Home Blog Page 5863

மகள் தாய்ப்பால் கேட்டதும் கோமாவிலிருந்து எழுந்த தாய்: இரு அதிசய நிகழ்ச்சி

0

மகள் தாய்ப்பால் கேட்டதும் கோமாவிலிருந்து எழுந்த தாய்: இரு அதிசய நிகழ்ச்சி

வடக்கு அர்ஜென்டினாவை சேர்ந்த 42 வயது மரியா என்ற பெண் ஒருவர் சமீபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மர்ம நபர்கள் தாக்கியதால் பலத்த காயமடைந்து கோமா நிலைக்கு சென்றார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் அவர் கோமாவில் இருந்து நினைவு திரும்பவில்லை.

இதனால் அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய மருத்துவர்கள் வலியுறுத்தியதாக தெரிகிறது. ஆனால் அவரது கணவர் தனது மனைவி எப்படியும் மீண்டும் வருவார் என்றும் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முடியாது என்றும் தெரிவித்தார்

இந்த நிலையில் சமீபத்தில் தனது இரண்டு வயது மகளுடன் மரியாவின் கணவர் கோமாவில் இருந்த மரியாவை பார்க்கச் சென்றுள்ளார். அப்போது அந்த இரண்டு வயது குழந்தை அம்மாவை பார்த்ததும் கட்டி அனைத்து தனக்கு பசிக்கிறது தாய்ப்பால் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். இதனை அடுத்து பெரும் ஆச்சரியம் நிகழ்ந்தது

இரண்டு மாதங்களுக்கு மேலாக கோமாவில் சுயநினைவின்றி இருந்த மரியா திடீரென கண் விழித்து தனது மகளுக்கு தாய்ப்பால் கொடுத்தார். இதை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். ஆனால் அதில் ஒரு சோகம் என்னவென்றால் தாய்ப்பால் கொடுத்து முடித்தவுடன் மீண்டும் அவர் கோமா நிலைக்கு சென்று விட்டார். இருப்பினும் மரியா விரைவில் சுயநினைவு திரும்புவார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

’மங்காத்தா 2’ படத்தில் ராகவா லாரன்ஸ்?

0

’மங்காத்தா 2’ படத்தில் ராகவா லாரன்ஸ்?

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்த ’மங்காத்தா’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க வேண்டும் என்றும் அதில் அஜித், அர்ஜுன் மீண்டும் நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் சில ஆண்டுகளாக தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்
வெங்கட் பிரபுவும் தனது ஒருசில பேட்டியில் ’மங்காத்தா 2’ படத்தின் கதை தயாராக இருப்பதாகவும் அஜித் ஓகே சொன்னால் உடனடியாக இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கி விடலாம் என்றும் கூறியிருந்தார். ஆனால் அஜித்திடம் இருந்து இதுவரை எந்தவிதமான பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருவதால் இப்போதைக்கு ’மங்காத்தா 2’ படம் இருக்காது என்றே கூறப்பட்டது

இந்த நிலையில் திடீர் திருப்பமாக வெங்கட்பிரபு மற்றும் ராகவா லாரன்ஸ் ஒரு படத்தில் இணைய உள்ளதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது. இதனை மறைமுகமாக வெங்கட்பிரபுவும் சற்றுமுன் ஒரு டுவீட்டில் பதிவு செய்துள்ளார்

இதிலிருந்து ’மங்காத்தா 2’ படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவிருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு ஒருவேளை ’மங்காத்தா 2’ ஆக இருந்தால் அஜித் ரசிகர்கள் இதனை ஏற்றுக்கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

நித்தியானந்தா நாட்டை கிண்டலடித்த பிரபல கிரிக்கெட் வீரர்

0

நித்தியானந்தா நாட்டை கிண்டலடித்த பிரபல கிரிக்கெட் வீரர்

குழந்தைகள் பாலியல் வழக்கில் சிக்கி போலீசாரால் தேடப்பட்டு வரும் நித்யானந்தா, வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது வெளிநாட்டில் இருந்து கொண்டே கைலாஷ் என்ற புதிய நாட்டை அவர் தோற்றுவித்ததாக இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார்

இந்து மதத்தை பின்பற்றும் யாரும் தனது கைலாஷ் நாட்டின் குடிமகனாக ஆகலாம் என்றும், கைலாஷ் நாட்டின் தற்போதைய மக்கள் தொகை 10 கோடியாக இருப்பதாகவும், இந்த நாட்டின் குடிமகனாக ஆக விரும்புபவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்

மேலும் தனது நாட்டிற்கு என தனி பாஸ்போர்ட், மொழி ஆகியவற்றையும் குறிப்பிட்டு ஒரு தனி அமைச்சரவை உருவாக்கி பிரதமருக்கு இணையாக ஒரு பதவியில் நித்யானந்தா இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

நித்யானந்தாவின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் கிண்டலுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். கைலாஷ் நாடு எங்கே உள்ளது, அந்நாட்டிற்கு போக எப்படி விசா எடுக்க வேண்டும்? என்று கிண்டலுடன் கூடிய ஒரு பதிவை அஸ்வின் பதிவு செய்துள்ளார்

அஸ்வினின் இந்த பதிவிற்கு டிவிட்டர் பயனாளிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த கருத்துக்களும் காமெடியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது நாங்கள் தான்: இஸ்ரோ சிவன் பரபரப்பு பேட்டி

0

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது நாங்கள் தான்: இஸ்ரோ சிவன் பரபரப்பு பேட்டி

நிலவின் தென்துருவத்தில் விழுந்த விக்ரம் லேண்டர் கண்டுபிடித்ததாக நேற்று நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதுமட்டுமின்றி இதனை கண்டுபிடிக்க ஒரு தமிழர்தான் உதவிகரமாக இருந்தார் என்றும் அவர் சென்னையை சேர்ந்த சண்முகம் சுப்பிரமணியம் என்றும் நாசா நிறுவனம் தெரிவித்திருந்தது
இதனை அடுத்து சண்முகம் சுப்பிரமணியனுக்கு பாராட்டுக்கள் குவிந்தது. திமுக தலைவர் முக ஸ்டாலின் , அமமுக பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வந்தனர்

இந்த நிலையில் நிலவில் விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரை இஸ்ரோவின் ஆர்பிட்டர் முன்பே கண்டுபிடித்து விட்டது என்றும், லேண்டரை கண்டுபிடித்த தகவலை இஸ்ரோ இணையதளத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே வெளியிட்டு விட்டோம் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் அவர்கள் இன்று காலை பேட்டி அளித்துள்ளார்

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது நாங்கள் தான்: இஸ்ரோ சிவன் பரபரப்பு பேட்டி

விக்ரம் லேண்டர் நாங்கள்தான் கண்டுபிடித்தோம் என்று நாசா தெரிவித்த நிலையில் தற்போது இஸ்ரோ தலைவர் இவ்வாறு தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இஸ்ரோ தலைவர் கூறியது உண்மைதான் என்றும் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது என இஸ்ரோ ஏற்கனவே அறிவித்துள்ளது என்றும் ஆனால் ஏற்கனவே இஸ்ரோ அறிவித்துள்ளது என்றும் ஆனால் நாசா திடீரென நேற்று தாங்கள்தான் விக்ரம் விழுந்த இடத்தை கண்டு பிடித்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர்

நாசா மற்றும் இஸ்ரோ இடையே நடைபெறும் இந்த கருத்து மோதல் எங்கு முடியுமோ என்று விஞ்ஞானிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்

ஜி.எஸ்.டி. வரி முறைகேடு: திமுக சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் அதிகாரிகள் சோதனை

0

ஜி.எஸ்.டி. வரி முறைகேடு: திமுக சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் அதிகாரிகள் சோதனை

ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதில் முறைகேடு நடந்ததாக கூறி செங்கல்பட்டு திமுக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் வரலட்சுமி மதுசூதனன் இல்லத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

செங்கல்பட்டு தொகுதியில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் தான் வரலட்சுமி மதுசூதனன். இவரது வீடு மறைமலை நகரில் அமைந்துள்ளது. இந்நிலையில் வரலட்சுமியின் வீடு மற்றும் அலுவலகத்தில் திடீரென சரக்கு மற்றும் சேவைப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்த ஆரம்பித்தனர். இதில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவரது வீட்டிலிருந்து கணக்கில் வராத கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமியின் கணவர்  நடத்தி வரும் மேன் பவர் நிறுவனத்துக்கான ஜிஎஸ்டி வரியை முறையாகச் செலுத்தவில்லை என்ற புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதேபோல கூடுவாஞ்சேரியிலுள்ள அவர்களுடைய அலுவலகம், ஆப்பூரில் உள்ள வீடு மற்றும் உறவினர்களின் வீடு உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

ஜி.எஸ்.டி. வரி முறைகேடு: திமுக சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் அதிகாரிகள் சோதனை

சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமியின் கணவர் மதுசூதனனும், முன்னாள் அமைச்சரும், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான தா.மோ.அன்பரசனும் மிகவும் நெருக்கமானவர்கள் என்றும் கூறப்படுகிறது. மதுசூதனன் தனியார் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்து அனுப்பும் மேன் பவர் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனமானது காஞ்சிபுரம் பகுதியை சுற்றியுள்ள மோட்டார் நிறுவனங்கள், ஐடி பூங்காக்கள் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பணியாளர்களை அனுப்பி வருகிறது.

ஜிஎஸ்டி அதிகாரிகள் நடத்திய இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்கள்,கோப்புகள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. சோதனை முழுவதும் முடிந்த பின்னரே முழுத் தகவலும் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சைக்கு புதிய பதவி!

0

கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சைக்கு புதிய பதவி!

கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓவாக பணிபுரிந்து வரும் தமிழரான சுந்தர் பிச்சை அந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் என்ற நிறுவனத்தின் சி.இ.ஓவாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட கூகுள் நிறுவனம், இணையத்தில் தேடுதல் குறித்த சேவையில் உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக விளங்கி வருகிறது. தேடுபொறி என்றாலே கூகுள் தான் என உலகம் முழுவதிலும் உள்ள இண்டர்நெட் பயனாளிகளின் மனதில் பதிந்து விட்டது. அதுமட்டுமின்றி சர்வர் தொழில்நுட்பம், மென்பொருள் தயாரிப்பு, ஆண்ட்ராய்டு உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் கூகுள் அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை செயல்பட்டு வரும் நிலையில் கூகுள் நிறுவனத்தை நிறுவியவர்கள் சற்றுமுன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியபோது, கூகுளின் சிஇஓ என்ற பொறுப்புடன் சுந்தர் பிச்சைக்கு ஆல்பாபெட் நிறுவவனத்தின் சிஇஓ என்ற கூடுதல் பொறுப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு தமிழர் உலகின் நம்பர் ஒன் நிறுவனம் ஒன்றுக்கு சிஇஓவாக இருப்பது மட்டுமின்றி அதன் தாய் நிறுவனத்திற்கும் சிஇஓவாக நியமனம் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பதும், உலகத்தமிழர்களுக்கு இதுவொரு பெருமையான விஷயம் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஒருபக்கம் தமிழகத்தை சேர்ந்த இளைஞர் சண்முகம், நாசாவுக்கே வழிகாட்டியாக இருந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் சுந்தர் பிச்சையின் வளர்ச்சியால் தமிழர்களுக்கு உலகம் முழுவதும் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கியில் போடப்பட்ட பணத்திற்கு பாதுகாப்பு இல்லையா? ஆர்.டி.ஐ பதிலால் பரபரப்பு

0

வங்கியில் போடப்பட்ட பணத்திற்கு பாதுகாப்பு இல்லையா? ஆர்.டி.ஐ பதிலால் பரபரப்பு

ஒரு வங்கி தோல்வி அடைந்து விட்டாலோ அல்லது திவால் ஆகி விட்டாலோ அதில் சேமிப்பு கணக்கு உள்பட எந்த வகை கணக்கிலும் எவ்வளவு பணம் இருப்பு வைத்திருந்தாலும், ஒரு லட்சம் மட்டுமே காப்பீடு தொகை கிடைக்கும் என்றும் ஆர்.டி.ஐ பதிலளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது

ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு, பிக்சட் டெபாசிட் கணக்கு, கரண்ட் கணக்கு உட்பட எத்தனை கணக்குகளில் எத்தனை இலட்சம் அல்லது கோடி டெபாசிட் செய்திருந்தாலும், அந்த வங்கி ஒருவேளை எதிர்பாராத காரணத்தினால் திவாலானால் டி.ஐ.சி.ஜி.சி அதாவது ரிசர்வ் வங்கியின் வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்தின் விதிப்படி ஒரு லட்சம் மட்டுமே அதிகபட்ச நிவாரணம் கிடைக்கும் என ஆர்.டி.ஐ பதிலளித்துள்ளது.

இந்த பதிலால் நாம் வங்கியில் போடப்பட்டு இருக்கும் பணத்திற்கு பாதுகாப்பு இல்லையோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதனையடுத்து பொதுமக்கள் அதிகபட்சமாக வங்கியில் உள்ள கணக்குகளில் ஒரு லட்சம் மட்டுமே டெபாசிட் செய்து விட்டு ஷேர் மார்க்கெட், மியூச்சுவல் ஃபண்ட், தபால் நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் பிரித்து தங்களது பணத்தை பாதுகாக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்

குளிரிலும் குறையாத அழகு வேண்டுமா?

0

குளிரிலும் குறையாத அழகு வேண்டுமா?

மழையும் குளிரும் வாட்டி எடுப்பது ஒரு பக்கம் என்றால், மிரட்டும் சரும பாதிப்பு மறு புறம். முடி கொட்டுதல் பிரச்சினை, சரும வறட்சி, பாத வெடிப்பு என்று, வரிசை கட்டி வரும். இந்த பிரச்சினைகளுக்கு என்ன தான் தீர்வு என்று, யோசிக்கிறீர்களா… ரொம்ப சிம்பிள், இதுல சொல்லியிருக்கிறத பாலோ பண்ணுங்க அப்புறம் நீங்களே சொல்வீங்க இது எவ்வளவு சுலபம்னு.

சருமம்:
பொதுவாக குளிர்காலத்தில், அதிகம் பாதிக்கப்படுவது, சருமம் தான். தோல் வறண்டு, செதில் செதிலாக உரிய ஆரம்பிக்கும். இதற்கு தீர்வு தண்ணீர் அதிகம் குடிப்பது தான். இந்த சீசனுக்கு தாகம் எடுக்காது தான், ஆனால் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். இதனால் சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ளலாம்.

அதிகமான தண்ணீர் குடிப்பதால், தோலின் ஈரப்பதத்தை பராமரிக்க முடியும். வீட்டில் உள்ள தயிர், பால் போன்றவற்றைக் கொண்டு பேஸ் பேக் போட்டுக் கொள்ளலாம். மேலும் குளிப்பதற்கு முன், தேங்காய் எண்ணெய் உடல் முழுவதும் தேய்த்து 10-15 நிமிடங்கள் கழித்து, நலங்கு மாவு தேய்த்து குளிக்கலாம்.

அதிக சூடான நீரில் குளிப்பதால், சருமம் வறட்சியாகும். எனவே, வெதுவெதுப்பான சூட்டில் குளிக்கலாம். பப்பாளி, ஆப்பிள் ஆகியவற்றை குளிர்காலத்தில் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம், சருமத்திற்கு ஆரோக்கியம் தரும்.

உதடு:
குளிர்காலத்தில், பொதுவாக உதடுகள் வறட்சியடைந்து தோல் உரிய ஆரம்பிக்கும். உதடுகளை நாக்கால் அடிக்கடி ஈரப்படுத்தும் போதும், உதடு தோலைக் கடிப்பதன் மூலமும் கறுப்பு நிறமாக மாறி, அசிங்கமாக தோற்றமளிக்கும். இதற்கு எளிய தீர்வு, நெய் மற்றும் ஆலிவ் ஆயிலை உதட்டில் தடவினால் உதடுகள் மென்மையடையும்.

இரவு தூங்குவதற்கு முன் பாதாம் எண்ணெய் ஒரு டீஸ்பூன், உப்பு சேர்க்காத வெண்ணெய் ஒரு டீஸ் பூன் கலந்து தேய்த்துக் கொள்ளவும். தொடர்ந்து ஒரு வாரம் இப்படி செய்தால், உதடுகள் இயற்கைச் சிகப்பழகு பெறும். கொத்தமல்லி சாறை அடிக்கடி உதடுகளில் தடவுவதன் மூலம், சிவந்த மென்மையான உதடுகளைப் பெற முடியும்.

முடி:
குளிர்காலத்தில் முடி உதிர்வதை தடுக்க முடியாது தான். ஆனாலும் கட்டுப்படுத்தலாம். இரவு தலைக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டு காலையில் தலைக்கு குளிக்கலாம். வாரம் ஒரு முறை சோற்றுக் கற்றாழைக் கொண்டு தலைக்கு மசாஜ் செய்யலாம். உணவில் மீன், முட்டை, பச்சை காய்கறிகள், புரதம் நிறைந்த உணவுகளை அதிகளவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், முடி உதிர்வை தவிர்க்கலாம். குளிக்கும் முன் வெங்காய சாறை தலையில் தேய்த்து ஊறவைத்து குளிக்கலாம், இதனால் முடி உதிர்வது கட்டுப்படும்.

முடி உதிர்வு அதிகமாக உடையவர்கள், முதல் நாள் இரவு ஊற வைத்த வெந்தயத்துடன், தயிர், கற்றாழை சதைப் பகுதி சேர்த்து மையாக அரைத்து, முடியின் வேர்க்கால்களில் படும் படி மசாஜ் செய்து 10 நிமிடத்திற்குப் பின் வெது வெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். இதனால், முடி கொட்டுவது நின்று, நன்றாக வளர ஆரம்பிக்கும்.

இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க… குளிர்காலத்திலும் மின்னும் அழகுடன் ஜொலிங்க.

தமிழக மக்களின் 15 ஆண்டுகள் கனவு நிறைவேறியது! மருத்துவர் ராமதாஸ் மகிழ்ச்சி

0

தமிழக மக்களின் 15 ஆண்டுகள் கனவு நிறைவேறியது! மருத்துவர் ராமதாஸ் மகிழ்ச்சி

தமிழக மக்களின் 15 ஆண்டு கால கனவான சென்னை திண்டிவனம் சாலையை விரிவாக்குவதன் மூலம் பாமகவின் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் “சென்னை – திண்டிவனம் நெடுஞ்சாலை
விரிவாக்கம்: நனவாகும் 15 ஆண்டு கனவு!” என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழ்நாட்டின் மிக முக்கியமான சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாம்பரம்- திண்டிவனம் இடையிலான பகுதியை 8 வழிச்சாலையாகவும், 6 வழி பறக்கும் சாலையாகவும் விரிவாக்குவதற்கான பணிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தொடங்கியுள்ளது. தமிழக மக்களின் 15 ஆண்டு கனவு இதன்மூலம் நனவாகிறது. இது பா.ம.க.வின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

சென்னை தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு இடையிலான 24.5 கி.மீ நீள பாதை ரூ. 3,309 கோடியில் பறக்கும் சாலையாக அமைக்கப்படுகிறது. அதேபோல், செங்கல்பட்டு – திண்டிவனம் இடையிலான 68.50 கி.மீ நீள சாலை ரூ.3,062 கோடியில் 8 வழிச்சாலையாக அமைக்கப்படவிருக்கிறது. இதற்கான முன் தகுதி காண் ஒப்பந்தப்புள்ளிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கோரியிருக்கிறது. இந்த ஆயத்த பணிகள் அனைத்தும் திட்டமிட்டபடி முடிவடைந்தால் அடுத்த ஓராண்டுக்குள் தாம்பரம் – திண்டிவனம் நெடுஞ்சாலையை விரிவாக்கும் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை தாம்பரம் – திண்டிவனம் 4 வழிச்சாலை கடந்த 2005-ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. அப்போதிலிருந்தே இந்த சாலையை 6 வழிச்சாலையாகவும், பின்னர் 8 வழிச்சாலையாகவும் விரிவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. இதற்காக பல்வேறு போராட்டங்களையும் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியிருக்கிறது. தாம்பரம் – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்றுவதற்கு 2012-ஆம் ஆண்டிலேயே ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்ட போதிலும், பணிகள் தொடங்கப்படவில்லை. ஒரு கட்டத்தில் இந்தத் திட்டத்திற்கான நிதி வேறு பணிகளுக்கு திருப்பிவிடப்பட்டது. இதனால் சாலை விரிவாக்கம் கைவிடப் பட்டது. அதுமட்டுமின்றி திண்டிவனம் – திருச்சி நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டமும் முடக்கப்பபட்டது.

தாம்பரம் – திண்டிவனம் சாலை விரிவாக்கத்திட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தப் பட்டிருக்க வேண்டும். ஆனால், இத்திட்டம் முடக்கப்பட்டதால் மக்கள் அனுபவித்த சிரமங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. இந்த சாலையில் தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கும் நிலையில், 4 வழிச்சாலையில் அகலம் போதுமானதாக இல்லாததால் செங்கல்பட்டு முதல் சென்னை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும், வாகனங்கள் அணிவகுத்து நிற்பதும் வாடிக்கையாகி விட்டன. சென்னையிலிருந்து செங்கல்பட்டு வரை மணிக்கு 30 கி.மீ வேகத்தில் பயணிப்பதே அதிசயமாகிவிட்டது.

இந்திய சாலைகள் சங்கம் வகுத்துள்ள விதிகளின்படி ஒரு சாலையில் ஒரு நாளைக்கு 12,000-க்கும் கூடுதலான வாகனங்கள் பயணித்தால் அந்த சாலை 6 வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட வேண்டும். ஆனால், அதை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அளவுக்கு, அதாவது ஒரு நாளைக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணம் செய்யும் போதிலும் தாம்பரம் – திண்டிவனம் சாலை 4 வழிச்சாலையாகவே தொடர்வது நல்வாய்ப்புக் கேடாகும். இந்த நிலைக்கு இப்போதாவது முடிவு கட்டப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு பாட்டாளி மக்கள் கட்சியும் முக்கியக் காரணம் என்பது பெருமிதம் அளிக்கிறது.

தமிழக மக்களின் 15 ஆண்டுகள் கனவு நிறைவேறியது! மருத்துவர் ராமதாஸ் மகிழ்ச்சி

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை தான் வட மாவட்டங்களையும் தென் மாவட்டங்களையும் இணைக்கும் உயிர்நாடிப் பாதையாகும். இந்த சாலை விரிவாக்கப்பட்டால், அது பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தை எளிதாக்குவது மட்டுமின்றி, தமிழகத்தின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும். எனவே, தாம்பரம் – செங்கல்பட்டு 6 வழி பறக்கும் பாதை, செங்கல்பட்டு – திண்டிவனம் 8 வழிப் பாதை ஆகியவற்றுக்கான ஒப்பந்தப் பணிகளை விரைந்து முடித்து, கட்டுமானப் பணிகளை அடுத்த ஆண்டில் தொடங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, திண்டிவனம்- திருச்சி இடையிலான பகுதியையும் 8 வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையின் முக்கிய இடத்தை நோக்கி படையெடுக்கும் தளபதியின் ரசிகர்கள்: பெரும் பரபரப்பு

0

சென்னையின் முக்கிய இடத்தை நோக்கி படையெடுக்கும் தளபதியின் ரசிகர்கள்: பெரும் பரபரப்பு

சென்னையில் உள்ள ஒரு முக்கிய இடத்தை நோக்கி தளபதி விஜய் ரசிகர்கள் குவிந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் டெல்லியில் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்டமாக டிசம்பர் இரண்டாவது வாரத்தில் கர்நாடகாவில் உள்ள பழமையான சிறை ஒன்றில் நடைபெற இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளிவந்தன

இந்த நிலையில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு சென்னையில் உள்ள ஒரு முக்கிய இடத்தில் ஒரு ஷெட்யூல் ஒன்று ’தளபதி 64’ படத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் இந்த படப்பிடிப்பில் விஜய், மாளவிகா மோகனன் உள்பட பலர் கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின

இந்த செய்தியை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நெருங்கிய நண்பரும் இந்த படத்தின் திரைக்கதை ஆசிரியருமான ரத்தின சிவா அவர்கள் தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார். இதனை அடுத்து அந்தக் குறிப்பிட்ட இடத்தை நோக்கி தளபதி ரசிகர்கள் தளபதி விஜய்யை பார்க்க குவிந்து வருவதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இயக்குனர் ரத்தின சிவா ’தளபதி 64’ படப்பிடிப்பு சென்னையில் எங்கே நடக்கிறது என்பது குறித்த தகவலை சொல்லவில்லை என்றாலும் ரசிகர்கள் அதை எப்படியோ தெரிந்துகொண்டு அந்த இடத்தை நோக்கி வந்து விட்டதாகவும் இதனால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது