10 நாளில் உடல் கொழுப்பை கரைத்து தள்ளும்… இந்த பானம் பற்றி தெரியுமா?

Photo of author

By Divya

10 நாளில் உடல் கொழுப்பை கரைத்து தள்ளும்… இந்த பானம் பற்றி தெரியுமா?

தற்பொழுது அனைவரும் சந்திக்கும் பிரச்சனையாக உடல் பருமன் உள்ளது. உடல் ஆரோக்கியத்தை பற்றி கவலை கொள்ளாமல் வாய்க்கு ருசியாக சாப்பிடுவதால் உடல் எடை கூடி விடுகிறது. இதனால் மாரடைப்பு, பிபி என்று உயிருக்கு ஆபத்தான பாதிப்புகளை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.

இந்த உடல் பருமன் பிரச்சனையில் இருந்து விடுபட மிளகு, சீரகம், ஓமம் சேர்த்து காய்ச்சிய பானத்தை அருந்தி வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)மிளகு
2)சீரகம்
3)ஓமம்

செய்முறை….

*1/4 ஸ்பூன் ஓமம், 1/4 ஸ்பூன் சீரகம் மற்றும் 1/4 ஸ்பூன் மிளகை உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ளவும்.

*பிறகு ஒரு பாத்திரம் எடுத்து 1 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி 2 நிமிடங்களுக்கு அதை மிதமான தீயில் சூடாக்கவும்.

*தண்ணீர் சூடானதும் அதில் இடித்து வைத்துள்ள மிளகு, சீரகம், ஓமத்தை போட்டு கொதிக்க விடவும்.

*சில நிமிடங்களுக்கு பின்னர் அடுப்பை அணைத்து அந்த பானத்தை மூடி 2 நிமிடங்கள் ஆற விடவும்.

*பிறகு இந்த பானத்தை ஒரு டம்ளருக்கு வடிகட்டி குடிக்கவும். இவ்வாறு செய்து வந்தால் உடலில் தேங்கி கிடந்த கெட்ட கொழுப்பு அனைத்தும் கரைந்து உடல் பிட்டாக இருக்கும்.