நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை 1/2 மணி நேரத்தில் சரியாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!!

Photo of author

By Divya

நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை 1/2 மணி நேரத்தில் சரியாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!!

நம்மில் பெரும்பாலானோர் சந்தித்து வரும் பாதிப்புகளில் ஒன்று மலசிக்கல். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மலத்தை முறையாக வெளியற்றி விட வேண்டும். இல்லையென்றால் அவை நாளடைவில் மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது.

மலச்சிக்கல் ஏற்பட காரணம்

*தேவையான அளவு தண்ணீர் அருந்தாமை

*மலத்தை முறையாக கழிக்காமல் அவற்றை அடக்கி வைப்பது

*குறைந்த நார்ச்சத்து உள்ள உணவு பொருட்களை எடுத்து கொள்வது

*முறையற்ற தூக்கம்

தேவையான பொருட்கள்:-

*பெரு நெல்லிக்காய் – 3

*புதினா இலை – சிறிதளவு
(அல்லது)
இஞ்சி

*உப்பு – சிறிதளவு

செய்முறை:-

முதலில் 3 பெரு நெல்லிக்காயை எடுத்து தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து செய்து கொள்ளவும்.

பின்னர் இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும். அதன் விதைகளை நீக்கி விடவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் நறுக்கி வைத்துள்ள பெரு நெல்லி துண்டுகள், புதினா அல்லது இஞ்சி சிறிதளவு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அதில் சிறிதளவு உப்பு சேர்த்து கலக்கி பருகவும். இவ்வாறு பருகிய அடுத்த அரை மணி நேரத்தில் மலம் முழுவதும் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும். நெல்லிக்காய் மலச்சிக்கலை நீக்குவதில் பயனுள்ளதாகஇருக்கிறது .