சிறுநீரக நோயை குணமாக்கும்.. சிறு நெருஞ்சில் – பயன்படுத்துவது எப்படி?

Photo of author

By Divya

சிறுநீரக நோயை குணமாக்கும்.. சிறு நெருஞ்சில் – பயன்படுத்துவது எப்படி?

சிறுநீரகத்தின் ஆரோக்கியம் கெட்டால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம். சிறுநீர் கழிக்க முடியாமல் படும் வேதனை.. பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும்.

சிறுநீரகத்தில் தொற்று ஏற்படாமல் இருக்க அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நீர்சத்து நிறைந்த பழங்களை உட்கொண்டு வரலாம்.

சிறுநீர் சூடாக வெளியேறுதல்.. சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் உணர்வு ஏற்படுதல் போன்றவை உடல் சூட்டால் ஏற்படக் கூடிய பாதிப்பு ஆகும்.

சிறுநீரகம் தொடர்பான அனைத்து பாதிப்புகளுக்கும் சிறு நெருஞ்சிலில் தீர்வு இருக்கின்றது.

சிறு நெருஞ்சில்

பராமரிப்பு இன்றி வளரக் கூடிய மூலிகைகளில் ஒன்று சிறு நெருஞ்சில். இவை சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகளை மட்டும் அல்ல.. தோல் நோயையும் குணமாக்கும் தன்மை கொண்டது.

நீரில் சிறுநெருஞ்சில் உடன் சீரகம் மற்றும் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி வடிகட்டி குடித்தால் சிறுநீரக தொற்று குணமாகும்.

தேவையான பொருட்கள்…

*சிறு நெருஞ்சில்
*சீரகம்
*வெந்தயம்

1)ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

2)அடுத்து அதில் 1 ஸ்பூன் சிறுநெருஞ்சில், 1 ஸ்பூன் சீரகம் மற்றும் 1 ஸ்பூன் வெந்தயம் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

3)தண்ணீர் நன்கு கொதித்து வந்த பின்னர் அடுப்பை அணைத்து நன்கு ஆறவிட்டு வடிகட்டி குடிக்கவும்.