BP: சில நிமிடங்களில் கட்டுக்குள் வர இந்த மூலிகை பொடியை பயன்படுத்துங்கள்!

Photo of author

By Divya

BP: சில நிமிடங்களில் கட்டுக்குள் வர இந்த மூலிகை பொடியை பயன்படுத்துங்கள்!

வேலைப்பளு, தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளால் உயர் இரத்த அழுத்தம்(BP) பாதிப்பு ஏற்படுகிறது. இதை குணமாக்க மூலிகை பொடி தயாரித்து பயன்படுத்துவது நல்லது.

உயர் இரத்த அழுத்த அறிகுறிகள்…

உடல் சோர்வு, தலைவலி, வாந்தி உணர்வு, மயக்கம், நெஞ்சில் அடைப்பு, சுவாச பிரச்சனை ஆகியவை உயர் இரத்த அழுத்தம் உள்ளதற்கான அறிகுறிகள் ஆகும்.

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் மூலிகை பொடி…

தேவையான பொருட்கள்…

1)இஞ்சி
2)துளசி
3)ஓமம்
4)பூண்டு
5)இலவங்கப்பட்டை
6)ஆளிவிதை
7)ஏலக்காய்

செய்முறை…

*ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

*அடுத்து ஒரு கப் துளசி இலையை தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளவும்.

*ஐந்து பல் பூண்டை தோல் நீக்கி கொள்ளவும். இந்த மூன்று பொருட்களையும் ஒரு காட்டன் துணியில் போட்டு வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.

*பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து காயவைத்த துளசி, இஞ்சி, பூண்டு சேர்த்து மிதமான தீயில் 1 அல்லது 2 நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

*அடுத்து அதே வாணலியில் 1 ஸ்பூன் ஓமம், 1 ஸ்பூன் ஆளிவிதை போட்டு மிதமான தீயில் வறுக்கவும். இதை துளசி தட்டில் சேர்க்கவும்.

*பிறகு 4 ஏலக்காய் மற்றும் 1 துண்டு பட்டை போட்டு லேசாக வறுத்து அடுப்பை அணைக்கவும். வறுத்த பொருட்களை ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நைஸ் பவுடராக்கி கொள்ளவும்.

*இந்த மூலிகை பொடியை ஒரு ஈரமில்லாத டப்பாவில் கொட்டி சேமிக்கவும்.

பயன்படுத்தும் முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். அடுத்து தயாரித்த மூலிகை பொடி 1 ஸ்பூன் அளவு சேர்த்து கொதிக்க விடவும். பிறகு அடுப்பை அணைத்து ஒரு கிளாஸிற்கு ஊற்றி சிறிது தேன் கலந்து குடிக்கவும். இவ்வாறு தொடர்ந்து குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.