தொடரும் போர் மரணங்கள்!! ஏவுகணை தாக்குதலால் உயிரிழப்பு!!

Photo of author

By CineDesk

தொடரும் போர் மரணங்கள்!! ஏவுகணை தாக்குதலால் உயிரிழப்பு!!

CineDesk

Continued war deaths!! Missile attack killed!!

தொடரும் போர் மரணங்கள்!! ஏவுகணை தாக்குதலால் உயிரிழப்பு!!

உக்ரைனில் உள்ள லிவிவ் என்னும் நகரில் நேற்றிரவு ராக்கெட் தாக்குதல் நடந்தது. இந்த தக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நகரத்தின் மேயர் ஆண்ட்ரி சடோவ்யி கூறி உள்ளார்.

மேலும் இந்த தாக்குதலால் 60 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 50 நான்கு சக்கர வாகனங்கள் முதலியவை சேதமடைந்ததாக கூறி உள்ளார். உக்ரைன் நகரின் உள்துறை அமைச்சர் இஹோர் இதில், நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறி உள்ளார்.

மேலும், இந்த தாக்குதல் நடந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து ஏழு பேர் மீட்க்கப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் இதில் சிக்கியிருக்க வாய்ப்பிருக்கிறது எனவே மீட்புக் குழுவினர் இவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக உள்துறை அமைச்சர் இஹோர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறி உள்ளார்.

அந்நகரத்தின் மேயர் சடோவ்யி தாக்குதல் நடந்த இடத்தின் வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளார். இந்த காட்சியில் ஏராளமான சேதமடைந்த பகுதிகளை காண முடிந்தது.

இதனுடன் மீண்டும் ஒரு புதிய வீடியோ காட்சியை பதிவிட்டுள்ளார். இதில் கட்டிடங்களின் கூரைகள் சேதமடைந்ததோடு மட்டுமல்லாமல் பல பாலிடெக்னிக் விடுதிகளும் சேதமடைந்திருப்பதை இந்த வீடியோ காட்சியில் பார்க்க முடிந்தது.

இந்த நிலையில், லிவிவ் பிராந்திய தலைவர் “உக்ரைன் மக்களை அழிப்பதே ரஷிய நாட்டின் முக்கிய குறிக்கோள் என்றும் ஆனால் நாங்கள் வெற்றி பெறுவோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷிய நாடானது பலமுறை ஏவுகணை மூலமாகவும், டிரோன் மூலமாகவும் தாக்குதல் நடத்தி வந்தது. மேலும் இந்த தாக்குதல் குறித்து ரஷிய ராணுவம் எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்த ஒரு வாரத்தில் மட்டும் ரஷியா நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.