மலச்சிக்கல்? வயிற்றில் தேங்கி கிடக்கும் மலம் முழுவதும் நிமிடத்தில் வெளியேற இந்த அதிசய பானத்தை பருகுங்கள்..!!

Photo of author

By Divya

மலச்சிக்கல்? வயிற்றில் தேங்கி கிடக்கும் மலம் முழுவதும் நிமிடத்தில் வெளியேற இந்த அதிசய பானத்தை பருகுங்கள்..!!

நம்மில் பலர் காலைக்கடனை சரியாக முடிக்காமல் அதை அடக்கி வைத்து வருவதனால் மலச்சிக்கல் பாதிப்பால் அவதிப்படுகிறோம். இதனால் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு உடல் ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. இதை சரி செய்ய முறையான இயற்கை வழிகளை தேர்ந்தெடுத்து அதை பாலோ செய்வதன் மூலம் விரைவில் அந்த பாதிப்பில் இருந்து தப்ப முடியும்.

தேவையான பொருட்கள்:-

*எலுமிச்சை சாறு

*பெருஞ்சீரகம்

*கல் உப்பு

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொள்ளவும். அடுத்து 1 தேக்கரண்டி சோம்பு சேர்த்து ஒரு கொதி விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் அதில் 1 சிட்டிகை அளவு கல் உப்பு சேர்த்து கலக்கி ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும்.
பிறகு அதில் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து வெது வெதுப்பாக இருக்கும் போதே பருக வேண்டும்.

இதை காலையில் வெறும் வயிற்றில் தான் பருக வேண்டும். இதை குடித்த உடன் உணவு எடுத்து கொள்ள கூடாது. அடிக்கடி வெதுவெதுப்பான நீரை பருக வேண்டும். மலம் முழுவதும் வெளியேற்றப்பட்டதும் இளநீர், தயிர் சாதம் இதுபோன்ற குளிர்ச்சியான பொருட்களை எடுத்துக் கொள்ளலாம்.