வயிற்றில் தேங்கும் கேஸை அகற்றும் ரோஜா குல்கந்து!! இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது?

0
75
#image_title

வயிற்றில் தேங்கும் கேஸை அகற்றும் ரோஜா குல்கந்து!! இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது?

உங்களில் பலர் வாயுத் தொல்லையால் வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.இந்த வாயுத் தொல்லை செரிமானம் ஆகாத உணவுகளை உண்பதாலும் மலச்சிக்கல் பிரச்னையாலும் தான் ஏற்படுகிறது.

வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு இந்த வாயுத் தொல்லையை சரி செய்து கொள்வது நல்லது.

தேவையான பொருட்கள்:-

1)பன்னீர் ரோஜா இதழ் – 1 கப்
2)கற்கண்டு – 1/4 கப்
3)தேன் – 1/4 கப்

செய்முறை:-

ஒரு உரலில் ரோஜா இதழ்களை போட்டு ஒரு இடி இடித்து கண்ணாடி பாட்டிலில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அதில் 1/4 கப் அளவு இடித்த கற்கண்டு மற்றும் 1/4 கப் தேன் சேர்த்து ஒரு கரண்டி கொண்டு நன்கு கலந்து விடவும்.

இந்த பாட்டிலை மூடி போட்டு வீட்டில் நிழலான இடத்தில் வைக்கவும்.2 வாரங்கள் கழித்து பார்த்தால் ரோஜா குல்கந்து தயராக இருக்கும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.பால் ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு பாலை ஒரு கிளாஸிற்கு ஊற்றி ஒரு ஸ்பூன் ரோஜா குல்கந்து சேர்த்து குடிக்கவும்.

இந்த பாலை காலை உணவிற்கு முன்னர் குடிக்க வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து குடித்து வந்தால் வயிற்றில் தேங்கி கிடந்த கெட்ட வாயுக்கள் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இந்த ரோஜா குல்கந்து செரிமான பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.கல்லீரல் மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.