“மலச்சிக்கல்” பிரச்சனை நிமிடத்தில் சரியாக 1 ஸ்பூன் வெந்தயத்தை இப்படி பயன்படுத்துங்கள்..!!

Photo of author

By Divya

“மலச்சிக்கல்” பிரச்சனை நிமிடத்தில் சரியாக 1 ஸ்பூன் வெந்தயத்தை இப்படி பயன்படுத்துங்கள்..!!

நாம் எடுத்துக் கொள்ளும் உணவு எளிதில் செரிக்க கூடியவையாகவும், சத்துக்கள் நிறைந்தவையாகவும் இருக்க வேண்டும். ஆனால் இன்றைய கால வாழக்கை முறை மற்றும் உணவுப்பழக்க வழக்கங்கள் முற்றிலும் மாறிவிட்டது. உடல் ஆரோக்கியத்தை மறந்து வாய் ருசிக்காக செரிக்காத உணவுகளை உண்டு பல வித நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம். இந்த ஆரோக்கியமற்ற உணவு செரிக்காமல் நாளடைவில் மலசிக்கலாக மாறிவிடுகிறது.

மலசிக்கல் அறிகுறி:-

*வயிற்று வலி

*வயிற்றுப் பிடிப்பு

*பசியின்மை

*குமட்டல் உணர்வு

மலச்சிக்கல் ஏற்பட காரணம்:-

*அளவுக்கு அதிகமாக உணவு உண்பது

*மலத்தை கழிக்காமல் அடக்கி வைத்தல்

*எளிதில் செரிமானம் ஆகாத உணவை உண்பது

*உடலுக்கு தேவையான நீரை பருகதாதது

*உணவில் நார்ச்சத்து குறைவாக இருத்தல்

*வயது முதிர்வு

*அதிகப்படியான மன அழுத்தம்

தேவையான பொருட்கள்:-

*வெந்தயம்

*ஓமம்

*சீரகம்

*கசகசா

*தண்ணீர்

செய்முறை…

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 1/2 தேக்கரண்டி வெந்தயம், 1/2 தேக்கரண்டி சீரகம், 1/2 தேக்கரண்டி ஓமம் மற்றும் 1/4 தேக்கரண்டி கசகசா சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் பொடித்துக் கொள்ளவும்.

அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 1 1/2 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றவும். அதில் பொடித்து வைத்துள்ள ஓமம், சீரகம், கசகசா, வெந்தயப் பொடியை சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அதில் சில துளி விளக்கெண்ணெய் சேர்த்து பருகவும்.
இதை வெறும் வயிற்றில் பருக வேண்டும். இவ்வாறு செய்தால் வயிற்றில் அடைபட்டு கிடந்த மலம் முழுவதும் அடித்து கொண்டு வெளியேறும்.