தமிழகத்தில் இந்த பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!
தமிழ்நாட்டில் ஓரிரு மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. தற்போது மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டின் காரணமாக தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை தொடர்ந்து கோடை காலம் முடிவடைந்தும் பெய்து வருவதால் நீர் நிலைகள் நிரம்பி வருகிறது.
தற்போது தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிதமான மழையும் பொழியும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையை பொறுத்தவரை அவ்வப்போது லேசான சாரலுடன் மழை பொழியும் எனவும் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று நாட்களுக்கு கனம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை, கோயம்புத்தூர், விழுப்புரம் திருவண்ணாமலை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைப்பொழியும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இதுபோன்று நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.