கல்லூரி மாணவர்களை தொடர்ந்து கஞ்சா போதை பொருட்களுக்கு அடிமையாகும் பள்ளி மாணவர்கள்!..தடம் மாறும் சிறுவர்களின் அதிர்ச்சி பின்னணி!!
தொடர்ந்து அதிகரித்து வரும் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனைகள்.கஞ்சா மற்றும் போதைப்பொருட்களின் பழக்கங்கள் கல்லூரி மாணவர்கள் முதல் இப்போது பள்ளி சிறுவர்களிடமும் வேகமாக பரவ தொடக்கிவிட்டது.இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் மாற்றங்களும் அதனால் ஏற்படும் சிரமங்களும் அதிகரித்து கொண்டே செல்கிறது.
அப்படி சிறு சிறு விசயங்களில் தொடக்கி இன்று கொலை,கொள்ளை,என பல சில்மிஷம் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.தமிழகம் முழுக்க அரங்கேறும் இந்த சம்பவங்களில் போலீசார் வலை பிடியில் சிறுவர்கள் சிக்காத ஊரே இருக்காது.அப்படி ஆகிவிட்டது இன்றைய கால கட்டம்.
இதில் உச்சத்தில் எட்டியது நம்ம தூத்துக்குடி மாவட்டம் தான்.தூத்துக்குடியில் இன்னமும் ஒரு வருடத்தில் சுமார் 23 சிறுவர்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் கூலித்தொழிலாளி கொலை சம்பவத்தில் இரு சிறுவர்கள் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர்.
அதேபோல் கோவில்பட்டியில் நடைபெற்ற பொன்ராஜ் கொலை வழக்கிலும் ஒரு இளம் சிறுவர்கள் சம்மந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனை தடுக்க மாணவர்களை நல்வழியில் வழிநடத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.மாணவர்களை தாவறான பாதைக்கு அழைத்து செல்வோரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் மாறும் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியை சேர்ந்த ஆதவா தொண்டு நிறுவனம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.அந்த மனுவில் பள்ளிகளில் அருகே சில ரவடி கும்பல்கள் கஞ்சா மற்றும் போதைபொருள் விற்று வருவாதாகவும் ,அதை தட்டிக் கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து காவல் துறையினருக்கு புகார் அளிக்க சென்றால் கஞ்சா விற்பனை செய்யும் நபர்களிடமிருந்து யாரோ சில கறுப்பாடுகள் அங்கு இருப்பதாகவும் கூறினார்கள்.இதனால் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என அச்சப் படுகிறார்கள்.இதனையடுத்து மாணவர்களின் நலனை கருதி போதை பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை செய்யும் கும்பலை கண்டுபிடித்து அவர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.