தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துக்கொள்ள வேண்டுகோள்!

0
60

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துக்கொள்ள வேண்டுகோள்!

 

தமிழகத்தின் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
காரணமாகவும் வெப்பச் சலனம் காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் சில பகுதியில் கனமழையும், சில பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தின்
உள்மாவட்டங்களா ராணிப்பேட்டை,திருவள்ளூர், வேலூர்,திருப்பூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம், நாமக்கல்,கள்ளக்குறிச்சி, கரூர், பெரம்பலூர்,திருச்சிராப்பள்ளி, விருதுநகர்,தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தர்மபுரி,சேலம், புதுக்கோட்டை,மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொருத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Pavithra