ஒருதலை காதல்! கையில் கிடைத்த கோடரி! கொடூரமாக கொலை செய்யப்பட்ட 5 பேர்! அதிர வைத்த இளைஞன்!

0
205
ஒருதலை காதல்! கையில் கிடைத்த கோடரி! கொடூரமாக கொலை செய்யப்பட்ட 5 பேர்! அதிர வைத்த இளைஞன்!
chhattisgarh one family 5 murder case

சத்தீஸ்கர் மாநிலத்தில் தனக்கு பெண் கொடுக்காத குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரை கொலை செய்த இளைஞர் ஒருவர், தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தான் காதலித்த பெண்ணை கரம்பிடிப்பதற்காக இளைஞர்கள் பல்வேறு யுக்திகளை கையாளுவார்கள், ஆனால் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சேர்ந்த ஒரு இளைஞர் பெண் கொடுக்காத விரக்தியில், அந்த குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தைகோன் கிராமத்தை சேர்ந்தவர் மனோஜ். 33 வயதான இவர் அதே பகுதியில் டெய்லராக பணியாற்றி வந்துள்ளார்.

அதே கிராமத்தை சேர்ந்த மீரா என்ற பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்பட்ட மனோஜ், கடந்த 2017 ஆம் ஆண்டு அவரின் வீட்டுக்குச் சென்று முறையாக பெண் கேட்டுள்ளார்.

மீராவின் குடும்பத்தினரோ அவருக்கு பெண் தர பல காரணங்களை கூறி மறுத்துள்ளனர். இதனால் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே மனோஜ் விரக்தியில் இருந்து உள்ளார்.

இதற்கிடையே தான் விரும்பிய பெண் மீராவுக்கு அவரின் பெற்றோர் ராய்ப்பூரை சேர்ந்த ஒருவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். தனது குடும்பத்தை பார்க்க மீரா அந்த கிராமத்துக்கு வருவதும் செல்வதுமாக இருந்துள்ளார்.

சம்பவம் நடந்த அன்றும் மீரா தனது பெற்றோரை பார்க்க அந்த கிராமத்துக்கு வந்து சென்றுள்ளதாக தெரிகிறது. இதனை அறிந்த மனோஜ் அவர்கள் தூங்கும் போது அந்த வீட்டிற்கு சென்று, மீராவின் தாய், தந்தை, சகோதரி மற்றும் ஐந்து வயது சிறுவன் உட்பட ஐந்து பேரையும் கோடாரியால் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் அதே இடத்திலேயே அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மறுநாள் காலை கிராம மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கவே, காவல்துறையினர் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண் கொடுக்காத விரக்தியில் ஒருதலையாக காதலித்த பெண்ணின் குடும்பத்தாரை கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் கொடூர செயல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Murder Marriage Chhattisgarh Everyone’s Well Police Investigation