நாங்கள் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டிருந்தால் இன்று அம்மா உணவகம் இருந்திருக்காது! முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம்!

0
101

தமிழக சட்டசபையில் இன்று விழுப்புரத்தில் இருக்கின்ற ஜெயலலிதாவின் பல்கலைக்கழக விவாதத்தின்போது அதிமுக வெளிநடப்பு செய்தது விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடர்ச்சியாக செயல்படும் என்றும் திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியை பயன்படுத்தி வருவதாகவும் முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்து பேசிய தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகம் ஜெயலலிதாவின் பெயரில் செயல்படாது என்று தெரிவித்தார்.

இதன் காரணமாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். இதனை தொடர்ந்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அவரை அடுத்து அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் அடுத்தடுத்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் தமிழக அரசு எந்தவிதமான காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லையென்று முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் தந்திருக்கின்றார். காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படும் எந்த விதமான எண்ணமும் எங்களுக்கு இல்லை காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக இருந்திருந்தால் அம்மா உணவகங்கள் இருந்து இருக்குமா என்பதை நினைத்துப் பாருங்கள் என்று தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின்.

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றவுடன் சென்னையில் இருந்த ஒரு அம்மா உணவகம் அடித்து நொறுக்கப்பட்ட வீடியோ காட்சி ஒன்று தமிழகம் முழுவதும் பரவியது. அதனை பார்த்த பொது மக்கள் கொதித்து எழுந்தார்கள் இதனை அறிந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக அங்கே சென்று சூழ்நிலையை சரி செய்யுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்களை அனுப்பி வைத்தார்.

இப்படி ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதிமுக ஆளும் கட்சியாக இருந்த போது தொடங்கி வைக்கப்பட்ட பல்வேறு நல்ல திட்டங்களை முடக்குவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறது திமுக அரசு. ஆனால் சட்டசபையில் கேள்வி எழுப்பினால் தமிழக அரசு எந்த விதத்திலும் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் தருவது தான் வேடிக்கையாக இருக்கிறது.