Home Blog Page 92

முதல்வரை பாராட்டிய டிடிவி தினகரன்.. விஜய் மீதும் தவறு உள்ளது.. டிடிவி தினகரன் பேட்டி!!

0

AMMK DMK: கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக சார்பில் நடைபெற்ற பரப்புரையில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். வரலாறு காணாத இந்த பெருந்துயரம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த நிகழ்விற்கு பலரும் விஜய்யிக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், சிலர் இது திமுகவின் சதி வேலை என்றும் கூறி வந்தனர். இந்த பெருந்துயரத்திற்கு தீர்வு காண  தமிழக அரசு தனி நபர் குழுவும் அமைத்து விசாரணை செய்து  வருகிறது.

இதனை சிபியை கைக்கு மாற்ற வேண்டுமென பல தரப்பினரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கரூர் விபத்துக்கு விஜய் தார்மீக பொறுப்பேற்றிருக்க வேண்டும் எனவும், இந்த விபத்துக்கு காரணம் விஜய் இல்லையென்றாலும் அவரை பார்க்க கூடிய கூட்டத்துக்கு அவர் முழுப்பொறுப்பை ஏற்றிருக்க வேண்டுமெனவும் கூறினார்.

விஜய் பொறுப்பேற்க்காத காரணத்தினால் தான் கோர்ட் வன்மையான கண்டனத்தை தெரிவித்திருக்கிறது என்றும், 50 ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்ட முதல்வர் ஸ்டாலின் கரூர் சம்பவம் ஏற்பட்டதிலிருந்தே அதனை மிகவும் சரியாக கையாள்கிறார் என்றும் கூறினார். தற்போது இருக்கும் சமயத்தில் விஜய்யை கைது செய்தால் அது தவறான முன்னுதாரணமாகி விடும் என்பதால் தான் முதல்வர் நிதானமாக செயல்படுகிறார்.

முதல்வருக்கு யாரையும் கைது செய்யும் எண்ணம் இல்லை, எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வு மீண்டும் நிகழ கூடாது என்பதற்காக அவர் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்கிறார் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் கரூர் சம்பவத்தை வைத்து அதிமுகவுடன் சேர்ந்து, பாஜகவும் அரசியல் செய்வது மிகவும் வேதனை அளிக்கிறது என்றும் கூறியிருந்தார்.

ஓடி ஒழியும் தவெக தலைவர்கள்.. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.. ஒரு பிரச்சாரத்திற்கே பயந்து விட்டால் எப்படி!!

0

TVK: கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெகவின் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. மதியழகன், புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் போன்ற பலர் மீதும் வழக்கு பதியப்பட்ட நிலையில், அண்மையில் மதியழகனை திண்டுக்கல்லில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

இவரிடம் தீவிர விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவரை தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமாரை காவல் துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். இதனால் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் நீதி மன்றத்தில் முன் ஜாமீன் கோரியிருந்தனர். இதற்கு நீதி மன்றம் மறுப்பு தெரிவித்திருந்தது.

இவர்களை தொடர்ந்து தவெகவின் கொள்கை பரப்பு செயலாளரான ராஜ் மோகனும், நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ் குமாரும் தலைமறைவாகி இருக்கிறார்கள். ஏற்கனவே தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களை இன்னும் சந்திக்காமல் இருப்பது அனைவரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

இதனை பலரும் விமர்சித்து வரும் சூழலில் தற்போது தவெகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் தலைமறைவாகி இருப்பது விஜய்க்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தவெக தரப்பின் மேல் தவறில்லை என்றால் அவர்கள் ஏன் ஓடி ஒழிய வேண்டும் என்ற கேள்வியையும் பலர் முன் வைத்து வருகின்றனர். மக்களின் பாராட்டுகள் மட்டும் வேண்டுமென அரசியல் கட்சி நினைக்க கூடாது, துயர சம்பவத்தின் போது அவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விஜய்யை கைது செய்ய திட்டம் தீட்டும் திமுக.. செயல்படுத்தும் பணியில் மும்முரம்!!

0

DMK TVK: திராவிட கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். 2 மாபெரும் மாநாடுகளை நடத்திய அவர் தற்போது தேர்தல் பரப்புரையிலும் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது கரூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். ஒருவரை கைது செய்த போலீசார், தலைமறைவாகி இருப்பவர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் இது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவு என்றும் குறிப்பிட்டிருந்தது. இது குறித்து பேசிய முதல்வர் நீதிமன்றத்தின் அனைத்து விதிகளுக்கும் அரசு கட்டுப்படுகிறது.

இனி இது போன்ற இழப்புகள் நடைபெறாது என்றும் தெரிவித்திருநத்தார். இந்த இழப்புகள் அனைத்திற்கும் பொறுப்பேற்க வேண்டிய தவெக தலைவர் விஜய் மீது வழக்கு பதியப்படாமல் இருப்பது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்ந்து திமுக அரசு விஜய்யை பாதுகாக்கிறதா என்ற கேள்வியையும் பலர் எழுப்பினர். திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவனும் ஏன் விஜய் மீது வழக்கு பதியவில்லை என்ற கேள்வியை கேட்டிருந்தார்.

இந்த அத்தனை கேள்விக்கும் பதிலளித்த ஸ்டாலின், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் விஜய் கைது செய்யப்படுவார் என்று கூறி முடித்தார். திமுக அரசின் தூண்டுதல் மூலம் தான் விஜய் ஏன் கைது செய்யப்படவில்லை என்ற கேள்வியை பலரும் எழுப்பியிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த கேள்வியின் மூலம் விஜய் மீது வழக்கு தொடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்தி, அவரை கைது செய்து விடலாம் எனவும் திமுக திட்டம் திட்டுவதாக சொல்லப்பட்டு வருகிறது.

தவெகவில் தொடங்கிய உட்கட்சி பூசல்.. கொளுத்தி போட்ட தாடி பாலாஜி!!

0

TVK: கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தவெகவை சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது. சம்பவம் நடந்த அன்று இரவு, அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் விஜய் சென்றதை அனைத்து தரப்பினரும் வன்மையாக கண்டித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசு அருணா ஜெகதீசன் தலைமையில் தனி நபர் குழுவை அமைத்து விசாரித்து வருகிறது. இதனை விட ஒரு படி மேலாக சென்ற பாஜக சம்பவ இடத்திற்கே சென்று, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து தீவிர விசாரணை செய்து வருகிறது. பல்வேறு கட்சிகளை சேர்ந்த இரண்டாம் கட்ட தலைவர்களும் கரூர் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தவெகவின் பிரமுகரும், நடிகருமான தாடி பாலாஜி கரூர் சென்று பார்வையிட்டதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆறுதல் கூறினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தான் இடத்தை பார்வையிட்டார்கள், அப்போது அவர்கள் தான் இடத்தை சரியாக தேர்வு செய்திருக்க வேண்டும்.

விஜய் அரசியலுக்கு புதுசு அதனால் அவருக்கு இதனை பற்றி தெரியாது, அவரின் இடத்தில் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்கள் தான் இதனை ஒழுங்குபடுத்தி இருக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் பேசிய அவர், தளபதி தற்போது என்ன நிலைமையில் இருப்பார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்றும் கூறினார். தவெக கட்சியிலிருப்பவரே கட்சிக்கு எதிராக பேசுவது தவெகவிலும் உட்கட்சி பூசல் தொடங்கி விட்டது என்பதற்கான அறிகுறியாகவே உள்ளது என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

எடப்பாடியால் சிதறும் கூட்டணி.. பாஜக-வுக்கு விழும் பெரும் அடி!! வெளியேறப்போகும் முக்கிய கட்சி!!

0

ADMK BJP: தமிழகத்தில் நடைப்பெறப்போகும் சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் 8 மாதக்காலம் இருந்தாலும் நாளுக்குநாள் அதன் எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. தற்போது கட்சி தொடங்கிய விஜய்க்கு இவ்வளவு எதிர்ப்பார்ப்பு இருக்குமா என்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கொண்டு அதிமுக எடப்பாடி முதல் பாஜக , விஜய் என அனைவரும் தங்களின் ஒரே எதிரியாக திமுக-வை குறிவைத்துள்ளனர்.

இதனை மையமாக வைத்து தான் அதிமுக பாஜக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. ஆனால் ஆரம்பத்தில் இவர்களின் கூட்டணி உறுதி செய்யப்பட்ட போது சமரசமான நிலைப்பாடு என்பதே இல்லை. மாறாக கூட்டணி ஆட்சி, முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்தெல்லாம் இவர்களுக்குள்ளே போட்டி நிலவி வந்தது. நாளடைவில் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என்ற அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.

இதனை மறுத்த தினகரன் மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் கட்சியை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருக்கும் பல கட்சிகளும் ஆலோசனை செய்து வருகின்றனர். அந்தவகையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவிலிருந்து விலகிய தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் பாஜவில் இணைந்ததோடு அதன் தலைவர் தென்காசி தொகுதியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

இவர் பாஜகவில் இனைவதற்கு முன்பு அதிமுகவுடன் தான் கூட்டணி வைத்திருந்தார். சில தொகுதி பங்கீடு செய்வதில் பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக அதிமுகவிலிருந்து விலக நேரிட்டது. அதிலும் எடப்பாடி பாஜவிலிருந்து விலகியது இவருக்கு சாதகமாக அமைந்தது. தற்போது மீண்டும் அதிமுக பாஜக வுடன் கூட்டணி வைத்ததில் இவருக்கு பெரும் அதிருப்தி, அதிலும் எடப்பாடி பழனிசாமி பரப்புரை ஒன்றில், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கட்டாயம் மதுரை ஏர்போர்ட்டுக்கு முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

இவ்வாறு எடப்பாடி ஓட்டுக்காக கூறுவது அரசியல் பயணத்திற்கு மிகவும் ஆபத்தானது என்று கூட்டணியிலிருந்துக் கொண்டே எச்சரித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி இவ்வாறு கூறியதற்கு தேவர் சாதியாரின் வாக்கு வங்கியை கவர தான் என அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இதனை எதிர்த்து பேசியிருப்பது கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. கூடிய விரைவிலேயே பாஜகவிலிருந்து விலகும் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யை வீழ்த்த திமுகவின் வழிகாட்டு நெறிமுறைகள்.. கரூர் சம்பவத்தை அரசியலாக்கும் முதல்வர்!!

0

DMK TVK: கடந்த சில நாட்களாகவே கரூர் துயரம் குறித்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது. ஒரு அரசியல் தலைவரின் பிரச்சாரத்திற்கு 41 உயிரிழப்புகள் ஏற்பட்டது இதுவே முதல் முறையாகும். இந்த சம்பவத்திற்கு தவெக தரப்பினர் மீது கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் பாஜகவும், திமுகவும் தனி தனி குழுக்கள் அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணையின் முடிவு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லையென்றும், இது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவு என்றும் கூறியிருந்தது. இந்த கரூர் சம்பவம் விஜய்க்கு அரசியல் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை பயன்படுத்தி கொண்ட திமுக அரசு ஒரு பிரச்சாரத்தை எவ்வாறு நடத்த வேண்டும், வழிகாட்டி நெறிமுறைகளை எப்படி வகுக்க வேண்டும் என்பது குறித்தும், கூட்ட நெரிசல் மரணத்தை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் திட்டம் வகுக்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனிநபர் குழு அமைத்தது, தற்போது வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது போன்ற நடவடிக்கைகளை விஜய்க்கு எதிராக தான் செய்து வருகிறோம் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது திமுக. தமிழகத்தில் எத்தனையோ மரணங்கள் நிகழ்ந்திருக்கிறது, அதற்கெல்லாம் தீவிர விசாரணையை மேற்கொள்ளாத திமுக கரூர் சம்பவத்தில் மட்டும் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டி வருகிறது என்ற கேள்வியை சிலர் முன் வைக்கின்றனர். கரூர் துயரத்திற்கு பிறகு நிகழும் திமுகவின் ஒவ்வொரு அசைவும், விஜய்யை வீழ்த்த வேண்டுமென்ற நோக்கில் தான் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

விஜய்க்கு துணையாக நிற்கும் எஸ். ராஜா.. விஜய் மீது தவறில்லை.. அதிகரிக்கும் விஜய் பலம்!!

0

TVK: செப்டம்பர் 27 ஆம் தேதி நடந்த கரூர் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. 41 உயிர்கள் பறிபோன நிலையில் அனைத்து கட்சி தலைவர்களும் இதற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நரேந்திர மோடி, ஸ்டாலின், விஜய் என பலரும் நிவாரணம் வழங்கினார்கள். இந்நிலையில் திமுக, தவெக என மாறி மாறி விமர்சனங்கள் எழுந்த நிலையில், திமுக தனி நபர் ஆணையம் அமைத்து விசாரித்து வருகிறது.

பல்வேறு தரப்பினரும் தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்தது தான் காரணம் என்றும், பாதிக்கப்பட்டவர்களை பார்க்காமல் சென்றது ஒரு நல்ல அரசியல் தலைவனுக்கு அழகில்லை என்றும் கடுமையாக விமர்சித்து வந்தனர். இதனை தொடர்ந்து நீதி மன்றமும் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லையென்றும், இது எந்த வகையான கட்சி என்றும் கூறி கண்டனங்களை முன் வைத்திருந்தது. ஆனால் இபிஎஸ், அண்ணாமலை, சீமான், ஓபிஎஸ், போன்றோர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.ராஜா கரூர் விவகாரத்தில் விஜய் மீது என்ன தவறு இருக்கிறது, பிரச்சாரத்திற்கு தாமதமாக வந்தது ஒரு தவறா? அவர் வரும் வழியில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்திருக்கலாம், அதனால் தாமதமாகி இருக்கும். இதை ஒரு குறை என்று கூறுவது ஏற்கதக்கது அல்ல. எனக்கு விஜய் மீது கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இந்த விவகாரத்தில் அவருக்கு துணையாக நிற்பேன் என்றும் கூறினார். அவர் மீது தவறில்லை என்பது கூடிய விரைவில் நிரூபிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஸ்டாலின் பேச்சில் தடுமாற்றம்.. தோல்வி பயத்தால் புலம்பும் முதல்வர்.. வானதி சீனிவாசன் பதிலடி!!

0

DMK BJP: தமிழகத்தில் இரு பெரும் திராவிட கட்சியாக அறியப்பட்டு வரும் திமுக, அதிமுக 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. இதற்காக இரண்டு கட்சிகளும், தேர்தல் பிரச்சாரங்களையும், மக்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. இவர்களை முறியடிக்க நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.

அண்மையில் தவெக நடத்திய பிரச்சாரத்தில் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக பாஜக தனி குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த குழு பலரின் விமர்சனத்திற்கு ஆளான நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினும் இது குறித்து சாடியிருந்தார். அடுத்தவர் முதுகில் சவாரி செய்தே பழக்கப்பட்ட பாஜக, பிறர் ரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழும் ஒட்டுண்ணி பாஜக, கரூர் நெரிசலை பயன்படுத்தி யாரை தன் கட்டுப்பாட்டில் வைக்கலாம் என்று வலம் வருகிறார்கள் என கூறியிருக்கிறார்.

இதற்கு பதிலளித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் திமுக கூட்டணி வலிமையாக உள்ளது. நிச்சயம் 200 இடங்களை வெல்வோம் என்று ஸ்டாலின் கூறிவந்தார். ஆனால் தற்போது அவர் பேச்சில் பயமும், தடுமாற்றமும் தெரிகிறது. திமுக இது வரை தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றதே இல்லை, யாராவது ஒருவரின் தயவை நாடியே திமுக வென்றுள்ளது. ஆனால் பாஜக அப்படி இல்லை.

1996 ஆண்டிலேயே தனித்து போட்டியிட்டு சட்டமன்றத்தில் நுழைந்தது என்றும் கூறினார். பாஜகவின் தேர்தல் வரலாறு பலமாக இருக்கும் பட்சத்தில் திமுக இதனை விமர்சிப்பது தான் வேடிக்கையாக உள்ளது என்றும் கூறியிருந்தார். தொடர்ந்து பேசிய அவர் அதிமுக-பாஜக கூட்டணி அமைந்ததை கண்டு முதலமைச்சருக்கு பயன் வந்து விட்டது என்றும், அந்த தோல்வி பயத்தால் தான் பாஜகவை கடுமையாக குறை கூறி வருகிறார் என்றும் கூறினார்.

லடாக் கலவரம்: லேவில் வன்முறை – சோனம் வாங்சுக் மீதான கவனம்

0

லே எரிந்த நாள்

இந்தியாவின் “கிரவுன் ஜுவல்” என அழைக்கப்படும் லடாக் – அதன் மடாலயங்கள், பனிச்சரிவுகள் மற்றும் புவிசார் முக்கியத்துவத்திற்காக அறியப்பட்ட பகுதி – அமைதியின் முகத்தை இழந்து வன்முறையில் சிக்கியது.
செப்டம்பர் 24 அன்று லேவில் ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். மாநில அந்தஸ்து மற்றும் ஆறாம் அட்டவணை (Sixth Schedule) பாதுகாப்பு கோரிய போராட்டம் தீவிரமடைந்து, அரசு அலுவலகங்கள் மற்றும் பாஜக அலுவலகங்கள் மீது தாக்குதல், வாகனங்களுக்கு தீவைத்தல், காவல்துறையுடன் மோதல் ஆகியன நடந்தன.

மாறும் சோனம் வாங்சுக்

“3 இடியட்ஸ்” படக் கதாபாத்திரத்திற்கு தூண்டுதலாகவும், உலகளாவிய சூழல் விருதுகளை பெற்ற கண்டுபிடிப்பாளராகவும் பெயர் பெற்ற சோனம் வாங்சுக் – இப்போது கலவரத்துக்கு தூண்டுதலாக குற்றம் சாட்டப்பட்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
2019ல் 370வது பிரிவு நீக்கப்பட்டு லடாக் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டபோது வாங்சுக் அதனை பாராட்டியிருந்தார். ஆனால் தற்போது மாநில அந்தஸ்து கோரிக்கையும், ஆறாம் அட்டவணை பாதுகாப்பு கோரிக்கையும் முன்வைத்திருப்பது அவரது நிலைப்பாட்டில் முரண்பாடாக விமர்சிக்கப்படுகிறது.

பியாங் நில விவகாரம்

2025 ஆகஸ்ட் 21 அன்று, லே துணை ஆணையர், வாங்சுக்கிற்கு 2018ல் வழங்கப்பட்ட 135 ஏக்கர் நிலக் குத்தகையை ரத்து செய்தார். ஆறு ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் செய்யப்படாதது, பல கோடி ரூபாய் நிலக் கட்டணம் செலுத்தப்படாதது, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக இணைப்பு இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் குத்தகை செல்லாது என தீர்மானிக்கப்பட்டது.
இதனை அரசியல் பழிவாங்கலாகக் கண்ட வாங்சுக், 35 நாள் நோன்பு போராட்டம் மேற்கொண்டார்.

நிதி முறைகேடு குற்றச்சாட்டு

வாங்சுக்கின் அமைப்பான Students Educational and Cultural Movement of Ladakh வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்டம் (FCRA) கீழ் பல மீறல்களுக்குப் பிறகு உரிமம் ரத்து செய்யப்பட்டது. நிதி திசை திருப்பம், முறையற்ற கணக்குகள் மற்றும் அங்கீகாரமில்லாத செயல்களில் பணம் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதேபோன்ற குற்றச்சாட்டுகள் 2007-ல் கூட முன்வைக்கப்பட்டதாக பதிவுகள் காட்டுகின்றன.

நோன்பில் இருந்து கைது வரை

நோன்பு உலகளவில் கவனம் ஈர்த்தது. “சோனம் வாங்சுக் சிறையில் இருப்பது, அவரை வெளியே விடுவதைக் காட்டிலும் ஆட்சிக்கு ஆபத்தானது” என அவர் கூறியிருந்தார். செப்டம்பர் 25 அன்று வன்முறை தீவிரமான போது, அவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

அரசியல் பின்னணி

எதிர்க்கட்சிகள், சமூக ஊடகங்களில் வாங்சுக்கை “நவீன காந்தி” என விளம்பரப்படுத்தி போராட்டத்தை தீவிரப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமர்சகர்கள், இது எல்லைப்பகுதியை தளர்வாக்கும் முயற்சி எனக் கூற, ஆதரவாளர்கள் உண்மையான கோரிக்கைகளை அரசியல் ரீதியாக மாசுபடுத்துவதாக அரசு செயல்படுகிறது என வாதிடுகின்றனர்.

லடாக் & இந்தியா – உயர்ந்த பங்குகள்

லடாக், கலாச்சார அழகை மட்டுமல்லாமல், சீன எல்லை, அரிய கனிமங்கள், இராணுவ முகாம்கள் ஆகியவற்றின் மூலம் தேசிய பாதுகாப்பிற்கும் முக்கியமான பகுதி.
இங்கு நீடித்த கலவரம், உள்ளூர் அரசியலைத் தாண்டி நாட்டின் பாதுகாப்பிற்கே ஆபத்தாகும்.

லடாக் கலவரம், உண்மையான உள்ளூர் கோரிக்கைகள், தனிப்பட்ட சர்ச்சைகள், அரசியல் வாய்ப்புகள் ஆகியவற்றின் கலவையாக உள்ளது.
சோனம் வாங்சுக் – அவர் சமூகசீர்திருத்தவாதியா அல்லது தூண்டுபவரா என்ற கேள்வி இன்னும் திறந்தே உள்ளது. ஆனால் மறுக்க முடியாத ஒன்று – லடாகின் அமைதியான முகம் குலைந்துவிட்டது.

 

கைது செய்யப்படும் ஆதவ் அர்ஜுனா.. நீதிமன்றம் வெளியிட்ட கடும் கண்டனம்!!

0

TVK: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல் காரணமாக 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் தவெகவினர் இது திமுக அரசின் சதி என்றும், திமுகவினர் இது தவெகவின் ஒழுங்கற்ற அரசியல் நிலைப்பாடு என்றும் மாறி மாறி குறை கூறி வருகின்றனர். இதனை தொடர்ந்து தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது கரூர் காவல் துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.

மதியழகனை கைது செய்த போலீசார், மீதமிருக்கும் தலைவர்களையும் தேடி வருகின்றனர். இந்நிலையில் ஆதவ் அர்ஜுன் டெல்லி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த கருத்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை விசாரித்த நீதிமன்றம் விஜய்க்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்தையும் சாடியிருந்தார்.

இது குறித்து பேசிய அவர் நேபாளம், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் ஏற்பட்டதை போல தமிழகத்திலும் புரட்சி வெடிக்க வேண்டுமேன, கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அனைத்திற்கும் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்நோக்கி காத்திருப்பீர்களா? என்றும் கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நீதிபதி கூறியிருந்தார்.