இரவில் தூக்கமே வரலையா? அப்போ இந்த பாலை குடித்தால் 100% நிம்மதியான தூக்கம் கிடைக்கும்!!

Photo of author

By Divya

இரவில் தூக்கமே வரலையா? அப்போ இந்த பாலை குடித்தால் 100% நிம்மதியான தூக்கம் கிடைக்கும்!!

சிலருக்கு இரவு நேரத்தில் தான் பல சிந்தனைகள் ஓடும்.அதிகம் நெகட்டிவ் சிந்தனைகள் மட்டுமே தோன்றும்.இதனால் இரவு தூக்கத்தை இழந்து விட்டு பகலில் மன சோர்வு,உடல் சோர்வுடன் காணப்படுவர்.

ஒரு சிலருக்கு பல கனவுகள் வந்து போகும்.இதனால் 8 மணி நேரம் தூங்கினாலும் அவை நிம்மதியான தூக்கமாக இருக்காது.

பகல் முழுவதும் உழைத்து விட்டு இரவில் நிம்மதியான தூக்கம் கிடைக்காமல் அவதிப்படும் நபர்கள் பாலில் ஜாதிக்காய் பொடி சேர்த்து குடியுங்கள்.

ஜாதிக்காயில் பொட்டாசியம்,சோடியம்,காப்பர்,வைட்டமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)பால் – ஒரு டம்ளர்
2)ஜாதிக்காய் தூள் – ஒரு தேக்கரண்டி
3)பனங்கற்கண்டு – சிறிதளவு

ஜாதிக்காய் பொடி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.50 கிராம் அளவு வாங்கிக் கொள்ளவும்.

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடாக்கவும்.

அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி ஜாதிக்காய் பொடி சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த பாலை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது பனங்கற்கண்டு சேர்த்து இரவில் குடிக்க வேண்டும்.

இவ்வாறு தினமும் குடித்து வந்தால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.அதேபோல் பாலில் மஞ்சள் சேர்த்து குடித்து வந்தாலும் நிம்மதியான தூக்கம் வரும்.