எலும்பு வலிமையை அதிகரிக்கும் கால்சியம் உருண்டை – தயார் செய்வது எப்படி?

Photo of author

By Divya

எலும்பு வலிமையை அதிகரிக்கும் கால்சியம் உருண்டை – தயார் செய்வது எப்படி?

உடல் அமைப்பிற்கு எலும்பு வலிமை மிகவும் முக்கியம் ஆகும். ஆனால் கால்சியம் குறைபாடு, ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் எலும்பு தேய்மானம், எலும்பில் வலி, விரிசல் ஏற்படுதல் போன்றவை ஏற்படுகிறது.

இதை குணமாக்க கால்சியம் உருண்டை தயார் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

தேவையான பொருட்கள்:-

*வேர்க்கடலை
*எள்
*கசகசா
*நாட்டு சர்க்கரை
*முந்திரி
*பாதாம்
*கருப்பு உளுந்து

கால்சியம் உருண்டை செய்வது எப்படி?

1)அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கப் வேர்க்கடலை சேர்த்து வறுத்து ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும். வறுக்க கூடிய பொருட்கள் அனைத்தும் கருகிடாமல் வாசனை வரும் வரை மட்டும் வறுத்தால் போதுமானது.

2)அடுத்து 1/4 கப் கருப்பு எள் போட்டு மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

3)1/4 கப் முந்திரி மற்றும் 1/4 கப் பாதாம் போட்டு வறுக்கவும்.

5)1/2 கப் கருப்பு உளுந்து போட்டு வறுத்து அடுப்பை அணைத்து விடவும். பிறகு 5 ஸ்பூன் கசகசாவை சூடாக உள்ள வாணலியில் போட்டு வறுத்து மற்ற பொருட்களும் சேர்த்து ஆறவிடவும்.

6)மிக்ஸி ஜாரில் இந்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

7)அடுத்து தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து அரைத்து பவுடர் பதத்திற்கு எடுத்துக் கொள்ளவும்.

8)இதை ஒரு தட்டில் கொட்டி கையில் சிறிது நெய் தடவி கொண்டு சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கவும். இவ்வாறு செய்தால் ஒரு மாத்திற்கு கெடாமல் இருக்கும்.

இந்த கால்சியம் உருண்டையை காலை, இரவு என்று ஒரு நாளைக்கு இரண்டு உருண்டை சாப்பிட்டு வந்தால் முதுகு வலி, இடுப்பு வலி, மூட்டு வலி, எலும்பு தேய்மானம் உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.