Home Blog Page 87

யாரை கேட்டு தவெக-அதிமுக கூட்டணியை உறுதி செய்தீர்கள்.. கடுப்பான விஜய்.. கலக்கத்தில் இபிஎஸ்!!

0

ADMK TVK: விஜய் கட்சி தொடங்கிய முதல் மாநாட்டிலேயே திமுக அரசியல் எதிரி என்றும், பாஜக கொள்கை எதிரி என்றும் அறிவித்ததோடு, கூட்டணி அமைப்பதற்கும் தயார் எனக் கூறியிருந்தார். அவர் கூட்டணி குறித்து கூறியது முதலே, தவெக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.

அனைத்து சட்டமன்ற தேர்தலிலும், பாமக, தேமுதிக போன்ற கட்சிகளின் கூட்டணி வியூகம் பற்றிய செய்தி பரவலாக பேசப்படும் நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் கூட்டணி குறித்து அனைவரும் பேசுவது தவெகவின் வளர்ச்சியை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்நிலையில் தனது பிரச்சாரங்கள் அனைத்திலும், அதிமுகவை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாத விஜய் அதனுடன் கூட்டணி அமைப்பார் என்று சொல்லப்பட்டது.

கரூர் சம்பவத்திற்கு இபிஎஸ், விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததும் இதற்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்தது. ஆனால் இது உறுதிப்படுத்தபடாத நிலையில், இது அனைவரிடத்திலும் கேள்விக்குறியாகவே இருந்தது. இந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அதிமுக சார்பில் நாமக்கல்லில் நடைபெற்ற பிரச்சாரத்தில், தவெக கொடி பறத்ததை கண்ட இபிஎஸ் பிள்ளையார் சுழி போட்டாச்சி என்று கூறி உறுதிப்படுத்தினார்.

இதற்கு தவெக தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விஜய் தவெக தலைவர்களுடன் கலந்தாலோசித்தார் என்றும், அதில் வேண்டுமானால் அதிமுகவை, தவெக கூட்டணிக்கு வர சொல்லுங்கள், யாரை கேட்டு இபிஎஸ் பொதுவெளியில் இவ்வாறான கருத்தை உறுதிப்படுத்தினார் என்று விஜய் கோபமடைந்ததாக கூறப்படுகிறது.

தலையில் கை வைத்த இபிஎஸ்.. இதை செய்தால் தவெக கூட்டணி 100% உறுதி.. ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்!!

0

ADMK TVK: தமிழ் திரையுலகில் பிரபலமாகவும், யாரும் அசைக்க முடியாத நடிகராகவும் வலம் வருபவர் விஜய். இவர் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றினார். இந்த கட்சி ஆரம்பித்து சுமார் ஒன்றரை வருடங்களே ஆன நிலையில், பிரச்சாரங்களை தொடங்கியுள்ளார். 5 இடங்களில் பிரச்சாரம் செய்த தவெக கரூரில் பிரச்சாரம் செய்யும் போது, கூட்ட நெரிசல் காரணமாக பல உயிரிழப்புகள் ஏற்பட்டது.

இதனை பலரும் அரசியல் ரீதியாக அணுகிய போது, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், மற்றும் பாஜக விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பது போல பேசி, இதை யாரும் அரசியலாக பார்க்க வேண்டாம் என கூறி வந்தது. இதனால் விஜய் மேல் தவறில்லை என்பதை நிரூபிக்க பாஜக 8 பேர் கொண்ட குழு ஒன்றையும் அமைத்தது. என்ன தான் விஜய்க்கு ஆதரவாக பாஜக களமிறங்கினாலும், விஜய்க்கு பாஜக பக்கம் செல்லும் ஆர்வம் சிறிதும் இல்லை என்று கூறப்படுகிறது.

திமுகவை தனது அரசியல் எதிரி என்று கூறி வந்த விஜய், அதிமுக உடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்த்த சமயத்தில், அதற்கான பேச்சு வார்த்தையும் திரைமறைவில் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது விஜய், இபிஎஸ்யிடம் நீங்கள் பாஜக கூட்டணியிலிருந்து விலகினால், தவெக-அதிமுக உடன் கூட்டணி அமைப்பது உறுதி என்று கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது.

விஜய்க்கு ஆதரவு அதிகம் இருப்பதாலும், சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கி 1 வருடத்திற்கு முன்பே பாஜகவுடன் கூட்டணி அமைத்து விட்ட காரணத்தினாலும், இருவரில் யாரை கை விடுவது என்று தெரியாமல் இபிஎஸ் திணறி வருகிறார். மேலும், பாஜக-அதிமுக இடையேயான சச்சரவு கூட்டணியால் முடிவுக்கு வந்த நிலையில் அதனை உடைக்க இபிஎஸ்க்கு மனமில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. இது தொடர்பாக இபிஎஸ் எடுக்கும் முடிவு தான் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றியை தீர்மானிக்கும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

நிலை மாறும் அண்ணாமலை.. இவர புரிஞ்சிக்கவே முடியலையேப்பா!!

0

TVK BJP: நடிகர் விஜய்யின் தவெக சார்பாக கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில், பரப்புரை நடைபெற்றது. இந்த பரப்புரையில் விஜய்யை காண 2500க்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர். அப்போது தள்ளு முள்ளு ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் மட்டுமல்லாது, உலக அரசியலிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலர், விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

அப்போது தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தார். இது அண்ணாமலையின் குரல் அல்ல, பாஜக சார்பாக விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் குரல் என்றும் சொல்லப்பட்டது. இது தொடர்பாக பாஜக தனி குழு அமைத்து விசாரித்து வந்தது அனைவரும் அறிந்த ஒன்று. அண்ணாமலை எங்கு சென்றாலும், இந்த குழு மேற்கொண்டுள்ள விசாரணையை பற்றி செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பி வந்தனர்.

இதனால் கடுப்பான அண்ணாமலை நாங்க என்ன தவெகவிற்கு மார்க்கெட்டிங் ஆபீஸரா, சும்மா நொச்சு நொச்சுனு எல்லா இடத்துலயும் இதையே கேக்குறீங்க, இந்த பிரச்சனையை விஜய் தவிர மாற்ற எல்லோரும் பேசுறாங்க, வேணுமென்றால் போய் அவர்களிடம் கேளுங்கள் என்று கடுமையாக கூறியிருந்தார். இதனால் விஜய்க்காக பாஜக அமைத்த குழுவின் மேல் அண்ணாமலைக்கு விருப்பமில்லை என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் கரூருக்கு செல்ல இருக்கும் விஜய், பாதுகாப்பு கேட்டு தமிழக டிஜிபியிடம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இது குறித்து அண்ணாமலையிடம் கேட்ட போது, கரூர் மக்கள் என்ன பூதமா? கரூருக்கு செல்வதற்கு எதற்காக ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு. நானும் கரூரை சேர்த்தவன் தான். யாராக இருந்தாலும் கரூருக்கு தைரியமாக செல்லலாம் என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே ஒரு முறை அண்ணாமலையின் பேச்சு விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் மீண்டும் வலுப்பெற்று வரும் இவரின் கருத்துக்கு, இவர் விஜய்யை ஆதரிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

செத்தாலும் விஜய் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டார்.. தோல்வியில் முடிந்த பாஜகவின் முயற்சி!!

0

TVK BJP: விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு சரிவை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது கரூர் சம்பவம். இது அரசியல் தலைவனை பார்க்க வந்த கூட்டம் அல்ல. நடிகரை காண வந்த கூட்டம் என்றும் விமர்சிக்கப்பட்டது. இது தொடர்பாக திமுக தொண்டர்கள் பலரும் தவெகவை விமர்சிக்க, தவெக தொண்டர்கள் திமுகவை விமர்சித்து வந்தனர். இதை விசாரிக்க தனி நபர் குழுவும் அமைக்கப்பட்டது.

இதனை ஏற்காத பாஜக 8 பேர் கொண்ட குழுவை அமைத்து சம்பவம் நடந்த இடத்திற்கே நேரில் சென்று, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து, என்ன நடந்தது என்று விசாரித்து வருகிறது. விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்று விமர்சித்து வந்த நிலையில், பாஜகவின் இந்த செயல் விமர்சனத்துக்குள்ளானது. இது குறித்து விஜய் எந்த கருத்தும் தெரிவிக்காதது அந்த விமர்சனத்தை மேலும் உறுதிப்படுத்தியது.

ஆனாலும் தவெக நிர்வாகிகள் சிலர் விஜய்யிக்கு பாஜகவுடன் கூட்டணி அமைக்க சிறிதும் விருப்பமில்லை என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தவெகவின் தீவிர ஆதரவாளரான போக்கிரி விக்டர் என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில், விஜய் செத்தாலும் பாஜக கூட்டணியில் சேர மாட்டார் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் விஜய்க்காக செய்த உதவி அனைத்தும் வீண் என்று, பாஜக நினைப்பதாக தகவல் கசிந்துள்ளது. விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியிலேயே அனைத்தையும் செய்து வந்த பாஜகவிற்கு இது பேரிடியாக உள்ளது என்றும், இதனால் இந்த குழுவின் செயல்பாடுகள் கூடிய விரைவில் நிறுத்தப்படும் என்று பாஜக முடிவெடுத்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.

சித்தாந்தம் வேறாக இருக்கும் போது எப்படி கூட்டணி அமைக்க முடியும்.. அப்போ விஜய்யிக்கு பாஜகவில் இடமில்லையா!!

0

TVK BJP: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழக அரசியல் களம் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த பரபரப்புக்கு வலுசேர்க்கும் வகையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் அரசியலில் குதித்துள்ளது. விஜய்க்கு ஆதரவு பெருகி வந்த நிலையில், அவர் முதல் தேர்தலிலே எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் தான் அவரின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்து விட்டது கரூர் சம்பவம்.

இதனை விசாரிக்க தமிழக அரசு தனி நபர் குழு அமைத்துள்ள பட்சத்தில், பாஜகவும் ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரித்து வருகிறது. இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. இதனால் விஜய்யை கூட்டணியில் சேர்க்க பாஜக முயன்று வருகிறது என்ற கருத்தும் வலுப்பெற்றது.

இந்நிலையில் விஜய்-பாஜக கூட்டணி குறித்து அண்ணாமலையிடம் கேட்ட போது, சித்தாந்தம் வேறு வேறாக இருக்கும் போது எப்படி கூட்டணி அமைக்க முடியும் என்று பதிலளித்தார். இவரின் இந்த பதில், விஜய்யை தம் பக்கம் இழுக்க பார்க்கும் பாஜவிலிருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு இதில் விருப்பமில்லை என்பதை உணர்த்துகிறது.

மேலும் நமது கொள்கையை ஆதரிக்காத கட்சியை, கூட்டணியில் சேர்ப்பது கொள்கைக்கு எதிரான அநீதி என்றும் அவர்கள் சொல்வதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் விஜய் பாஜக கூட்டணிகுள் வர அவரின் பிரச்சாரமே எதிரியாக அமைந்து விட்டது என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

பாமகவில் தனித்து விடப்பட்ட எம்.எல்.ஏ அருள்.. விவாதத்தை ஏற்படுத்திய அருளின் காரசாரமான பதில்!!

0

PMK: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுக, திமுக, பாமக போன்ற முன்னணி கட்சிகளில் உட்கட்சி பூசல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அதிலும் பாமகவில் அது சற்று அதிகமாகவே உள்ளது எனலாம். தந்தையே மகனை தலைவர் பதிவியிலிருந்து நீக்கியது, இதனால் கட்சி இரண்டாக பிளவுற்றது போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடந்து விட்டன.

இந்நிலையில் கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரை காண சென்ற அன்புமணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இவரை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ராமதாசை காண சென்றனர். அப்போது அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் சென்ற போது அவர்கள் இருவரும் சுமார் அரைமணி நேரம் உரையாடியதாக சொல்லப்படுகிறது.

இது கூட்டணி குறித்த உரையாடல் என்றும் பேசப்பட்டது. இது குறித்து பாமகவின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான அருள் தனது சமூக வலைதள பக்கத்தில், ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் இபிஎஸ்-ராமதாசின் அரைமணி நேர பேச்சு உண்மை தான், ஆனால் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது பற்றி எனக்கு எப்படி தெரியும் என்று கூறியிருந்தார்.

இவரின் இந்த பதிவு பாமக வட்டாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் இவர் பாமகவிலிருந்து தனித்து விடப்பட்டாரா என்ற கேள்வியும் எழுகிறது. ஆரம்பத்திலிருந்து, கட்சி இரண்டாக பிளவுற்ற போது வரை ராமதாசை தொடர்ந்து ஆதரித்து வரும் அருளிடம், கூட்டணி குறித்து ராமதாஸ் விவாதிக்கவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது என்றும் அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

காசாவிற்கு கருணை காட்டச் சொல்வது ஆகச்சிறந்த நகைச்சுவை.. ஸ்டாலினுக்கு அண்ணாமலை எதிர்வினை!!

0

DMK BJP:காசாவில் நடக்கும் இனப்படுகொலையை கண்டித்து திமுக சார்பில் சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விசிக நிறுவனர் தொல். திருமாவளவன், செல்வபெருந்தகை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதல்வர், காசாவில் நடக்கும் இனப்படுகொலை மனதை உலுக்குவதாகவும், இந்த இரக்கமற்ற படுகொலைகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

மனிதாபிமானம் உள்ள யாரும் இதை பிற நாட்டு விவகாரமாக பார்க்க கூடாது என்றும் கூறினார். இது தொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில், உள்ளூர் நிலை ஊசலாடுது உலக அரசியல் தேவையா என்று முதல்வர் ஸ்டாலினை நேரடியாக விமர்சித்துள்ளார். மேலும் கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காசாவை பற்றிய கவலை எதற்கு எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் செல்லாத நிலையில், அண்ணாமலையின் இந்த கருத்து கவனம் பெற்றுள்ளது. கள்ளக்குறிச்சியில் மக்களை காப்பாற்ற முடியாத நீங்கள் காசாவிற்கு கருணை காட்டுவது தான் ஆகச்சிறந்த நகைச்சுவை என்றும் விமர்சித்தார். இதனை தொடர்ந்து மாநிலத்தின் அடிப்படை வசதிகள் சரியாக இயங்காமல் மக்கள் பல சிக்கல்களை எதிர்கொள்ளும் வேளையில், வெளிநாட்டு பயணங்களிலும், உலக அரசியலிலும் கவனம் காட்டுவது பொருத்தமற்றது என அவர் கூறியுள்ளார்.

மேலும் திமுக அரசின் செயல்பாடு மக்கள் நலனுக்காக அல்ல அரசியல் பிரச்சாரத்திற்காக என்ற குற்றச்சாட்டையும் அவர் முன் வைத்தார். அண்ணாமலையின் இந்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. பாஜக ஆதரவாளர்கள் இதனை வரவேற்க திமுக வட்டாரங்கள் இதனை விமர்சித்து வருகின்றன. வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அண்ணாமலை எடுத்துள்ள இந்த நேரடி தாக்குதல் அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும் விஜய்.. கடிதத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்!!

0

TVK: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களே ஆகியுள்ளது. கட்சி தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் விஜய் மக்களை சந்திக்காமல் சமூக ஊடகங்கள் மூலமாக மட்டுமே தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து வந்தார். இதனால் அவர் வொர்க் பிரம் ஹோம் தலைவர் என்று விமர்சிக்கப்பட்டார். இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக 2 மாபெரும் மாநாடுகளை நடத்தினார்.

பிறகு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மட்டும் பிரச்சாரங்களை நடத்த போவதாக அறிவித்திருந்தார். இதன் காரணமாக அவரை பலரும் வீக் எண்ட் அரசியல் தலைவர் என்றும், இந்த பிரச்சாரம் பலனிக்காது என்றும் கூறி வந்தனர். இதனை கண்டு கொள்ளாத விஜய் தனது பயணத்தை தொடங்கினார். 5 இடங்களில் பிரச்சாரம் செய்த அவர், அதனையடுத்து கரூரில் பிரச்சாரம் செய்யும் போது, கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து எந்த கருத்தும் வெளியிடாத விஜய் 3 நாட்கள் கழித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில், வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதனை தொடர்ந்து அவர்களிடம் வீடியோ கால் மூலமாகவும் பேசினார். இந்நிலையில் அவர்களை நேரில் சந்திப்பதற்க்காக தமிழக டிஜிபிக்கு பாதுகாப்பு கோரி தவெக சார்பில் கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், பாதிக்கப்பட்டவர்களை பார்வையிடும் போது, அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், பாதுகாப்பு வீரர்கள் மட்டுமே உடனிருக்க வேண்டும் என்றும், திருச்சி விமான நிலையத்தின் உள்ளேயும், வெளியேயும் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் விஜய் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும் போது மீடியாக்களுக்கு அனுமதி அளிக்க கூடாது என்றும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

‘IAF மெனு’ வைரலா? பாகிஸ்தானின் வசைபாடலா அல்லது வெறும் இணைய வேடிக்கையா?

0

இந்திய விமானப்படை (IAF) தனது 93வது ஆண்டு விழாவிற்காக உருவாக்கியதாகக் கூறப்படும் மெனு வைரலாகி வருகிறது, அதில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பாகிஸ்தான் நகரங்களின் பெயரிடப்பட்ட உணவுகள் இடம்பெற்றுள்ளன.

இந்திய விமானப்படை தனது 93வது ஆண்டு விழாவை முன்னிட்டு தயாரித்ததாகக் கூறப்படும் இரவு உணவு மெனுவின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. “IAF இரவு உணவு மெனுவில்” ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது இலக்கு வைக்கப்பட்ட பாகிஸ்தான் நகரங்களின் பெயரிடப்பட்ட உணவுகள் இடம்பெற்றிருந்தன – மேலும் பாஜக தலைவர்களும் ஓய்வுபெற்ற பாதுகாப்பு அதிகாரிகளும் இதைப் பற்றிப் பேசுவதை நிறுத்த முடியாது. X இல் படத்தைப் பகிர்ந்தவர்களில் பாஜகவின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற விவகார அமைச்சருமான கிரண் ரிஜிஜுவும் ஒருவர். படத்தின் நம்பகத்தன்மையை டைம்ஸ் நவ் சுயாதீனமாக சரிபார்க்கவில்லை.

“#விமானப்படை தின சிறப்பு நிகழ்வில் இந்திய விமானப்படை தயாரித்த சுவாரஸ்யமான மெனு. இந்திய விமானப்படையின் இரவு உணவு மெனுவில் #ஆபரேஷன் சிந்தூரின் போது இந்திய விமானப்படையால் குண்டுவீசித் தகர்க்கப்பட்ட பாகிஸ்தானின் விமானப்படைத் தளங்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன,” என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தில் சிறுபான்மை விவகாரத் துறையையும் வைத்திருக்கும் ரிஜிஜு எழுதினார்.

“மெனுவில்” உள்ள உணவுகள் ஆச்சரியப்படத்தக்க வகையில் நகைச்சுவையுடன் குறிப்பிடப்பட்டன.பிரதான பாடத்திட்டத்தில் ‘ராவல்பிண்டி சிக்கன் டிக்கா மசாலா’, ‘ரஃபிகி ரஹாரா மட்டன்’, ‘போலாரி பனீர் மேத்தி மலை’, ‘சுக்குர் ஷாம் சவேரா கோஃப்தா’, ‘சர்கோதா தால் மக்கானி’, ‘ஜகோபாபாத் மேவா புலாவ்’ மற்றும் ‘பாகிஸ்தானின் ஐஏஎஃப் நகரங்கள் மோதலின் போது இலக்கு வைக்கப்பட்ட நகரங்கள் என அனைத்தும் இடம்பெற்றன.

நகைச்சுவை அங்கு முடிவடையவில்லை. ‘பாலகோட் டிராமிசு’, ‘முசாபராபாத் குல்ஃபி ஃபலுடா’ மற்றும் ‘முரிட்கே மீட்டா பான்’ ஆகியவை இனிப்புப் பண்டங்களில் அடங்கும் – இந்த நடவடிக்கையின் காரணமாக விமானப்படையால் தாக்கப்பட்ட பயங்கரவாத முகாம்கள் மற்றும் தலைமையகம்.
“விமானப்படை மற்றும் ஆயுதப்படைகள் தேசிய எழுத்து முறையைப் பின்பற்றுகின்றன. தேசிய எழுத்து முறை என்னவென்றால்: நாங்கள் பாகிஸ்தானைத் தாக்கினோம் – ஒன்பது பயங்கரவாதத் தளங்களைத் தாக்கினோம் – 12 விமானத் தளங்களில் 11 – முற்றிலுமாக அழிக்கப்பட்டன. விமானப்படை தினத்தன்று இதைக் கொண்டாடக்கூடாது என்பதற்கான எந்த காரணத்தையும் நான் காணவில்லை,” என்று மேஜர் ஜெனரல் (டாக்டர்) ஜிடி பக்ஷி டைம்ஸ் நவ்விடம் கூறினார்.

விமானப்படை சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியைக் கொண்டாடுவதில் எந்தத் தவறும் இல்லை என்றும் ஏர் மார்ஷல் ஆர்.ஜி.கே. கபூர் கூறினார்.

“நாங்கள் உருவாக்க விரும்பும் விளைவுகளை வெளிப்படுத்துவதில் இது ஒரு பகுதியாகும். பிரதான உணவுப் பாதை முக்கிய விமான தளங்களையும், இனிப்புப் பாதை பயங்கரவாத முகாம்கள் மற்றும் தலைமையகங்களையும் குறிக்கிறது” என்று ஏர் மார்ஷல் ஆர்.ஜி.கே. கபூர் கூறினார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா உட்பட பல உயர்மட்ட தலைவர்கள் சமூக ஊடகங்களில் மெனுவைப் பகிர்ந்துள்ளனர்.
“உணவு பரிமாறுவதிலிருந்து நீதி வழங்குவது வரை. இப்போது IAF இன் மெனு கூட இப்போது ஒரு புதிய இயல்பை வெளிப்படுத்துகிறது! 26/11 தாக்குதல் நடந்த காலம் போய்விட்டது, வெளிநாட்டு சக்திகளால் P. சிதம்பரத்தின் கூற்றுப்படி எந்த நடவடிக்கையும் அனுமதிக்கப்படவில்லை. இப்போது அது ஒரு புதிய மாதிரி. கர் மே குஸ் கர் மாரோ,” என்று பூனவல்லா X இல் படத்தைப் பகிரும்போது தலைப்பிட்டார்.
ஏப்ரல் 22 பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 அன்று இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற திட்டத்தைத் தொடங்கியது, பாகிஸ்தானுக்குள் ஆழமான பகுதிகளில் பல பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அழிக்க விமான சக்தியைப் பயன்படுத்தியது.
இந்தத் தாக்குதல்கள் நான்கு நாட்கள் கடுமையான மோதல்களைத் தூண்டின, மே 10 அன்று இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த F-16 ஜெட் விமானங்கள் மற்றும் சீன வம்சாவளியைச் சேர்ந்த JF-17 விமானங்கள் உட்பட குறைந்தது ஒரு டஜன் பாகிஸ்தான் இராணுவ விமானங்கள், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியத் தாக்குதல்களில் அழிக்கப்பட்டன அல்லது சேதமடைந்தன.
இந்திய விமானப்படையின் ஆபரேஷன் சிந்தூர் செயல்பாடானது, ஒரு சில நாட்களில் இராணுவ விளைவுகளை வடிவமைப்பதில் விமான சக்தியை எவ்வாறு திறம்பட பயன்படுத்த முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்துள்ளது என்று விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏபி சிங் இந்த வாரம் நடந்த ஒரு நிகழ்வில் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையின் போது எதிரி இலக்குகள் மீது தனது படையின் “துணிச்சலான மற்றும் துல்லியமான” தாக்குதல்கள் தேசிய நனவில் தாக்குதல் வான் நடவடிக்கைக்கான சரியான இடத்தை மீட்டெடுத்ததாகவும் சிங் கூறினார்.
ஹிண்டன் விமானப்படை தளத்தில் 93வது விமானப்படை தினத்தை முன்னிட்டு விமானப்படை வீரர்களிடையே விமானப்படைத் தலைமை மார்ஷல் உரையாற்றினார். இந்திய விமானப்படை (IAF) அக்டோபர் 8, 1932 அன்று அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது சிறப்பான செயல்திறனுக்காக ரஃபேல் படை உட்பட பல IAF பிரிவுகளுக்கு சிங் பாராட்டுகளை வழங்கினார்.

திருமா சம்மதித்தால் மட்டுமே பாமகவிற்கு கூட்டணியில் இடம்.. கறார் காட்டும் திமுக!!

0

DMK PMK VSK: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் தருவாயில் பாமக, தேமுதிக, தவெக உடன் யார் கூட்டணி அமைப்பது என்ற போட்டி திராவிட கட்சிகளிடையே தொடங்கியுள்ளது. தவெக அதிமுக உடன் கூட்டணி அமைத்து விட்டது, ஆனால் அது இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்ற தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸை இபிஎஸ் மற்றும் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஆனால் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றே கூறப்பட்டது. இந்நிலையில் ராமதாஸ் திமுகவுடன் நெருக்கம் காட்டி வருவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இவர் திமுகவில் இணைவார் என்று பேசப்பட்டு வந்த சமயத்தில், பாமக கூட்டணியில் இணைவது திமுக தலைமையின் கையில் இல்லை, திருமாவின் கையில் தான் உள்ளது என்று திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

ஏனென்றால் திருமாவளவன் ஒரு முறை, பாமக-பாஜக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது என்று கூறியிருந்தார். இதனால் நீண்ட காலமாக திமுகவிலிருக்கும் கட்சியின் எதிர்ப்பை மீறி பாமகவை கூட்டணியில் சேர்க்க முடியாது என்று திமுக கறார் காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் பாமகவை விட்டு வைக்கவும் திமுகவிற்கு மனமில்லை, அதே சமயம் விசிக கூட்டணியிலிருக்க வேண்டும் என்றும் திமுக தலைமை நினைக்கிறது. இதனால் திருமாவளவனை சமாதானபடுத்தும் முயற்சியில் திமுக தலைமையே நேரில் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் திருமாவளவன் தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பதாக விசிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.