சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவது பரவி வருகிறது. பல நாடுகளில் கொரோனா வைரசை கட்டுபடுத்த பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் கொரோனா வைரசை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவந்தது. இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நியூஸிலந்தில் கடந்த 100 நாட்களாக யாருக்கும் கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்படவில்லை. இதற்க்கு முக்கிய காரணம் அந்த நாட்டில் சரியான நேரத்தில் அறிவிக்கப்பட்ட பொது முடக்கமே காரணம்.
இருப்பினும் பொது முடக்கம் நாட்களில் பொது மக்கள் பலர் உத்தரவு மீறியதாக தகவல் வந்துள்ளது. இதனால் மற்ற நாடுகளைப் போல இரண்டாம் கட்டப் பரவல் ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா, வியட்நாம் உள்ளிட்ட சில நாடுகளில் கிருமிப் பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு, மீண்டும் நோய்த்தொற்று அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.