Home Blog Page 5870

இன்று தங்கம் விலை உயர்வு!

0

இன்று தங்கம் விலை உயர்வு!

தங்கத்தின் மீதான முதலீடு என்பது இந்திய அளவில் நம்பிக்கையாகவும் பாதுகாப்பாகவும் கருதுகின்றனர்.
மேலும் சாமானிய மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை தங்கத்தில் தான் முதலீடு செய்கின்றனர். உலக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வதில் இந்தியா முக்கிய பங்கில் உள்ளது.

எனவே நாள் தோறும் தங்க ஏற்ற இரக்கம் அனைவராலும் உற்று நோக்க படுகிறது. அந்த வகையில் இன்றைய தங்கத்தின் விலை வருமாறு:
ஆபரண தங்கம் 22 caratகிராம் ஒன்றுக்கு நேற்றைய விலையை விட 12 ரூபாய் அதிகரித்து 3626 ரூபாய் ஆகவும். பவுன் நேற்றைய விலையை விட 96 ரூபாய் அதிகரித்து ஒன்றுக்கு 29008 ரூபாயாகவும் உள்ளது, அதே போல் 24 கேரட் தூய தங்கத்தின் விலை 1 கிராம் 3787 ரூபாய் ஆகவும். 10 கிராம் தூய தங்கத்தின் விலை ரூபாய் 37870 ஆகவும் உள்ளது.

இன்று தங்கம் விலை உயர்வு!

வெள்ளியின் விலையை பொறுத்தவரை நேற்றைய விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல்.

கிராம் ரூபாய் 47.90 வுக்கும் 1 கிலோ வெள்ளியின் விலை ரூபாய் 47900 க்கும் வர்த்தகம் செய்யப்பட்டது.

சந்தானம் ஜோடியாக மீண்டும் பிக்பாஸ் நடிகை!

0

சந்தானம் ஜோடியாக மீண்டும் பிக்பாஸ் நடிகை!

சந்தானம் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடித்து வரும் ’டிக்கிலோனா’. படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்

சந்தானம் தற்போது நடித்து வரும் படங்கள் படங்களில் ஒன்று ’டிக்கிலோனா’. இந்த படத்தில் அவர் முதல் முறையாக மூன்று வேடத்தில் நடித்து வருகிறார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை கார்த்திக் என்பவர் இயக்கி வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

சந்தானம் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தானம் ஜோடியாக மீண்டும் பிக்பாஸ் நடிகை!

இந்த நிலையில் சந்தானம் நடிக்கும் மூன்று கேரக்டர்களில் ஒரு கேரக்டருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளரும் காமெடி நடிகையுமான மதுமிதா நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் அவர் இந்த படத்தில் வழக்கறிஞர் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

மேலும் சந்தானத்துடன் அவர் வழக்கறிஞர் உடையில் இருக்கும் போஸ்டர்களும் தற்போது இணைய தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்ற படத்தில் சந்தானம் ஜோடியாக மதுமிதா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

ஹைதராபாத் இளம் பெண் கொலை வழக்கில் துப்பு துலங்கியது

0

ஹைதராபாத் இளம் பெண் கொலை வழக்கில் துப்பு துலங்கியது

26 இளம் மருத்துவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஐதராபாத் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
26 வயது இளம்பெண் பிரியங்கா ரெட்டி இவர் வெட்னரி படித்துவிட்டு ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். தினமும் சம்சா பாத் என்றும் இடத்தில் இருந்து கச்சி பௌலி பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு அவர் செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மாலை 5 மணி அளவில் வீட்டிலிருந்து கிளம்பிய அவர் சம்சா பாத் டோல் கேட்டில் வண்டியை நிறுத்திவிட்டு கச்சி பௌலி பகுதிக்கு கார் மூலம் சென்றுள்ளார் பிறகு அன்றைய தினத்தில் இரவு 7 மணி அளவில் கச்சிபௌலி மீண்டும் டோல்கேட் பகுதிக்கு வந்துள்ளார்.

ஹைதராபாத் இளம் பெண் கொலை வழக்கில் துப்பு துலங்கியது

அப்போது அவருடைய இரு சக்கர வாகனம் பழுதடைந்து உள்ளது அதாவது பின் டயர் பஞ்சர் ஆகி விட்டதாக அங்கே இருந்த லாரி ஓட்டுனர் தெரிவித்துள்ளார் பின்னர் அவரே சரி செய்து தருவதாகவும் வலுக்கட்டாயமாக உதவி செய்ய முன்வந்துள்ளார்.

பிரியங்கா எவ்வளவோ எடுத்துரைத்தும் நான் பார்த்துக்கொள்கிறேன் என தெரிவித்தும் கூட உதவி செய்ய முன்வந்துள்ளார். இதன் பேரில் சந்தேகம் அடைந்த பிரியங்கா உடனடியாக தான் வைத்திருந்த செல்போன் மூலமாக தனது சகோதரி ரம்யாவுக்கு தெரிவித்துள்ளார் பின்னர் அழுது புலம்பியுள்ளார் எனக்கு பயமாக உள்ளது விரைந்து வந்து தன்னை காப்பாற்று என கேட்டுக்கொண்டுள்ளார்.

பின்னர் சகோதரியும் அவரது உறவினர்களும் டோல்கேட் பகுதிக்கு விரைந்து வந்து பார்த்தபோது அங்கு காணவில்லை.
செல்போனில் தொடர்பு கொண்டபோதும் சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் பதறிப்போன சகோதரி மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர் இதற்கிடையே பிரியங்காவை ரொம்ப நேரம் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியாததால் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தனர்

அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் காலை 7 மணியளவில் அதே பகுதியில் சப்வே அருகே பிரியங்கா ரெட்டி சடலமாக மீட்டனர் பின்னர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஹைதராபாத் இளம் பெண் கொலை வழக்கில் துப்பு துலங்கியது

தற்போது வெளிவந்துள்ள ரிப்போர்ட்டில் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் தீ வைத்து எரித்துள்ளனர் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திட்டமிட்டு கொலை செய்துள்ளனரா ! அல்லது வேறு ஏதும் காரணமா எனவும் விசாரித்து வருகின்றனர்.

இப்படி ஒரு கேவலமான செயலை செய்து உள்ளது ஐதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் களம் திரும்புகிறார் சானியா…யாருடன் ஜோடி சேருகிறார் என தெரியுமா?

0

மீண்டும் களம் திரும்புகிறார் சானியா…யாருடன் ஜோடி சேருகிறார் என தெரியுமா?

இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் பிரிவில் ஆறுமுறை பட்டம் பெற்ற சாதனையாளர் ஆவார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்து கொண்ட சானியா மிர்சா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் செலுத்திவந்த வேலையில், தன் உடல் தகுதியை மேம்படுவதற்கான பயிற்சியிலும் தன்னை முற்றிலும் ஈடுபடுத்திக்கொண்டார்.

மீண்டும் களம் திரும்புகிறார் சானியா...யாருடன் ஜோடி சேருகிறார் என தெரியுமா?

இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடக்கும் சர்வதேச டென்னிஸ் போட்டியில் மீண்டும் பங்கேற்பதாக சானியா மிர்சா நேற்று அறிவித்தார் கடைசியாக 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் விளையாடிய சானியா, தனது மறுபிரவேசத்தில் இரட்டையர் ஜோடியாக உக்ரையன் நாட்டின் நாடியா வை தேர்வு செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து நடக்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் ராஜீவ் ராமுடன் இணைந்து ஆடுகிறார் தற்போது நல்ல உடல் தகுதியுடன் இருப்பதாக உணர்வதாகவும் இந்த போட்டிகளுக்கு முன்பு மும்பையில் அடுத்த மாதம் நடக்கும் ஐ.டி. எப். போட்டியில் களம் காண திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் 33 வயதான சானியா மிர்சா.

18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினம்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பில் புதிய அதிசயம்

0

18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினம்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பில் புதிய அதிசயம்

உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு பழமையான மிருகங்கள் மற்றும் பழங்காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் உடல்களை கண்டுபிடிப்பது வழக்கமான ஒன்றுதான். குறிப்பாக சைபீரியா என்ற பகுதி குளிர் மிகுந்த பகுதி என்பதால் அங்கு உறைந்த நிலையில் பல பழமையான உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது

அந்த வகையில் சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் அரிய வகை விலங்கு ஒன்றை கண்டுபிடித்தனர். அந்த விலங்கை ஆராய்ந்தபோது அதன் முடிகூட உதிராமல் பற்கள் வெள்ளையாகவும் இருந்ததை கண்டு ஆச்சரியமடைந்தனர். இந்த விலங்கை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தபோது அது 18 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதை கண்டுபிடித்தனர்

18 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருந்தும் முடி உதிராமல், பற்களின் நிறம் கூட மாறாமல் இருந்ததை கண்டு ஆராய்ச்சியாளர்களை அதிசயித்தனர். இந்த விலங்கு ஒரு ஆண் விலங்கு என்றும் ஆனால் இது நாய் அல்லது ஓநாய் ஆகிய இரண்டில் ஒன்றாக இருக்கலாம் என்றும் இது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

மேலும் இது என்ன வகை விலங்கு என்பது தெரியாமலேயே டோகார் என்று செல்லமாக பெயர் சூட்டியுள்ளனர். டோகார் என்றால் தோழர் என்று அர்த்தமாம். இந்த விலங்கை கைப்பற்றி நன்றாக சுத்தம் செய்து அருங்காட்சியகத்தில் ஆராய்ச்சியாளர்கள் வைத்துள்ளனர். இந்த அருங்காட்சியகத்தில் இந்த விலங்கை காண தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

பயணிகள் டிக்கெட் கட்டணம் வருமானம் எவ்வளவு?

0

பயணிகள் டிக்கெட் கட்டணம் வருமானம் எவ்வளவு?

ரயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தெற்கு ரயில்வே பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

ஆனால் தற்போது புதிய ரயில்கள் இயக்குவதை தவிர்த்து வருகிறது மாறாக கூடுதல் கட்டண சிறப்பு ரயில்கள் போன்றவை அதிக அளவில் இயக்கப்படுகிறது.
முன்பு பண்டிகை காலங்களில் வழக்கமான கட்டணத்தில் அதிக சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

ஆனால் தற்போது அதிக கட்டண சிறப்பு ரயில்கள் அதுவும் குறைவான அளவில்தான் இயக்கப்படுகிறது இதனால் பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் பாதிக்கப்படுகின்றன பண்டிகை கால சிறப்பு ரயில் இயக்கப்படும் நேரங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என பயணிகள் தரப்பில் கூறப்படுகிறது.

தெற்கு ரயில்வேயில் உள்ள ஆறு கூட்டத்திலும் கடந்த ஆண்டைவிட ரயில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது 2017-18 ஆம் ஆண்டில் ரயில் பயணிகள் எண்ணிக்கை 81கோடியே 43 லட்சம் ஆனால் நடப்பு ஆண்டில் அதைவிட இரண்டு கோடி அதிகரித்து 83 கோடியே 77 லட்சம் பேர் ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

இது 2.9 சதவீதம் அதிகம் பயணிகள் டிக்கெட் கட்டணம் மூலம் கடந்த ஆண்டு தெற்கு ரயில்வேக்கு 4819 கோடியும் நடப்பாண்டில் ஆயிரத்து 5184 கோடியும் வருமானம் கிடைத்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 6 சதவீதம் அதிகமாகும்.

வெற்றிடம் உண்மை தான்! ஆனால் யாராலும் நிரப்ப முடியாது: நடிகர் விவேக்

0

வெற்றிடம் உண்மை தான்! ஆனால் யாராலும் நிரப்ப முடியாது: நடிகர் விவேக்

வெற்றிடம் இருப்பது உண்மைதான் ஆனால் அதை யாராலும் நிரப்ப முடியாது என நடிகர் விவேக் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தற்கால சினிமாக்களில் நகைச்சுவை என்பது பிறரது மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், உருவத்தை வைத்து கேலி செய்யும் நகைச்சுவைகள் அதிகம் இடம் பெறுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருப்பதாக கூறிய கருத்துக்கு நடிகர் விவேக் கூறியதாவது:

கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன் அவர்களின் காலத்தில் நகைச்சுவை என்பது நகைச்சுவையாக மட்டுமின்றி சமூக விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் இருந்தது. மூடநம்பிக்கைகள் ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு, தீண்டாமை உள்பட பல விஷயங்களை அவர் நகைச்சுவை கலந்து கொடுத்தார். ஆனால் அதே போல அனைத்து காமெடி நடிகர்களும் செய்ய முடியாது. ஏனெனில் கலைவாணர் என்றால் ஒரே ஒரு கலைவாணர் தான். அவரைப் போல் இன்னொருவர் செய்தால் அது காப்பி அடித்து செய்த மாதிரி ஆகிவிடும். என்னை சின்ன கலைவாணர் என்று சிலர் கூறினாலும் அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். அவர் இருக்கும் உயரம் வேறு என்னுடைய இடம் வேறு என்று விவேக் கூறினார்

மேலும் ஒவ்வொரு காமெடி நடிகரும் அந்தந்த காலத்திற்கேற்ப புதிய ட்ரெண்டுக்கு ஏற்றவாறு காமெடி செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போதைய டிரெண்ட்டில் இன்றைய காமெடி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இதனை குற்றம் சொல்ல முடியாது. முன்பெல்லாம் ஒரு சில செய்தியாளர்கள் மட்டுமே இருந்தார்கள். ஆனால் தற்போது செல்போன் இருக்கிற எல்லோருமே செய்தியாளர்களாக உள்ளனர். எனவே காலத்திற்கு தகுந்த மாதிரியும் காமெடி நடிகர்களும் மாறி உள்ளனர்

அதே நேரத்தில் என்எஸ் கிருஷ்ணன் போன்ற தரமான காமெடியை கொடுப்பதில் தமிழ் சினிமாவில் வெற்றிடம் இருப்பது உண்மைதான். ஆனால் அந்த வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று கூறினார்

மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த தமிழ் திரைப்படங்களில் காமெடிக்கு என ஒரு தனி ட்ராக் இருக்கும். தற்போது ஒரு திரைப்படம் 2 மணி நேரம் மட்டுமே உருவாக்கப்படுவதால் காமெடிக்கு என தனி ட்ராக் இல்லை. இனிமேல் காமெடி ட்ராக்குகளை இயக்குனர்கள் உருவாக்கினால் தரமான காமெடிகள் வர வாய்ப்பு உள்ளது’ என்று விவேக் கூறினார்

பாமக சுட்டி காட்டிய விவகாரத்தில் சாட்டையை சுழற்றிய நீதி மன்றம்

0

பாமக சுட்டி காட்டிய விவகாரத்தில் சாட்டையை சுழற்றிய நீதி மன்றம்

தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை முறையாக பராமரிக்காமல் வருடம் தோறும் அதற்கான சுங்க கட்டணத்தை மட்டும் உயர்த்தி வருவது குறித்து பாமக நிறுவனர் சமீபத்தில் தனது அறிக்கை மூலமாக சுட்டி காட்டியிருந்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் நீதி மன்றமே தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்கதக்கது என மருத்துவர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் “பயணிக்க தகுதியற்ற சுங்கச் சாலைகள்: கட்டணத்தை முழுமையாக ரத்து செய்க!” என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.

சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜாபேட்டை வரையிலான பகுதி சரியாக பராமரிக்கப்படாததற்காக கடும் கண்டனம் தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், அந்தச் சாலை சீரமைக்கப்படும் வரை 50% சுங்கக்கட்டணம் மட்டும் தான் வசூலிக்க வேண்டும் என்று ஏன் ஆணையிடக் கூடாது? என வினா எழுப்பியுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் இந்த ஆதங்கம் மிகவும் நியாயமானது; இதன் மூலம் அச்சாலையை பயன்படுத்துவோரின் உள்ளக் குமுறல்களை நீதிபதிகள் எதிரொலித்துள்ளனர்.

பாமக சுட்டி காட்டிய விவகாரத்தில் சாட்டையை சுழற்றிய நீதி மன்றம்

சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சத்தியநாராயணா, தமது பயண அனுபவத்தின் அடிப்படையில் சென்னை மதுரவாயல் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சாலை மிக மோசமான நிலையில் இருப்பதாகவும், அது குறித்து உயர்நீதிமன்றமே பொதுநல வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும் தலைமை நீதியரசருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதனடிப்படையில் உயர்நீதிமன்றமே தாமாக முன்வந்து பதிவு செய்த பொதுநல வழக்கு, நீதியரசர்கள் சத்தியநாராயணா, சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்த போது அவர்கள் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளனர். மதுரவாயல் – வாலாஜாபேட்டை இடையிலான சாலை மோசமாக உள்ள நிலையில், அதை முழுமையாக மீண்டும் அமைப்பதற்கு பதிலாக ஆங்காங்கே மட்டும் சீரமைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர்கள், இத்தகைய சூழலில் நெடுஞ்சாலை பயன்பாட்டுக்கான கட்டணத்தை மட்டும் ஆண்டுக்கு ஆண்டு உயர்த்தி வசூலிப்பது முறையல்ல என்றும் கூறியிருக்கின்றனர்.

சென்னை மதுரவாயல் – வாலாஜாபேட்டை இடையிலான தேசிய நெடுஞ்சாலையின் தரம் தொடர்பாக நீதிபதிகள் கூறியுள்ள கருத்துகள் அனைத்தும் மிகச் சரியானவை. சென்னை – பெங்களூர் இடையிலான சாலை 6 வழிச் சாலை என்று அறிவிக்கப்பட்ட பிறகும் சென்னை – வாலாஜா இடையிலான நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாகவே இருப்பது குறித்தும், அந்த சாலையும் முறையாக பராமரிக்கப்படாதது மற்றும் அதனால் ஏற்படும் விபத்துகள் குறித்தும் 25.07.2017, 17.07.2018 ஆகிய தேதிகளில் விரிவான அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறேன். அத்துடன் நிற்காமல் அப்போதைய மத்திய நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சரிடம் நேரிலும், கடிதம் மூலமாகவும் பலமுறை வலியுறுத்திருக்கிறேன். ஆனாலும் பயனில்லை.

அதுமட்டுமின்றி, மதுரவாயல் – வாலாஜா சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் அதிக அளவில் சாலை விபத்துகள் ஏற்படுவதாகவும், சாலையை முழுமையாக சீரமைக்கும் வரை அச்சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படக்கூடாது என்றும் வலியுறுத்தி வாலாஜா வட்டாட்சியர் அலுவலகம் முன் கடந்த 14-ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநில துணைப் பொதுச்செயலாளர் சரவணன் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக ஏன் வழக்கு தொடரக்கூடாது என்று விளக்கம் கேட்டு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மதுரவாயல்- வாலாஜாப்பேட்டை நெடுஞ்சாலை மட்டுமின்றி மேலும் பல சாலைகளிலும் இதே நிலையே காணப்படுகிறது. கடந்த 17-ஆம் தேதி கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க. இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய சுகாதரத்துறை அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ், ‘‘தேசிய நெடுஞ்சாலைகளில் எந்தவிதமான பராமரிப்பும் செய்யப்படாத நிலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படக்கூடாது. இதை வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் பா.ம.க. சார்பில் வழக்கு தொடரப்படும்’’ என அறிவித்திருந்தார். அதே கருத்தை இப்போது உயர்நீதிமன்ற நீதியரசர்களும் கூறியிருப்பது மட்டுமின்றி, உயர்நீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்கும் தொடர்ந்துள்ளது. மக்கள் முதல் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் வரை அனைவரின் மனநிலையும் இந்த விஷயத்தின் ஒன்றாக இருப்பதை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இனியாவது உணர்ந்து தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்.

பாமக சுட்டி காட்டிய விவகாரத்தில் சாட்டையை சுழற்றிய நீதி மன்றம்

தமிழ்நாட்டில் மொத்தம் 43 சுங்கச்சாவடிகள் உள்ளன. அவை அனைத்திலும் ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆனால், நெடுஞ்சாலைகளை பாரமரிப்பதே இல்லை. உளுந்தூர்ப்பேட்டை – சேலம் இடையிலான 136 கி.மீ நீள நான்குவழிச் சாலை முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்பதுடன், எட்டு இடங்களில் புறவழிச்சாலைகள் முழுமையாக அமைக்கப்படவில்லை. பல கிலோ மீட்டர் தொலைவுக்கு இருவழித்தடமாக உள்ள புறவழிச்சாலையில் ஏராளமாக விபத்துகள் ஏற்படுகின்றன. தமிழகத்திலேயே மிக அதிக விபத்துகள் ஏற்படும் சாலை இது தான். பல ஆண்டுகளாக இந்த சாலை சீரமைக்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, ஒவ்வொரு ஆண்டும் சுங்கக்கட்டணம் மட்டும் தவறாமல் உயர்த்தப்படுகிறது.

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய விதிகளின்படி சுங்கக்கட்டணத்தில் 40% பராமரிப்புக்காக செலவிடப்பட வேண்டும். ஆனால், நெடுஞ்சாலைகள் அமைத்து சுங்கக் கட்டணம் வசூலிக்கும் எந்த நிறுவனமும் அதில் 4% கூட பரமரிப்புக்காக செலவிடவில்லை என்பது தான் உண்மை. இதைவிடக் கொடுமை என்னவென்றால், பல தேசிய நெடுஞ்சாலைகளில், அவற்றை அமைக்க ஆன செலவிடப்பட்ட தொகை முழுமையாக எடுக்கப்பட்ட பிறகும், சுங்கக்கட்டணம் ரத்து செய்யப்படாமல் முழுமையாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இது போன்ற சுரண்டல்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட சுரண்டல் மையங்களாக சுங்கச் சாவடிகள் திகழ்கின்றன. இந்த பூனைக்கு யார் மணி கட்டுவார்கள் என்று ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்திருந்த வேளையில், சென்னை உயர்நீதிமன்றமே மணி கட்ட முன்வந்திருப்பது நிம்மதியும், மகிழ்ச்சியும் அளிக்கிறது. இதை உணர்ந்து சரியாக பராமரிக்கப்படாத சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்க மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். அதேபோல், முதலீடு முழுமையாக எடுக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்பட்டு, பராமரிப்புக்காக மட்டும் 40% கட்டணம் வசூலிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை அரசு செய்யாத பட்சத்தில் உரிய உத்தரவுகளை உயர்நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களை மிரட்டி கற்பழித்த விசிக மோகன்ராஜ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! சேலம் மகளிர் காவல்துறையினர் அதிரடி

0

பெண்களை மிரட்டி கற்பழித்த விசிக மோகன்ராஜ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! சேலம் மகளிர் காவல்துறையினர் அதிரடி

சேலம் மகுடஞ்சாவடியை சேர்ந்தவர் மோகன்ராஜ். கா.கா. பாளையம் விடுதலை சிறுத்தை கட்சியின் ஆட்டோ தொழிற்சங்க தலைவராக இருந்தார். சொந்தமாக இரு ஆட்டோக்களை வைத்துள்ள மோகன்ராஜ், ஒரு ஆட்டோவை கூட்டாளிக்கு வாடகைக்கு கொடுத்து விட்டு ஒரு ஆட்டோவை தானே ஓட்டி வந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் மோகன்ராஜின் ஆட்டோவில் பயணித்த ஒரு பெண் ஒருவர், மோகன்ராஜ் தன்னை பலாத்காரம் செய்து வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு மீண்டும் படுக்கைக்கு அழைத்து மிரட்டி வருவதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மூன்று மாதங்களுக்கு முன்பு புகார் அளித்தார்.

இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரசியல் செல்வாக்குடன் கெத்தாக வலம் வந்த ஆட்டோ மோகன்ராஜை கொத்தாக பிடித்து காவல்துறையினர் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தது.

விசிக பிரமுகர் மோகன்ராஜ்
கல்லூரி மாணவிகளை காதலிப்பது போல நடித்து தனிமையான இடத்துக்கு அழைத்து சென்று ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்தது தெரிந்தது, ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பையும் ஏற்படுத்தியது. மேலும் 30 க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி கற்பழித்ததாகவும் தெரியவந்தது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட செங்கல் சூளை வேலைக்கு சென்ற ஒரு பெண் கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் போலீசில் ரூ. 2000 ரூபாய் கடனுக்காக மோகன்ராஜ் தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாக புகார் கொடுத்தார்.

இதையடுத்து ஆட்டோ டிரைவர் மோகன்ராஜ் மீது பலாத்காரம், கொலை மிரட்டல், அடைத்து வைத்து தாக்குதல், ஆபாச படம் எடுத்து தாக்குதல் உள்பட 5 பிரிவுகளில் வழக்குபதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

இந்நிலையில் கொண்டலாம்பட்டி மகளிர் காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் விசிக பிரமுகர் மோகன்ராஜ் மற்றும் அவரது கூட்டாளி மணிகண்டன் கைது செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்தனர். உடனடியாக சேலம் ஆணையர் செந்தில் குமார் உத்தரவின் அடிப்படையில் சேலம் மத்திய சிறையில் உள்ள இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

ஐஐடி நுழைவுத் தேர்வினை எந்தெந்த மொழிகளில் எழுதலாம்

0

ஐஐடி நுழைவுத் தேர்வினை எந்தெந்த மொழிகளில் எழுதலாம்

நாடு முழுவதும் உள்ள ஐஐடி போன்ற நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ. இ என்று அழைக்கப்படும். (ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாம்) என்ற நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத்தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் இரு முறை நடத்தி வருகிறது.

ஆங்கிலம் இந்தி மற்றும் குஜராத்தி மொழிகளில் மட்டுமே இதுவரை நடத்த பட்டு வரும் இந்த ஜே இ இ முதன்மைத் தேர்வு வரும் 2021 ஆம் ஆண்டு முதல் தமிழ் தெலுங்கு உருது உள்ளிட்ட 11 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஏப்ரலில் நடத்தப்பட உள்ள தேர்வுக்கான வினாத்தாள் அட்டவணை உள்ளிட்டவற்றை தயாரித்து விட்டதால் உடனடியாக மற்ற மாநில மொழிகளில் தேர்வு நடத்த இயலாது என்றும் 2021 ஆம் ஆண்டு 11 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்றும் அவரவர் தாய்மொழியிலேயே ஜே. இ.இ முதன்மைத் தேர்வை எழுதலாம் என்றும் மத்திய மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு ஆங்கில வழிக் கல்வி அல்லாது,அவரவர் தாய் மொழியில் படிக்கும் மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.