எனக்கு இந்த விருதும் மட்டும் கிடைக்காதா? மல்யுத்த வீராங்கனை

Photo of author

By Parthipan K

எனக்கு இந்த விருதும் மட்டும் கிடைக்காதா? மல்யுத்த வீராங்கனை

Parthipan K

மல்யுத்த வீராங்கனையான சாக்சி மாலிக் அவரது சாதனைகளை பாராட்டி அவருக்கு கேல் ரத்னா விருது மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அர்ஜுனா விருதுக்கு தன் பெயர் பரிந்துரை செய்யப்பட்டும், இறுதிப் பட்டியலில் நீக்கப்பட்டது குறித்து அவர் ஏமாற்றம் அடைந்துள்ளார். சாக்சி மாலிக் தனக்கு அர்ஜுனா விருது கிடைக்கவே கிடைக்காதா? என பிரதமர் நரேந்திர மோடி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு-விடம் கேள்வி எழுப்பி பரபரப்பை கிளப்பி உள்ளார்.
டுவிட்டரில், ‘‘எனக்கு கேல் ரத்னா விருது அளிக்கப்பட்டது பெருமையாக உள்ளது. ஒவ்வொரு விளையாட்டு வீரரும் அனைத்து விருதுகளையும் வெல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்காக தங்கள் வாழ்வை அவர்கள் பணயம் வைக்கிறார்கள். நான் கூட என் பெயர் அர்ஜுனா விருதுப் பட்டியலில் இடம்பெறும் என கனவு காண்கிறேன்’’ என்று கூறி உள்ளார்.