ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் கண்டுபிடித்த புதிய செயலியை ப்ளே ஸ்டோரில் வெளியிட்டது கூகுள்! தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெருமை!

0
62

 ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் கண்டுபிடித்த புதிய செயலியை ப்ளே ஸ்டோரில் வெளியிட்டது கூகுள்! தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெருமை!

திண்டுக்கல் அருகே காரை வாடி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து.இவரின் மகன் ரமேஷ் என்பவர் வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றார். கொரோனா காலத்தில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று ஆர்வத்தோடு இருந்த பிரனேஷ் வாட்ஸ் அப் செயலியை போன்றே,ஜெட் லைவ் சாட் (jet live chat)என்ற புதிய செயலியை உருவாக்கி உள்ளார்.

இந்த செயலியில் வாட்ஸ் அப்பை விட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன.நாம் அனுப்பும் தகவல் அறிமுகம் இல்லாத நபர் யாரும் பார்க்க முடியாத வகையிலும்,வாட்ஸ் அப் செயலியில் ஒரு தகவலை 5 நபர்களுக்கு மட்டுமே ஒரே நேரத்தில் ஷேர் செய்ய முடியும். ஆனால் இந்த மாணவர் கண்டு பிடித்த செயலில் ஒரே நேரத்தில் 15 நபர்களுக்கு ஷேர் செய்யலாம் இது போன்ற பல நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த செயலியை ஒன்பதாம் வகுப்பு மாணவர் கண்டுபிடித்துள்ளார்.

மாணவரின் இந்த புதிய செயலியை கூகுள் நிறுவனத்தின் ஒப்புதலுக்காக கடந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்டது.நேற்று கூகுள் நிறுவனமானது மாணவரின் இந்தப் புதிய செயலிக்கு ஒப்புதல் அளித்து ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு இந்த செயலியை வெளியிட்டுள்ளது.

ஒன்பதாம் வகுப்பு மாணவர் செய்த இந்த புதிய சாதனைக்கு திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் அவருக்கு பாராட்டுகளும்,வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர்.

மாணவர்கள்,ஊரடங்கு காலத்தில் செல்போன் மற்றும் டிவியில் முழுகி தங்களது நேரத்தை வீணடித்து வரும் நிலையில் ஒன்பதாம் வகுப்பு மாணவரின் இந்த சாதனையானது அனைவரிடமும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

author avatar
Pavithra