தஞ்சையில் கொடூரம்! பள்ளி மாணவர்களை பாடாய் படுத்தும் கொரோனா! ஒரே நாளில் இத்தனை பேருக்கு தொற்றா?

0
65
School
School

தமிழகத்தில் கொரோனாவின் கோரதாண்டவம் மீண்டும் தொடங்கியுள்ளது. நேற்று தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்து பதிவானதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து நானுற்று 37 பேர் பாதிக்கப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 69 ஆயிரத்து 804 ஆக அதிகரித்துள்ளது. 9 பேர் உயிரிழந்துள்ளனர், 902 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் கொரோனா தொற்றின் தாக்கம் பள்ளிகளில் அதிகரித்து காணப்பட்டதால் மார்ச் 22ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெறுவதால், கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் பள்ளியை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள போதும், தஞ்சாவூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து மாணவ, மாணவிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 11 பள்ளிகள், 2 கல்லூரிகளைச் சேர்ந்த 19 மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இரு தினங்களுக்கு முன்பு கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 25 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கை 168 ஆக இருந்தது.

இந்நிலையில் திருப்பனந்தாள் திருக்கயிலை அரசு உதவிபெறும் பள்ளியைச் சேர்ந்த 3 மாணவர்களும், திருவையாறு அமல்ராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 4 மாணவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 187 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் கல்லூரி மாணவர்களிடையே நடந்து வந்த கொரோனா பரிசோதனையில் புதிதாக 18 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு 205 ஆக அதிகரித்துள்ளது.

author avatar
CineDesk