சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் கோவைக்காய் பொரியல்!! சுவையாக செய்வது எப்படி?
நம் பாரம்பரிய உணவு காய்கறிகளில் ஒன்று கோவைக்காய்.இவை இயற்கையாகவே கசப்பு தன்மை கொண்டிருப்பதால் இதை உணவில் எடுத்துக்கொள்ள பலரும் விரும்புவதில்லை.ஆனால் இதன் மகத்துவம் தெரிந்தால் இந்த காய் எங்கிருந்தாலும் தேடி பிடித்து வாங்கி உண்பீர்கள்.
இந்த கோவைக்காயில் அதிகளவு ஆண்டிஆக்சிடண்ட்,பீட்டா கரோடின் நிறைந்து காணப்படுவதால் அவற்றை உண்ணும் பொழுது உடலில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.இதில் உள்ள பொட்டாசியம் சத்து இதய செயல்பாடுகளை ஊக்குவிக்க சிறந்த ஒன்று.
அதேபோல் இரும்புச்சத்து,கால்சியம்,வைட்டமின் பி1,பி2,நார்ச்சத்து போன்றவை அதிகம் இருக்கும் இந்த கோவைக்காய் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சிறந்த காய்கறி ஆகும்.கோவைக்காயில் உள்ள இந்த சத்துக்கள் உடல் எடை பிரச்சனை,உடல் சோர்வு பிரச்சனை உள்ளிட்டவைகளை சரி செய்ய உதவுகிறது.
தேவையான பொருட்கள்:-
1.கோவைக்காய் – 1 கப் (நறுக்கியது)
2.சோம்பு – 1 தேக்கரண்டி
3.பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
4.கறிவேப்பிலை – 1 கொத்து
5.எண்ணெய் – 2 தேக்கரண்டி
6.மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
7.மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
8.வர மிளகாய் – 2
9.உப்பு – தேவையான அளவு
செய்முறை:-
*அடுப்பில் வாணலி வைத்து அதில் 2 தேக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
அவை சூடேறியதும் எடுத்து வைத்துள்ள சோம்பு அதாவது பெருஞ்சீரகத்தை சேர்க்கவும்.
*அதில் 1 கொத்து கருவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.
*பின்னர் வர மிளகாய் கிள்ளியது மற்றும் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
*அதன் பின் மருத்துவ குணங்கள் நிறைந்த கோவைக்காயை சேர்த்து கிளறவும்.
*அதில் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்,மிளகாய் தூள் 2 தேக்கரண்டி மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்கவும்.
*பின்னர் 1 சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வீட்டு அவை சுண்டும் வரை காத்திருக்கவும்.
*எண்ணெய் பிரிந்து வரும் சூழலில் அடுப்பை அணைத்து விடவும்.