கொரோனா தொற்றால் இந்தியாவில் தொடர் உயிரிழப்பு! சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

0
65
Corona outbreak kills series in India Shocking information released by the Ministry of Health!
Corona outbreak kills series in India Shocking information released by the Ministry of Health!

கொரோனா தொற்றால் இந்தியாவில் தொடர் உயிரிழப்பு! சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

கொரோனா தொற்றானது போன ஆண்டு சீனாவில் தொடரப்பட்டு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் சென்றது. இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.மக்கள் வேலைவாய்ப்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்த ஊரடங்கானது ஏழு மாதங்களாக தொடர்ந்தது.

நவம்பர் மாதம் முதல் ஊரடங்கு சில தளர்வுகளுடன் முடிவுக்கு வந்தது.அதன்பின் மக்கள் கொரோனா தொற்றை மறந்து தனது பழைய வாழ்க்கையை ஆரம்பித்துவிட்டனர்.மீண்டும் முதலில் ஆரம்பித்து போலவே ஐரோப்பியாவில் கொரோனா 2 வது அலை உருவாக ஆரம்பித்துவிட்டது.அதனைத்தொடர்ந்து சென்ற வருடம் நடந்தது போலவே வெளிநாடுகளில் அதாவது (ஜெர்மனி,பிரான்ஸ்) போன்ற நாடுகளில் ஊரடங்கானது  அமல்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்ததாக நமது இந்தியாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனக் கூறி வருகின்றனர்.அதுமட்டுமின்றி சட்டமன்ற தேர்தலானது 5 மாநிலங்களில் நடைபெற இருக்கிறது.அந்தவகையில் மக்களின் வாக்குகளை கவர்வதற்கு தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அதிக படியானோர் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருக்கின்றனர்.இதுநாள் கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.குறிப்பாக மநீம கட்சி துணைத்தலைவர்,வேட்பாளர் என கட்சி தலைவர்களுக்கே கொரொனா தொற்று அதிக அளவு பரவி வருகிறது.

இந்நிலையில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 47,262 பேருக்கு பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதுமட்டுமின்றி இந்தியாவில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,60,166  பேராக உயர்ந்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரொனோ தொற்றால் 275 பேர் உயிரிழந்தனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.