Home Blog Page 5861

விஜய் 64 அடுத்த அப்டேட்!உற்சாகத்தில் ரசிகர்கள்?

0

விஜய் 64 அடுத்த அப்டேட்!உற்சாகத்தில் ரசிகர்கள்?

விஜய் 64’ படத்தின் டிஜிட்டல் உரிமத்தை வாங்கியுள்ளது பிரபல ஆன்லைன் ஸ்ட்ரீமிங் நிறுவனமான அமேசான் பிரைம்.
பிகில் படத்திற்கு பிறகு விஜய் அடுத்த படம்.விஜய் -லோகேஷ் கனகராஜின் கூட்டணியில் உருவாகி வருகிறது ‘விஜய் 64’ என்ற பெயரில் பிரமாண்டமாக தயாரிவருகிறது.

சென்னை, டெல்லி என நடைபெற்று வந்த இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது மீண்டும் சென்னையில் நடைபெற்று வருகிறது.

விரைவில் அடுத்தகட்ட படபிடிப்புக்காக படக்குழு கர்நாடகா செல்லவுள்ளது. அங்கு, விஜய் – விஜய் சேதுபதி இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.

விஜய் 64 அடுத்த அப்டேட்!உற்சாகத்தில் ரசிகர்கள்?

இதில் ‘கைதி’ பிரபலம் அர்ஜூன் தாஸும் இணைவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், ‘விஜய் 64’ டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போன்ற அப்டேட்டுகள் குறித்த எந்த அறிவிப்பும் இல்லாததால் ரசிகர்கள் மிகப்பெரிய ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இதற்கிடையே, விஜய் 64 படத்தின் சாட்டிலை உரிமையை சன் டி.வி பெற்றுள்ளது என அண்மையில் அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து, தற்போது இந்த படத்தின் டிஜிட்டல் உரிமத்தை பிரபல ஆன்லைன் நிறுவனமான அமேசான் ப்ரைம் கைப்பற்றியுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சைவ உணவு சாப்பிடுபவர்கள் வெங்காயம் சாப்பிட மாட்டார்களா? அமைச்சரின் அதிர்ச்சி பதில்

0

சைவ உணவு சாப்பிடுபவர்கள் வெங்காயம் சாப்பிட மாட்டார்களா? அமைச்சரின் அதிர்ச்சி பதில்

சைவ உணவு சாப்பிடும் என்னை போன்றவர்களுக்கு வெங்காய விலை குறித்து கவலை இல்லை என்றும் சைவ உணவு சாப்பிடும் எனக்கு வெங்காய விலை உயர்வு குறித்து எதுவும் தெரியாது என்றும் மத்திய அமைச்சர் ஒருவர் கூறியுள்ளது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது

வெங்காய விலை உச்சத்திற்கு ஏறியது பெரும் அதிர்ச்சியில் இருக்கும் பொது மக்களுக்கு வெங்காய விலை குறித்து அரசியல்வாதிகள் கூறும் காரணங்கள் அதைவிட அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

வெங்காய விலை ஏற்றம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அஷ்வினி செளபே என்பவர் ’நான் சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவன், வெங்காயத்தை இதுவரை நான் சாப்பிட்டதே இல்லை. என்னை போன்ற சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு வெங்காயம் விலை என்ன விலைக்கு விற்கிறது என்பது குறித்து தெரியாது.

அது குறித்து சைவ உணவு சாப்பிடுபவர்களிடம் கேள்வி கேட்டால் எப்படி தெரியும்? என்று செய்தியாளர்களை பார்த்து அவர் எதிர் கேள்வி கேட்டுள்ளார்.

வெங்காயம் சைவ உணவுதான் என்று காலங்காலமாக அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென மத்திய அமைச்சர் சைவ உணவு சாப்பிடுவோருக்கு வெங்காயத்தை பற்றி எதுவும் தெரியாது என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அப்படி என்றால் வெங்காயம் அசைவ உணவா? என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். மத்திய அமைச்சர் ஒருவரே இதுபோன்ற ஒரு கருத்தை தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ஸ்டாலினின் அரசியல் நாடகத்தை முடித்து வைத்த பாஜக நிர்வாகி

0

ஸ்டாலினின் அரசியல் நாடகத்தை முடித்து வைத்த பாஜக நிர்வாகி

பாஜகவில் பதவியில் இருந்து கொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜகவின் மாநில துணைத் தலைவர் அரசக்குமார் நாம் அனைவரும் எதிர்பார்த்தப்படியே திமுகவில் இணைந்துள்ளார்.

கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி திமுக சட்டமன்ற உறுப்பினரான பெரியண்ணன் அரசு இல்லத் திருமண விழாவில் பேசிய பாஜக மாநிலத் துணைத் தலைவராக இருக்கும் பி.டி.அரசகுமார், “எம்.ஜி.ஆருக்குப் பிறகு நான் ரசித்த தலைவர் தளபதி ஸ்டாலின் தான். அவர் விரைவில் முதல்வர் அரியணையில் ஏறுவார்” என சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் புகழ்ந்து பேசியிருந்தார்.

இதற்கு பாஜக தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆனால், தான் சொன்னது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது எனவும், தன்னுடைய தனிப்பட்ட உணர்வைத்தான் வெளிப்படுத்தியதாகவும்,எந்த நடவடிக்கை எடுத்தாலும் எதிர்கொள்ளத் தயார் என்றும் அரசகுமார் இதை சமாளிக்கும் விதமாக பதிலளித்திருந்தார்.

இதனையடுத்து சர்ச்சை கருத்தை கூறிய அரசகுமார் மீது தலைமை நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக பாஜக பொதுச் செயலாளர் நரேந்திரன் கடிதம் அனுப்பியிருந்தார், மேலும் கட்சியின் தேசிய தலைமையிடமிருந்து இதற்கான பதில் வரும் வரை பி.டி.அரசகுமார் கட்சி சார்பில் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக் கூடாது என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்தவாறே சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த பி.டி.அரசகுமார் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்து கொண்டார்.

பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பி.டி.அரசகுமார், “என்னுடைய தாய் வீட்டிற்கு வந்துள்ளேன். இனியும் பொறுத்திருக்க வேண்டாம், நீங்கள் இணையும் நேரம் நெருங்கிவிட்டது என திமுக முன்னணி தலைவர்கள் என்னை அழைத்ததன் பேரில் திமுகவின் இணைந்தேன். ஸ்டாலின் தலைமையில் திமுகவின் நல்லாட்சி அமைய இன்று முதல் என்னுடைய பயணம் தொடங்கும். பாஜக மீது விமர்சனத்தை முன்வைக்க நான் விரும்பவில்லை.

பிரதமர் மோடியையோ அல்லது தேசியத் தலைமையையோ குறைகூற நான் விரும்பவில்லை. தமிழக பாஜகவில் ஒரு சிலரை தவிர மற்றவர்களை வளரவிட மாட்டார்கள். மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பின் கேட்க முடியாத பல வார்த்தைகளை கேட்டேன். அதனால் மனச்சோர்வு அடைந்தேன். சுயமரியாதையை இழக்க தயாராக இல்லை. அது பாஜகவில் எனக்கு ஏற்பட்டதால் திமுகவில் இணைந்தேன். என்னை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டு மற்றவர்கள் தங்களது முடிவுகளை மேற்கொள்வார்கள்” என்றும் அவர் கூறினார்.

ஒரு கட்சியில் முக்கிய பதவியில் இருக்கும் ஒருவர் சம்பந்தமே இல்லாமல் அந்த கட்சிக்கு எதிரான நபரை புகழ்வது போல பேசி ஏற்கனவே திட்டமிட்டபடி இதையே ஒரு காரணமாக வைத்து அந்த கட்சியில் இணைந்துள்ளார். இதன் மூலமாக திமுக தலைவர் நடத்திய அரசியல் நாடகத்தை இவர் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

ஆடை உற்பத்தி நிறுவனத்திற்கு எதிராக நடந்த நிர்வாண போராட்டம்: இளம்பெண்களும் கலந்து கொண்டதால் பரபரப்பு

0

ஆடை உற்பத்தி நிறுவனத்திற்கு எதிராக நடந்த நிர்வாண போராட்டம்: இளம்பெண்களும் கலந்து கொண்டதால் பரபரப்பு

ஸ்பெயின் நாட்டின் கேட்டலோனியா என்ற பகுதியில் ஆடை உற்பத்தி நிறுவனத்திற்கு எதிராக இளம்பெண்கள் மற்றும் ஆண்கள் நடத்திய நிர்வாண போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

உலகம் முழுவதும் தற்போடு பிளாக் ஃப்ரைடே சேலஸ் நடைபெற்று வரும் நிலையில் ஸ்பெயின் நாட்டில் உள்ள தோல் ஆடைகள் உற்பத்தி நிறுவனத்தின் தோலாடை உடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 70 பேர்கொண்ட விலங்கு நல ஆர்வலர்கள் நிர்வாணமாக போராட்டம் நடத்தினர். இதில் இளம்பெண்களும் நிர்வாணமாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தோல் ஆடைகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான விலங்குகள் கொல்லப்படுவதாகவும் இந்த ஆடையை தடை செய்ய வேண்டும் எனவும் போராட்டக்காரர்களின் கோரிக்கையாக உள்ளது

ஜெர்மனி மற்றும் ஐரோப்பாவின் பல நாடுகளில் தோல் உற்பத்தி ஆடைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்பெயின் நாட்டிலும் தோல் ஆடைக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆடையின்றி இவர்கள் போராடியது அந்நாட்டின் ஊடகங்களில் தலைப்பு செய்தியாகியுள்ளது

ஜெயலலிதா நினைவு தினத்தில் பிரபல நடிகை செய்த மரியாதை: டுவிட்டரில் வைரல்

0

ஜெயலலிதா நினைவு தினத்தில் பிரபல நடிகை செய்த மரியாதை: டுவிட்டரில் வைரல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் இன்று அதிமுக தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் பெருமக்கள் ஜெயலலிதா சமாதியில் மலர் அஞ்சலி தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தலைவி’ என்ற படத்தில் நடித்து வரும் நடிகை கங்கனா ரனாவத் ’தலைவி’ படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்த புகைப்படத்தை பாலிவுட் பிரமுகர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது

ஜெயலலிதா கேரக்டரில் நடிப்பதற்காக பயிற்சி பெற்றுள்ள கங்கனா ரனாவத் அவரது நினைவு நாளில் அவருக்கு மலரஞ்சலி செலுத்தியது சிறப்பான ஒரு விஷயமாக கருதப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் வரும் ஜூன் மாதம் 26ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்ரான்கான் செய்த மிகப்பெரிய தவறு: பாகிஸ்தான் அமைச்சர் குற்றச்சாட்டு

0

இம்ரான்கான் செய்த மிகப்பெரிய தவறு: பாகிஸ்தான் அமைச்சர் குற்றச்சாட்டு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் செய்தது மிகப்பெரிய தவறு என பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் நேரடியாக குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்த விவகாரத்தில் கடும் கோபமடைந்த பாகிஸ்தான், இந்தியா உடனான வர்த்தக ரீதியான அனைத்து உறவுகளையும் துண்டித்தது.

இதனால் இந்தியாவில் இருந்து பழங்கள் மற்றும் காய்கறிகள் பாகிஸ்தானுக்கு இறக்குமதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பாகிஸ்தானில் பழங்கள் காய்கறிகளின் விலை விண்ணைத் தொட்டது. குறிப்பாக தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு 300 ரூபாய் விற்பனை ஆனதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்

இந்த நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சர் ஹமத் அசார் அவர்கள் கூறியபோது ’இந்தியாவுடனான வர்த்தக தொடர்பை துண்டித்து மிகப்பெரிய தவறு என்றும் இந்த விஷயத்தில் பிரதமர் இம்ரான்கான் தவறு செய்துவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். இருப்பினும் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் இன்னும் ஓரிரு மாதங்களில் காய்கறி மற்றும் பழங்களின் விலை கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்

புளுசட்டை மாறனின் ’ஆன்ட்டி இந்தியன்’: கொதித்து எழுவார்களா பாஜகவினர்?

0

புளுசட்டை மாறனின் ’ஆன்ட்டி இந்தியன்’: கொதித்து எழுவார்களா பாஜகவினர்?

ஒட்டுமொத்த கோலிவுட் திரை உலகினர் அனைவருக்கும் பிடிக்காத ஒரு நபர் இருக்கிறார் என்றால் அது அனேகமாக புளூசட்டை மாறன் ஆகத்தான் இருக்கும். சிறிய நடிகர்கள் முதல் மாஸ் நடிகர்கள் வரை அனைத்து நடிகர்கள் நடிக்கும் படங்களை எந்தவித வித்தியாசங்கள் எதுவும் இல்லாமல் கழுவி கழுவி ஊற்றி அவர் செய்யும் விமர்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பல திரைப்படங்கள் அவரது விமர்சனத்தால் படுதோல்வி அடைந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கோலிவுட் திரையுலகில் அனைவரையும் கேலிசெய்து விமர்சனம் செய்த புளூசட்டை மாறன், தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தை திரையுலகினர் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். அடுத்தவர்களின் படத்தில் குற்றம் குறை சொன்ன புளூசட்டை மாறன் எப்படி ஒரு படத்தை இயக்கப் போகிறார் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது

இந்த நிலையில் புளூசட்டை மாறன் இயக்கிவரும் திரைப்படத்திற்கு ’ஆன்ட்டி இந்தியன்’ என்ற டைட்டில் வைத்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. இந்த செய்தி திரையுலகினர்களை அதிர்ச்சிப்படுத்தியதோ இல்லையோ, பாஜகவினரை கண்டிப்பாக அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் என்றும் இந்த படத்திற்கு பாஜகவினர் தங்களது எதிர்ப்பை காண்பித்து இலவச புரமோஷன் செய்து படத்தை ஹிட் ஆக்கி விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

வெற்றிமாறனின் அடுத்த படம் டிராப்: கோலிவுட் திரையுலகினர் மகிழ்ச்சி

0

வெற்றிமாறனின் அடுத்த படம் டிராப்: கோலிவுட் திரையுலகினர் மகிழ்ச்சி

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’அசுரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் ரூபாய் 100 கோடி வசூல் செய்ததாக இதன் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து செய்திகள் வெளிவந்தது. இதனை அடுத்து வெற்றிமாறன் இயக்கும் அடுத்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ரஜினி சூர்யா உள்பட பல பிரபல நடிகர்கள் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியது.

ஆனால் வெற்றிமாறனோ, சூரி நடிக்கும் ஒரு படத்தை இயக்க இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இதனை வெற்றிமாறனும் ஒரு பேட்டியில் உறுதி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அசுரன் போன்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் அடுத்த படத்தை ஒரு காமெடி நடிகரை ஹீரோவாக்கி இயக்கவிருப்பது குறித்து கோலிவுட் திரையுலகம் ஆச்சரியமடைந்தது.

ஒரு சிலர் அவரிடம் சூரியை வைத்து படம் இயக்க வேண்டாம் என்று கூறியதாகவும் வதந்திகள் கிளம்பின. இந்த நிலையில் பெரும்பாலான கோலிவுட் திரையுலகம் எதிர்பார்த்தபடியே வெற்றிமாறன்-சூரி படம் டிராப் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தற்போது வெளிவந்துள்ளது. ஒரு திரைப்படம் டிராப் என்றால் வருத்தப்படும் கோலிவுட் திரையுலகம், இந்த படம் டிராப் என்றதும் மகிழ்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது

இந்த நிலையில் வெற்றிமாறனின் அடுத்த படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்க ஆர்வத்துடன் காத்திருந்த சூரிக்கு இந்த தகவல் ஏமாற்றமே என்பது குறிப்பிடத்தக்கது.

சூடான் தீ விபத்தில் தமிழர்கள் உள்ளிட்ட 18 இந்தியர்களின் மறைவுக்கு மருத்துவர் ராமதாஸ் இரங்கல்

0

சூடான் தீ விபத்தில் தமிழர்கள் உள்ளிட்ட 18 இந்தியர்களின் மறைவுக்கு மருத்துவர் ராமதாஸ் இரங்கல்

சூடானில் நடந்த தீ விபத்தில் தமிழர்கள் உள்ளிட்ட 18 இந்தியர்களின் மறைவிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

சூடான் நாட்டின் தலைநகர் கார்ட்டோம் நகரின் பாஹ்ரி பகுதியில் செராமிக் தொழிற்சாலையில் எரிவாயு டேங்கர் சரக்குந்து வெடித்து சிதறிய விபத்தில் 3 தமிழர்கள் உள்ளிட்ட 23 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்த செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன். கொல்லப்பட்ட 23 ஊழியர்களில் 18 பேர் இந்தியர்கள் ஆவர். அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழிற்சாலை வளாகத்தில் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் சிதறிக் கிடந்ததால் எரிபொருள் டேங்கர் வெடித்த வேகத்தில் தொழிற்சாலை வளாகம் முழுவதும் தீ பரவியதாகவும், அத்தீயில் சிக்கி 23 பேர் உயிருழந்ததாகவும் கூறப்படுகிறது. இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகி விட்டதால் இறந்தவர்களின் பெயர் விவரங்கள் இன்னும் முழுமையாக தெரியவில்லை.

இந்த விபத்தில் 130 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் 7 பேர் இந்தியர்கள் என்றும் கூறப்படுகிறது. காயமடைந்த 7 இந்தியர்களின் மூவர் தமிழர்கள் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அவர்களுக்கு தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை வெளியுறவுத்துறை உறுதிப்படுத்த வேண்டும்.

தீ விபத்தில் உயிரிழந்த மூன்று தமிழர்களின் பெயர்கள் ராமகிருஷ்ணன், ராஜசேகரன், வெங்கடாச்சலம் என்று தெரியவந்துள்ளது. அவர்களின் உடல்களை அடையாளம் கண்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவும் அங்குள்ள இந்திய தூதரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில் மொத்தம் 68 இந்தியர்கள் பணியாற்றி வந்ததாகவும், அவர்களில் 34 பேர் பாதுகாப்பாக இருப்பதாகவும், 16 பேரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. காணமல் போனதாக கூறப்படும் இந்தியர்களை கண்டுபிடித்து மீட்க இந்தியத் தூதரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சூடானில் பாதுகாப்பாக இருக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் தொடர்ந்து அங்கு பணியாற்ற விரும்புகிறார்களா…. தாயகம் திரும்ப விரும்புகிறார்களா? என்பதை அவர்களிடம் கேட்டறிந்து, அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றவும் சூடானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் முன்வர வேண்டும். ஒருவேளை அவர்கள் தாயகம் திரும்ப விரும்பினால், அதற்கான வசதிகளை செய்து தருவதுடன், உள்ளூரில் அவர்களுக்கான வாழ்வாதாரத்தையும் மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

சூடான் தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்கள் உள்ளிட்ட 18 இந்தியர்களுக்கும், தீ விபத்துக்குக் காரணமான சலூமி செராமிக்ஸ் நிறுவனத்திடமிருந்து குறைந்தபட்சம் தலா ரூ.2 கோடி வீதம் இழப்பீடு பெற்று அவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சூர்யாவிடம் கமிட் ஆன இயக்குனர்கள்: கவுதம் மேனன் நிலைமை என்ன?

0

சூர்யாவிடம் கமிட் ஆன இயக்குனர்கள்: கவுதம் மேனன் நிலைமை என்ன?

நடிகர் சூர்யாவின் திரைப்படங்களை இயக்க அடுத்தடுத்து 3 இயக்குனர்கள் கமிட் ஆகியுள்ள நிலையில் சூர்யாவின் திரைப்படத்தை இயக்க திட்டமிட்டிருந்த கவுதம் மேனனின் நிலைமை பரிதாபமாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன

சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தில் நடிக்கவிருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் இரண்டாம் வாரம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் வெற்றிமாறன் படத்தை முடித்த பின்னர் ஹரி இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை ஹரி தொடங்கி விட்டார் என்றே கூறப்படுகிறது

இதனை அடுத்து பிரபல இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் கதை சம்பந்தமான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன

சூர்யாவிடம் கமிட் ஆன இயக்குனர்கள்: கவுதம் மேனன் நிலைமை என்ன?

இந்த நிலையில் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு சூர்யா நடிக்கும் படம் ஒன்றை இயக்கி தருவதாக வாக்குக் கொடுத்திருந்த கௌதம்மேனன் நிலைமை பரிதாபமாக இருப்பதாகவும், 2022ஆம் ஆண்டு வரை சூர்யா-கௌதம் மேனன் இணையும் படம் வெளிவர வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது

கௌதம் மேனன் தற்போது ’குயின்’ மற்றும் ’ஜோஷ்வா இமைபோல் காக்க’ ஆகிய படங்களை இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே.