முக்கினாலும் மலம் வெளியேற மாட்டேங்குதா? அப்போ இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள் போதும்!

Photo of author

By Divya

முக்கினாலும் மலம் வெளியேற மாட்டேங்குதா? அப்போ இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள் போதும்!

மலச்சிக்கல் பாதிப்பை குணமாக்க… உங்களுக்கான வீட்டு வைத்தியக் குறிப்புகள் இதோ.

தேவையான பொருட்கள்…

*திப்பிலி
*ஓமம்
*வெந்தயம்
*விளக்கெண்ணெய்

செய்முறை…

தங்களுக்கு தேவையான அளவு திப்பிலி, ஓமம் மற்றும் வெந்தயம் எடுத்து அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

இந்த பொடியில் 1 அல்லது 2 ஸ்பூன் அளவு விளக்கெண்ணெய் ஊற்றி இரவு உணவிற்கு பின்னர் அல்லது மறுநாள் காலையில் சாப்பிட்டால் தேங்கி கிடக்கும் மலம் அடித்துக் கொண்டு வெளியேறும்.

தேவையான பொருட்கள்…

*வாழைப்பழம்
*எலுமிச்சை சாறு
*ஓமம்
*விளக்கெண்ணெய்

ஒரு கிண்ணத்தில் ஒரு வாழைப்பழத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அடுத்து அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1/4 ஸ்பூன் ஓமம் மற்றும் 1 ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து சாப்பிடவும். இவ்வாறு செய்த ஒரு மணி நேரத்தில் குடலில் தேங்கி இறுக்கிப் போன மலம் அனைத்தும் அடித்துக் கொண்டு வெளியேறும்.