“சீரகம் + பால்”.. போதும்! வயிற்றுப்புண் பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைத்து விடும்!

Photo of author

By Divya

“சீரகம் + பால்”.. போதும்! வயிற்றுப்புண் பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைத்து விடும்!

வயிற்றுப்புண் பாதிப்பால் அவதிப்படுபவரின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.காலை, மதியம், இரவு என்று நாம் உண்ணும் உணவை உரிய நேரத்தில் உட்கொள்ள வேண்டும். உணவு உட்கொள்ளவதில் தாமதம் ஏற்பட்டாலோ, உணவை தவிர்த்து வந்தாலோ வயிறு, குடல் பகுதியில் புண்கள் உருவாகி விடும். வயிற்றுப்புண் பாதிப்பு ஏற்பட்டால் மலம் கழிக்கும் பொழுது எரிச்சல், நெஞ்சு எரிச்சல், வயிற்றுப்புண், வாய்ப்புண் உள்ளிட்ட பாதிப்புகளை நாம் சந்திக்க நேரிடும்.

குமட்டல், திடீர் எடை குறைவு, இரத்த வாந்தி, அடிவயிற்று வலி, ஏப்பம், வயிறு உப்பசம், கருப்பு நிற மலம் உள்ளிட்டவைகள் வயிற்றுப்புண் அறிகுறி ஆகும்.

தேவையான பொருட்கள்:-

*சீரகம்

*பசும்பால்

*சர்க்கரை

செய்முறை…

முதலில் 1 ஸ்பூன் சீரகத்தை வறுத்து பொடியாக்கி கொள்ளவும். பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் பால் ஊற்றிக் கொள்ளவும். பால் சூடாகும் பொழுது அதில் 1 ஸ்பூன் சீரகத் தூள் மற்றும் சிறிதளவு சர்க்கரை சேர்த்து நன்கு காய்ச்சி கொள்ளவும். பின்னர் இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி பருகவும். இதை காலை நேரத்தில் பருகவும். இவ்வாறு செய்து வந்தால் வயிற்றுப்புண் பாதிப்பு சில நாட்களில் குணமாகும்.