Home Blog Page 5869

பாமகவின் 30 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! மகிழ்ச்சியில் பொது மக்கள்

0

பாமகவின் 30 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! மகிழ்ச்சியில் பொது மக்கள்

கடந்த பல ஆண்டுகளாக பாமக சார்பாக வலியுறுத்தி வந்த பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப் பட்டது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் “பயன் தரும் வாயலூர் முயற்சி: பாலாற்றை உயிர்ப்பிக்க தடுப்பணைகள் வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

பாலைவனமாகிவிடும் என்று கைவிடப்பட்ட பாலாற்றில் அதிசயம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் வாயலூர் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் காரணமாக, அப்பகுதி வளமான பூமியாக மாறியிருக்கிறது. பாலாற்றுக்கு உயிரூட்ட முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் வாயலூர் & கடலூர் பாலாற்று தடுப்பணைத் திட்டம் வரவேற்கப்பட்ட வேண்டியதாகும்.

கர்நாடகத்தில் உருவாகி ஆந்திரா வழியாக தமிழகத்திற்குள் நுழையும் பாலாறு, காஞ்சிபுரம் மாவட்டம் வாயலூர் அருகே வங்கக்கடலில் கலக்கிறது. 93 கிலோமீட்டர் பாயும் கர்நாடகத்தில் 3 தடுப்பணைகளும், 14 ஏரிகளும் கட்டப்பட்டு மொத்தம் 17 இடங்களில் பாலாற்று நீர் சேமிக்கப்படுகிறது. 33 கிலோ மீட்டர் பாயும் ஆந்திரத்தில் 22 தடுப்பணைகள் பாலாற்றின் குறுக்கே கட்டபட்டுள்ள நிலையில், 222 கிலோ மீட்டர் பாயும் தமிழ்நாட்டில் இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகில் 1858-ஆம் ஆண்டில் கட்டப் பட்ட ஒரே தடுப்பணை தான் 150 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. பாலாற்றின் குறுக்கே கூடுதலாக பல தடுப்பணைகளை கட்ட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி போராடி வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கூட பாலாற்றில் தடுப்பணைகளை கட்ட வேண்டும்; பாலாற்றைக் காக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தில் பாலாறு நுழையும் பில்லூர் அணை முதல் கடலில் கலக்கும் வாயலூர் வரை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டார்.

அதேபோல், உழவர் அமைப்புகளும் பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தியதைத் தொடர்ந்து இப்போதைய செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் ஒன்றியத்தில் பாலாறு கடலில் கலப்பதற்கு சற்று முன்பாக வாயலூருக்கும், கடலூருக்கும் இடையே 1200 மீட்டர் நீளத்திற்கு 5 அடி உயரத்திற்கு தடுப்பணை கட்ட கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கும் இந்த தடுப்பணையை கட்டி முடிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு 5 மாதங்கள் முன்பாகவே கடந்த அக்டோபர் மாத இறுதியில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

கல்பாக்கம் அணுமின்நிலையம் அதன் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து வழங்கிய ரூ.32.50 கோடியில் இந்த தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்திலும், நடப்பு நவம்பர் மாதத்திலும் பெய்த மழையில் தடுப்பணை நிரம்பி வழிகிறது. தடுப்பணை கட்டப்பட்ட இடத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவுக்கு பாலாற்றின் இரு கரைகளையும் தழுவிக் கொண்டு கடல் போல தண்ணீர் தேங்கி நிற்கிறது. பாலாற்றில் இந்த அளவுக்கு தண்ணீர் இருப்பது அதன் வரலாற்றில் இது தான் முதல்முறை என்பதால் நூற்றுக்கணக்கானோர் இந்த தடுப்பணையை பார்த்துச் செல்கின்றனர். இதனால் வாயலூர் – கடலூர் இடையிலான பாலாற்று தடுப்பணை புதிய சுற்றுலாத்தலமாக மாறியிருக்கிறது என்றால் மிகையில்லை.

பாமகவின் 30 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! மகிழ்ச்சியில் பொது மக்கள்

வாயலூர் தடுப்பணை இரு வழிகளில் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் பயன் அளிக்கிறது. தடுப்பணைக்கான அடித்தளம் ஆற்று மணலைக் கடந்து களிமண் பரப்பு வரை சுமார் 27 அடி ஆழத்திற்கு நவீன முறையில் அமைக்கப்பட்டிருப்பதால் கடல் நீர் ஊடுருவி நிலத்தடி நீருடன் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பாலாற்றில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரைக் கொண்டும், உயர்த்தப்பட்ட நிலத்தடி நீரைக் கொண்டும் அப்பகுதியில் உள்ள 14 கிராமங்களில் 4230 ஏக்கர் நிலங்களில் பாசன செய்ய முடியும்.

பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே செங்கல்பட்டை அடுத்த பாலூர் என்ற இடத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டில் ஓர் தடுப்பணை கட்டப்பட்டது. அந்த அணை நிலத்தடி நீரை செறிவூட்டுவதற்கு பயன்படுகிறது. செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள வல்லிபுரம் – ஈசூர் இடையே ரூ.30.90 கோடியில் புதிய தடுப்பணை சில வாரங்களுக்கு கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. அந்த அணையிலும் 2 அடி அளவுக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பாலாறு என்பது பாழ்பட்ட ஆறு அல்ல; அதை மீண்டும் பால் போன்று நீர் ஓடும் ஆறாக மாற்றப்படும் என்ற நம்பிக்கையை இந்த தடுப்பணைகள் விதைத்துள்ளன. இதைத் தான் கடந்த 30 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.

பாலாற்றில் இப்போது கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் தவிர மேலும் பல இடங்களில் தடுப்பணைகள் கட்டுவதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. நல்லாத்தூர், ஆலப்பாக்கம், பழவேலி, திருமுக்கூடல், வெண்குடி, உள்ளாவூர், காலூர் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்ட திட்ட அறிக்கைகள் தயாரிக்கப் பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பணைகள் அனைத்தையும் அடுத்த சில ஆண்டுகளில் கட்டி முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை தவிர பாலாறு நெடுகிலும் 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை வீதம் 20-க்கும் கூடுதலான தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும். தேவைப்பட்டால் கல்பாக்கம் அணுமின்நிலையத்திடமிருந்து பெற்றதை போன்று பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்தும் நிதி உதவி பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

மூடப்படுகிறதா சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலை!

0

சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் மூடும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை தொடர்பாக மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கேள்வி நேரத்தில் நேற்று பதிலளித்தார்.

மூடப்படுகிறதா சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலை!

அவர் கூறியதாவது சென்னை ஐசிஎப் சாதனைகளை எண்ணி மத்திய அரசு பெருமை கொள்கிறது உள்நாட்டு தொழில் நுட்பத்தில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வந்தே பாரத் எக்பிரஸ் ரயிலை சிறப்பாக தயாரித்தது சென்னை ஐசிஎப் பின் சாதனைகளில் குறிப்பிடத்தக்க தாகும்.

டெக்னீசியன்கள் இந்த சாதனைக்கு சொந்தக்காரர்கள் இது கிரீடத்தில் பதிக்கப்பட்ட வைரமாக ஜொலிக்கிறது எனவே சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலை மேலும் நவீன மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு எடுக்கும் அதை மூடுவதற்கான பேச்சுக்கே இடமில்லை என அவர் கூறினார்.

பின்னர் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசுகையில் புல்லட் ரயில் திட்டம் உட்பட நாடு முழுவதும் பல்வேறு ரயில் திட்டப் பணிகளை பரிசீலனையில் உள்ளது அவற்றை நிறைவேற்றுவது பற்றி சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என அவர் அப்போது தெரிவித்தார்.

’விஜய் 64’ படத்தின் டைட்டில் குறித்து கசிந்த தகவல்

0

’விஜய் 64’ படத்தின் டைட்டில் குறித்து கசிந்த தகவல்

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. சென்னையில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை டெல்லியில் முடித்த படக்குழுவினர் அடுத்ததாக கர்நாடக மாநிலத்தில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்காக தயாராகி வருகின்றனர். டிசம்பர் முதல்வார இறுதியில் ’தளபதி 64’ படக்குழு கர்நாடகா செல்ல உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் வாங்கியுள்ள செய்தி நேற்று வெளியானது. இதனையடுத்து இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் தற்போது கசிந்து வருகிறது. இந்த படம் கல்லூரி மாணவர்கள் சம்பந்தப்பட்ட படம் என்பதும், நீட் தேர்வினால் அனிதா என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து காட்சிகள் இந்த படத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்தப் படத்திற்கு ’டாக்டர்’ என்ற டைட்டில் வைக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கு விஜய்யும் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது

வரும் ஜனவரி 1ஆம் தேதி இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ’டாக்டர்’ என்ற டைட்டில் உண்மைதானா என்பது அன்றைய தினம் தெரியவரும்

விஜய், மாளவிகா மேனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான் உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவும், பிலோமினா ராஜ் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.

லண்டன் பாலத்தில் சென்றவர்களை கத்தியால் குத்திய நபர்: போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை

0

லண்டன் பாலத்தில் சென்றவர்களை கத்தியால் குத்திய நபர்: போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை

லண்டனில் உள்ள புகழ்பெற்ற தேம்ஸ் நதியின் குறுக்கே அமைந்த பாலத்தில் திடீரென ஒரு மர்ம நபர் அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த பொதுமக்களை கத்தியால் குத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நபரின் கத்திக்குத்து சம்பவத்தால் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்த பொதுமக்களில் ஐந்து பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய மர்ம நபர்களை மடக்கிப்பிடித்து அவருடன் மல்லுக்கட்டினார். இந்த சம்பவத்தால் பாலத்தில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு சிதறி ஓடினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

லண்டன் பாலத்தில் மர்ம நபர் ஒருவர் பொதுமக்களை கத்தியால் குத்திக் கொண்டிருக்கும் தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அந்த பகுதிக்கு வந்தனர். அப்போது அந்த மர்ம மனிதனும் இளைஞர் ஒருவரரும் மல்லுக்கட்டி கொண்டிருந்ததை பார்த்த போலீசார், சரியாக மர்ம நபரை சுட்டுக் கொன்று இளைஞரை மீட்டனர்

சுட்டுக்கொல்லப்பட்ட மர்ம நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக லண்டன் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சரியான நேரத்தில் போலீசார் அந்த பகுதிக்கு சென்று பொதுமக்களையும் மர்ம நபரை பிடிக்க முயன்ற இளைஞரையும் காப்பாற்றிய பாதுகாப்பு படையினருக்கு நன்றி தெரிவிப்பதாக இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

உடல் முழுவதும் சிகரெட் சூடு வைத்து கொடூரம்! தூக்கில் தொங்கிய கர்ப்பிணியான காதலி

0

உடல் முழுவதும் சிகரெட் சூடு வைத்து கொடூரம்! தூக்கில் தொங்கிய கர்ப்பிணியான காதலி

திருமணம் செய்து கொள்வதாக தான் காதலித்தவனால் அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணியான காதலி, அழைத்துச் செல்லப்பட்ட ஒரு வாரத்திலேயே மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் வசிக்கும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஆண்டி சிறுவள்ளூர் என்ற கிராமத்தைச் சேர்ந்வர் தான் ரோஜா. இவர் சென்னை அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர், காரை கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்ற ஏற்கனவே திருமணம் ஆன நபரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் ரோஜா கர்ப்பம் தரித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு ரோஜா ராஜேஷிடம் கூறியிருக்கிறார்.

காதலனான ராஜேஷும் இவரின் பேச்சுக்கு கட்டுப்பட்டு திருமணம் செய்து கொள்ள ரோஜாவைத் தன்னுடன் அழைத்துச் சென்றிருக்கிறார். இந்நிலையில் தான், காஞ்சிபுரம் அருகிலுள்ள பரந்தூர் என்ற கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று கிடப்பதாகக் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது சசிகலா நடராசனுக்குச் சொந்தமான தோட்டம் என அப்பகுதியிலுள்ள மக்கள் தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து அங்கு, மரத்தில் தூக்கில் தொங்கியபடி இறந்த பெண் ரோஜா என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் இறந்த கர்ப்பிணி பெண்ணான ரோஜாவின் உடல் முழுவதும் பல இடங்களில் சூடு வைக்கப்பட்டு கழுத்து நெறிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரோஜாவின் குடும்பத்தினரும், உறவினர்களும் இது கொலையாக இருக்க கூடும் என ராஜேஷ் மற்றும் இதில் தொடர்புடையவர்களை உடனடியாகக் கைது செய்து வேண்டும் என்று கூறி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

pregnant lady suicide in kanchipuram-news4 tamil latest crime news in tamil today3
pregnant lady suicide in kanchipuram-news4 tamil latest crime news in tamil today3

மேலும் இறந்த பெண்ணான ரோஜா, தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் வழக்கம் போல அப்பகுதியில் உள்ள வி.சி.க நிர்வாகிகள் அந்த பெண்ணிற்கு ஆதரவாக மருத்துவமனை முன்பு குவிந்து விட்டனர். மேலும் ராஜேஷ் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் ரோஜாவைக் காதலித்து ஏமாற்றியுள்ளார். திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகாட்டி கொடுமைப்படுத்திக் கொன்றுவிட்டார் என்றும் பெண்ணின் பெற்றோர்களும் உறவினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

காதலித்து விட்டு திருமணம் செய்ய அந்த நபர் மறுத்துவிட்டதால், இளம்பெண் ரோஜா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது போலத் தெரிகிறது, என்று காவல் துறை ஆய்வாளர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தொடக்கத்தில் சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினர், பின்னர் இதை கொலை வழக்காகப் பதிவு செய்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ராஜேஷைக் கைது செய்துள்ளனர்.

ரோஜா மரணம் குறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல் ஆய்வாளர் கூறியதாவது.ஏற்கெனவே திருமணமான இந்த நபரை இறந்து போன ரோஜா காதலித்து வந்ததாகச் சொல்கின்றனர். மேலும் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி அந்த நபரை அவர் வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

திருமணம் செய்ய அந்த நபர் மறுத்துவிட்டதால், இளம்பெண் ரோஜா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது போலத் தெரிகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் விசாரணை முழுமையாக முடிந்த பிறகே மற்ற விவரங்களைத் தெரிவிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வெளுத்து வாங்கும் மழை: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

0

வெளுத்து வாங்கும் மழை: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் இன்று 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்

சென்னை, செங்கல்பட்டு, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளனர்

மேலும் தமிழகத்திலுள்ள டெல்டா மாவட்டங்களிலும் திருவள்ளூர் உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களிலும் இன்று காலை முதல் நல்ல மழை பெய்து வருவதையடுத்து அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் இருந்து விடுமுறை அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் நவம்பர் 30 முதல் டிசம்பர் 2ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என அறிவித்து இருந்தது. இதனையடுத்து ஆய்வு மையத்தின் கணிப்பின்படி சரியாக தற்போது கனமழை பெய்து வருகிறது. எனவே குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மழையில் சிக்காமல் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது

மீண்டும் சன் நிறுவனத்துடன் இணையும் விஜய்!

0

மீண்டும் சன் நிறுவனத்துடன் இணையும் விஜய்!

விஜய் நடித்த ’சர்க்கார்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த நிலையில் தற்போது விஜய் நடித்துக்கொண்டிருக்கும் ’தளபதி 64’ படத்தின் சேட்டிலைட் உரிமையை சன்டிவி பெற்றுள்ளது;

சன் டிவி நிறுவனம் தமிழில் தயாராகும் பெரும்பாலான திரைப்படங்களின் சேட்டிலைட் உரிமையை கைப்பற்றி வரும் நிலையில், தற்போது தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் சாட்டிலைட் உரிமையையும் பெற்றுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் சன்டிவி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

தளபதி 64 திரைப் படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற சன் டிவி உட்பட மூன்று முன்னணி டிவிகள் முயற்சித்து வந்தன. இதுகுறித்து நடந்த பேச்சுவார்த்தையில் சன் டிவி தற்போது வெற்றி பெற்றது. இந்த படத்திற்காக சன் டிவி மிகப் பெரிய தொகை ஒன்றை கொடுத்துள்ளதாகவும் அந்த தொகை இதுவரை எந்தத் தமிழ்ப் படத்திற்கும் கொடுக்காத மிக மிகப்பெரிய தொகை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் தளபதி 64 படத்தின் சாட்டிலைட் உரிமையை எவ்வளவு தொகை கொடுத்து சன் டிவி பெற்றது என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை இந்த நிலையில் வரும் ஏப்ரல் மாதம் தளபதி 64 திரைப்படம் வெளியாக உள்ள இதுவரை வெளிவரவில்லை.

முதல் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் ‘தளபதி 64 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரம் தொடங்கவுள்ளது. விஜய், மாளவிகா மேனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.

உலகின் டாப்-10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் நுழைந்தார் முகேஷ் அம்பானி!

0

உலகின் டாப்-10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் நுழைந்தார் முகேஷ் அம்பானி!

பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் சமீபத்தில் வெளியிட்டுள்ள டாப்-10 உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், முதல் முறையாக இந்தியாவின் நம்பர்-1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி நுழைந்திருக்கிறார்.

முன்பு வெளியாகியிருந்த ஃபோர்ப்ஸ் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 13ம் இடத்திலிருந்த முகேஷ் அம்பானி, தற்போது 4 இடங்கள் உயர்ந்து 9ம் இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் டாப்-10 பட்டியலில் அவர் முதல் முறையாக் நுழைந்திருக்கிறார்.

உலகின் டாப்-10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் நுழைந்தார் முகேஷ் அம்பானி!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு தொடர்ந்து ஏற்றம் அடைந்து வருகிறது. இதன் ஒரு நிலையாக நேற்று சந்தை மதிப்பில் 10 லட்சம் கோடி ரூபாய் என்ற மைல்கல்லை அந்நிறுவனம் எட்டியது. இச்சாதனையை படைக்கும் முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையையும் RIL பெற்றுள்ளது.

உலக 10 கோடீஸ்வரர்களின் பட்டியல்
1.ஜெப் பெஸோஸ்
2.பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் குடும்பத்தினர்3.பில் கேட்ஸ் 4.வாரன் பபெட் 5.மார்க் ஜூக்கர்6.பெர்க்லாரி எலிசன் 7.அமன்சியோ ஒர்டேகா 8.கார்லோஸ் ஸ்லிம் ஹெலு மற்றும் குடும்பத்தினர்
9.முகேஷ் அம்பானி 10.லாரி பேஜ்.

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சதம்: பரிதாபத்தில் பாகிஸ்தான் பவுலர்கள்

0

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சதம்: பரிதாபத்தில் பாகிஸ்தான் பவுலர்கள்

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இதனையடுத்து இன்று தொடங்கிய இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் பர்ன்ஸ் ஆகியோர்களில் வார்னர் அதிரடியாக விளையாடி சதம் அடித்துள்ளார். அவர் தற்போது 166 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார் என்பதும் இவருடைய ஸ்கோரில் 19 பவுண்டரிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து 14 ரன்களில் பர்ன்ஸ் ஆட்டமிழந்தாலும் அதன் பின்னர் களமிறங்கிய லாபுசாஞ்சே அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். இவர் தற்போது 126 ரன்கள் எடுத்துள்ளார் என்பதும் அதில் 17 பவுண்டரிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களில் விக்கெட்டுக்களை எடுக்க முடியாமலும், ரன்களை கட்டுப்படுத்த முடியாமலும் திணறி வருகின்றனர் குறிப்பாக யாஷிர் ஷா என்பவரின் 14 ஓவர்களில் 87 ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது டெஸ்டிலும் பாகிஸ்தான் அணி திணறி வருவதால் தோல்வி அல்லது இன்னிங்ஸ் தோல்வி அடைய வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வர்ணனையாளர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

8 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஜிடிபி சரிவு: முதலீட்டாளர்கள் கவலை

0

8 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஜிடிபி சரிவு: முதலீட்டாளர்கள் கவலை

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 ஆண்டுகளில் இல்லாத அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்றுடன் முடிவடையும் 2-வது காலாண்டிற்கான ஜிடிபி 4.5 சதவீதமாக குறைந்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் முதலீட்டாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது

கடந்த ஆண்டு இதே 2-வது காலாண்டில் 6.9 சதவிகிதமாக இருந்த ஜிடிபி இந்த ஆண்டு 4.5 சதவிகிதமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

சமீபத்தில் மக்களவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘இந்தியாவின் உண்மையான ஜிடிபி 2009-2014ல் 6.4% ஆக இருந்ததாகவும், 2014-2019 ல் ஜிடிபி மதிப்பு 7.5% உயர்ந்துள்ளதாகவும், எனவே ஜிடிபி குறித்து தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.

நிதியமைச்சர் கூறிய இரண்டே நாளில் 4.5 சதவீதமாக குறைந்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் மத்திய அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது

ஜிடிபி மிக மோசமாக சரிந்துள்ளதன் மூலம் பாஜகவின் அரசு மோசமான சாதனையை செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. மேலும் இந்தியாவின் பொருளாதாரத்தை மிக மோசமாக படுகுழிக்கு இந்த அரசு தள்ளிவிட்டதாகவும், இந்தியா மிக மோசமான இருண்ட காலத்துக்கு சென்றுவிட்டதாகவும் அக்கட்சி கூறியுள்ளது.