சிலை கடத்தல் பிரிவிற்கு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. பொன் மாணிக்கவேல் பொறுப்பு ஏற்ற பின் பல இடங்களில் இருந்து கடத்தப் பட்ட சிலைகளை கண்டு பிடித்துள்ளார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சோழர் கால சிலைகளையும் கண்டுபிடித்துள்ளார். இதை தொடர்ந்து டி.எஸ்.பி காதர் பாஷா விற்கு எதிராக பொன் மாணிக்கவேல் வழக்கு பதிவு செய்திருந்தார்.
இதை தொடர்ந்து தமிழகத்தில் நடைபெறும் சிலை கடத்தல் வழக்குகளில் இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்பிருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐகோர்ட்டில், பழவலூர் சிலை கடத்தல் வழக்கில் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்தார், சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் என்றும், எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரியும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி. காதர் பாஷா மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் நேற்று (ஜூலை 24) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் தங்களையும் இணைக்ககோரி பொன்.
மாணிக்கவேல் மற்றும் யானை ராஜேந்திரன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். பொன் மாணிக்கவேலின் இணைப்பு மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்ட நீதிபதி, யானை ராஜேந்திரன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
பின்னர் நடைபெற்ற வழக்கு விசாரணையில், சிலை கடத்தல் சம்பவங்களில் இரு அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற்றதாகவும், பொன்.மாணிக்கவேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆதாரங்களுடன் பதில்மனு தாக்கல் செய்ய பொன். மாணிக்கவேல் தரப்பிற்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தார். சிலை கடத்தல் வழக்குகளில், அமைச்சர்களுக்கு தொடர்பு என்ற செய்தி, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை அடுத்து அந்த இரண்டு அமைச்சர்கள் யார் என்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் என கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று போக போகத்தான் தெரியும்.
தேசிய அளவில் முதலிடம் பிடித்து டிரெண்டிங் ஆன மருத்துவர் ராமதாஸின் முத்து விழா #தமிழினப்போராளி80
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் 80-வது பிறந்த நாள் விழா முத்து விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. ராமதாஸுக்கு வாழ்த்து தெரிவிக்கும் #தமிழினப்போராளி80 என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழகம் மற்றும் இந்திய மக்களால் சமூக நீதி காவலர் என்ற பெருமையுடன் அழைக்கப்படும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், 1980 களில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு கோரும் போராட்டத்தை நடத்தினார். தமிழகத்தையே அதிரவைத்த இந்த இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் நடத்தபட்ட துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் பலியாகினர்.
இதனையடுத்து முதல்வராக கருணாநிதி பதவி வகித்த போது, வன்னியர் உட்பட 108 சாதியினரையும் இணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் MBC என்கிற பிரிவில் அனைவரையும் உள்ளடக்கி 20% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் மேலும் ஈழத் தமிழர் பிரச்சனை,மது விலக்கு,புகையிலை ஒழிப்பு,பெண்களுக்கு எதிரான கொடுமைகள், தமிழர் வாழ்வுரிமை போராட்டம் என பல போராட்டங்களை முன்னெடுத்தவர் மருத்துவர் ராமதாஸ்.
Dr Ramadoss Birthday Celebration-News4 Tamil Online Tamil News
1991-ல் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது தமிழகத்தில் தமிழ்த் தேசியக் குரல்கள் கொடூரமாக ஒடுக்கப்பட்டன. அப்போது துணிச்சலாக தமிழகத்துக்கு தன்னுரிமை கோரி மாநாடு நடத்தினார் மருத்துவர் ராமதாஸ். இவ்வளவு சிறப்பு வாய்ந்த அரசியல் தலைவரான இவர் தான் வாக்குறுதி அளித்தப்படி இன்று வரை சட்டமன்றத்தில் காலெடுத்து வைக்கவில்லை. இவ்வளவு பெருமைக்கும் உரிய அவரது 80-வது பிறந்த நாளை முத்துவிழாவாக பாமகவினர் கொண்டாடி வருகின்றனர்.
இந்த விழாவை முன்னிட்டு பமாகவினர் ட்விட்டரில் #தமிழினப்போராளி80 என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி மருத்துவரின் சாதனைகளையும் பெருமைகளையும் பதிவிட்டு வருகின்றனர். இது தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது. மேலும் இவ்வாறு பதிவிட்ட பதிவுகள் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த தலைப்பில் இடம்பெற்ற சில ட்விட்டர் பதிவுகள்.
இயற்கை மீது தீரான காதல் கொண்ட மருத்துவர் ஐயா சரஸ்வதி சட்டகல்லூரி , தைலாபுரம் தோட்டம் ஆகிய இடங்களில் பல்லாயிரக்கணக்கான மரங்களை வளர்த்து வருகிறார் ! #தமிழினப்போராளி80pic.twitter.com/OSkIpF3ycu
— Tamilvanan Govindan (@villagemedia16) July 25, 2019
தேர்தல் வெற்றியை விட, சமுதாய மாற்றம் வேண்டும் என்றேதான் இந்த போராளி @drramadoss அனைத்து சமுதாயத்திற்கும் இட ஒதுக்கீட்டை போராடி பெற்றுத்தந்து தமிழகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய பின்னரே அரசியல் இயக்கம் துவக்கினார் அதில் தலித்தை பொது செயலராக்கினார்.#தமிழினப்போராளி80pic.twitter.com/W9Bt3iiQ45
தாழ்த்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க மறுத்த குடியரசுத்தலைவர் வெங்கட்ராமனுக்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை செய்துகாட்டி தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்த இளம் பெரியார் மருத்துவர் அய்யா#தமிழினப்போராளி80pic.twitter.com/vKIuYHYSrr
— Balu Kaliyaperumal (@PMKAdvocateBalu) July 25, 2019
மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பெருமிதம்
பாமக இளைஞர் அணி செயலாளரும், முன்னாள் மத்திய சுகாதார துறை அமைச்சர் மற்றும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினரான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளதாவது:
மருத்துவராக, விவசாயியாக, போராளியாக, தலைவராக, ஆசிரியராக, வழிக்காட்டியாக, மனஉறுதி மிக்க வீரராக, அரசியல் சாணக்கியராக, பிடிவாதக்காரராக, எல்லாவற்றுக்கும் மேல் எனக்கு நல்ல அன்பான கண்டிப்புமிக்க தந்தையாக இன்று முத்துவிழா காணும் மருத்துவர் ஐயாவை பெருமையாக பார்க்கிறேன். ஆறு வயதில் பள்ளி விடுதியில் சேர்த்த கண்டிப்பு மிக்க தந்தையை பார்த்திருக்கிறேன், ஆண்டுதோறும் சுற்றுலா அழைத்து செல்லும் அன்பான அப்பாவை பார்த்திருக்கிறேன், பெரும் போராளியாக சிறையில் பார்த்திருக்கிறேன், ஒரு டாக்டராக மருத்துவமனையில் பார்த்திருக்கிறேன் எனவும் பதிவிட்டுள்ளார் அன்புமணி.
மருத்துவராக, விவசாயியாக, போராளியாக, தலைவராக, ஆசிரியராக, வழிக்காட்டியாக, மனஉறுதி மிக்க வீரராக, அரசியல் சாணக்கியராக, பிடிவாதக்காரராக, எல்லாவற்றுக்கும் மேல் எனக்கு நல்ல அன்பான கண்டிப்புமிக்க தந்தையாக இன்று முத்துவிழா காணும் மருத்துவர் ஐயாவை பெருமையாக பார்க்கிறேன்.#தமிழினப்போராளி80pic.twitter.com/WCmMqq85ZF
Did you know who has the privilege of having inaugurated more than 70 statues of Dr BR Ambedkar in Tamil Nadu & of having inaugurated more than 7 statues of Dr BR Ambedkar in Chennai in single day itself ? That is Dr Ramadoss Ayya @drramadoss#தமிழினப்போராளி80pic.twitter.com/9zaeBnEBrp
கடந்த 2016 இல் வங்கிகளில் குறைவான இருப்புதொகை உள்ள வாங்கி கணக்குகளில் இருந்து அபராதம் விதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதை அடுத்து குறைவான அளவில் இருப்புதோகை உள்ள வங்கி கணக்குகளில் இருந்து அபராதம் பிடித்தம் செய்யப்பட்டது. இது பலதரப்பினரிடையே பேசும் பொருளாக இருந்தது.
இது பல விதிமுறைகளில் அடிப்படையில் அபராதம் பிடித்தம் செய்யப்பட்டது. அதாவது கிராமப்புற பகுதிகளில் உள்ள வங்கி கணக்குகளில் ஒரு அடிப்படையும், நகரங்களில் உள்ள வங்கி கணக்குகளில் ஒரு அபராதமும், மாநகரங்களில் ஒரு அபராதமும், பிடித்தம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அடிப்படை சேமிப்பு வங்கிக் கணக்குகள் மற்றும் பிரதமர் ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் வாடிக்கையாளர்கள் எந்த வித வைப்புத்தொகையும் வைத்திருக்கத் தேவையில்லை.
இதுதவிர மற்ற வங்கிக் கணக்குகளில் வங்கிகளுக்கு ஏற்றவாறு வைப்புத்தொகை வைத்திருக்க வேண்டும். அதை வைத்திருக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து சேவைக் கட்டணமாக அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறாக 2016-17 முதல் 2018-19 வரையிலான 3 ஆண்டுகளில் எவ்வளவு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்பதை நிதித் துறை இணையமைச்சரான அனுராக் தாகூர் வெளியிட்டுள்ளார்.
தனியார் வங்கிகள்
2016-2017 ஆம் ஆண்டு -ரூ.790.22 கோடி
2017-2018 ஆம் ஆண்டு – ரூ.3,368.42 கோடி
2018-2019 ஆம் ஆண்டு – ரூ.1,996.46 கோடி
பொதுத்துறை வங்கிகள்
2016-2017 ஆம் ஆண்டு – ரூ.1,115.44 கோடி
2017-2018 ஆம் ஆண்டு – ரூ.1,138.42 கோடி
2018-2019 ஆம் ஆண்டு – ரூ.1,996.46 கோடி
இவ்வாறாக கடந்த மூன்று ஆண்டுகளாக பிடித்த அபராதம் இவ்வளவாய் இருந்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.ஏழை மற்றும் பின்தங்கிய மக்களின் வங்கி கணக்கு எப்போதும் குறைவாக இருப்பு தொகை வைத்திருப்பர். இதிலிருந்து அபராதம் பிடித்தால் அம்மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். இதையும் மத்திய அரசு கருத்தில் கொண்டு இதை பரிசீலிக்க வேண்டும். என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து.
தமிழகத்திற்கு பிரதமர் வந்த போது “Go back Modi” என்று கருப்பு பலூன் விட்டனர். அதே நபர்கள் வடமாநிலம் சென்று மோடியை சந்திக்கும் பொழுது well come Modi என்று உச்சரிக்கின்றனர். இதுதான் அரசியல் சாணக்கிய தனமா? என்று வைகோவை பார்த்து H.ராஜா கேள்வி?
மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாஜக மூத்த தலைவர் அத்வானியை மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். தனது குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்து பெற்றார். மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ள நிலையில், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வைகோ வாழ்த்து பெற்று வருகிறார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள பாஜக மூத்த தலைவர் அத்வானியின் வீட்டிற்கு வைகோ தனது மனைவி, மகன் என குடும்பதினருடன் சென்று வாழ்த்து பெற்றார். பின்னர் அத்வானியுடன் சேர்ந்து அவரது இல்லத்தில் வைகோ தனது காலை உணவையும் உண்டார்.
இதற்கிடையே, அதிமுக மற்றும் திமுக சார்பில் மாநிலங்களவை எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்று பதவியேற்க உள்ளனர்.
மாநிலங்களவை அதிமுக எம்பிக்களான மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜுன், ரத்தினவேல், லட்சுமணன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா ஆகியோரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்தது. திமுக மற்றும் அதிமுக தரப்பில் இருந்து தலா 3 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். திமுக சார்பில் பொதுச் செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் மற்றும் கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இன்று காலை 11 மணியளவில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் அவர்கள் மூவரும் பதவியேற்க உள்ளனர். அதே போன்று அதிமுக சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட முகமது ஜான், சந்திரசேகரன், அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் இன்று பதவியேற்க உள்ளனர்.
இதை அடுத்து பிஜேபி மூத்த தலைவர் திரு H.ராஜா அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் வைகோவை பார்த்து நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தென்மாநிலங்களில் வரும் பொழுது Go back Modi என்றும் வைகோ வட மாநிலம் செல்லும் பொழுது Well come Modi என்றும் அழைத்தார். இதுதான் வைகோவின் சானக்கிய அரசியலோ என பலர் வினவிவருகின்றனர்.
பாஸ்ட் புட் என்ற நவின உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பாஸ்ட் புட் உடலுக்கு தீங்கானது. அதிலும் சேர்க்கும் பொருளில் உண்மை தன்மை உண்டா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கலப்படமில்லாத பரிசுத்தமான பொருள் உலகில் உண்டா அதிலும் உணவு பொருளில் என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
நாம் முன்பெல்லாம் வீடுகளில் சமயல் பொருட்களுக்கு என்ன செய்வோம். மிளகாய் பொடி வேண்டும் என்றால் மிளகாயை வாங்கி காயவைத்து நாமே அரைத்து பொடி செய்வோம். அப்படிதான் எல்லா பொடிகளும் செய்வோம். ஆனால் இன்று அனைத்துமே பாகெட் உடன் வந்து விட்டது. அது உண்மை தன்மை நம்மால் அறிய முடியாது. அதையே நாமும் உணவில் சேர்த்து சமைக்கிறோம். எத்தைக் கண்டால் பித்தம் தெளியும் என்று நாம் ஒருபுறம் நோயுடன் ஓடிக்கொண்டிருக்க சத்தமில்லாமல் சந்தடியில் உணவுபொருளில் கலப்படம் செய்துவருகிறது ஒரு கூட்டம்.
தரமான உணவு பொருள் வாங்க வேண்டும் என்பது போய் கலப்படமில்லாத உணவு பொருளா என்று பார்க்க வேண்டியது அவசியமாகிறது.ஆரோக்யமாய் வாழ வேண்டும் என்பது மட்டும் முக்கியமல்ல. நாம் உபயோகிக்கும் உணவு பொருள் எல்லாமே ஆரோக்யத்தைச் சிதைக்காமல் காக்கிறதா என்று கவனிப்பதும் முக்கியம். என்னென்ன பொருள்களில் எப்படியெல்லாம் கலப்படம் செய்யலாம் என்பதைசற்றே கூர்ந்துகவனித்தால் எளிதாக கண்டுபிடிக்கலாம்.
மிளகு:
நல்ல காரத்தன்மை கொண்டிருக்கும் மிளகின் தோற்றத்தை ஒத்திருக்கிறது பப்பாளி விதை.சிறிய கப்பில் அரைதம்ளர் தண்ணீர் விட்டு மிளகை போட்டால் மிளகு உள்ளே செல்லும். பப்பாளி விதை பல் இளித்தப்படி மேலேயே மிதக்கும்.
கடுகு:
கடுகை எடுத்து உள்ளங்கையில் வைத்து தேய்த்தால் அதன் உட்புறம் மஞ்சளாக இருந்தால் அது தரமான கடுகு. வெள்ளையாகவோ வேறுமாதிரி நிறத்திலோ இருந்தால் அது கடுகே அல்ல.
பெருங்காயம்:
வாசனை மிக்க பெருங்காயம் உடலில் வாயுவைக் கரைக்கும். ஆனால் பெருங்காயம் கலப்பிடமில்லாமல் இருக்க வேண்டுமே. சிட்டிகை பெருங் காயத்தை ஒரு டீஸ்பூன் நீரில் கலந்தால் சற்றே பால் போன்ற நிறத்துடன் வாசனையும் வர வேண்டும். இல்லையென்றால் அது வெறுங்காயம்.
மிளகாய்த்தூள்: அம்மியிலும் ஆட்டுக்கல்லிலும் அரைத்த மசாலாக்கள் காலம் எல்லாம் இப்போது இல்லை.அம்மியே அருங்காட்சியகத்துக்கு வந்துவிடுமோ என்றும் கூட நினைக்கதோன்றுகிறது. சரி மிளகாய்த்தூளுக்கு வருவோம். நல்ல நிறத்தில் இருக்கும்பொடிகள் எல்லாம் தரமானவை என்று சொல்ல முடியாது. சிறிய தம்ளரில் நீர் விட்டு மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன் சேர்த்தால்செங்கல் தூளாக இருந்தால் அவை நீரின் அடியில் தங்கும்.இராசயனமாக இருந்தாலும் அதிக நிறம் கொண்டிருக்கும்.
மஞ்சள் தூள்: மஞ்சள் கிருமி நாசினியாக செயல்படுகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் மஞ்சளில் கலப்படம் இருக்கும் போது அவை எப்படி கிருமிநாசினியாக செயல்படும்? மஞ்சள்பொடியை நீரில் கலக்கும்போது உடனடியாக நீரின் நிறம் மஞ்சளாக மாறினால் அவை கலப்படம் என்பதை நிச்சயமாக சொல்லலாம்.மையஅரைத்த அரிசி மாவுடன் லெட் குரோமேட் என்ற இராசயன பொருள் கலந்து மஞ்சள் தூளாக விற்கப்படுகிறது. இதைக் கண்டறியஅரைடீஸ்பூன் மஞ்சள்தூளை 3 மில்லி ஆல்கஹாலுடன் 10 துளி ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை கலந்து குலுக்கும் போது வயலெட் நிற மாக மாறினால் லெட் குரோமேட் கலந்திருப்பதை உறுதி செய்யலாம்.
தேன்: ஒரு தம்ளர் நீரில் தேன் விட்டால் கரையாமல் தம்ளருக்கு அடியில் தங்கினால் சுத்தமான தேன்.சுத்தமான பருத்தி துணியை தேனில் நனைத்து எரியும் விளக்கில் காண்பித்தால் சுத்தமான தேனாக இருந்தால் அது பற்றி எரியும்.
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து சொல்ல வைரமுத்து எழுதிய கவிதை
சமீபகாலமாக வைரமுத்து சும்மாவே இருப்பதில்லை அல்லது இருக்கமுடிவதில்லை. எந்த சம்பவம் நடந்தாலும் அதற்கு ஒரு கருத்து சொல்லிக்கொண்டே இருக்கிறார். அப்படி அவர் சொன்ன அரிய கருத்துக்கள் பல ஏழரையில் போய் நின்றதை அனைவரும் அவ்வளவு சீக்கிரம் மறக்கமுடியாது.
அதேசமயம் சிலசமயம் அவர் கொஞ்சம் நல்ல விஷயத்துக்கும் நல்ல விதமாகவும் கருத்து சொல்வதுண்டு. அப்படி இந்திய விண்வெளித்து துறையின் சாதனையைப் பற்றி கருத்து சொல்லியிருக்கிறார். அதுவும் கவிதை நடையிலேயே கூறியிருக்கிறார்.
இந்திய விண்வெளித்துறையின் அடுத்த மைல்கல்லான சந்திராயன் 2 விண்கலம் இன்று சரியாக 2.43 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. சந்திரயான்-2 விண்கலம் புறப்பட்ட சில சில நிமிடங்களில் புவிவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
இவ்வாறு சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதில் மகிழ்ச்சி அடைவதாகவும், இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடுமையான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி இது என்றும், கடந்த ஒன்றரை ஆண்டுகள் சிறிதும் ஓய்வின்றி சந்திரயான் 2-க்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் உழைத்ததாகவும், அவர்கள் உழைப்பால் தான் இன்று இந்த சாதனை நடந்துள்ளது என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த விண்கலம் சந்திரனின் தென்துருவத்தை ஆராயவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த வெற்றிகரமான நிகழ்வு குறித்து கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
130கோடி இந்தியர் உதடுகள் முணுமுணுக்கின்றன.
வேலூர் தேர்தல்! திமுகவின் கடன் தள்ளுபடிகள்,இலவசங்கள் கை கொடுக்குமா? ஒரு பார்வை.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூறிய வாக்குறுதிகள் வேலூர் இடைத்தேர்தலில் எடுபடுமா? வேலூர் நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு வரும் ஆகஸ்ட் 5- ஆம் தேதி நடைபெறவுள்ளது. களத்தில் 28 வேட்பாளர்கள் உள்ளனர்.
இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அதிமுக சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்துக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. ஏ.சி.சண்முகத்துக்காக தேர்தல் பிரச்சாரத்துக்கு அதிமுக தலைமை 200 பேர் கொண்ட பிரமாண்ட பொறுப்பாளர்கள் படையை அறிவித்துள்ளது.
திமுகவும் அதற்கு ஏற்றார் போல் ஒரு குழுவை அமைத்து தேர்தல் பணியை செய்து வருகின்றன. இந்த வேலூர் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டுமென இரண்டு கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து மக்கள் மத்தியில் ஒரு வினா எழுந்துள்ளது. அவ்வினா என்னவெனில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சில அறிக்கைகளை வெளியிட்டு வெற்றி பெற்றது. அந்த அறிக்கையில் விவசாய கடன் தள்ளுபடி, நகைகடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி போன்ற தள்ளுபடிகளை அறிவித்து வெற்றி பெற்றது.
திமுக குடுத்த அறிக்கையை நடைமுறை படுத்த முடியாத சூழல். ஏனெனில் மத்தியில் திமுக தலைமை பொறுப்பு ஏற்ற கட்சி காங்கிரஸ் ஆகும். ஆனால் காங்கிரஸ் மத்தியில் ஆட்சி பொறுப்பில் இல்லை. அப்படி இருக்க திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக அதிமுக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கூறுவது யாதெனில் திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றி வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து திமுக அதே தேர்தல் அறிக்கையையே வேலூரில் பயன்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனென்றால் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய நகை கடன் தள்ளுபடி ஆகுமா? வங்கிகளில் வாங்கிய விவசாய கடன் தள்ளுபடி ஆகுமா என விவசாயிகள் எதிர் பார்க்கின்றனர்.
நாகர்கோவிலில் ஒரு வங்கியில் விவசாயிகள் விவசாய கடன் தள்ளுபடி ஆகுமா என்ற கேள்வி எழுப்பி உள்ளனர். இதை மேலும் விவரம் சேகரிக்க நாகர்கோவில் வங்கியின் விவசாய கடன் உதவி மேலாளர் திரு. இரகு மகேந்திரன் கூறியதாவது, விவசாய கடன் தள்ளுபடி செய்ய வில்லை என உறுதி அளித்தார்.
திமுக எந்த தேர்தல் அறிக்கையை வேலூர் தேர்தலில் பயன் படுத்தும் என தெரியவில்லை. மாவட்ட மற்றும் மாநில அளவிலான நிர்வாகிகள், அமைச்சர்கள் வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் பகுதிகளில் உள்ள ஹோட்டல் விடுதிகளில் அறையெடுத்து தாங்கியுள்ளனர். இரண்டு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் தேர்தல் பிரச்சாரத்துக்கு வருகை போன்ற காரணங்களால் வேலூர் தொகுதி முழுவதும் பிற மாவட்ட கரை வேட்டிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
கர்நாடகத்தில் அடுத்த முதல்வர் யார்? உச்சகட்ட பரபரப்பு!
கர்நாடக சட்டமன்றத்தில் நேற்று (ஜூலை 23) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆட்சியைத் தக்கவைக்க 105 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் 99 வாக்குகளை மட்டுமே பெற்று காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து முதலமைச்சர் குமாரசாமி தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் வாஜுபாய் வாலாவிடம் வழங்கினார். அடுத்த அரசு பதவியேற்கும் வரை முதலமைச்சராக தொடரும்படி குமாரசாமிக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.
இதைத்தொடர்ந்து இன்று காலையில் கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா இல்லத்திற்கு வெளியே தொண்டர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் தற்போதைய நிலையில் பெங்களூருவுக்கு வர வாய்ப்பில்லை என தெரிகிறது. ராஜினாமா செய்தவர்களில் ஒருவரான ஜேடிஎஸ் எம்.எல்.ஏ விஸ்வநாதன் பிடிஐ செய்தி முகமையிடம் பேசுகையில், “உடனடியாக பெங்களூரு திரும்ப எந்தத் திட்டமுமில்லை. எங்களுக்குக் கூடுதல் நேரம் தேவை” என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் ஆட்சி கோர பாஜக திட்டமிட்டுள்ள நிலையில் இன்று பாஜக சட்டமன்றக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. நாளை ஆளுநர் வாஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சியமைக்க பாஜக உரிமை கோரும் என்கின்றனர் கர்நாடக பாஜக வட்டாரத்தில். ஜேடிஎஸ் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவ கவுடா தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் குழுக் கூட்டமும் பெங்களூருவில் இன்று நடைபெறவுள்ளது.
மேலும், அடுத்த முதல்வராக எடியூரப்பா பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தாலும் பாஜக பொதுச்செயலாளர் முரளிதர் ராவ், “எங்கள் கட்சி சார்பில் எடியூரப்பா தலைவராக இருந்தாலும், அவர் தனக்கான ஆதரவை நிரூபிக்க வேண்டும். அதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அடுத்த முதல்வர் யார் என்பது பற்றி கட்சி தலைமை முடிவெடுக்கும்” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், எடியூரப்பா தனது ஆதரவாளர்களையும், விசுவாசிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
எவ்வளவோ நாகரிகம் வளர்ச்சி அடைந்தாலும் இது போல சம்பவங்கள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. அப்படி என்ன சம்பவம் என்று கேட்கிறீர்களா? இதோ நடந்தவையும் அமைச்சரின் பதிலும்.
மத்திய பிரதேத மாநிலம் சிவபுரி மாவட்டம் கரோராவில் இருக்கும் அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு சமைக்கப்படும் உணவு கழிவறை அருகில் வைத்து சமைக்கப்படுகிறது. சமையல் பாத்திரங்களை கழிவறை மேல் வைப்பதாகவும் புகார் எழுந்து இது அங்கிருக்கும் ஊடகங்களில் செய்திகள் பரவியதால் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து பேசியுள்ள அம்மாநில அமைச்சர் இமார்த்தி தேவி, ”அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையின் அருகில் சமைப்பதில் தவறு என்ன இருக்கிறது? சமைத்த பாத்திரங்களை கழிவறை மேல் வைப்பதொன்றும் தவறு கிடையாது. கழிவறை அருகில் சமயலறை இருப்பதில் தவறு இல்லை. வீட்டிற்குள்ளேயே குளியலறையுடன் கழிவறையும்தான் இருக்கிறது. அதற்காக சாப்பிட மறுக்கிறார்களா என்ன?” என்று கேட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய மாவட்ட அதிகாரி, முறையான சமையலறையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதில் சம்பந்தப்பட்ட அங்கன்வாடி மேற்பார்வையாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி கொடுத்துள்ளார்.
பெரிய பொறுப்பில் இருந்து மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட உறுப்பினராக இருந்தும். பொது வெளியிலோ ஊடகங்கள் எப்படி பேசுவது என்பது தெரியாமல் இருக்கின்றனர். கழிவறையில் இருந்து தான் அதிகமாக நோய் கிருமிகள் பரவுகின்றன என்பது அறிந்தது. அதனாலே மத்திய அரசு கை கழுவும் செயலை மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
இது தெரியாமல் மத்திய பிரதேச அமைச்சர் இப்படி பொறுப்பில்லாமல் கூறியிருப்பது மக்களிடையே கொந்தளிப்பை வெறுப்பை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடமாவட்டதில் அதிகம் வாழும் சமூகம் வன்னியர் தமிழ் சமூகம். அவர்களுக்கு சாதிய ரீதியாக ஒடுக்கப்படுவதாக அச்சமுகத்தை சார்த தலைவர்கள் கூறி எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் 30 விழுக்காடு கொண்ட சமூகம் ஒடுக்க படுகிராத என்ற எண்ணம் அச்சமுக மக்களிடையே ஐயம் தோன்றியுள்ளது.
அவர்கள் அரசியல், வேலைவாய்ப்பில், சமூக பங்களிப்பு போன்ற விஷயங்களில் புறம் தள்ளபடுவதாக அச்சமூகத்தின் தலைவர்களும் பாட்டாளி மக்கள் கட்சயினரும் தெரிவிக்கின்றனர். திமுக என்கிற கட்சி தமிழ்நாட்டில் முதன்முதலில் பெரு வெற்றிபெறவும், ஆட்சி அமைக்கவும் ஆதரவாக இருந்த சமூகம் வன்னியர் சமூகம் தான். இந்த சமூகத்திற்கு திமுக துரோகம் செய்தது ஏன்? என திமுகவை நோக்கி பாமக கேள்வியெழுப்பியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து பெரிய கட்சிகளும் உருவாக்கியதும் வளர்த்து விட்டதும் வன்னியர்கள் தான் என்று கூறுகின்றனர். இதுகுறித்து பாமக தரப்பில் வெளியான அறிக்கையில்; வன்னியர்களின் 1950 அரசியல் வரலாறு, சுதந்திர இந்தியாவில் வன்னியர்களுக்கு அரசியல் சட்ட உருவாக்க சபையில் இடம் அளிக்கப்படவில்லை. பத்துலட்சம் மக்களுக்கு ஒரு அரசியல் சபை உறுப்பினர் என்கிற காங்கிரசு கட்சி அறிவிப்பை நம்பி, வன்னியர்களுக்கு 3 உறுப்பினர் இடம் வேண்டும் என்று வன்னியர்கள் தில்லிக்கு தூது சென்றனர். ஆனால், காங்கிரசு கட்சி ஒரு இடம் கூட கொடுக்கவில்லை.
1987 லில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு போராட்டம் நடத்தி இடஒதுக்கீடு சட்ட பூர்வமாக வாங்கி தரப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. இது தமிழகத்தில் வாழும் வன்னிய சமூக மக்களுக்கு உதவும் வகையில் 20 சதவீதம் வழங்கப்பட்டது. ஆனால் அரசியலில் தொடர்ந்து புறம் தள்ளப்பட்டார். காங்கிரஸ் கட்சியில் வன்னியர்களுக்கு மட்டுமல்ல, இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் கூடுதலாக இருக்கும் இதர பிற்படுத்தப்பட்ட (OBC) பிரிவினரில் ஒரே ஒருவருக்கு கூட இடம் கொடுக்கவில்லை.
காங்கிரசுக் கட்சி வன்னியர்களைப் புறக்கணித்தது.
இதனால் அச்சமுகம் பெரும் கோபம் அடைந்து விடுதலைக்கு காரணமான காங்கிரசுக் கட்சியை, இந்திய வரலாற்றில் முதல் முறையாக 1949 ஆம் ஆண்டின் உள்ளாட்சித் தேர்தலில் வன்னிய குல சத்திரிய மகா சங்கம் தோற்கடித்தது. தென்னார்க்காடு ஜில்லா போர்டு தேர்தலில் மொத்தமிருந்த 52 இடங்களில் 22 இடங்களை சங்கம் கைப்பற்றியது.
மேலும், பாதிக்கபட்ட காங்கிரஸ் கட்சி ஒரு சட்ட ரீதியாக வன்னியர்களுக்கு எதிராக ஒரு தீர்மானம் போட்டது. அதாவது 1950 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த இந்திய அரசியல் சாசனம் – சாதி அமைப்புகள் தேர்தலில் போட்டியிட தடை செய்ததால் – 1952 தேர்தலில் வடார்க்காடு வன்னியர்கள் ‘காமன்வீல் கட்சி’ என்ற பெயரிலும், தென்னார்க்காடு வன்னியர்கள் ‘தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி’ என்ற பெயரிலும் போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றனர். அப்போதைய 190 சட்டமன்ற உறுப்பினர் இடங்களில் 25 இடங்களை வன்னியர் கட்சிகள் கைப்பற்றின. இதனால், சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலிலேயே, சென்னை மாநிலத்தில் காங்கிரசுக் கட்சி தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையை சந்தித்தது.
காங்கிரஸ் கட்சி தனித்து பெரும்பான்மை இல்லாததால் வன்னியர்களின் உதவியை நாடினர். காமன்வீல் கட்சி ராஜாஜியை முதலமைச்சர் ஆக்கியது. பின்னர் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி காமராசரை முதலமைச்சர் ஆக்கியது. இதில் என்ன அரசியல் சூழ்ச்சி என்றால் காங்கிரசுக் கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க, வன்னியர் கட்சிகள் இரண்டையும் கலைத்துவிட்டனர்.
வன்னியர்கள் திமுகவை வளர்த்த வரலாறு:
பின்பு காங்கிரஸ் தன்னை நிலைப்படுத்தி கொண்டு வன்னியர்களை ஒதுக்கு வைத்தது அவர்களுக்கு அரசியல் ரீதியாக வாய்ப்பு மறுக்கப்பட்டது. காங்கிரசை வெறுத்த வன்னியர் சமூகம் – திமுகவை வளர்த்தது. தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி சட்டமன்ற உறுப்பினரும் வன்னியர் தலைவருமான ஆ. கோவிந்தசாமி 1954 ஆம் ஆண்டில் ‘உழவர் கட்சி’ எனும் கட்சியைத் தோற்றுவித்தார். அவர் 1954 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் காணை, கஞ்சனூர் தொகுதியில் உதயசூரியனை தேர்தல் சின்னமாக வைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் தான் ஏமாற்றி விட்டது என மனம் தளராது வன்னியர்கள் கோவிந்தசாமி தலைமையில் பின்னர் வன்னியர்கள் திமுகவில் சேர்ந்தனர். திமுக வன்னியர்களின் வெற்றி சின்னமான உதய சூரியன் சின்னத்தை சின்னத்தை எடுத்துக்கொண்டது. அக்கட்சி முதன் முதலில் போட்டியிட்ட 1957 தேர்தலில் 13 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அவற்றில் 10 தொகுதிகள் வன்னியர்கள் மிகப் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகளாகும்.
திமுகவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது வன்னியர் சமூகம் அதற்கு ஆதாரமாக 1962 தேர்தல் திமுக வெற்றி பெற்ற 50 இடங்களில் மிக அதிகமானவை வன்னியர்கள் வாழும் தொகுதிகள் ஆகும். இதனை Myron Weiner எனும் அரசியல் ஆய்வாளர் தனது Politics of Scarcity நூலில் “In the 1962 elections for the Madras Legislative Assembly, a large number of Vanniyakula Kshatriyas in North and South Arcot, Trichinopoly, Tanjore and Salem supported the DMK. It was in these districts that the DMK registered most of its gains” என்று குறிப்பிட்டுள்ளார்.
இறுதியில் 1967 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்த போதும் கூட – மிக அதிகமான இடங்களை வெற்றி கொண்டது வன்னியகள் ஆதரவுடன் தான். இவ்வாறு திமுகவுக்கு வன்னியர் சமூகம் பெரிதும் உதவியது. இதனால் அரசியல் ரீதியாக திமுக அழிக்க முடியாத சக்தியாக வளர்ந்து.
திமுக செய்த துரோகம்:
திமுக என்கிற கட்சி தமிழ்நாட்டில் முதன்முதலில் வெற்றிபெறவும், ஆட்சி அமைக்கவும் ஆதரவாக இருந்த பெரிதும் உதவிய வன்னியர் சமூகத்திற்கு திமுக செய்த நன்மைகள் என்ன?
திமுகவில் அடிப்படை உறுப்பினர் , கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், மாவட்டச் செயலாளர், போன்ற பதவிகளைக் கூட விகிதாச்சாரத்துக்கு ஏற்ப வன்னியர்களுக்கு கொடுக்க வில்லை கொடுக்காதது ஏன்?
1987 லில் மருத்துவர் ராமதாஸ் தன் சமூக மக்களை ஒன்று திரட்டி பெரிய போராட்டத்தை முன்னெடுத்து மிகவும் குறைந்த பட்ச நீதியான – வன்னியர் சமூகம் உள்ளிட்ட 108 சமூகங்களுக்கு 20% இடஒதுக்கீடு பெறுவதற்கு கூட – மருத்துவர் அய்யா அவர்களின் போராட்டத்தின் மூலம் “21 உயிர்களை தியாகம் செய்த பின்னர் தான் திமுகவிற்கு மனம் இறங்கும்” என்கிற நிலை ஏற்பட்டது ஏன்?
திமுக காங்கிரஸ் போன்ற பெறும் அரசியல் கட்சிகளை உருவாகியது வன்னியர்கள். அவற்றில் வன்னியர்களின் அடையாளமான ராமசாமி படையாட்சியாரின் படத்தை, முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வந்து தான் சட்டமன்றத்தில் திறக்க வேண்டும் என்கிற சூழலை திமுக உருவாக்கியது ஏன்?
வன்னியர்கள் தமிழகத்தில் அசைக்கமுடியாத அரசியல் சக்திகளை உருவாகியது என்பதில் எந்த வினாவும் இல்லை. ஏன் அவர்களின் உரிமை அரசியல் ரீதியாக பறிக்கப்படுகிறது என்பது என்று அச்சமூகத்தின் தலைவர்களும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்கள் திமுகவை நோக்கி கேள்வி எழுப்புகின்றனர். வன்னியர்களின் அரசியல் ரீதியாக இந்நட்டிர்க்கு செய்த தொண்டை இத்தொகுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.