Home Blog Page 5932

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக எடுக்கும் அதிரடி வியூகம்

0

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக எடுக்கும் அதிரடி வியூகம்

கடந்த முறை பாஜக தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சியமைத்தது முதல் பல்வேறு மாநிலங்களில் தங்களுடைய ஆட்சியை ஏற்படுத்த அக்கட்சி முயற்சித்து வருகிறது.

இவ்வாறு பாஜக ஆளாத மற்ற மாநிலங்களிலும், அக்கட்சி ஆட்சி அமைக்கும் முயற்சியில், பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷாவும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில், கர்நாடகாவில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து முதலமைச்சராக இருந்த குமாரசாமியின் அரசு கலைக்கப்பட்டு, அங்கு, பாஜக தலைமையிலான அரசு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில்  தமிழகத்திலும் முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மறைவிற்கு பிறகு ஏற்பட்டுள்ள இந்த சாதகமான சூழ்நிலையில் பாஜக தங்களை தமிழகத்தில் வளர்த்து கொள்ள திட்டமிட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு தான் கடந்த மக்களவை தேர்தலில் கூட அதிமுகவுடன் கூட்டணி அமைத்தே ஆக வேண்டும் என்று முடிவெடுத்து போட்டியிட்டது. நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள் தேசிய அளவில் பாஜகவுக்கு சாதகமாக அமைந்தாலும் தமிழகத்தில் படு தோல்வியை தழுவியது. இதற்கு பாஜக மீதான தமிழக மக்களின் எதிர்ப்பு தான் என்று காரணமாக கூறப்பட்டாலும் அது எந்த அளவுக்கு உண்மை என்பதை கணிக்க முடியவில்லை.

அதே நேரத்தில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணிக்கு எதிராக திமுக எடுத்த பிரச்சார யுக்தி தமிழக மக்களிடம் நன்றாக சென்றடைந்துள்ளது. மேலும் திமுக கூட்டணியின் தேர்தல் வாக்குறுதியில அளிக்கப்பட்ட நகைக்கடனை தள்ளுபடி செய்வது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது கடைசியாக நடந்து முடிந்த வேலூர் தேர்தல் முடிவே இதனை உண்மை என்று உறுதி செய்யும்.

மக்களவை தேர்தலில் திமுக பெற்ற வெற்றி அக்கட்சிக்கு ஓரளவு நம்பிக்கையை கொடுத்தாலும், இந்த வேலூர் தேர்தல் முடிவு அவர்களுக்கு மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாஜக இதனை சாதகமாக எடுத்து கொண்டு அடுத்த சட்டசபை தேர்தலுக்கு, பலமான கூட்டணி அமைக்கவும், ரஜினியை, தமிழக, பா.ஜ., தலைவராகவும், முதல்வர் வேட்பாளராகவும் அறிவிப்பதற்கான காய் நகர்த்தும் பணியையும் செய்து வருகிறது. இதற்கான ஆரம்பகட்ட பணியை அமித் ஷா துவக்கி உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் சென்னையில் நடந்த, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு எழுதிய நூல் வெளியீட்டு விழாவில், ரஜினி கலந்து கொண்டார். அதன் பின்னர் அவரிடம் பேசிய அமித் ஷா பாஜகவில் ரஜினி மக்கள் மன்றத்தை இணைத்து விடுங்கள். அதற்காக உங்களை, தமிழக பாஜக தலைவராகவும், முதலமைச்சர் வேட்பாளராகவும் அறிவிக்க தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக எடுக்கும் அதிரடி வியூகம்

மேலும் ரஜினியிடம் பேசிய அமித்ஷா தற்போது இருக்கும் சூழ்நிலையில் புதிதாக கட்சி தொடங்குவதற்கு பதில் பாஜகவில் இணைந்து விடலாம் என தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

உலக புகைப்பட தினம்: ஒரு நொடியில் எடுக்கும் அளவிற்கு வளர்ந்த புடைப்பட துறை வரலாறு

0

உலக புகைப்பட தினம்: ஒரு நொடியில் எடுக்கும் அளவிற்கு வளர்ந்த புடைப்பட துறை வரலாறு

அனைவரையும் ஈர்க்கக் கூடிய ஆற்றலைப் பெற்றது தான் புகைப்பட கலை. அந்த வகையில் அதன் படைப்பாளிகளை போற்றும் வகையில் வருடம் தோறும் ஆகஸ்ட் 19 ஆம் தேதியை, “உலக புகைப்பட தினமாக” கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த வருடம் புகைப்படத்திற்கு 175 வது ஆண்டு. புகைப்படம் என்பது வெறும் ஒரு படம் அல்ல. அது படைப்பாளர்களின் திறமையை வெளிப்படுத்த உதவும் ஒரு கலை. பல கருத்துக்களை ஒரே படத்தில் வெளிப்படுத்தும் இந்த புகைப்படத்துக்கு பெரிய வலிமை உள்ளது. மேலும் உலகளவில் இந்த புகைப்படம், பல வரலாற்று மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த புகைப்படம் நாம் வாழ்க்கையோடு ஒன்றிணைந்தது. மேலும் அனைத்து இடங்களிலும் இந்த புகைப்படத்தின் பயன்பாடு இருக்கிறது.

வரலாற்று நிகழ்வுகள், சமூக பிரச்னைகள், சுப, துக்க நிகழ்ச்சிகள், அரசியல் மாநாடு, பொதுக்கூட்டம் என வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நம் கண் முன் கொண்டு வருவது புகைப்படம். ஒரு சந்ததியினரின் வாழ்க்கை முறையை, எதிர்காலத்தில் பின்வரும் தலை முறையினர் அறிந்து கொள்ள உதவுவதும் புகைப்படம் தான்.

19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் லூகிஸ் டாகுரே என்பவர் “டாகுரியோடைப்’ எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். 1839 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ், இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆகஸ்டு 19 இல் பிரான்ஸ் அரசு “டாகுரியோடைப்’ செயல்பாடுகளை “ப்ரீ டூ தி வேர்ல்டு’ என்று உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில், இந்த ஆகஸ்டு 19 ஆம் தேதி உலக புகைப்பட தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த புகைப்பட கலையின் சிறப்புகளில் சில:

மனிதர்கள் ஆயிரம் வார்த்தைகள் பயன்படுத்தி சொல்வதை ஒரு புகைப்படம் சுலபமாக உணர்த்தி விடும். மக்களிடம் எளிதில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் இந்த புகைப்படத்துக்கு மட்டுமே உண்டு. எனவே தான் புகைப்பட தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது.

இவ்வளவு சிறப்போடு கூடிய ஒரு நல்ல புகைப்படத்திற்காக மணிக்கணக்கில் ஏன் நாள் கணக்கில் கூட புகைப்படக்கலைஞர்கள் காத்திருக்கின்றனர்.

உலகிலேயே
சிறந்த நிழல் படம்…
காலம் தின்ற
கண்ணாடிக்குள் கரையான் அரித்த
அட்டையில்
ஒட்டியிருக்கும்
என் அம்மாவின்
சிரித்த முகம்! என்று புகைப்பட தினத்தில் கவிதை எழுதியுள்ளார் ஒரு கவிஞர்.

கேமரா அப்ஸ்குரா என்ற கருவி மூலம் 13ம் நூற்றாண்டில் தனது பயணத்தை தொடங்கிய புகைப்படக்கலை, தற்போது பல பரிமாணங்களையும் கடந்து நிற்கிறது. டிஜிட்டல் கேமிரா, ஸ்மார்ட்போன் போன்றவற்றை பயன்படுத்தி யார் வேண்டுமெனாலும் எளிதாக புகைப்படத்தை எடுக்கலாம்.

புகைப்படக் கலை வரலாறு

புகைப்படம் எடுப்பது என்பது ஒரு தனிக்கலை. ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கும் சமம்… ஒரு சந்ததியினரின் வாழ்க்கை முறையை, வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ள புகைப்படங்கள் உதவுகின்றன.

போட்டோகிராபி

1839 ஆம் ஆண்டு சர் ஜான் ஹெர்செல் என்பவர் கண்ணாடியை பயன்படுத்தி நெகட்டிவ்களை எடுக்கும் முறையை கண்டுபிடித்தார். அவர்தான், இக்கலைக்கு போட்டோகிராபி என்று பெயர் வைத்தார்.

ஒளியின் எழுத்து

போட்டோகிராபி என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து வந்த சொல்லாகும். அதன் அர்த்தம் ஒளியின் எழுத்து என்பதாகும். அதே ஆண்டு, லூயிஸ் டாகுரே என்பவர், சில்வர் காப்பர் பிளேட்டில் பிம்பங்கள் விழும் வகையிலான புகைப்படம் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்.

பிலிம் புகைப்படங்கள்

1888 ஆம் ஆண்டு ஜார்ஜ் ஈஸ்ட்மேன் முதல் முறையாக பேப்பர் பிலிம்களை பயன்படுத்தி பாக்ஸ் கேமராவில் புகைப்படம் எடுக்கும் முறையை கண்டறிந்தார்.

கேமரா அறிமுகம்

1900 இல் பாக்ஸ் பிரவுனி என்ற வகை கேமராக்களை கோடாக் அறிமுகப்படுத்தினார். 35 மில்லி மீட்டர் ஸ்டில் கேமராக்களை 1913 இல் ஆஸ்கர் பர்னாக் வடிவ மைத்தார். இது புகைப்படத்துறையையே புரட்டிப்போட்டது.

டிஜிட்டல் கேமராக்கள்

முதல் டிஜிட்டல் கேமராவை சோனி நிறுவனம் 1981 ஆம் ஆண்டு தயாரித்தது. அதன் பின்பு, தற்போது வரை டிஜிட்டல் கேமராக்களில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

அதிர வைத்த ஐலான்

ஆயிரம் வார்த்தைகள் சொல்லததை ஐலான் சிறுவனின் புகைப்படம் உலகிற்கு உணர்த்தியது. சிரியாவைச் சேர்ந்த 3 வயது சிறுவன் ஐலான், தனது குடும்பத்தினருடன் படகில் துருக்கிக்கு அகதியாக வந்தபோது, படகு கடலில் கவிழ்ந்ததில் ஐலான் பரிதாபமாக உயிரிழந்தான். அவனது உடல் செப்டம்பர் 2ம் தேதி கடற்கரையில் சடலமாக ஒதுங்கிய காட்சியைப் பார்த்து உலகமே அதிர்ந்து போனது.

எளிதான புகைப்படக்கலை

முன்பெல்லாம் புகைப்படம் எடுப்பது மிகவும் அரிதான செயலாக இருந்தது. ஆனால், தற்போது தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் புகைப்படம் எடுப்பது எளிதாகி விட்டது. அனைவரும் தற்போது புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். குழந்தைகள் கூட புகைப்படம் எடுக்கின்றன.
புகைப்படம்: மதன்

செல்போன் செல்ஃபிக்கள்

கேமராக்களில் மற்றவர்கள் நம்மை புகைப்படம் எடுத்தது போய் இப்போது செல்ஃபி எடுப்பது அதிகரித்து வருகிறது. என்னதான் செல்போனில் செல்ஃபி எடுத்தாலும் கறுப்பு வெள்ளையில் அட்டென்சன் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை யாராலும் மறக்க முடியாது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

0

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கடந்த காலங்களில் ஏற்பட்ட பல சோதனைகளுக்கு பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தற்போது அரசியலில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தேர்தல் புறக்கணிப்பு, மக்கள் நலக் கூட்டணி என அரசியலில் ஒரு சுற்று பயணமே செய்து விட்டு தற்போது நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தான் தீவிரமாக எதிர்த்த திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தார். தற்போது, இந்த கூட்டணியின் ஒப்பந்தத்தின்படி 25 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவை எம்.பி.யாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர்  மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு நியூட்ரினோ, காஷ்மீர் விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசி பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்த்தவர். மேலும், அரசியலில் தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு கொண்டு இருப்பதாலும், மேலும் நிறைய வழக்குகளில் ஆஜராகி வாதிடுவதாலும், பொது விழாக்களில் கலந்து கொள்வதாலும் இவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், திடீரென்ற இந்த உடல்நலக் குறைவால் மருத்துவ பரிசோதனைக்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் 21, 20, 21, 22 ஆகிய தேதிகளில் தேனி மாவட்டத்தில் வைகோ மேற்கொள்ளவிருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மதிமுகவின் அறிக்கையில் தெரிவித்தள்ளது. 

மேலும், மருத்துவரின் ஆலோசனை படி வைகோ ஓய்வு எடுக்க இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அரசியலில் அடுத்த அத்தியாயத்தை தொடங்கும் வகையில் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருந்த வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் மதிமுக தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

திமுக தலைவர் ஸ்டாலின் குடும்ப பிரச்சனை காரணமாக கட்சியில் மாற்றமா? அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

0

திமுக தலைவர் ஸ்டாலின் குடும்ப பிரச்சனை காரணமாக கட்சியில் மாற்றமா? அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

சமீபத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது தான் சரி என்று பேசிய திமுக எம்.பி கனிமொழியின் கருத்தை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடி, காயல்பட்டினத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமை தொடக்கி வைப்பதற்காகவும், மேலும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும் திமுகவின் அத்தொகுதியின் எம்.பி கனிமொழி தூத்துக்குடிக்கு சென்றார்.

தூத்துக்குடிக்கு சென்ற திமுகவின் மக்களவைக் குழு துணைத் தலைவரான கனிமொழி, அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, “அதிமுக ஆட்சியை சரி செய்வதற்கான முயற்சிகள் எடுத்தும் பலனில்லை. எந்தக் காலத்திலும் இது செயல்படக் கூடிய ஆட்சியாக இருக்காது. தப்பித் தவறி நல்ல விஷயங்கள் நடந்தால் கூட, அது தனக்கு தெரியாமல் நடந்துவிட்டது என்று அமைச்சர் கூறக்கூடிய அளவிற்கு மோசமாக உள்ளது. ஆகவே ஆட்சி மாற்றம் மட்டும் தான் இதற்கு விடையாக இருக்கும்” என்று தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து அதிமுகவை சேர்ந்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது இதற்கு பதிலளித்த அவர், “ஆட்சி மாற்றம் வரும்போது தான் அனைத்திற்கும் தீர்வு வரும் என்று கனிமொழி கூறியுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் சொல்லி சொல்லி ஓய்ந்து போய், தற்போது அவருடைய சகோதரி கனிமொழி சொல்ல ஆரம்பித்துவிட்டார். தற்போது அவர்களுடைய குடும்பத்திற்குள்ளேயே பிரச்சினை நடந்து வருவதாக தகவல் வந்திருக்கிறது.

நடந்து முடிந்த வேலூர் தேர்தலின் பிரச்சாரத்திற்கு ஏன் தங்களை அழைக்கவில்லை என்று கனிமொழி உள்ளிட்டோர் பிரச்சினை செய்வதாகவும் சொல்லப்படுகிறது. இந்த பிரச்சனை பெரிதாக வெடிக்கும் சூழ்நிலை தான் தற்போது உள்ளது. கனிமொழி சொல்லும் மாற்றம் என்பது திமுக கட்சியில் வரப்போகும் மாற்றத்தைத் தான் சொல்கிறார். தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சியில் எந்த மாற்றமும் வரப் போவதில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதுக்கு பயந்து பதற்றத்தில் விளக்கமளித்த திமுக பிரமுகர்! தேசிய அளவில் அசிங்கபட்ட திமுக

0

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் காஷ்மீர்  இந்தியாவிற்கு  சொந்தமான  பகுதி அல்ல என்றும் இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான எந்த கருத்தையும் சொல்லவில்லை.என்றும் திமுக வழக்கறிஞர் அ.சரவணன் விளக்கமளித்துள்ளார்.

தேசத்திற்கு எதிராக பேசியதாக கூறப்பட்ட இந்த பேச்சு மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த பிரிவினைவாத பேச்சுக்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது கூட செய்யப்படலாம் என்ற பேச்சும் எழுந்தது. இந்த நிலையில் தான் திமுக வழக்கறிஞர் சரவணன் பதறிப்போய் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

கடந்த 12.08.2019 ரிபப்ளிக் டீவியில் காஷ்மீர் விவகாரம் பற்றிய விவாதத்தில், திமுகவின் சார்பாக கலந்துக்கொண்டேன். அந்த விவாதத்தின் பொழுது, திமுகவின் நிலைப்பாடு பற்றி விளக்கிய பின், காஷ்மீர் பற்றிய வரலாற்றை பேச முற்படுகையில், “Kashmir was never an integral part of India” என்று சொன்னவுடன், நெறியாளர் அர்னாப் கோஸ்வாமி மேற்கொண்டு பேச விடாமல் கடுமையான வார்த்தைகளால் தாக்க ஆரம்பித்தார். மற்ற பங்கேற்பாளர்களும் அவருடன் சேர்ந்து கடும் சொற்களை பயன்படுத்த ஆரம்பித்தனர். 

அர்னாப் கோஸ்வாமி விளக்கம் சொல்ல வேண்டுமென்று சொல்லிவிட்டு, விளக்கம் கொடுக்க வாய்ப்பளிக்காமல், நான் பேசியதை திரித்து, “Saravanan How can you say Kashmir is not a part of India” நான் “I said Was” என்று மறுத்து பதிலளித்தேன். இந்தியா சுதந்திரம் அடையும்பொழுது காஷ்மீர் இந்தியாவுடன் இல்லை. அதன் பின்னரே ராஜா ஹரிசிங், இந்தியாவுடன் சில நிபந்தனைகளோடு இணைந்துக்கொள்ள ஒரு ஒப்பந்தம் போடுகிறார். அதனை காஷ்மீர அரசியல் நிர்ணய சபை ஒத்துக்கொண்ட பின்னர் 1956ஆம் ஆண்டு, காஷ்மீர அரசியல்  சட்டத்தின் 3ஆவது சரத்தின் படி “3. State of Jammu and Kashmir is and shall be an integral part of the Union of India.”.   காஷ்மீரத்து பிரச்சனையை வரலாறு அறியாமல் பேசமுடியாது. இந்த வரலாற்று நிகழ்வை குறிக்கும் விதமாகத்தான் “Kashmir was never an integral part of India” என்று சொன்னேன். அதன் பின்னர் அந்த விவாதத்தில் மேற்சொன்ன கருத்தை வெளிப்படுத்த வாய்ப்பளிக்காமல், தொடர்ந்து கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியதால், அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினேன். சுமார் 16 நிமிடங்கள் அந்த விவாதத்தில் பங்கு பெற்றேன். 

சமூக வலைதளங்களில் பாஜகவினர், பாதியில் வெளியேறிய திமுக வக்கீல் சரவணன் என போட்டோ ஷாப் செய்து பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நான் ஏதோ காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமான பகுதி அல்ல என சொன்னது போல பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது பாஜக. முழு வீடியோவையும் வெளியிடாமல், வெட்டியும், ஒட்டியும் வழக்கம்போல் இறங்கியுள்ளனர் பொய் புரட்டு பா.ஜ.க.வினர். அந்த விவாதத்தில் “Kashmir was never an integral part of India” என்று சொன்ன அடுத்த நொடி அர்னாப் கோஸ்வாமி, என்னை பேசவிடாமல்,

மற்றவர்களோடு சேர்ந்து கூச்சல் இடுகிறார். பேசியதை திரித்து “How can you say Kashmir is not an integral part of India” என்று “was” என்று சொன்னதை “is” என திரிக்கிறார். விளக்கம் சொல்ல விடாமல் மற்ற பாஜகவின் பங்கேற்பாளர்கள்,  கூச்சல் போட்டு பேச விடாமல், தொடர்ந்து கடும் வார்தைகளால் தாக்கினர்.

விளக்கம் சொன்ன பிறகும் மீண்டும் அதே கேள்வியை திரித்து கேட்டதால் “உங்களின் பலியாடு நான் அல்ல” என்று வெளியேறினேன். 

DMK Advocate Saravanan Clarifies his statement about Kashmir issue-News 4 Tamil Online Tamil News Channel Live Tamil News
DMK Advocate Saravanan Clarifies his statement about Kashmir issue-News 4 Tamil Online Tamil News Channel Live Tamil News

மு.க.ஸ்டாலின் அவர்கள், “தேசபக்தி பாடத்தை எங்களுக்கு யாரும் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்திய-சீனா போரின்போதும், இந்திய-பாகிஸ்தான் போரின்போதும், கார்க்கில் போரின் போதும் நாங்கள் தாய் நாட்டின் பக்கம் நின்று, இந்தியாவிலேயே முதன் மாநிலமாக நிதிஉதவி செய்திருக்கிறோம்” என்று உரையாற்றியிருக்கிறார்.

கழகத் தொண்டராகிய நானும், இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக எந்தவொரு கருத்தையும் அந்நிகழ்ச்சியில் பதிவு செய்யவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதியாக தெரிவிக்க விரும்புகிறேன் என்று சரவணன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

ஓசியில் டீ கொடுக்க மறுத்த கடைக்காரரை வெட்டி கொலை செய்த மர்ம கும்பல்

0

ஓசியில் டீ கொடுக்க மறுத்த கடைக்காரரை வெட்டி கொலை செய்த மர்ம கும்பல்

மதுரையில் ஓசியில் டீ கொடுக்க மறுப்பு தெரிவித்த டீ கடை உரிமையாளரை 6 பேர் கொண்ட ஒரு மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மதுரை கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த மாரிமுத்து, அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் டீ கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது கடைக்கு வந்த 6 பேர் கொண்ட போதையில் உள்ள மர்ம கும்பல் ஒன்று, மாரிமுத்துவிடம், இலவசமாக டீ கேட்டுள்ளனர். இதே கும்பல், ஏற்கனவே பல முறை மாரிமுத்துவிடம் இலவசமாக டீ கேட்டு தொந்தரவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

தொடர்ந்து இவ்வாறு ஓசி டீ கேட்டு தொந்தரவு செய்ததால் ஆத்திரமடைந்த மாரிமுத்து அவர்களுக்கு இலவச டீ கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த குடிகார மர்ம கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த, பட்டா கத்தி, அரிவாள் உள்ளிட்ட கொடிய ஆயுதங்களால், கடை உரிமையாளரான மாரிமுத்துவை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி விட்டி தப்ப முயர்சித்துள்ளனர்.

தம்பி செல்ல முயன்ற இந்த கும்பலில் ஒருவர் மட்டும் பொதுமக்களிடம் சிக்கியுள்ளார். அவரை பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். 

போலீசார் நடத்திய விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த பொட்டு பிரசாந்த் என்பது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள மற்ற ஐந்து பேரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாரிமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த படுகொலை தொடர்பான் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

தமிழக முதல்வர் போலி விளம்பரம் செய்வதாக திமுக எம்.பி. ஆ. ராசா குற்றசாட்டு

0

தமிழக முதல்வர் போலி விளம்பரம் செய்வதாக திமுக எம்.பி. ஆ. ராசா குற்றசாட்டு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கர்நாடகாவிலிருந்து மேட்டூர் அணைக்கு தானே தண்ணீரைக் கொண்டு வந்ததுபோல, போலி விளம்பரம் செய்து நீர் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என்று திமுக எம்.பி ஆ.ராசா குற்றம் சாற்றியுள்ளார். மேலும் நீலகிரியில் மழையால் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை நேரடியாகப் பார்வையிடாமல்  அந்த தொகுதி மக்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொச்சைப்படுத்தி உள்ளார் என்றும் நீலகிரி தொகுதியின் திமுக எம்.பி. ஆ. ராசா விமர்சித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக நீலகிரி பகுதியில் பெய்த கனமழையால் அப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. மேலும் அங்கு ஏராளமான மண் சரிவும் நிலச் சரிவும் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அத்தொகுதியில் திமுக எம்.பி. ஆ. ராசா ஆய்வில் ஈடுபட்டார். அதுதொடர்பாக அறிக்கை ஒன்றை தயாரித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் ஆ.ராசா வழங்கினார். பின்னர் இது குறித்து ஆ. ராசா செய்தியாளர்களிடம் பேசியதாவது.

தமிழக முதல்வர் போலி விளம்பரம் செய்வதாக திமுக எம்.பி. ஆ. ராசா குற்றசாட்டு

நீலகிரியில் மிகப் பெரிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தும், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களையும் இறந்தவர்கள் குடும்பத்துக்கு  நிவாரண நிதியும் வழங்கினார்.

கண் துடைப்புக்காக மட்டுமே ஓ.பி.எஸ் வந்து சென்றுள்ளார். மேலும் சேதங்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி முடிவடையாமலே 200 கோடி ரூபாய் நிவாரணப் பணிகளுக்குத் தேவை என துணை முதல்வர் முடிவுக்கு வந்தது கோமாளித்தனமான செயல் என்றும் விமர்சித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலினை முதல்வர் விமர்சித்தது பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் செயல். முதல்வராகவே இருக்க தகுதி அற்றவர் என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. கேரளாவிலும் கர்நாடகவிலும் மழை வெள்ள சேதங்களை மாநில முதல்வர்கள் நேரில் சென்று ஆய்வு செய்கிறார்கள்.

தமிழக முதல்வரோ மேட்டூருக்கு தானே தண்ணீரைக் கொண்டு வந்ததுபோல, போலி விளம்பரம் செய்து நீர் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். நீலகிரியில் ஏற்பட்ட சேதங்களை நேரடியாகப் பார்வையிடாமல்  மக்களைக் கொச்சைப்படுத்தி உள்ளார் எடப்பாடி பழனிசாமி.” என்றும் திமுக எம்.பி. ஆ. ராசா குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு இந்த 3 விஷயங்கள் தான் தெரியும்! மரணபங்கம் செய்த மருத்துவர்

0

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு இந்த 3 விஷயங்கள் தான் தெரியும்! மரணபங்கம் செய்த மருத்துவர்

நமது எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு 3 விஷயங்கள் தான் தெரியும்… பேரவையில் சட்டம் இயற்ற வேண்டும், தீர்மானம் இயற்ற வேண்டும், எடப்பாடி அரசு பதவி விலக வேண்டும் ஆகிய மூன்றும் தான் அந்த விஷயங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கலாய்த்திருக்கிறார்

திமுக தலைவரும்,தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நீட் விவகாரம் சார்பாக வெளியிட்ட அறிக்கையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கரும் நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்றும், இனியும் தமிழக மாணவர்களுக்கு துரோகம் செய்யாமல் சட்டப்பேரவையைக் கூட்டி சட்டம் இயற்ற வேண்டும் என்றும், தமிழக எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்துக்கொண்டு சென்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் வெளியிட்ட அந்த அறிக்கையில் இந்த இருவரையும் கடுமையாகத் தாக்கி கருத்து தெரிவித்திருந்தார் மு.க. ஸ்டாலின்.இந்நிலையில் மு.க. ஸ்டாலினின் கருத்துக்குப் பதில் அளிக்கும் வகையில் பாமக நிறுவனர் நிறுவனர் ராமதாஸ் 3 ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அந்த ட்விட்டர் பதிவில், “நீட் விவகாரத்தில் கடித நாடகம் கூடாது. மீண்டும் சட்டம் இயற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்… மீண்டும் சட்டம் இயற்றினாலும் நீட் ரத்து செய்யப்படாது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் வலுவான வாதங்களை முன்வைத்து வென்றால்தான் நீட் ரத்தாகும்.

தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகளில் நமது எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரிந்தவை 3 விஷயங்கள்தான்.

  1. பேரவையில் சட்டம் இயற்ற வேண்டும்,
  2. தீர்மானம் இயற்ற வேண்டும்,
  3. எடப்பாடி அரசு பதவி விலக வேண்டும்!

உலகில் எந்த செயலும் தானாக நடக்காது. ஒவ்வொரு செயலும் நடக்க வைக்கப்படுகின்றன – ஜான் எஃப் கென்னடி என்று பதிவிட்டுள்ள ராமதாஸ், அதை ஆங்கிலத்திலும் பதிவிட்டுள்ளார். இவ்வாறு இந்த ட்விட்டர் பதிவின் மூலம் திமுக தலைவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவராக உள்ள மு.க. ஸ்டாலினுக்கு கிண்டலாக பதில் அளித்துள்ளார் மருத்துவர் ராமதாஸ்.

எச்.ராஜாவின் எச்சரிக்கைக்கு பணிந்த பள்ளிக் கல்வித்துறை! உச்சகட்ட அவமானத்தில் கனிமொழி

0

எச்.ராஜாவின் எச்சரிக்கைக்கு பணிந்த பள்ளிக் கல்வித்துறை! உச்சகட்ட அவமானத்தில் கனிமொழி

தமிழக பள்ளிகளில் சாதி அடையாளங்களை குறிக்கும் வகையில் பள்ளி மாணவர்கள் கயிறு கட்ட தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் பாஜகவின் எச்.ராஜாவிற்கு ஆதரவாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தம்முடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் சாதி மற்றும் மத அடையாளங்களை குறிக்கும் வகையில் தங்கள் கைகளில் கயிறுகளை கட்டி வருவது குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன், தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கடந்த 12ஆம் தேதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

இதில், “சாதிகளை குறிக்கும் வகையில் வண்ணக் கயிறுகளை மாணவர்கள் கட்டிவருவதால் பள்ளிகளில் பிரிவினைகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தலைமைக் கல்வி அலுவலர் அவ்வாறு இருக்கும் பள்ளிகளைக் கண்டறிந்து அந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். மேலும் இவ்வாறு பாகுபாடுகள் காட்டி பிரிவினைகளைத் தூண்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். தமிழக பள்ளிக் கல்வித்துறையின் இந்த நடவடிக்கைக்கு திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி வரவேற்பு தெரிவித்திருந்தார்.

ஆனால், தமிழக பள்ளிக் கல்வித்துறையின் இந்த சுற்றறிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா, ‘கயிறு கட்டுவது, திலகமிடுவதை தடை செய்வது இந்து விரோத செயல். தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட இது தொடர்பான சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் இதனை எதிர்த்து கயிறு கட்டும் போராட்டம் நடத்தப்படும்’ என்று எச்சரித்தார். இந்த சூழலில் கயிறு கட்டும் விவகாரத்தில் பழைய நிலையே தொடரும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “சாதி அல்லது மத அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்கள் செயல்பட்டால், பள்ளிகளில் அதனை சரிபார்க்க வேண்டும் என்று ஆதிதிராவிட நலத் துறை சார்பில் அரசாணை பள்ளிக் கல்வி இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அது அனுப்பப்பட வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அது எங்களின் கவனத்துக்கு வரவில்லை” என்று விளக்கம் அளித்தார்.

மேலும், “தமிழகப் பள்ளிகளில் ஏற்கனவே என்னென்ன நடைமுறைகள் இருக்கிறதோ அதனை பின்பற்ற வேண்டும் என்பது தான் எங்களின் கொள்கை. பள்ளிக் கல்வித் துறையில் தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகள் தான் என்றைக்கும் நடைபெற வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார். அதாவது, அமைச்சரின் இந்த அறிவிப்பானது பாஜகவின் எச்.ராஜாவின் கோரிக்கையை ஏற்கும் வகையில், மாணவர்கள் கயிறு கட்டிக்கொண்டு பள்ளிகளுக்கு வரலாம் என்பதைத் தான் உறுதிபடுத்துகிறது.

இது பள்ளி கல்வித்துறையின் நடவடிக்கையை ஆதரித்த திமுக எம்பி.கனிமொழிக்கு உச்ச கட்ட அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

மூவர்ணக்கொடி பறக்கும் முதல் சுதந்திர தின விழா!

0

முழு இந்தியாவும் மூவர்ணக்கொடி பறக்கும் முதல் சுதந்திர தின விழா!

டெல்லி: டெல்லி செங்கோட்டையில் 73 வது சுதந்திர தின விழா முப்படையினர் மரியாதையுடன் நடைபெற்று வருகிறது.

பாரத நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்னும் சற்று நேரத்தில் மூவர்ணக்கொடி யான தேசிய கொடியை செங்கோட்டையில் ஏற்றி வைத்து மரியாதை செலுத்த இருக்கிறார்.

இன்றைய தினம் அனைத்து மாநிலங்களிலும் சுதந்திர தினம் ஆளுநர்கள் முந்நிலையில் முதலமைச்சர்கள் குடியேற்ற பல்வேறு அணிவகுப்புகளுக்குப்பின் சலுகைகள், பட்டங்கள் வழங்கி சிறப்பிக்க உள்ளனர்.

இதே போன்று பள்ளி ,கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கியும், தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தியும் வருகின்றனர்.

நாட்டில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஜம்மு & காஷ்மீர் சரத்து 370 பின் வாங்கப்பட்ட நிலையில்
இந்தியாவின் மூவர்ணக்கொடி பறக்கும் முதல் சுதந்திர தின விழா மிகச்சிறப்பான விசயமாகும்.

இந்நந்நாளில்
இந்திய நாட்டின் மக்களுக்கு
சுதந்திர தின வாழ்த்துக்கள்

தெரிவிப்பதில் #நியூஸ்4தமிழ் பெருமை கொள்கிறோம்.