நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் “சீரகம்”!! இதன் பயன்கள் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

Photo of author

By Divya

நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் “சீரகம்”!! இதன் பயன்கள் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

தினசரி உணவில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று சீரகம்.இந்த சீரகத்தில் வாசனையோடு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.இதில் அதிகளவு இரும்பு,கால்சியம், பொட்டாசியம்,மாங்கனீசு,தாமிரம்,துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் இருக்கிறது.சீரகம் செரிமான பாதிப்புக்கு நிறைந்த தீர்வாகும்.அது மட்டும் இன்றி உடலில் ஏற்படும் பல பாதிப்புகளுக்கு இவை சிறந்த மருந்தாக விளங்குகிறது.

தினசரி உணவில் சீரகம் சேர்ப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:-

*வாயுத்தொல்லை இருப்பவர்கள் ஒரு கிளாஸ் தண்ணீரில் 1 தேக்கரண்டி அளவு சீரகம் சேர்த்து ஊறவைத்து குடித்தால் அந்த பாதிப்பு விரைவில் சரியாகி விடும்.

*அதேபோல் வயிறு சம்மந்தமான அனைத்து பாதிப்புகளுக்கும் இந்த சீரகம் சிறந்த தீர்வாக இருக்கும்.இதற்கு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் அதில் வறுத்த சீரகம் சிறிதளவு,இஞ்சி சிறு துண்டு,இந்துப்பு சிறிதளவு மற்றும் சோம்பு 1/2 தேக்கரண்டி சேர்த்து கொதிக்க விட்டு 1 1/2 கிளாஸ் தண்ணீர் 1 கிளாஸ் என்ற அளவிற்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருகவும்.

*அதிகளவு பேதி பாதிப்பால் அவதிப்படும் நபர்கள் சீரகம் மற்றும் ஓமத்தை சம அளவு எடுத்து கஷாயம் செய்து சாப்பிட்டால் உடனடி பலன் கிடைக்கும்.

*குடல் கோளாறால் அவதிப்படும் நபர்கள் ஒரு உரலில் சீரகம் + 3 பல் பூண்டு சேர்த்து இடித்து கொள்ளவும்.பின்னர் ஒரு கிளாஸ் எடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் இடித்து வைத்துள்ள கலவை மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து பருகவும்.

*தலைசுற்றல் ஏற்படும் பொழுது சிறிதளவு சீரகத்தை எடுத்து வாயில் போட்டு நன்கு மென்று விழுங்க வேண்டும்.பின்னர் 1 கிளாஸ் தண்ணீர் பருக வேண்டும்.

*உடலில் அதிகளவு பித்தம் இருப்பவர்கள் சீரகம் + இஞ்சி + எலுமிச்சை சாறு சேர்த்து அவற்றை நன்கு ஊறவைத்து தினமும் பருக வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலம் உடலில் உள்ள பித்தம் விரைவில் குணமாகும்.

*உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை சீரக வைக்க இவை பெரிதும் உதவுகிறது.
சீரகம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைப்பதோடு குடல் புற்றுநோய் வரமால் தடுக்கிறது.