BP: மருந்து மாத்திரை இன்றி 5 நிமிடத்தில் குறைய இந்த பாட்டி வைத்தியத்தை பின்பற்றவும்!

Photo of author

By Divya

BP: மருந்து மாத்திரை இன்றி 5 நிமிடத்தில் குறைய இந்த பாட்டி வைத்தியத்தை பின்பற்றவும்!

இன்றைய உலகில் பணிச்சுமை, குடும்பத்தில் பிரச்சனை, கடன் பிரச்சனை உள்ளிட்ட பல காரணங்களால் பெரும்பாலானோர் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஒரு சிலர் மன அழுத்தம் இருக்கும் பொழுது கண்ணீர் விட்டு அழுது அதை குறைத்துக் கொள்வார்கள். ஒருசிலரால் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவே முடியாது. அவ்வாறு மன அழுத்தம் அதிகமாகும் பொழுது உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படும்.

இதை குறைக்க மருந்து மாத்திரை பயன்படுத்தாமல் பாட்டி வைத்தியக் குறிப்பை பின்பற்றவும்.

1)வெந்தயம்
2)சுக்கு
3)சீரகம்
4)திப்பிலி

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பிறகு அதில் 1/4 தேக்கரண்டி வெந்தயம், ஒரு துண்டு இடித்த சுக்கு சேர்த்து கலந்து விடவும்.

அதன் பின்னர் 1/4 தேக்கரண்டி சீரகம் மற்றும் 2 திப்பிலி போட்டு மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும்.

இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் உயர் இரத்த அழுத்தம் முழுமையாக குறையும்.