சளி, வறட்டு இருமல், தொண்டை கரகரப்பு.. குணமாக்கும் மூலிகை கசாயம்!
சுற்றுசூழல் மாற்றத்தால் சளி தொல்லை ஏற்படுகிறது. இந்த சளி தொல்லலையால் வறட்டு இருமல், தொண்டை கரகரப்பு என பல தொந்தரவுகள் அடுக்கடுக்காக ஏற்படும்.
இதை குணமாக்க வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள்.
தேவையான பொருட்கள்:-
*கற்பூரவல்லி
*கருஞ்சீரகம்
செய்முறை….
ஒரு பாத்திரத்தில் 3 ஓமவல்லி இலை மற்றும் 1 ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்க்கவும்.
பிறகு அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். நிறம் மாறும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி 1 ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் சளி, வறட்டு இருமல், தொண்டை கரகரப்பு அனைத்தும் குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
*ஓமவல்லி
*வெங்காயம்
செய்முறை…
ஒரு ஓமவல்லி இலையில் தோல் நீக்கிய சின்ன வெங்காயம் ஒன்றை வைத்து மடக்கி சாப்பிட்டால் சளி தொந்தரவு அகலும்.
தேவையான பொருட்கள்:-
*தூதுவளை
*சுக்கு
*மிளகு
செய்முறை…
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடேற்றவும். அடுத்து அதில் 1/4 கைப்பிடி அளவு தூதுவளை, 1 துண்டு சுக்கு இடித்தது மற்றும் 1/4 ஸ்பூன் மிளகு சேர்த்து கசாயம் காய்ச்சி வடிகட்டி குடிக்கவும்.
இந்த கசாயம் நெஞ்சில் அறுத்தெடுக்கும் சளியை கரைத்து வெளியேற்றும் தன்மை கொண்டது.