Home Blog Page 90

திமுக-தவெக சண்டையில் முன்னிலை அடையும் அதிமுக.. விபத்தை அரசியலாக்கியதை வெளிச்சமாக்கிய இபிஎஸ்!!

0

ADMK TVK: 2026க்கு முன்பு வரை தமிழகத்தில் அதிமுக, திமுக என்ற இரு பெரும் கட்சிகள் தான் ஆட்சி செய்து வந்தது. தற்போது அவற்றை பின்னுக்கு தள்ளும் வகையில், தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்டு வந்த விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். திமுகவை அரசியல் எதிரியாக கருதிய விஜய், கரூரில் ஏற்பட்ட விபத்து காரணமாக அரசியல் பின்னடைவை சந்தித்துள்ளார்.

விபத்திற்கு  காரணம் திமுகவின் கவனக்குறைவும், தவெகவின் குறைந்த அரசியல் அனுபவமும் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். இந்த நிலையை பயன்படுத்தி அதிமுக அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறது என்பது உறுதியாகியுள்ளது. ஏனென்றால் அரசியல் அனுபவம் இல்லாத விஜய்யை திமுக கூட்டணி கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், அதிமுக அவருக்கு ஆதரவு அளித்தால் அக்கட்சியின் மேல் மக்களுக்கு நல்ல மதிப்பு உண்டாகும் என்பதையும், விஜய்யும் அதிமுக உடன் கூட்டணி அமைக்கலாம் என்ற முடிவுக்கு வருவார் என்பதையும் மனதில் வைத்து தான் இபிஎஸ் விஜய்க்கு ஆதரவு அளிக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.

மேலும் தவெகவிற்கு இளைஞர்களின் ஆதரவு அதிகம் இருப்பதால், நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவை இளைஞர் பட்டாளத்தை வைத்து முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என்று அதிமுக தலைமை திட்டம் திட்டி வருவதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுகவை வீழ்த்தி, சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் இருக்கும் இபிஎஸ்க்கு விஜய்யின் வருகை சாதகமாக அமைந்துள்ளது.

நீதி​மன்​றம் சில நேர்​மை​யான தீர்ப்​பு​களை​யும் வழங்க வேண்​டும்.. நயினார் நாகேந்திரனின் சர்ச்சை குறிய கருத்து!!

0

BJP: திமுக அரசை வீழ்த்த வேண்டுமென்ற நோக்குடனும் தமிழகத்தில் காலூன்ற வேண்டுமென்ற ஆசையாலும் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுகவுடன் கூட்டணியை அமைத்துள்ளது. அதிமுக கூட்டணியில் இணைந்த பொழுது பல்வேறு வகையான சிக்கல்கள் ஏற்பட்டது.  இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கரூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இது விஜய்க்கு பெரும் அரசியல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையை பயன்படுத்தி பாஜக, விஜய்யுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்பதற்காக தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜகவுடன் விஜய் மறைமுக கூட்டணி வைத்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் அனைத்தும் திமுக அரசின் சதி என்று கூறியுள்ளார். திமுக அரசில் எத்தனையோ இடங்களில், எத்தனையோ பேர் எதிர்பாராத விதமாக இறந்திருக்கிறார்கள்.

அதற்கெல்லாம் நேரில் செல்லாத ஸ்டாலின் இதற்கு மட்டும் எப்படி அரை மணி நேரத்தில் வந்தார் என்றும் கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்பு நீதிமன்றம் விஜய்க்கு 10 கண்டனங்களை தெரிவித்திருந்தது. விஜய்க்கு தலைமை பண்பு இல்லை எனவும் கரூரில் ஏற்பட்டது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவு என்றும் குறிப்பிட்டிருந்தது. இதனை மையப்படுத்தி பேசிய நயினார் நாகேந்திரன் நீதிமன்றத்தையும் சாடியிருந்தார்.

தவறு செய்தவர்களை காப்பாற்றுவதற்கு நாங்கள் ஒன்றும் நீதிமன்றம் கிடையாது, அரசியல் கட்சி வைத்திருக்கிறோம் அவ்வளவுதான். நீதிமன்றம் சில நேர்மையான தீர்ப்புகளையும் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். இவர் நீதிமன்றத்தை இவ்வாறு விமர்சித்திருப்பது அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் விவாதமாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நீதிமன்றம் தவறு செய்தவர்களை காப்பாற்றுகிறது என்று கூறிய கருத்துக்கு அனைத்து தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

அரசியல் கட்சிகள் நீதிமன்றத்தின் மேல் அதிகாரம் செலுத்தக் கூடாது என்பதை இவர் வலியுறுத்தி கூறுவதாக தெரிகிறது. ஆளுங்கட்சி மீதான எதிர்மறையான மனநிலையையும், நீதிமன்றம் விஜய்க்கு விதித்த கண்டனங்களையும் அவர் சுட்டிக்காட்டி பேசியிருப்பது விஜய்யை பாஜக பாதுகாக்கிறது என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் பலர் கூறுகின்றனர்.

அமைச்சர் பதவி-ஜாமீன் இடையே சிக்கிய செந்தில் பாலாஜி.. அமைச்சராகனும்னா அனுமதி வாங்கணும்!!

0

DMK: ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அதிமுகவில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் 2023 ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தது.

ஜாமீன் பெற்று வெளியே வந்த செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவியேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜாமீன் வழங்கப்பட்ட சில நாட்களில் செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்ற நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் ஜாமீன் அல்லது அமைச்சர் பதவி இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யுமாறு செந்தில் பாலாஜியிடம் தெரிவித்தது.

இதையடுத்து அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார். இந்நிலையில் பண மோசடி தொடர்பான வழக்கில் கோர்ட் சில கருத்துக்களை நீக்கி உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டுக்கு செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கு விசாரணையில் இருக்கும் போது குற்றம் சாட்டப்பட்டவர் அமைச்சராக நீடிக்க கூடாது என கூற முடியாது என வாதிட்டார்.

இதற்கு பதில் அளித்த நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டு உள்ள நிலையில் அவர் அமைச்சராக இருந்தால் சாட்சியங்களை கலைக்கும் அபாயம் உள்ளது. ஆனால் அவர் அமைச்சராக வேண்டுமானால் தனி மனுவாக தாக்கல் செய்து கோர்ட் அனுமதி பெறலாம், ஜாமீன் விதிகளை மீறினால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதன்மூலம் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகலாம் என்றாலும் அது சுப்ரீம் கோர்ட்டின் அனுமதியுடன் மட்டுமே சாத்தியம் என தெளிவாக கூறப்பட்டுள்ளது. மேலும், அமலாக்கத்துறை உட்பட அனைத்து தரப்புகளிலிருந்தும் பதிலை கோரி வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

செருப்பு வீச்சு முதல் குறுகிய இடம் வரை.. முன்னாள் அமைச்சர் ஒருவர் தான் காரணம் .. கொதித்து பேசிய பிரேமலதா!!

0

DMDK DMK: கடந்த சில நாட்களாகவே நாட்டையே உலுக்கியுள்ள துயர சம்பவம் கரூர் உயிரிழப்புகள் தான். சம்பவம் நடந்த அன்று இரவு தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களை பார்க்காமல் சென்றது அனைவரையும் அதிருப்த்திக்குள்ளாக்கியது. மூன்று நாட்களுக்கு பிறகு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட விஜய், அந்த பதிவில் கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் நேற்று முன் தினம் கிருஷ்ணகிரியில் பரப்புரை நடத்திய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கரூர் சம்பவத்திற்கு விஜய்யும், முதல்வர் ஸ்டாலினும் தான் காரணம் என்று கூறியிருந்தார். மேலும் கரூர் துயரத்திற்கு கரூர் முன்னாள் அமைச்சர் ஒருவர் தான் காரணம் என்று நன்றாக தெரியும் என்றும் கூறியிருக்கிறார். சுமார் 100 அடி கொண்ட பகுதியை ஒதுக்க யார் அனுமதி அளித்தது. அந்த கூட்ட நெரிசலில் ஆம்புலன்ஸ் வருவதற்கு யார் அனுமதி அளித்தது.

விஜய்யின் தொண்டர்களோ, ரசிகர்களோ அவர் மீது செருப்பு வீசுவதற்கு வாய்ப்பு இல்லை. அப்படி இருக்க அவர் மீது வீசப்பட்ட செருப்பு செந்தில் பாலாஜியின் சதி என்றும் கூறினார். விஜய் ஏற்கனவே 5 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், அங்கெல்லாம் நிகழாத அசம்பாவிதம் செந்தில் பாலாஜியின் கோட்டையாக கருதப்படும் கரூரில் மட்டும் நிகழ்ந்திருப்பது இதில் அவரின் சதி வேலை இருப்பதை உறுதிப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார். பிரேமலதா விஜயகாந்த் விஜய்யிக்கு சாதகமாக பேசியது கேள்வி குறியாகியுள்ளது.

அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய தவெக.. பாஜகவும் இல்லை அதிமுகவும் இல்லை!!

0

CONGRESS TVK: விஜய் கட்சி ஆரம்பித்ததிலிருந்தே அவர் யாருடன் கூட்டணி அமைப்பார் என்று அனைவரும் எதிர்நோக்கி காத்திருந்தனர். ஆனால் கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் பாஜக உடன் நெருக்கம் காட்டுவதாகவும் சில தகவல் பரவியது. ஆனால் தற்போது புதிய திருப்பமாக இருப்பது என்னவென்றால் விஜய்- காங்கிரஸ் கூட்டணி தான். ஆரம்பத்திலிருந்தே விஜய்க்கும், ராகுல் காந்திக்கும் நல்ல நட்புறவு இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இந்நிலையில் கரூரில் நடைபெற்ற துயர சம்பவம் தொடர்பாக கட்சிகள் அனைத்தும் விஜய்யை குறை கூறி வந்த சமயத்தில், ராகுல் காந்தி விஜய்யிடம் தொலைபேசியில் பேசி ஆறுதல் அளித்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது வழக்கு பதியப்பட்ட போது, இதற்கு காரணமான விஜய் மீது ஏன் வழக்கு தொடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பபட்டது.

இதற்குறிய பதிலை ஆராயும் போது தான், திமுக கூட்டணியிலிருக்கும் காங்கிரஸ் விஜய் மீது வழக்கு பதிய வேண்டாமென்று வற்புறுத்தி கூறியதாகவும், அதனால் தான் திமுக அதனை மறுத்தது என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா டெல்லி பயணம் மேற்கொண்டது, பாஜக தலைவர்களை சந்திக்க தான் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் இதனை மற்றொரு கோணத்திலிருந்து பார்த்தால், ராகுல் காந்தியை சந்தித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்க்காக விஜய் அவரை டெல்லிக்கு அனுப்பினார் என்ற செய்தியும் பரவி வருகிறது.

திமுக குடுமி பாஜக கையில்.. குழப்பத்தில் திமுக தலைமை.. குஷியில் விஜய்!!

0

BJP TVK DMK: கரூரில் ஏற்பட்ட இழப்புகளை வைத்து பல்வேறு கட்சிகளும் அரசியல் செய்து வருகின்றன என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த துயர சம்பவத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம் என திமுக கேட்டு கொண்டது. ஆனால் அதை திமுக அரசே மீறுவது தான் வேடிக்கையாக உள்ளது. இந்த விஷயத்தில் திமுக நேரடியாக காய் நகர்த்தாமல் கூட்டணி கட்சிகளை வைத்து விஜய்க்கு எதிராக ஊடகங்களிடம் பேசி வருகிறது என்றும் கூறப்படுகிறது.

இவ்வாறு செய்வதன் மூலம் விஜய்க்கு ஆதரவு குறையும் என்று எதிர்பார்த்த சமயத்தில் தான், மக்கள் மத்தியில் விஜய்க்கு அனுதாபம் பெருகியுள்ளது. இந்த விமர்சனம் விஜய்யை அதிமுக, பாஜக பக்கம் தள்ளும் சூழ்நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தான் கரூர் விவகாரம் தொடர்பாக பாஜக அமைத்த 8 பேர் கொண்ட குழு திமுகவிற்கு எதிராக சில ஆதாரங்களை திரட்டி இருப்பதாக விஜய்யிடம் அமித்ஷா கூறியதாக தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்து விரிவாக பேச இவர்கள் இருவரும் கூடிய விரைவில் நேரில் சந்திக்க போவதாகவும், தகவல் கிடைத்துள்ளது. திமுகவை வீழ்த்த வேண்டுமென்ற ஒரே நோக்குடன் செயல்பட்டு வரும் பாஜக அதற்கு எதிரான ஆதாரங்களை சேகரிப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. கரூரில் தற்போது விஜய்க்கு எதிரான சில செயல்பாடுகள் நடைபெற்று வருவதாக, அமித்ஷா கூறியதால் தான் விஜய் இன்னும் கரூருக்கு செல்லாமல் இருக்கிறார் என்றும் பேசப்பட்டு வருகிறது.

மனிதக் கழிவுகள் அகற்றும் பணியில் தொடரும் மரணங்கள் – வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய திமுக

0

மனிதக் கழிவுகள் அகற்றும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் முறையான பாதுகாப்பு இல்லாத காரணத்தால் மரணிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் இவ்வாறு நடக்கும் மரணங்களை தடுக்கும் வகையில் எந்திரங்களை பயன்படுத்தி கழிவுகளை அகற்றுவோம் என தேர்தல் வாக்குறுதியில் திமுக அறிவித்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு இன்று வரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்ற அக்கட்சிக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

திமுக அரசின் வாக்குறுதிகள் கேள்விக்குறியாகின்றன

தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள திமுக அரசு, சமூகநீதியின் பெயரில் “மனிதக் கழிவு அகற்றும் தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” என்ற வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதற்காக கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளது.
பாதுகாப்பும் மரியாதையும் கிடைக்கும் என்று மீண்டும் மீண்டும் உறுதி அளித்தும், கழிவுநீர் குழாய்கள் மற்றும் செப்டிக் டேங்க்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் உயிரிழக்கின்றனர். இது ஆட்சியிலும் நடைமுறையிலும் உள்ள பெரிய இடைவெளியைக் காட்டுகிறது.

வாக்குறுதி vs நிதர்சனம்

2021 தேர்தலுக்கு முன், திமுக தனது தேர்தல் அறிக்கையில் மனிதக் கழிவுகளை கைமுறையாக அகற்றும் பழக்கத்தை முற்றிலும் ஒழிப்பதாக அறிவித்தது.
அந்த வாக்குறுதியில், நவீன இயந்திரங்கள் மூலம் சுத்திகரிப்பு, ஆபத்தான பணிகளில் மனிதர்களை பயன்படுத்த தடை, மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் குறித்து கூறப்பட்டது.
ஆனால் நான்கு ஆண்டுகள் கடந்தபோது, அந்த நம்பிக்கை இன்று சிதைந்துவிட்டது.

நிகழ்வுகள் சொல்லும் கொடூரம்

பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், மேற்பார்வையின்றி கழிவுநீர் குழாய்களில் இறங்கும் தொழிலாளர்கள் இன்னும் உயிரிழக்கின்றனர்.
ஒவ்வொரு மரணமும் அலட்சியம், மௌனம், மற்றும் நிர்வாகத்தின் புறக்கணிப்பின் கதை பேசுகிறது.

புள்ளிவிவரங்கள் இதையே உறுதிப்படுத்துகின்றன:

2021: 6 முதல் 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு

2022: 14 முதல் 16 மரணங்கள்

2023: 15–18 மரணங்கள் (அதில் மே மாதத்தில் மட்டும் 5 சம்பவங்கள்)

2024: மேலும் 12–15 மரணங்கள்

2025 (செப்டம்பர் வரை): 8 மரணங்கள் – அதில் திருப்பூரில் ஒரே நாளில் மூன்று பேர் உயிரிழந்தனர்

சமீபத்தில் சென்னை கொளத்தூர் திருப்பதி நகர் அருகே, குப்பன் என்ற தொழிலாளர் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும் போது நச்சுவாயு தாக்கத்தில் சுவாசமின்றி இறந்தார்.
இது பதிவு செய்யப்பட்ட பல சம்பவங்களில் ஒன்றே; சமூக ஆர்வலர்கள் கூறுவதுபடி, உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகம்.

திட்டங்கள் காகிதத்தில் மட்டுமே

சில பகுதிகளில் 2021ல் ரோபோடிக் கிளீனிங் மெஷின்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அதன் பரவல் மெதுவாக உள்ளது.
பெரும்பாலான மாவட்டங்களில் இன்னும் கைமுறையிலேயே கழிவு அகற்றப்படுகிறது.

அண்ணல் அம்பேத்கர் பிஸினஸ் சாம்பியன்ஸ் திட்டம் (AABCS) – சுத்திகரிப்பு தொழிலாளர்களை தொழில்முனைவோராக மாற்றும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டாலும், அது செயல்பாட்டில் தோல்வியடைந்துள்ளது. 2023 நடுப்பகுதியில் அது காகிதத்திலேயே இருந்தது என ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மௌனமான கூட்டணி கட்சிகள்

சமூக நீதி குறித்து வலியுறுத்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK) மற்றும் காங்கிரஸ் போன்ற கூட்டணிக் கட்சிகள், இந்த மரணங்களைப் பற்றிச் சொல்லாமல் மௌனமாகவே உள்ளன.
சிறுபான்மையினர் இதை தங்கள் மரியாதை மற்றும் சமத்துவ போராட்டத்துக்கு துரோகம் எனக் காண்கிறார்கள்.

நீதிக்காக காத்திருக்கும் குடும்பங்கள்

இந்தத் தொழிலில் உயிரிழப்பவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.
ஆனால் இத்தகைய வழக்குகளில் தண்டனை கிடைப்பது அரிது.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மாதங்களாக, சில சமயம் ஆண்டுகளாக கூட நஷ்ட ஈடு பெற காத்திருக்கின்றனர்.
அவர்கள் குடிமக்களாக அல்ல, புள்ளிவிவரங்களாக மட்டுமே பார்க்கப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

நிலையான தீர்வு இல்லாத நிலை

2021 தேர்தல் அறிக்கையில் திமுக கூறியது —

“மனித உழைப்பை இயந்திரங்களால் மாற்றுவோம், தொழிலாளர்களை மீளக் குடியேற்றுவோம், பொறுப்பாளர்களுக்கு தண்டனை வழங்குவோம்.”

ஆனால் நான்கு ஆண்டுகள் கழித்து, தமிழ் நாட்டின் கழிவுநீர் குழாய்கள் இன்னும் உயிரை விழுங்கிக் கொண்டிருக்கின்றன.
அரசு கவனம் அமைப்புசார் மாற்றத்திலிருந்து விளம்பரப் புகழுக்கு மாறிவிட்டதாக விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மனிதக் கழிவு அகற்றும் பணியில் மரணங்கள் தொடர்வது, ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மனித மரியாதைக்கும் எதிரான கரும்புள்ளி.
அரசு உண்மையான பொறுப்புணர்வுடன் இயந்திரமயமாக்கலை விரைவுபடுத்தி, தொழிலாளர்களுக்கு மரியாதை, பாதுகாப்பு, நியாயம் வழங்காவிட்டால் —
“மனிதக் கழிவுகள் அகற்றும் தொழிலை ஒழிப்போம்” என்ற வாக்குறுதி, இன்னும் நிறைவேறாத வாக்குறுதியாகவே இருக்கும்.

இது வெறும் புள்ளிவிவரம் அல்ல — உயிர்களின் கதை.
நீதியும் மரியாதையும் காத்திருக்கும் அந்த குடும்பங்களுக்கு, அரசின் இந்த மௌனம் மிகக் கடுமையான தண்டனையாகிறது.

உங்கள நம்பி பிரயோஜனம் இல்ல.. ரூட்டை மாற்றிய விஜய்.. டிமிக்கி கொடுத்த ஆனந்த்துக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!!

0

TVK: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஒன்றரை வருடங்களே ஆன நிலையில் அதன் செல்வாக்கு பெருகிய வண்ணம் உள்ளது. இந்நிலையில் இரண்டு மாபெரும் மாநாடுகளை நடத்திய விஜய், மக்களை சந்திக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்ததுடன், 60க்கும் மேற்பட்டோர் அதிக காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து கரூர் போலீசார் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்களில் ஒருவரான மதியழகன் பிடிபட்ட நிலையில், மீதமிருக்கும் நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஜாமீன் கோரியிருந்தார். இதற்கு நீதிமன்றம், நீங்கள் தானே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், நீங்கள் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியது.

இதற்கு பதிலளித்த புஸ்ஸி ஆனந்த் தரப்பு நான் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கவில்லை. கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் தான் ஏற்பாடு செய்தார் என்று கூறியிருந்தார். இதனால் பலரும் புஸ்ஸி ஆனந்த்யை விமர்சித்து வந்தனர். பிரச்சனை என்று வந்த உடனேயே இப்படி கை நழுவும் இரண்டாம் கட்ட தலைவர்கள் நாளை எப்படி தமிழகத்தை காப்பாற்ற போகிறார்கள் என்றும் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வந்தனர்.

இந்த இக்கட்டான நிலையில், விஜய் யாரையும் நம்ப முடியாத நிலையில் உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனால் அவர் அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் ரசிகர் மன்ற தலைவர்களை, கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களாக்க முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது. புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார், மதியழகன், போன்றோருக்கு விஜய் உதவாமல் இருந்தது அவர்களை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக மறைமுகமாக அறிவித்ததாகவும் சிலர் கூறுகின்றனர்.

“குழந்தைகளுக்கு இருமல் சிரப் தேவையில்லை” – முன்னணி நரம்பியல் நிபுணர் அறிவுரை 

0

இந்தியாவின் முன்னணி நரம்பியல் நிபுணரான டாக்டர் சுதீர் குமார், குழந்தைகளுக்கு குளிர் மற்றும் இருமல் ஏற்பட்டால் இருமல் சிரப் (cough syrup) கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அவரது கூற்றுப்படி, “இருமல் மருந்துகள் குழந்தைகளின் குணமடைவதை வேகப்படுத்தாது.”

டாக்டர் குமார் கூறியதாவது:

“குழந்தைகளில் பெரும்பாலான இருமல் வைரஸ் தொற்று காரணமாக ஏற்படுகிறது. இத்தொற்று இயல்பாகவே ஒரு வாரத்திற்குள் தானாகக் குறைந்து விடும்.
இருமல் மருந்துகள் இத்தொற்றை குணப்படுத்தவோ அல்லது குறுகிய காலத்தில் நீக்கவோ முடியாது.

மேலும், இம்மருந்துகளில் உள்ள ஆன்டி-ஹிஸ்டமின், டிகாங்ஜஸ்டன்ட், கோடீன் போன்ற மூலப்பொருட்கள் தூக்கத்தின்மை, இதய துடிப்பு மாறுதல், அல்லது சுவாசக்குறைபாடு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்,” என அவர் சமூக வலைத்தளம் X (முன்னாள் ட்விட்டர்)-இல் எழுதியுள்ளார்.

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 16 குழந்தைகள் உயிரிழப்பு

டாக்டர் குமாரின் இந்த எச்சரிக்கை, சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில் “கோல்ட்ரிஃப்” (Coldrif) என்ற இருமல் சிரப் குடித்ததையடுத்து குறைந்தது 14 குழந்தைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து வெளி வந்தது.மேலும் ராஜஸ்தானிலும் அதே மருந்தை உட்கொண்ட இரண்டு குழந்தைகள் கடந்த வாரம் உயிரிழந்தனர்.

மாநில அரசு இந்த சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளுக்கு இந்த மருந்தை பரிந்துரைத்த மருத்துவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மரணங்களுக்குப் பின்னுள்ள காரணம் என்ன?

முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன — இந்த மருந்துகளில் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த இரசாயனங்கள் namely Diethylene Glycol (DEG) மற்றும் Ethylene Glycol (EG) கலந்து இருப்பது முக்கிய காரணம்.

இவை சில நேரங்களில் மருந்து தயாரிப்பில் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால் இவை மிகவும் ஆபத்தான நச்சுப்பொருட்கள்.அதிகக் குறைந்த அளவில் கூட சிறுநீரகத்தை (Kidney) பாதித்து, இறப்புக்கு காரணமாக முடியும், குறிப்பாக குழந்தைகளில்.

இரசாயன கலப்பால் ஏற்படும் அறிகுறிகள்:

  • வாந்தி, மயக்கம், குழப்பம்

  • நச்சு சேர்மங்கள் காரணமாக சிறுநீரக செயலிழப்பு

  • தீவிர அமில நிலை (metabolic acidosis)

  • fits (பிடிப்பு), மயக்கம் மற்றும் இறப்பு.

பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

டாக்டர் குமாரின் அறிவுரை:

“குழந்தைகளுக்கு இருமல் மருந்துகள் அரிதாகவே தேவைப்படும். அவை குணமடைவதை விரைவுபடுத்தாது.”

அவர் மேலும் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சந்தையில் கலப்படமடைந்த மற்றும் தரமற்ற சிரப்புகள் சுதந்திரமாக விற்பனை செய்யப்படுகின்றன.அதனால் மருந்துகளை நம்பகமான, அங்கீகரிக்கப்பட்ட மருந்தகங்களில் இருந்து மட்டுமே வாங்க வேண்டும்.

“ஒரு குழந்தைக்கு சிரப்பை எடுத்த பிறகு வாந்தி, குழப்பம், அல்லது சிறுநீர் வெளியீடு குறைதல் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
நச்சு தாக்கத்தால் ஏற்படும் சிறுநீரக சேதம் ஆபத்தானதாயினும், விரைவில் கண்டறிந்தால் சிகிச்சையளிக்க முடியும்,” என அவர் கூறினார்.

மேலும், குழந்தைகளில் நீடித்த குளிர் மற்றும் இருமலைக் கட்டுப்படுத்த இயற்கை வழிகள் பயன்படுத்த வேண்டும் என்று டாக்டர் குமார் பரிந்துரைக்கிறார் —
அதாவது, வெந்நீர் குடித்தல், தேன், உப்பு நீர் மூக்கு துளிகள், மற்றும் போதிய ஓய்வு.

போலி மருந்துகள் என்றால் என்ன?

போலி மருந்துகள் உண்மையான பிராண்டு மருந்துகளின் தோற்றத்தில் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் அவை செயலில் ஈடுபடும் மூலப்பொருட்கள் இல்லாதவையாக இருக்கும்.

இவை நோயாளியின் ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.
சில போலி மருந்துகளில் பருந்தீட்டம் (Mercury), ஆர்சனிக், எலி நஞ்சு, சிமெண்டு போன்ற ஆபத்தான பொருட்களும் உள்ளன என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) படி,

குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு 10 மருந்துகளில் ஒன்றாவது தரமற்றது அல்லது போலியானது.

குழந்தைகளுக்கான காசு சிரப்புகள் தேவையில்லை.
அவை குணமடைவதை வேகப்படுத்தாது.சந்தையில் போலி மருந்துகள் அதிகம்; பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும்.

அதிமுக கூட்டணியில் தேமுதிக.. உறுதி செய்த பொதுக்கூட்டம்.. களைகட்டும் சட்டமன்ற தேர்தல்!!

0

DMMK ADMK: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுக, பாஜகவுடன் 1 வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்துவிட்டது. தற்போது இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து யாரை கூட்டணியில் சேர்க்கலாம் என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணியிடம் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், அதற்கு அன்புமணி அதிக இடங்களை கேட்டு வலியுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் வேறு வழியில்லாமல் இபிஎஸ் இதற்கு ஒப்பு கொண்டார் என்றும் கூறப்பட்டது. அடுத்த கட்ட நடவடிக்கையாக தேமுகவி-டம் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளிவந்தது. ஆனால் தேமுதிகவிற்கும், அதிமுகவிற்கும் பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரேமலதா விஜயகாந்த் இதற்கு சம்மதிக்க மாட்டார் என்றும் சிலர் கூறி வந்தனர்.

ஏற்கனவே தேமுதிக விஜய்யுடன் கூட்டணி அமைக்கும் என்ற செய்தியும் பரவி வந்தது. ஆனால் நேற்று கிருஷ்ணகிரியில் நடந்த தேமுதிக பொதுக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினையும், விஜய்யையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

ஆனால் விஜய்க்கு ஆதரவு அளித்த இபிஎஸ்-யை பற்றி எதுவும் பேசவில்லை. எப்போதும் தனது பரப்புரையில் இபிஎஸ்-யை வஞ்சித்து வரும் பிரேமலதா நேற்று அவரை பற்றி பேசாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். இதனால் அதிமுக, தேமுதிக உடன் கூட்டணி குறித்து பேசி வருவதாகவும் சிலர் கூறுகின்றனர். இவரின் இந்த மௌனம் கூட்டணியை உறுதி செய்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.