சர்க்கரை நோய் நீங்க எருக்கம் இலையை இப்படி பயன்படுத்துங்கள்!!

சர்க்கரை நோய் நீங்க எருக்கம் இலையை இப்படி பயன்படுத்துங்கள்!!

நமக்கு சர்க்கரை நோய் வருவதற்கு, நமது உடலில் இன்சுலின் சீராக சுரக்காததுதான் காரணம். குறைவாக சுரப்பது அல்லது அதிகமாக சுரப்பது, பரம்பரையாக சர்க்கரை நோய் வருவதும் அடிப்படை காரணங்கள். இந்த சர்க்கரையின் அளவு அதிகமாகும் போது மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக செயலிழப்புகள் மற்றும் சர்க்கரையினால் ஏதாவது புண்கள் ஏற்பட்டால் காலை தூண்டிக்கும் அளவிற்க்கு பிரச்சினைகள் ஏற்படும். இந்த சர்க்கரை நோயை குறைப்பதற்கு இந்த எளிய குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எருக்கம் இலை இது அனைத்து இடங்களிலும் கிடைக்கக் கூடியது. இதை வைத்து சுலபமாக நமது சர்க்கரையின் அளவை குறைக்கலாம். முதலில் 2 எருக்கம் இலைகளை எடுத்து கொள்ளுங்கள். இதை நன்றாக கழுவி இரண்டு பக்கமும் தண்ணீரை துடைத்து கொள்ளவும். பிறகு உங்களுடைய  இரண்டு பாதங்களையும் நன்றாக கழுவி துடைத்து கொள்ளவும்.

அடுத்ததாக எருக்கம் இலையின் அடிப்பகுதி உங்களது பாதத்தில் படும் படி வைத்து, காலில் சாக்ஸ் போட்டுக் கொள்ளவும். இந்த இலை பாதத்தில் குறைந்த பட்சம் ஒரு 6 மணி நேரம் வரை வைத்து இருங்கள். நீங்கள் சாக்ஸ் போட்டு இருப்பதால், உங்கள் வேலைகளை செய்யலாம். வெளியில் செல்வதாக இருந்தாலும் அந்த சாக்ஸ் போட்டுக் கொண்டே செல்லலாம். இதை நீங்கள் கண்டிப்பாக பகலில்தான் செய்ய வேண்டும்.

இரவு தூங்கும் போது இந்த சாக்ஸ் மற்றும் இலைகளை எடுத்து விடுங்கள். பிறகு கால்களை சுத்தமாக கழுவிக் கொண்டு வந்து படுக்கவும். இரவில் இதை செய்தால் இதற்கான பலன் இருக்காது. இதை தொடர்ந்து 7 நாட்கள் செய்ய வேண்டும். இதை செய்த பிறகு நீங்கள் சர்க்கரை அளவை சோதித்து பார்த்தால் கண்டிப்பாக 50 முதல் 70 யூனிட் வரை சர்க்கரையின் அளவு குறைந்திருக்கும்.

இந்த இலைகளை வைத்தால் எப்படி குறைகிறது என்றால் இதில் சில வகையான ஆல்கலாய்ட்ஸ் (Alkaloids) இருப்பதால் இந்த எருக்கம் இலையை 6 மணி நேரம் நமது பாதத்தில் வைப்பதால் சர்க்கரையின் அளவு குறைகிறது.