ஒரு புதினா இலையை வைத்து ஒட்டுமொத்த எலிகளை விரட்ட முடியும் என்றால் நம்ப முடிகிறதா?

Photo of author

By Divya

ஒரு புதினா இலையை வைத்து ஒட்டுமொத்த எலிகளை விரட்ட முடியும் என்றால் நம்ப முடிகிறதா?

வீட்டில் நடமாடிக் கொண்டிருக்கும் எலிகளை விரட்ட திணறுவார்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வழிகளை பின்பற்றி பலன் காணலாம்.

தீர்வு 01;-

1)புதினா இலை
2)தண்ணீர்

சிறிது புதினா இலையை கையில் வைத்து கசக்கி ஒரு கிளாஸ் நீரில் போட்டு ஒரு இரவு ஊற விடவும்.மறுநாள் இந்த நீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் எலி நடமாட்டம் உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்தால் எலி நடமாட்டத்தை கட்டுப்படுத்தலாம்.

தீர்வு 02:-

சிறிது புதினா இலையை கையில் வைத்து நசுக்கி வீட்டில் எலி நடமாட்டம் உள்ள இடத்தில் போட்டு வைத்தால் புதினா வாசனைக்கு எலிகள் வீட்டு பக்கம் அண்டாது.

தீர்வு 03:-

வீட்டில் எலி நடமாட்டம் உள்ள இடத்தில் எலிப்பொறி வைத்து அதனுள் சிறிது வேர்க்கடலை பேஸ்டை வைத்து விடவும்.இந்த் போஸ்ட் சற்று பிசுபிசுப்பு தன்மை கொண்டவை.

இதை எலிகள் சாப்பிடும் பொழுது பேஸ்ட் கால்களில் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது.அப்பொழுது எலிகள் அசையும்.இதனால் எலிப்பொறி மூடிவிடும்.தேங்காய் துண்டுகள் மற்றும் கருவாடு வைத்தும் எலிகளை பொறியில் சிக்க வைக்கலாம்.