கொரோனா தடுப்பூசி இரண்டு தவணை போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டும் தளர்வு!! மாநில அரசு அறிவிப்பு!!

0
144

கொரோனா வைரஸ் தோற்று நாடு முழுவதும் மிகத் தீவிரமாகப் பரவி வந்தது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களுக்கு ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டது. மேலும், கொரோனா குறைந்து வருவதால் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. கொரோன வைரஸ் நோய்த்தொற்று காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டால் பயணம் செல்வதற்கு ஆர்டி-பிசிஆர் சோதனை செய்து கொள்ள தேவையில்லை என மகாராஷ்டிரா அரசு தெரிவித்து உள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு தரப்பிலும், சமூக அமைப்புகள் அமைப்பின் சார்பிலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனால், இரண்டு தவணை செலுத்தி கொண்டு 15 நாட்களுக்கு பிறகு வருபவர்களுக்கு மட்டுமே இது செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா தலைமைச் செயலாளர் சீதாராம் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ‘மகாராஷ்டிராவுக்கு பயணம் செய்யும் நபர்கள் 2 தவணை தடுப்பூசிகளும் செலுத்தி இருக்க வேண்டும் என்று கூறினார்.

அதேபோல் இரண்டாவது தவணை செலுத்தி 15 நாட்கள் ஆக வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் அதற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். இவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் சோதனை செய்து கொண்டு விலக்கு அளிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது. இந்த கால அளவானது உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகள் அனைவருக்கும் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Previous article‘எல்லாம் ஓகே தான் பட் ஒன் ஸ்மால் கொஸ்டின்’? சாக்ஷி வீடியோவால் ரசிகர்கள் கேள்வி!!
Next articleகுக் வித் கோமாளி சீசன் 3 மீண்டும் வரப்போகிறது!! ஆங்கர் யார் தெரியுமா?!