PCOS/PCOD பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண தேனுடன் இதனை கலந்து சாப்பிடுங்கள்!!

0
214
#image_title

PCOS/PCOD பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண தேனுடன் இதனை கலந்து சாப்பிடுங்கள்!!

 

தேன் நெல்லிக்காயை சாப்பிட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

 

சாதாரணமாக நெல்லிக்காயை சாப்பிடும் பொழுதே நம் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிடும் பொழுது நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் பல மடங்காக கிடைக்கும். தேனில் ஊற வைக்கப்பட்ட தேன் நெல்லிக்காயை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

 

தேன் நெல்லிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…

 

இந்த தேன் நெல்லிக்காயில் குளுக்கோஸ், புரக்டோஸ், ஆன் டி ஆக்ஸைடு, வைட்டமின் சி, கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளது. இதனால் நம் உடலுக்கு பலவிதமான நன்மைகள் உள்ளது. அந்த நன்மைகள் பின்வருமாறு.

 

* தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் கண்கள் தொடர்பான பிரச்சனைகளை வராமல் இது தடுக்கும்.

 

* கண்களில் உண்டாகும் எரிச்சல், கண்கள் சிவப்பாக இருத்தல், கண்களில் இருந்து நீர் வடிவது போன்ற பிரச்சனைகளும் சரியாகும்.

 

* நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.

 

* தேன் நெல்லிக்காயில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிக அளவு இருப்பதால் வயதாகும் தன்மை அதாவது முதுமையை தள்ளிப்போடும்.

 

* தேன் நெல்லிக்காயை சாப்பிடுவதால் நமக்கு கேன்சர் நோய் வராமல் தடுக்கலாம்.

 

* தேன் நெல்லிக்காய் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து இரத்தசோகை நோயை குணப்படுத்துகின்றது. இரத்தசோகை நோயை கட்டுப்படுத்துவதிலும், குணப்படுத்துவதிலும் பேரிச்சம் பழத்தை விட சிறப்பாக செயல்படுகின்றது.

 

* தேன் நெல்லிக்காயில் டேனின், ஃப்ளேவனாய்ட்ஸ், எலாஜிக் ஆசிட் போன்ற சத்துக்களும் இதில் உள்ளன.

 

* முதுமையை ஏற்படுத்தும் நச்சுப் பொருள்களை அழித்து முதுமையை தள்ளிப் போடுகிறது.

 

இந்த தேன் நெல்லிக்காயை பெண்கள் எடுத்துக் கொள்வதால் அவர்களுக்கு ஏற்படும் பல முக்கியமான பிரச்சனைகளை இது குணப்படுத்துகின்றது. பெண்கள் தேன் நெல்லிக்காயை சாப்பிடுவதால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

 

* பெண்கள் தேன் நெல்லிக்காயை சாப்பிடுவதால் அவர்களுக்கு ஏற்படும் கர்பப்பை கோளாறுகளை சரி செய்யும்.

 

* பெண் குழந்தைகள் பூப்படைந்த நாளில் இருந்து தினமும் இரண்டு தேன் நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் எதிர்காலத்தில் அவர்களுக்கு ஏற்படும் கர்பப்பபை கோளறுகள் ஏற்படாமல் இருக்கும்.

 

* பெண்கள் தேன் நெல்லிக்காயை சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனை சரியாகும். மாதவிடாய் சீராக இருக்கும்.

 

* பெண்கள் தேன் நெல்லிக்காயை சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை போக்கு பிரச்சனையும் சரியாகும்.

 

தேன் நெல்லிக்காயில் என்னதான் அதிக அளவு நன்மைகள் இருந்தாலும் இதை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் இது உடலுக்கு பல தீமைகளை அளிக்கக்கூடும்.

 

தேன் நெல்லிக்காயை அதிக அளவு நாம் சாப்பிடும் பொழுது வயிற்று வலி, வாந்தி, குமட்டல், சருமப் பிரச்சனைகள், வாயை சுற்றி வீக்கம், அரிப்பு, தலைவலி, சரும வடுக்கள் போன்ற பல தீமைகள் நம் உடலுக்கு வந்து சேரும்.