இந்தியாவில் விஸ்வருபம் எடுக்கும் கொரோனா

0
143
உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியின் இறுதி கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர்.
ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 46 லட்சத்தை கடந்துள்ளது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா வேகமெடுத்துள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
Previous articleஒலிம்பிக்கில் சாதனைகளை படைத்த அமெரிக்க இரட்டையர்
Next articleஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் கண்டுபிடித்த புதிய செயலியை ப்ளே ஸ்டோரில் வெளியிட்டது கூகுள்! தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெருமை!