிழர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது

இந்த நிலையில் சூடான் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்கள் குறித்த தகவலை பெற வெளியுறவுத்துறை அமைச்சகம் பிரத்யேக தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது

சூடான் தீ விபத்து தொடர்பாக தகவல் அறிய +249-921917471 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த ஆலையில் வேலை பார்க்கும் உறவினர்கள் இந்த எண்ணை தொடர்பு கொண்டால் அனைத்து விபரங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது

சூடான் நாட்டில் செராமிக் பொருட்கள் தயாரிக்கும் ஆலையில் உள்ள எரிவாயு டேங்கர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பிணவாடைக்கு ஏங்கும் பிதாமகன்கள்! ஸ்டாலின் திருமா பா ரஞ்சித்தை தாக்கிய பாஜக

0

பிணவாடைக்கு ஏங்கும் பிதாமகன்கள்! ஸ்டாலின் திருமா பா ரஞ்சித்தை தாக்கிய பாஜக

கோவை மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட நடுர் கிராமத்தில் இரண்டு நாட்கள் முன்பு இடைவிடாமல் பெய்த கனமழை காரணமாக கருங்கல்லால் ஆன மதில்சுவர் இடிந்து சுவரோரம் இருந்த வீடுகளில் மீது விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர், நாட்டையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்திற்கு நாட்டு மக்கள் முழுவதும் இரங்கல் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் மக்கள் தங்கள் வீட்டு சோக நிகழ்வாக கடைப்பிடித்து வருகின்றனர். 17 பேரில் 4 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உடல் நசுங்கி உயிரிழந்த 17 பேருக்கும் தமிழக அரசின் சார்பில் முதலில் நான்கு லட்சம் ரூபாயும் பின்பு நேற்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்த பின், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூடுதலாக 6 லட்சம் சேர்த்து 10 லட்சமாக உயர்த்தி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார். அத்துடன் குடும்பத்தில் தகுதியான நபர் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என்று தெரிவித்தார். என்னதான் இழப்பை சரிகட்ட முடியாவிட்டாலும் முதல்வரின் இந்த அறிவிப்பு, குடும்பத்திற்கு சற்று ஆறுதலாக இருக்கும் என்று தமிழக மக்கள் எண்ணி வருகின்றனர்,.

நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் நேரில் சென்று 17 பேரின் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தார். பின்பு ட்விட்டரில் தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்ததால் தான் 17 பேரும் உயிரிழந்துள்ளனர் என்று பதிவிட்டார். இது தமிழக மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தொழில் அதிபர் சிவசுப்பிரமணியனுக்கு சொந்தமான இடத்தில் சொகுசு பங்களா இருந்துள்ளது,. அதனைச்சுற்றி கருங்கற்களாலான சுவர் எழுப்பப்பட்டுள்ளது,. இதற்கு அங்குள்ள மக்கள் ஆட்சேபனை தெரிவித்த உடனே அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், இதற்கு ‌காரணமே அதிகாரிகள் ‌தான் என்று தெரியவந்துள்ளது.

ஆனால், உயிரிழந்தவர்கள் 17 பேரும் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் இதனை வைத்து அரசியல் செய்ய சில கட்சிகளும் சில தலித் பிரமுகர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இது தீண்டாமைச்சுவர் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்து சாதி சாயத்தை உயிரிழந்தவர்களின் மீது பூசினார், மேலும் தலித் மக்களின் தலைவனாக தன்னை முன்னிறுத்திக் கொண்டு இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சிவசுப்ரமணியனை கைது என்றும் தெரிவித்தார்,. அத்துடன் தலித்துகள் பற்றி பேசி, தான் ஒரு புரட்சியாளர் என்று திரைப்படம் மூலம் சொல்லாமல் சொல்லும் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களும் உயிரிழப்பிற்கு காரணம், அரசியல்வாதிகளும் ஜாதியாளர்களுமே தான் காரணம் என்று தெரிவித்தார்.

ஆனால் சில பிணவாடைக்கு ஏங்கும் பிதாமகன்கள், விசாரணை துவங்கும் முன்பே தீர்ப்பு எழுதி குளிர்காய நினைப்பது அருவருக்கத்தக்கது.

தமிழக அரசு விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கையில், யூகங்களின் அடிப்படையில் சாதிமத கருத்துக்களை பரப்பி விசாரணையின் போக்கை மாற்றுவது கண்டிக்கத்தக்கது.

என்று தமிழக பாஜக, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “பிணவாடைக்கு எங்கும் பிதாமகன்கள்” என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

கிரிக்கெட் விளையாட ஆசைப்படும் ஓட்டப்பந்தய வீரர்: எந்த அணியில் விளையாட ஆசை தெரியுமா?

0

கிரிக்கெட் விளையாட ஆசைப்படும் ஓட்டப்பந்தய வீரர்: எந்த அணியில் விளையாட ஆசை தெரியுமா?

உலகின் தலைசிறந்த ஓட்டப் பந்தய வீரரான யோகன் பிளேக் என்பவர் ஓட்டப்பந்தயத்தில் இருந்து ஓய்வு பெற்றவுடன் கிரிக்கெட் விளையாட ஆசை என்றும் அதிலும் ஐபிஎல் அணிகள் இரண்டை குறிப்பிட்டு அந்த அணியில் விளையாட ஆசை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஓட்டப்பந்தய வீரர் யோகன் பிளேக் சமீபத்தில் இந்தியா வந்தார். அவர் ஒரு விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ’நான் இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்வேன். அதன்பின் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். ஆனால் அதே நேரத்தில் எங்கள் நாட்டு அணியான மேற்கிந்திய தீவுகள் அணியில் விளையாட நான் விரும்பவில்லை.

நான் மிகவும் விரும்புவது ஐபிஎல் போட்டிகளைத்தான். ஐபிஎல் போட்டிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். குறிப்பாக கொல்கத்தா அல்லது பெங்களூர் அணியில் விளையாட நான் விரும்புகிறேன்.

எனக்கு பெங்களூரு அணியை ஏன் பிடிக்கும் என்றால் அதில் விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் உள்ளனர். அதனால் அந்த அணி எனக்கு பிடிக்கும். அதேபோல் எனக்கு ரொம்ப பிடித்த அணிகளில் கொல்கத்தாவும் ஒன்று. இந்த இரண்டு அணிகளில் ஏதாவது ஒரு அணியில் வாய்ப்பு கிடைத்தால் விளையாடுவேன்’ என்று கூறியுள்ளார்.

பிரபல ஓட்டப் பந்தய வீரரான உசைன் போல்ட் ஓய்வு பெற்றதும் கால்பந்து போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் யோகன் பிளேக் கிரிக்கெட் விளையாடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பாராளுமன்றம் ஒரு மாதம் முடக்கம்: நள்ளிரவில் அதிபரின் அதிரடி உத்தரவு

0

பாராளுமன்றம் ஒரு மாதம் முடக்கம்: நள்ளிரவில் அதிபரின் அதிரடி உத்தரவு

இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று அதிபராக பதவி ஏற்றுக் கொண்டவர் கோத்தபாயா ராஜபக்ச. இவர் பதவி ஏற்ற பின் முதல் முறையாக இந்தியாவிற்கு வருகை தந்து பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அமைச்சர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் அதிபர் ஆனதும் தனது சகோதரரும், முன்னாள் அதிபருமான மஹிந்தா ராஜபக்சவை இலங்கையின் பிரதமராக நியமனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இலங்கை பாராளுமன்றம் நேற்று அதாவது டிசம்பர் 3 ஆம் தேதி கூட இருந்த நிலையில் திடீரென நள்ளிரவில் ஒரு மாதம் பாராளுமன்றத்தை முடக்கி வைப்பதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். இதனால் இலங்கை பாராளுமன்றம் அடுத்த மாதம் ஜனவரி 3 ஆம் தேதி கூடும் என தெரிகிறது

இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின்படி பாராளுமன்றத்தை ஒத்தி வைக்கவோ முடக்கவோ அதிபருக்கு அதிகாரம் உண்டு என்பதால் அவர் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இவ்வாறு முடக்கி வைத்துள்ளதாக இலங்கை அதிபர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இந்த நிலையில் இலங்கையின் தமிழ் எம்பிக்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றும், அவர்களுக்கு அமைச்சர் பதவி உள்ளிட்ட பதவிகள் வழங்க வேண்டும் என்று அதிபர் கோத்தபயவிடம் தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தர்பார்’ இசை வெளியீடு தேதி அறிவிப்பு: ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

0

தர்பார்’ இசை வெளியீடு தேதி அறிவிப்பு: ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகிய ’தர்பார்’ படத்தின் திரைப்பட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் இசை வெளியிடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

இதன்படி டிசம்பர் 7ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதனை அடுத்து ரஜினி ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்

‘தர்பார்’ படத்தில் இடம்பெற்ற ’சும்மா கிழி’ என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த படத்தின் அனிருத்தின் மற்ற சரவெடி பாடல்களையும் கேட்க ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். வரும் 7ம் தேதிக்கு பின்னர் இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே வைரலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

ரஜினிகாந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.

SC ST பிரிவினருக்கு இடஒதுக்கீடு நீட்டிப்பு! மத்திய அரசு தகவல்

0

SC ST பிரிவினருக்கு இடஒதுக்கீடு நீட்டிப்பு! மத்திய அரசு தகவல்

நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளில் (எஸ்.சி., எஸ்.டி.) பட்டியல் இன பிரிவினருக்கு இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. இவை தனி தொகுதி என்று குறிப்பிடப்படுகிறது.

இந்த இட ஒதுக்கீடு முறை அரசியலமைப்பு காலம் வரும் ஆண்டு 2020 ஜனவரி 25-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதனால், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு தேர்தலில் இட ஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகள் நீட்டிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விராத் முதலிடம், வார்னர் முன்னேற்றம், ஸ்மித் சறுக்கல்: தரவரிசை பட்டியல் விபரங்கள்

0

விராத் முதலிடம், வார்னர் முன்னேற்றம், ஸ்மித் சறுக்கல்: தரவரிசை பட்டியல் விபரங்கள்

டெஸ்ட் போட்டிகளின் தரவரிசை பட்டியல் சற்று முன் வெளியாகி உள்ளது. இதில் விராட் கோலி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் இருந்த ஸ்மிர்ஹ் இரண்டாவது இடத்தில் சறுக்கி உள்ளார். இரட்டை சதமடித்த டேவிட் வார்னர் 17வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்

டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடத்தை பிடித்த வீரர்கள் பெயர்கள் பின்வருமாறு:

1) கோலி – 928 புள்ளிகள்
2) ஸ்மித் – 923 புள்ளிகள்
3) வில்லியம்சன் – 877 புள்ளிகள்
4) புஜாரா – 791 புள்ளிகள்
5) வார்னர் -764 புள்ளிகள்
6) ரஹானே – 759 புள்ளிகள்
7) ரூட்- 752 புள்ளிகள்
8) லபுஸ்சக்னே – 731 புள்ளிகள்
9) நிக்கோல்ஸ் – 726 புள்ளிகள்
10) கருணரத்னே – 723 புள்ளிகள்

இதேபோல் டெஸ்ட் தரவரிசைப்பட்டியலில் பந்துவீச்சாளர்களின் பட்டியல் பின்வருமாறு:

டெஸ்ட் தரவரிசைப்பட்டியல் (பந்துவீச்சு)

1) கம்மின்ஸ் – 900 புள்ளிகள்
2) ரபடா – 839
3) ஹோல்டர் – 830
4) வாக்னர் – 814
5) பும்ரா- 794
6) பிலாந்தர் – 783
7) ஆண்டர்சன் – 782
8) ஹஸ்ல்வுட்- 776
9) அஷ்வின் – 772
10) ஷமி – 771

இடஒதுக்கீட்டு மாணவர்களுக்கு ஏற்பட்ட அநீதி! மருத்துவர் ராமதாஸ் கண்டனம்

0

இடஒதுக்கீட்டு மாணவர்களுக்கு ஏற்பட்ட அநீதி! மருத்துவர் ராமதாஸ் கண்டனம்

இடஒதுக்கீட்டு மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்குவதில் வங்கிகள் அநீதி இழைத்து வருவதை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் “இடஒதுக்கீட்டு மாணவர்களுக்கு அநீதி:
கல்விக்கடன் தருவதில் பாகுபாடு கூடாது!” என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.       

உயர்கல்வி பயில்வதற்காக உத்தரவாதமின்றி வழங்கப்படும் கல்விக்கடனில் 67% கடன் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு கிடைத்திருப்பதாகவும், மீதமுள்ள 33% மட்டும் தான் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரம் மிகவும் வருத்தமளிக்கிறது. கல்விக்கடனாக வழங்கப்படும் தொகையிலும் வங்கிகள் பாகுபாடு காட்டுவது கண்டிக்கத்தக்கதாகும்.

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உத்தரவாதமின்றி, கல்விக் கடன் வழங்குவதற்காக கடந்த 2015&ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கல்விக்கடனுக்கான கடன் உத்தரவாத நிதியத்தின் வழியாக கடந்த 2016-17 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை 4.10 லட்சம் மாணவர்களுக்கு, ரூ.13,797 கோடி கல்விக்கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதில் 67% கல்விக்கடன் பொதுப்பிரிவு மாணவர்கள் 2.75 லட்சம் பேருக்கு வழங்கப்படுள்ளது. இப்பிரிவினருக்கு வழங்கப்பட்ட கல்விக்கடன் தொகை மொத்தக் கடனில் 70.50 விழுக்காடு, அதாவது 9730 கோடி ஆகும். ஆனால்,  பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 23% அளவுக்கும், பட்டியலினத்தவருக்கு 7%, பழங்குடியினருக்கு 3% அளவுக்கும் மட்டும் தான் கல்விக்கடன் வழங்கப்பட்டிருக்கிறது. இது எந்த வகையிகும் நியாயமல்ல.

பொதுப்பிரிவு மாணவர்கள் அனைவரும் உயர்சாதியினர் அல்ல. மாணவர் சேர்க்கையில் பொதுப்பிரிவில் இடம் கிடைத்து சேர்ந்தவர்கள் தான் பொதுப்பிரிவினர். அவர்களில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரும் இருக்கக்கூடும். ஆகவே, அவர்களுக்கு அதிக அளவில் கல்விக்கடன் வழங்கப்பட்டதில் எந்த விமர்சனமும் கிடையாது. ஆனால், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினம்/ பழங்குடியினருக்கு மிகக்குறைந்த அளவில் கல்விக்கடன் வழங்கப்பட்டிருப்பது தான் சமூகநீதிக்கு எதிரான செயல் ஆகும்.

கல்விக்கடனுக்கான கடன் உத்தரவாத நிதியம் கொண்டு வரப்பட்டதன் அடிப்படை நோக்கமே ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களிடம் கல்விக்கடனுக்கு ஈடாக உத்தரவாதம் கொடுக்க எதுவும் இல்லை என்பதற்காக கடன் வாய்ப்பு மறுக்கப்பட்டு விடக்கூடாது என்பது தான். ஆனால், பெரும்பான்மையான பொதுத்துறை வங்கிகளிடம் அத்தகைய பார்வை இல்லை என்பது தான் உண்மை. உயர்கல்வியில் பொதுப்பிரிவில் சேரும் மாணவர்களுக்கு மிகவும் எளிதாக வேலை கிடைத்து விடும்-அதனால் அவர்கள் கடனை விரைவாக செலுத்தி விடுவார்கள்; இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் உயர்கல்வி கற்றாலும் கூட அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்- அதனால் அவர்களால் குறித்த காலத்தில் கடனை செலுத்த முடியாமல் போகலாம் என்ற தவறான கற்பிதம் வங்கிகளிடம் உள்ளது. அதனால் கல்விக்கடன் வழங்குவதில் பொதுப்பிரிவினருக்கு அளிக்கும் முன்னுரிமையை இடஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களுக்கு வங்கிகள் வழங்குவதில்லை. இந்தக் காரணத்தைக் கூறி பிற பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்விக்கடன் மறுக்கப்பட்டதற்கு ஆயிரக்கணக்கான உதாரணங்களைக் காட்ட முடியும்.

அதேபோல், கல்விக்கடனுக்கான கடன் உத்தரவாத நிதியத் திட்டத்தின் கீழ் ரூ.7.5 லட்சம் வரையிலான கல்விக்கடனுக்கு எந்தவித உத்தரவாதத்தையும் வங்கிகள் கோரக்கூடாது. ஆனால், ரூ. 4 லட்சத்துக்கும் கூடுதலான கல்விக் கட்டணத்திற்கு மூன்றாம் நபர் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று வங்கிகள்  கட்டாயப்படுத்துகின்றன. அதுமட்டுமின்றி, பொதுப்பிரிவினருக்கு ரூ.3.54 லட்சம் கடன் உச்சவரம்பு நிர்ணயித்துள்ள வங்கிகள், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ரூ.2.91 லட்சம் மட்டுமே கல்விக்கடன் தருகின்றன. ரூ.4 லட்சம் வரை கல்விக்கட்டணம் இருந்தால் முழுத் தொகையையும் கடனாக வழங்க வேண்டும்; கல்விக்கட்டணம் ரூ.4 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் அதில் 5 விழுக்காட்டை மாணவர் செலுத்த வேண்டும்; மீதமுள்ள தொகையை கடனாக வழங்க வேண்டும் என்பது தான் விதியாகும்.

இந்தியாவில் கல்விக்கட்டணம் என்பது பெரும்பாலும் ரூ.5 லட்சத்திற்கும் கூடுதலாக உள்ள நிலையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அதில் சுமார் பாதியளவுக்கு மட்டும், அதாவது ரூ.2.91 லட்சம் மட்டுமே கடன் வழங்கப்படுவதால், மீதமுள்ள தொகையை ஏற்பாடு செய்ய முடியாமல் பல மாணவர்கள் படிப்பை பாதியில் கைவிடும் அவலம் நீடிக்கிறது. பட்டியலினத்தவருக்கு ரூ.3.24 லட்சம், பழங்குடியினருக்கு  ரூ.3.17 லட்சம், பொதுப்பிரிவினருக்கு ரூ.3.54 லட்சம் என்ற அளவில் தான் கல்விக்கடன் கிடைப்பதால் அவர்களும் அதிக கட்டணம் வசூலிக்கப்படும் படிப்புகளை படிக்க முடியாத நிலை காணப்படுகிறது.

ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் உயர்கல்வி கற்க பெரும் தடையாக இருப்பது கல்விக்கட்டணம் தான். உயர்கல்விக்கான கட்டணம் லட்சக்கணக்கில் இருப்பதால் அதை ஏழை, நடுத்தர மாணவர்களால் செலுத்த முடியாது. அது தான் அடித்தட்டு மக்கள் உயர்கல்வி கற்பதற்கு பெரும் தடையாக இருந்தது. அந்த நிலையை மாற்றுவதற்காக கல்விக்கடன் அறிமுகம் செய்யப்பட்டது. அதிலும் கூட கல்விக்கடன் வழங்க வங்கிகள் சொத்துகளை ஈடாக கேட்டதால் கல்விக்கடனும் ஏழைகளுக்கு பயனளிக்கவில்லை. இந்த சிக்கலுக்கு தீர்வு வகையில் தான், உத்தரவாதம் இல்லாமல் கல்விக்கடன் வழங்குவதற்காக  கல்விக்கடனுக்கான கடன் உத்தரவாத நிதியத்தை மத்திய அரசு ஏற்படுத்தியது. அதன் மூலம் கடன் வழங்குவதிலேயே இவ்வளவு பாகுபாடு காட்டப்படுவது திட்டத்தின் நோக்கத்தையே சிதைத்து விட்டது.

எனவே, மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு, உயர்கல்விக்கான கட்டணம் முழுவதையும்  உத்தரவாதமற்ற கடனாக வழங்கும் வகையில் இந்தத் திட்டத்தை திருத்த வேண்டும். அதுமட்டுமின்றி,  பொதுப்பிரிவு மாணவர்கள், இடஒதுக்கீட்டுப் பிரிவினர் என்ற பாகுபாடு இல்லாமல் உயர்கல்வி கற்க விரும்பும் அனைவருக்கும் கல்விக்கடன் வழங்கும்படி வங்கிகளை மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.