7 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட மத்திய அரசு ஊழியர்!! புகாரின் பேரில் கைது!!

Photo of author

By Amutha

7 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட மத்திய அரசு ஊழியர்!! புகாரின் பேரில் கைது!!

மத்திய அரசு ஊழியர் ஒருவர் 7 வயது சிறுமியிடம் -பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சென்னை போரூர் அடுத்துள்ள  அய்யப்பன் தாங்கல், பெரியகொளுத்துவான்சேரி என்ற பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 65).  இவர் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் ஆவார். அதே பகுதியில் 7 வயது சிறுமி ஒருவர் அவளின் பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த சூழ்நிலையில் வீட்டு அரிகே விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமிக்கு  பூபதி பாலியல் தொல்லை  கொடுத்துள்ளார்.

இதனை அந்த சிறுமி தன்னுடைய பெற்றோரிடம் தெரிவிக்கவே அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பூபதி மீது பாலியல் புகார் அளித்தனர். புகாரை  பெற்றுக்கொண்ட காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில்  சிறுமியிடம் பூபதி பாலியல் சீண்டலில் ஈடுபட்டது அம்பலமானது. எனவே போரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பூபதியை போக்சோ  சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.