சட்டசபையில் ஏற்பட்ட பரபரப்பான விவாதம்! எடப்பாடி பழனிச்சாமி வெளிநடப்பு!

0
57

ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது குற்றச்சாட்டு வைத்தார். அதிமுக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறது. விழுப்புரத்தில் இருக்கின்ற ஜெயலலிதாவின் பல்கலைகழக விவாதத்தின்போது அதிமுக வெளிநடப்பு செய்திருக்கிறது.

விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடர்ந்து செயல்படுமா என்றும் திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியை வைத்து கொண்டு இப்படி செய்து வருவதாக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் கேள்வி எழுப்பியிருக்கிறார். தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகம் ஜெயலலிதாவின் பெயரில் செயல்படாது என்று தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் சரமாரியான கேள்விகளை தொடுத்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்து இருக்கிறார் .அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் அடுத்தடுத்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்து போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். இதனை அடுத்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய எடப்பாடி பழனிச்சாமி இன்று பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறை மானிய கோரிக்கை நடைபெற்றது.

மானிய கோரிக்கையில் சகோதரர் அன்பழகன் அதிமுக சார்பாக உரையாற்றினார். அவர் உரையாற்றும்போது விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடர்பாக கேள்வி எழுப்பினார் அந்த பல்கலைக்கழகம் தொடர்ச்சியாக செயல்பட வேண்டும் என்று திமுக தலைமையிலான தமிழக அரசுக்கு கோரிக்கை எங்கள் தரப்பில் வைக்கப்பட்டது என்று தெரிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

ஆனால் ஜெயலலிதாவின் பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்படும் என தற்போதைய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்விக்கு மிகப் பெரிய உதவி செய்திருக்கிறார். நிதியையும் ஒதுக்கீடு செய்தார் கல்வி கற்போரின் எண்ணிக்கையை உயர்த்த வழிவகை செய்தவர், பல மாணவர்களின் சாதனைகளுக்கு காரணமாக, இருந்த அவருடைய பெயரில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகத்தை திமுக அரசு முடக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

புதிய அரசு அதனைத் தொடர்ந்து செயல்பட விடாமல் தடுத்து வருகிறது. உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் உள்ளிட்டோர் அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் ஜெயலலிதா பல்கலைக்கழகம் இணைக்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார்கள். இது முழுக்க ,முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி அம்மா உணவகம் ஏழை எளிய மக்கள் வயிறார உண்ண வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்டது அதையும் மூட அரசு நடவடிக்கை எடுத்தால் அது கண்டனத்திற்கு உரியது என்று தெரிவித்தார்.