நரை முடியை வேரிலிருந்து கருமையாக்கும்.. இயற்கை வைத்திய குறிப்புகள்…!

0
230
#image_title

நரை முடியை வேரிலிருந்து கருமையாக்கும்.. இயற்கை வைத்திய குறிப்புகள்…!

வெள்ளை முடியை கருமையாக்க உதவவும் வீட்டு வைத்தியம்…

தீர்வு 01:-

கறிவேப்பிலை
தேங்காய் எண்ணெய்

அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு கப் கறிவேப்பிலை சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்கு தேய்த்து வர நரைமுடி அனைத்தும் சில நாட்களில் கருமையாகும்.

தீர்வு 02:-

கற்றாழை
தேங்காய் எண்ணெய்

ஒரு கப் தேங்காய் எண்ணெய் பாத்திரத்தில் ஊற்றி சூடாக்கி தோல் நீக்கிய கற்றாழை துண்டுகளை சேர்த்து கொதிக்க வைத்து.. ஆறவிட்டு தலைக்கு தேய்த்து வர நரைமுடி அனைத்தும் சில நாட்களில் கருமையாகும்.

தீர்வு 03:-

கருஞ்சீரகம்
மருதாணி(உலர்த்தியது)

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/4 கப் கருஞ்சீரகம் மற்றும் 1/2 கப் உலர்த்திய மருதாணி இலைகளை போட்டு வறுத்து ஆறவிட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.

இந்த பொடியில் சிறிதளவு எடுத்து தண்ணீர் ஊற்றி நன்கு குழைத்து கொள்ளவும். இதை தலைக்கு தேய்த்து சில மணி நேரத்திற்கு பிறகு தலைக்கு குளித்து வந்தால் தலைமுடி கருமையாகும்.

தீர்வு 04:-

வெந்தயப் பொடி
கருஞ்சீரகப் பொடி
அவுரி பொடி
ஆம்லா பொடி

ஒரு கிண்ணத்தில் 1/2 ஸ்பூன் வெந்தயப் பொடி, 1/2 ஸ்பூன் கருஞ்சீரகப் பொடி, 1/2 ஸ்பூன் அவுரி பொடி மற்றும் 1/4 ஸ்பூன் ஆம்லா பொடி சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பத்திற்கு கலக்கி தலைக்கு தடவி குளித்து வந்தால் வெள்ளை முடி அனைத்தும் கருமையாகி விடும்.

Previous articleதீராத முதுகு வலியை சட்டுனு விரட்டும் பானம் இது..!
Next articleபூரான் கடியை நொடியில் குணமாக்கும் “வெற்றிலை + மிளகு + சுண்ணாம்பு” – பயன்படுத்துவது எப்படி?