டெங்கு காய்ச்சலை அலற விடும் சூரணம் – தயார் செய்வது எப்படி?

0
215
#image_title

டெங்கு காய்ச்சலை அலற விடும் சூரணம் – தயார் செய்வது எப்படி?

மழைக்காலங்களில் டெங்கு எனும் உயிர்க் கொள்ளி நோய் அதிகளவில் பரவத் தொடங்குகிறது.
இவை ஏடிஎஸ் எஜிப்தி எனும் கொசுக்களால் மட்டுமே பரவுகிறது. மழை நீர் தேங்கி இருக்கும் இடங்களில் கொசு முட்டைகள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இந்த டெங்கு நிலையில் கண்டறிந்து குணப்படுவதுவது மிகவும் முக்கியம் ஆகும்.

டெங்கு அறிகுறிகள்:-

*திடீரென கடுமையான காய்ச்சல்

*அதிகமான தலைவலி

*கண்களுக்கு பின்புறம் வலி

*உடலில் சிவப்பு புள்ளிகள் தோன்றுதல்

*உடல் வலி

*கண் விழி சிவத்தல்

*வெளிச்சத்தை பார்க்க முடியாமல் கண் கூசுதல்

டெங்கு காய்ச்சல் எவ்வாறு பரவுகிறது?

டெங்கு காய்ச்சல் ஏடிஎஸ் எஜிப்தி எனும் கொசுக்களால் மட்டுமே பரவுகிறது.

தேவையான பொருட்கள்:-

*நில வேம்பு

*விலாமிச்சை வேர்

*பேய்ப்புடல்

*சுக்கு

*சந்தனம்

*பற்படாகம்

*வெட்டி வேர்

*கோரைக் கிழங்கு

*மிளகு

செய்முறை…

மேல கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சம அளவு எடுத்து காய வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும். இந்த சூரணத்தை ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். தண்ணீர் சூடானதும் தயார் செய்து வைத்துள்ள சூரணத்தில் 1 ஸ்பூன் அளவு போட்டு கொதிக்க வைத்து கொள்ளவும். பின்னர் அடுப்பை அணைத்து வடிகட்டி பெரியவர்கள் காலை, மாலை என இரண்டு
வேளை குடிக்கலாம்.

குழந்தைகளுக்கு 15 மில்லி அளவு தண்ணீரில் கலந்து காலை -மாலை இரண்டு வேளை குடிக்க
லாம். இந்த கசாயம் டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.